Archive

Archive for May 13, 2005

Burnt Out சேப்பல்

May 13, 2005 Leave a comment

உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக ஆகிக் கொண்டிருக்கிறதா?

புகழ்பெற்ற காமெடியன் டேவ் சாப்பலுக்கு (Dave Chappelle) ஆகிப் போயிருக்கிறது. நான் தவறவிடாமல் பார்க்க நினைக்கும் நிகழ்ச்சிகளில் காமெடி செண்ட்ரலில் வரும் சேப்பல்ஸ் ஷோ-வும் ஒன்று.

அமெரிக்காவில் இருக்கும் இனபேதங்கள், கறுப்பர்களை இளக்காரம் செய்யும் மனப்பான்மை, ஏழைகளின் நிலை, போதைக்கு அடிமையாதல் என்று பேச பயப்படும் விஷயங்களை கிண்டலாக முன்வைப்பவர். மூன்று வருடங்களுக்கு முன்பு, ஆர்ப்பாட்டமில்லாமல் சாதாரணமாகத் தொடங்கிய நிகழ்ச்சி. ஆரம்பித்த சில வாரங்களிலேயே பரவலாகப் பேசப்பட்டு, இளசுகளிடையே மவுசு கூடிப் போனது.

செயின்ஃபெல்ட்‘, ‘ஃப்ரெண்ட்ஸ்‘ போல் இல்லாமல் சேப்பலே முழுக்க முழுக்க சொந்தமாக எழுதி, இயக்கி, தயாரித்து வந்தார்.

தயாரிப்பாளர்களின் வாயில் எச்சிலூறும் ஆசை, பார்வையாளர்களின் அடுத்து எப்படி கலக்கப் போகிறார் என்னும் அதீத ஏற்றிவிடல், எல்லாவற்றையும் சொந்தமாக செய்தால்தான் நிகழ்ச்சியின் தரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்னும் கணிப்பு, எல்லாம் சேர்ந்து அவரை மனநலக் காப்பகத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது.

‘உங்ககிட்டேயிருந்து இதை எதிர்பார்க்கலை’, ‘நீங்களா இப்படி எழுதினது’, ‘அவர் படைப்பு என்றால் இப்படி இருக்காது’ என்று ஏற்றிவிட்டுப் பார்த்திருக்கிறேன். படைப்பாளியை அதீதமாக, நேரடியாக பாதித்ததை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.

‘ஆளவந்தானி’ல் மொட்டை கமலுக்கும் தொடை காட்டும் மனீஷாவும் – அருகில் இருக்கும் போது வரும் வசனம்: ‘மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலமா?!

அந்த மாதிரி ஒரு காமெண்ட்:

சுவையான வலைப்பதிவும் சேப்பல்ஸ் ஷோ மாதிரிதான் 😉

இதை எழுதாதீங்க… அதைப் போஸ்ட் போடாதீங்க… என்னும் நல்லெண்ண சித்தாந்தங்கள் இலவசமாய் நிறைய கிடைக்கும்.

செய்தி: நியு யார்க் டைம்ஸ் | CNN.com

Categories: Uncategorized