Archive

Archive for May 16, 2005

அது ஒரு கனாக் காலம்

May 16, 2005 4 comments

இசை: இளையராஜா
இயக்குநர்: பாலு மகேந்திரா

‘நீங்கள் கேட்டவை’ போன்ற படங்கள் பாடல்களுக்காகவே ஓடியது அந்தக் காலம். இந்தப் படத்தில் நடிகர்களையும் தன்னையும் மட்டுமே நம்பி பாலு மகேந்திரா களமிறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது.

அந்த நாள் ஞாபகம் :: விஜய் யேசுதாஸ், ஷ்ரேயா கோஸல் – 1.5 / 4
முதல்முறையாக ஷ்ரேயா கோஸலுக்கு பதிலாக வேறு யாரையாவது பாட விட்டிருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் பாடல். சாதனா சர்கம் மாதிரி தேவையில்லாத இடங்களில் இழுத்து விடுகிறார்.

என்னடா நெனச்சே :: ரஞ்சித், விஜய் யேசுதாஸ் – 1 / 4
அச்சச்சோ… கொஞ்ச நாள் கழித்து ராஜாவின் டப்பாங்குத்து. தனுஷின் ஆராதனைப் பாடல். பாடகரை மாற்றியிருந்தால் சோபித்திருக்கலாம்.

காட்டு வழி கால்நடையா :: இளையராஜா – 2 / 4
ராஜாவின் கோட்டையான தத்துவ தனிப்பாடல். பாடலாசிரியர் வலு சேர்க்காதது முதல் வருத்தம். இன்னும் எத்தனை நாள்தான் இப்படி சோகமாகப் பாட வேண்டுமோ என்பது போன்ற அலுப்பு தெரிவது இரண்டாவது வருத்தம். முடிவில் ஓரணா மிட்டாய் போல ஒரு அசட்டு தித்திப்பு.

கிளி தட்டு கிளி :: பவதாரிணி, ஜோதி – 3 / 4
பவதாரிணி க்ராஜுவேட் ஆகியிருக்கிறார். இரண்டு தடவைக் கேட்டதில் படத்தில் மிகவும் பிடித்த பாடலாகத் தோன்றுகிறது. ராஜாவின் முத்திரை இசையோடு மெல்லிய வரிகளில் அசத்துகிறார்கள்.

உன்னாலே தூக்கம் :: ரஞ்சித், மாலதி – 2 / 4
தனுஷ் ப்ரியாமணியுடன் மங்கலான விளக்கொலியில் கசமுசா செய்யும் பாடல். மாலதி நிறையவே அசத்தி வாசித்திருக்கிறார்.

ராஜா அரசோச்சியது எண்பதுகளில். பாலு மகேந்திராவும் இளையராஜாவும் என்றாலே எதிர்பார்ப்புகள் இறக்கை கட்டி பறக்கும். அதுவெல்லாம் ஒரு கனாக் காலம்.

Categories: Uncategorized

விகடனின் நேரடிப் பதிவு

May 16, 2005 Leave a comment

பா.ராஜநாராயணன் & இரா.முத்துநாகு

“எங்க கிட்ட கூலி வேலை பாக்கிறவங்க எங்களையே ஆள முடியுமா? ஆனா பாவம், அவங்களையும் சொல்லிக் குத்தமில்லே. எங்க நிலத்துல பாடுபட்டு, நாலு காசு சம்பாதிச்சிட்டிருந்த பாவப் பட்ட சனங்க பொழப்புல அரசாங்கம் மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. அதான் உண்மை!”
ராஜாக்கிளித் தேவர், கீரிப்பட்டி

இந்த தேர்தல்ல, ‘அழகுமல! நீதாம்ப்பு தலைவரு. என்ன, புரியுதுல்ல? இந்தா!’னு ஒரு மூடை அரிசி குடுத்தாங்க எசமானருங்க. கூடவே ஆயிரம் ரூவா குடுத்து, ‘நல்ல துணிமணி வாங்கிக்கப்பா’ன் னாங்க. அவங்க சொன்னபடி தேர்தல்ல நின்னேன். செயிக்கவெச்சாங்க. அப்புறம் ஊர்வலமா போய் ராசினாமா செஞ்சு புட்டேன். இதுல நான் வேற என்னத்தச் சொல்ல?”
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று, உடனே ராஜினாமா செய்த அழகுமலை

“அன்னிக்கு மதிய நேரம்… தேவர் ஐயா வூட்டு மாடியில நெல்லு காயப் போட்டுக்கிட்டு இருந்தேன். திடீர்னு மழை வந்துச்சு. மழை வருதேனு யோசிக்கிற நேரத்துல, தடால்னு ஒரு இடி என் தலையிலேயே விழுந்துச்சு. மயங்கி விழுந்துட்டேன். தேவர் ஐயாதான் ஓடிவந்து காப்பாத்துனாரு. பஞ்சாயத் துத் தலைவரா நான் ஆனதுல உள்ள குத்தம்தான் இதுனு புரிஞ்சுபோச்சு! ‘பொழைச் சதே பெரிசு’னு மறுநாளே ராசினாமா செஞ்சுட்டேன்!”
தனிக்கொடி (பாப்பாப்பட்டி)

“இதாங்க இங்க நடக்குது. இவன் தலையில இடி விழுந் துச்சா… சரினு அடுத்த தேர்த லுக்கு ஆளைத் தேடினோம். ஒரு பய சிக்கலே. கடைசியா, அழகர்னு ஒருத்தனைப் பிடிச்சு, அவனுக்குக் காசு பணமெல்லாம் கொடுத்து, துணிமணி கொடுத்து, நிக்கச் சொல்லி, செயிக்கவும் வெச்சோம். ஆனா, அவன் தலைவரான பத்தாவது நாள் ஜுரம் வந்து செத்துப் போனான். இவங்கள்ல யாரும் தலைவராகுறது அந்த ஒச்சாண் டம்மனுக்கே புடிக்கலீங்க. நான் வேற என்னத்தச் சொல்ல?”
செல்லக்கண்ணுத் தேவர்

“ஊரைவிட்டு விலக்கி இருந்தாங்களே, அந்தப் பதினஞ்சு குடும்பங்கள் யார், யார்?” என்று விசாரித்தால், “வேணாம்யா! நீங்க இங்கே நிக்கிற நேரம்கூட எங்களுக்கு ஆபத்துதான். நீங்க போன பொறவு, ‘பத்திரிகைக்காரங்க கிட்ட என்ன சொன்னே?’னு ஆளாளுக்கு வந்து கேப்பாங்க. இந்தப் பஞ்சாயத்தை ஆளணும்னு எங்க யாருக்கும் ஆசையில்லே. எங்களை நிம்மதியா வாழ விட்டாப் போதும்!” என்று ஒட்டு மொத்தமாகக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

Categories: Uncategorized

வானத்தை வில்லாக வளைப்பவர்கள்

May 16, 2005 Leave a comment

ஜூனியர் விகடன்:: “உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த நடிகர்கள், ‘எங்களிடத்தில் பணம் இல்லை. அதனால் சொன்னபடி நிதி வழங்கமுடியவில்லை’ என பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு பாதிக்கப்பட்ட பெற்றோரின் சார்பில் உதவித் தொகை வழங்கி நோகடிப்போம்”

‘அக்னிப் பூக்கள்’ அறக்கட்டளை (கும்பகோண பள்ளிக்கூட தீ விபத்துத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் அமைப்பு)


வாய்ச்சொல் வீரர்:

வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான்

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Categories: Uncategorized

குமுதம்.காம்

May 16, 2005 Leave a comment

விஜயகாந்த்

நா.கதிர்வேலன் :: சிலபேர் நீங்க அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்னன்னு கேட்கிறாங்க. இதைத்தான் ஆறேழு வருஷமாக நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ளே போராட்டம். இப்போ இந்த நடிகர் சங்கத்தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ணமுடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன் இருந்துச்சு, அடைச்சோம். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணணும். இப்படித்தான் ஜனங்கள் எங்கே போனாலும் தருகிற ஆதரவையும், அன்பையும் ஏத்துக்கிட்டு என்ன செய்யறது! அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்தவேண்டியது என்ன? ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். ஜனங்களுக்கு நல்லது செய்யலை என்றாலும் கெடுதல் பண்ணிடவே கூடாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் மவுண்ட்ரோட்டில் பெரிய அளவில் மறியல் நடந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சின்ன வார்டு தேர்தல். ஏழெட்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. மக்களுக்கு எவ்வளவு துயரம்! கேள்வி கேட்க யாரும் இல்லை. ஸ்கூலுக்குப் போறவங்க, இண்டர்வியூ போக அவசரப்படுகிறவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. அரசியல்கட்சிக்கு அது முக்கியமே இல்லை. வெட்கங்கெட்டுப்போய் நாமும் எந்தக்கேள்வியும் கேட்காமல் விடுகிறோம்.

நமக்கு கஷ்டங்களைத் தாங்கிப் பழகிவிட்டது. ஏழெட்டு மணிநேரம் பொதுமக்கள் துயரப்படவேண்டியதின் அவசியம் என்ன? எனக்கு ஜனங்கள் பெரிசா வசதி வாய்ப்போடு வாழந்து செழிக்கணும் என்ற விருப்பமெல்லாம் அதிகம் இல்லை. அவங்க பாதுகாப்பாக இருக்கணும், சவுகரியமாக இருக்கணும், நிம்மதியாக இருக்கணும் இதுதான் என் விரும்பம்னு சொல்லத் தோணுது. சேவை செய்யணும் என்ற எண்ணம் ஒரு நடிகனுக்கு வரக்கூடாதா?

நன்றி: குமுதம்


பிரமோத் மகாஜன்

சோலை :: ‘‘டெல்லியில் தி.மு.க. அமைச்சர் ஒருவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் வந்தார். அவரது இல்லத் திருமண அழைப்பிதழை எனக்குத் தந்தார். தி.மு.க. அமைச்சருக்கு அவர் தரவில்லை. ஏன் என்று கேட்டேன்.

‘தி.மு.க. அமைச்சரும் நானும் உயிருக்கு உயிரான நண்பர்கள்தான். அவருக்குப் பத்திரிகை கொடுத்து அந்தத் தகவல் எமது கழகத்தலைமைக்குத் தெரிந்தால் எம்.பி. பதவியே பறிபோய் விடும்’ என்றார்.

அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

அமிர்தசரசிலிருந்து லாகூருக்கு பஸ் விடலாம். ரெயில் விடலாம். ஆனால் போயஸ் தோட்டத்திலிருந்து கோபாலபுரத்திற்கோ அங்கிருந்து போயஸ் தோட்டத்திற்கோ சைக்கிள் ரிக்ஷாகூட விடமுடியாது. இந்தக் கலாசாரத்திலிருந்து பி.ஜே.பி. விடுபட வேண்டும்’’ என்றார் பிரமோத் மகாஜன்.
—-
இஞ்சி எப்படி இருக்கும் என்று ஒருவன் கேட்டானாம். இது தெரியாதா? எலுமிச்சம்பழம் போல் தித்திப்பாக இருக்கும் என்றானாம் இன்னொருவன். இப்படித்தான் பி.ஜே.பி.யை கிராமத்து மக்கள் புரிந்திருக்கிறார்கள்.

நன்றி: ரிப்போர்ட்டர்

Categories: Uncategorized

பாவண்ணன் – திண்ணை

May 16, 2005 Leave a comment

நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும்
வளவ.துரையன்: பாவண்ணனின் “நூறுசுற்றுக் கோட்டை” – நூல் அறிமுகம்

இந்நூல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. “வண்ணமும் வாழ்வும்” என்னும் முதல் பகுதியில் கன்னடமொழியல் நவீனத்துவம் படர்ந்தபிறகு எழுதப்பட்ட கதைகளில் நவீனத்துவத்தின் நிறம் சரியாகப் புலப்படும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கதைகள் உள்ளன. மூன்று தலைமுறைக்கு முந்தைய மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சிறுகதை முதல் இருபத்தைந்து வயது இளைஞனுடைய சிறுகதைவரை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. “ஆறுகளின் தடங்கள்” என்னும் இரண்டாம் பகுதியில் மூத்த கன்னடப் படைப்பாளிகளின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்துக்கொடுக்கப்பட்டுள்ளன. “அணையாத சுடர்கள்” என்னும் மூன்றாம் பகுதியில் மறைந்துபோன முக்கிய கன்னடப் படைப்பாளிகள்பற்றி பாவண்ணனே தனிப்பட்ட வகையில் எழுதிய அஞ்சலிக் குறிப்புகள் அடங்கியுள்ளன.

புராணப்பின்னணியில்ஆமைந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் “குசேலரின் கொள்ளுப்பேரன்” மனிதமன ஆழத்தை அறிய முயலும் கதை. குசேலர் வறுமையில் வாடியவர். கிருஷ்ணனுடைய உதவியால் வறுமை அகன்ற வாழ்வை அடைந்தவர். குசேலருக்கு அச்செல்வத்தில் நாட்டமில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்துவிடுகிறார். அடுத்தடுத்த தலைமுறைகள் அச்செல்வத்தில் திளைக்கிறார்கள். இப்போது புதிதாக முளைத்த மூன்றாம் தலைமுறைக்கு தன் பழமை வறுமை சார்ந்து மதிப்பிடப்படுவதில் விருப்பமில்லை. புதிய புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவினால் பழமைக்கு வேறு நிறம் கொடுக்கப்படுகிறது. மனத்தின் விசித்திரம் இது. கதையை வாசித்து முடித்ததும் நம் கண்ணில் காணப்படும் நிறங்களில் உண்மை எத்தனைப் பங்கு புனைவு எத்தனைப் பங்கு என்று அலசத் தோன்றுகிறது. மானுட சரித்திரம் முழுக்க இப்படிப்பட்ட புனைவுகளால் உருவான ஒன்றுதானா என்கிற கேள்வி உருவாக்கும் மலைப்பும் கூச்சமும் கொஞ்சநஞ்சமல்ல.

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் “சூரியனின் குதிரை” சிறுகதை மிக நல்ல அனுபவத்தைத் தரக்கூடியது. சூரியனின் குதிரை என்னும் தலைப்பு புராணம் அல்லது அறிவியல் சார்ந்த ஒரு கதையை எதிர்பார்க்கத் து£ண்டுகிறது. இறுதியில்தான் அத்தலைப்பு ஒரு சாதாரண புழுவைக் குறிப்பிடக்கூடிய ஒரு கன்னடப்படிமம் என்று கண்டடைகிறோம். கதையில் இடம்பெறும் வெங்கட் ஜோயிஸ் அக்கம்பக்கத்தார், ஊரார், நண்பர்கள், மனைவி, மகன் என எல்லாராலும் சாதாரணமாக, பிழைக்கத் தெரியாதவனாக, சாமர்த்தியமற்றவனாக, ஒரு புழுவைப்போல மதிக்கப்படுபவன். மற்றவர்கள் தலைக்கு எண்ணெய் மஸாஜ் செய்து மகிழ்ச்சியடையக்கூடியஆந்தச் சாதாரணன் இறுதியில் சூரிய ஒளியில் தளரிலைமீது நௌ¤கிற ஒரு புழுவைக்கண்டு ஆனந்தப் புன்னகை கொள்கிறான். ஒரு புழு இன்னொரு புழுவைப் பார்த்துச் சிரிப்பதான சித்திரம் நம் கண்முன் விரிகிறது.

(நூறு சுற்றுக் கோட்டை – தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : பாவண்ணன். வெளியீடு: அகரம். விலை. ரூ 110. பக்கங்கள் 216)


அன்பினால் ஆன உலகம்
க.நாகராசன் :: பாவண்ணனின் “தீராத பசிகொண்ட விலங்கு” – நூல் அறிமுகம்

உங்கள் மனத்தில் பிடித்தவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா அல்லது பிடிக்காதவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா என்னும் எளிமையான கேள்வியைக்கொண்ட முன்னுரையோடு பாவண்ணனின் “தீராத பசிகொண்ட விலங்கு” தொடங்குகிறது. வணிகமயமான இன்றைய மானுட வாழ்க்கை அனுபவங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்துபார்க்கும்போது பிடிக்காதவர்களின் நினைவுகள்தாம் அதிகமிருக்குமோ என எண்ணத் து£ண்டுகிறது. இதை விவரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாரதக்கதையான கண்ணன்-சகுனி-மாயக்கண்ணாடி கதை முக்கியமானது. கேள்வியின் அடுத்த பகுதிக்கு விடையாகச் சொல்லப்பட்ட “தொடர்ந்து கொட்டிவரும் தேளை விடாமல் காப்பாற்றும் பெரியவரின் கதை” அன்பினால் ஆன உலகத்துக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் பார்த்துப் பழகிய தனக்குப் பிடித்தமானவர்களின் நினைவுகளை படைப்பாளர் 22 கட்டுரைகளாக இத்தொகுதியில் விவரித்துள்ளார்.

வெவ்வேறு கடல்களைப்பற்றிய பாவண்ணனின் வர்ணனைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

தரங்கம்பாடி கடல் = மிகப்பெரிய முற்றத்தைக்கொண்ட வீடு

விசாகப்பட்டணம்கடல் = கைவிலங்கை அகற்றச்சொல்லி அலறித் துடிக்கும் பைத்தியம்

பேகல் கடல்= முஷ்டி உயர்த்தி ஆர்ப்பரிக்கும் இளைஞனின் குரல் ஒலிக்கும் இடம்

கார்வார் கடல்= கதைபேசி கைகோர்த்து நடப்பதுபோல குது£கலம் கொப்பளித்து நிற்பது

திருவனந்தபுரம் சங்குமுகக்கடல் = கலகலவென்று சிரித்தபடியும் கைவீசியபடியும் துள்ளித்துள்ளி ஓடுகிற இளம்பெண்களின் கூட்டத்தைப்போன்ற இனிய இரைச்சலைக்கொண்டது.

(தீராத பசிகொண்ட விலங்கு – பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம். விலை.ரூ50)

நன்றி: திண்ணை

Categories: Uncategorized