Archive
டிவியிலும் துள்ளுகிறது இளமை
இன்றைய சன் டிவி படம் ‘துள்ளுவதோ இளமை‘. படம் படு சைவமாக காண்பித்தார்கள். இந்த மாதிரி மெஸேஜ் படத்தையா ‘ஏ’ குத்தி, மலையாளப் பட ரேஞ்சுக்கு முத்திரை மோசடித்து, ஷெரினுக்கு கவர்ச்சி நடிகை அந்தஸ்தை கொடுத்தார்கள் என்று வினா எழுப்பும் அளவு வெட்டியிருந்தார்கள்.
அந்தப் படத்தையும் இரண்டாம் பகுதியில் உம்மென்று பார்க்க வைத்த மும்பை எக்ஸ்பிரசும் தலைவர் தமிழில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனையோடு பார்த்த ஸ்வதேஷும் பிறகொரு நாள் போஸ்ட்டின் விஷயங்கள்.
சன் டிவியின் அசல் ‘துள்ளுவதோ இளமை’யாக கோலங்கள் சீரியல் இருந்ததாம். தேவயானியின் சகோதரனாக வருபவரும் அபியுடன் கூட வேலை பார்க்கும் தீபா வெங்கட்டும் சம்பந்தப்பட்ட அஃபிஷியல் ட்ரிப்பின் அந்தரங்கக் காட்சிகள் ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என்பது போல் நெடுந்தொடர்களின் லஷ்மண் ரேகாவைத் தாண்டி பல மீட்டர்கள் ஓடியதாம்.
சீரியல்தானே ஓடுது… என்று குழந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பதறியடித்து ரிமோட்டைத் தேடி சேனலை மாற்றியிருக்கிறார்கள்.
நான் ‘கோலங்கள்’ பார்க்காததற்காக நிம்மதிப் பெருமுச்சு விட்டுக் கொண்டாலும், தீபா வெங்கட்டின் குறிப்பிட்ட காட்சிகளைத் தவறவிட்டு விட்டோமோ என்று ஏக்கப் பெருமூச்சு வந்ததாக, இல்லத்தரசி சந்தேகப்பட்டார்.
விகடன் பத்திரிகைதான் மாறிப் போனது என்றால், விகடன் தயாரிப்பும் தாராளமாயமாக்கலை நன்றாகவே செய்கிறது!? ஒரு வாரம் முன்பே முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள், கபர்தார் எல்லாம் கொடுத்து மிரட்டினால் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடியிருக்குமே…
குறிப்பிட்ட கோலங்களை எவராவது பார்த்திருந்தால், மெய்யாலுமாகவே எல்லைகள் வரம்பு மீறியதா அல்லது சாதாரண டாடா உப்பு கூட பெறாத மேட்டரா என்று தெளிவுபடுத்துங்கள்.
பி.குறிப்பு: பேவரிட் அன்னியன் பாடலை சுழற்சியில் ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது போல், இப்பொழுதெல்லாம் ‘மெட்டி ஒலி’ மீண்டும் மீண்டும் அரைத்த மாவை புளிக்க வைப்பதால், முன்னாள் சித்தி, சமீபத்திய அண்ணாமலை, என்றும் ராதிகாவின் புதிய மொந்தை ‘செல்வி’யே தேவலை.
தமிழ்த்திணை
பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகளைக் கொண்ட ஆய்விதழ். தமிழாய்வுகள் பகுதி தமிழ் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும்.
– சுபாஷினி
நூல் அறிமுகம் (பகுதியில் இருந்து…)
அறிவியல் தமிழ் – முனைவர் கு. அண்ணாதுரை
ஒருமை – பன்மை – முனைவர் கி. சேம்பியன்
வடு – முனைவர் பிரியகுமாரன்
க் ச் த் ப் மிகுதலும் மிகாமையும் – முனைவர் கி. சேம்பியன்
இன்றைய தமிழ் நாடகச் சூழல் – முனைவர் கே.ஏ.குணசேகரன்
இந்துத்துவம் எதிர் அரசியல் – முனைவர் த.சேயராமன்
எரிவாய் காவேரி – புலவர் க. முருகேசன்
பாரதி ஓர் இசைக் களஞ்சியம் – முனைவர் இரா. கலைவாணி
சங்கப் பாக்களில் தொல்குடிக் கூறுகள் – இரா. முருகன்
இவர்களோடு நான் – இரா. சுப்பராயலு
Recent Comments