Archive
அன்னியன்
பிடித்த பாடல்களின் வரிசைப்படி அடுக்கியிருக்கிறேன்.
1. அண்டங்காக்கா :: ஜஸ்ஸி கிஃப்ட், கேகே, ஷ்ரேயா கோஸல்
ரண்டக்க டக்கர் டக்கரு டக்கரோ டக்கரு… அய்யங்கார் மாமி சதா-வின் அடல்ட்ஸ் ஒன்லி டூயட். ரொம்பப் பிடிச்சிருக்கு
அண்டாங்காக்கா கொண்டக்காரி
அச்சுவெல்ல தொண்டக்காரி
2. அய்யங்காரு வீட்டு அழகே :: ஹரிஹரன், ஹரிணி – வைரமுத்து
சந்திரமுகியில் கூட கடைபிடிக்க ஆரம்பித்திருக்கும் ‘ஒரு பாட்டு; அட்லீஸ்ட் ரெண்டு ட்யூன்’ ஃபார்முலாவில் இதமான ஆரம்பம். (‘ஜகதோ தார’ என்னும் பாட்டு எங்காவது கிடைத்தால் முழுதாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.) அதற்குப் பிறகு நாட்டை/கம்பீர நாட்டை என்று கர்னாடக வாசம் வீசுகிறது போல. (சொல்லிக் கொடுத்தவர்: மன்ற மையம் – Raga of songs — ஸ்ரீனி)
காதலன் சமத்து
காதலில் தொல்லை
3. காதல் யானை :: நகுல், நெல்வின், ஜீ வி ப்ரகாஷ் – நா முத்துக்குமார்
வைரமுத்து ஸ்டைலில் நாகஸாகி, ஹிரோஷிமாவை எல்லாம் பெண்ணுக்கு ஒப்பிடுகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் வட கொரியா போல் மிரட்டுகிறாயே, அமெரிக்கா போல் எல்லா இடங்களிலும் குண்டு போடுகிறாயே என்று அரசியல் காதல் செய்வார்கள். ‘மாகரீனா’ போல் கோரஸ் பிட் வேறு வந்து படுத்துகிறது. இருந்தாலும் பரவாயில்லை!
3. கண்ணும் கண்ணும் நோக்கியா ::ஆண்ட்ரியா, லெஸ்லி லூயிஸ், வசுந்தரா தாஸ்
ஆப்பிள் லேப்டாப் செய்வதில்லையாமே… அது எல்லாம் எனக்குத் தெரியாது. முக்காபலாவிற்குப் பிறகு அதே ரகத்தில் கிடைத்திருக்கும் உருப்படியான பாட்டு. ‘அய்வா’ எல்லாம் product positioning-ஆ என்று வெளிவரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களின் நாக்குகளில் வெகுகாலம் அய்வா புரளும்.
5. ஓ… சுகுமாரி :: ஹரிணி, ஷங்கர் மஹாதேவன் – வைரமுத்து
தூக்கம் வருது. கட்டாங்கடைசியில் வரும் ஹரிணியை முன்பே பாட்டில் சேர்த்துக் கொண்டிருக்கலாம். சாய்ஸில் விட்டுவிடுவேன்
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி
‘முதல்வனை’ விட கோடி மடங்கு தேவலை. பாடல் வரிகளை அமுக்கிக் காட்டுவதில் ‘பாய்ஸ்’ ரெஹ்மானை மிஞ்சியிருக்கிறார் ஹாரிஸ். ஆனால், ‘சந்திரமுகி’யின் வித்யாசாகரை (அந்நியனில்) ஹாரிஸ் எட்டவே இல்லை.
மன்ற மையத்தில் பார்த்த ஒரு ஒப்பீடு :: The Hub :: Shanke’rs Anniyan Songs:
இளையராஜா = Win98 (Old but stable, not good for networking, doesnt get along with people) ஏ.ஆர். ரெஹ்மான் = Windows 2000 Service Pack 4 (Solid) வித்யாசாகர் = Win XP ( Colorful, lot of bugs) ஹாரிஸ் ஜெயராஜ் = லிண்டோஸ் 2000 (A hybrid cross system cloned from Windows 200 with Linux) யுவன் ஷங்கர் ராஜா = லீனக்ஸ் (Open source, share lot of resources around the world, you know what i mean )
தேவா, பரத்வாஜ், கார்த்திக்ராஜா போன்றோரை விட்டுவிட்டார் ;;-)
Recent Comments