Home > Uncategorized > அமுதசுரபி – மே 05

அமுதசுரபி – மே 05


Amudhasurabi::

* மைய-மாநில உறவு
இந்த மைய-மாநில உறவு என்பதை அரசியல் விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமது அரசியல் சட்டத்தில் மைய அரசுக்கு என்ன உரிமைகள், கடமைகள் என்று உள்ளனவோ, அம்மாதிரியே மாநில அரசுக்கும் என்ன உரிமைகள் கடமைகள் உள்ளன என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

* வையவன் கதைகள்
வையவனின் கதைகள் மனிதப் பிறவியின் மகத்துவத்தை அழகுற வெளிக்காட்டுகின்றன. அன்றாடம் நிகழும் சில சாதாரண நிகழ்ச்சி களின் வாயிலாக வாழ்க்கையில் சில சிக்கலான பிரச்சினைகளையும், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் விளக்கித் தெளிவாக்குகின்றன. ஆசிரியரின் விரிந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கும் இக்கதைகள். உயிர்களுக் கிடையே அமைந்த உன்னதமான உறவுகளை யும், உணர்வுகளையும் நல்ல முறையிலே வெளிப்படுத்துகின்றன.

* படிக்கக் கிடைத்தவை – 2
சாதி வெறி எங்கு யாரிடம் இருக்கிறது என்பதை அரசியல் வாதிகள் கண்டு கொள்வதில்லை. அதைப் பிரச்சினையாக்கிவிட்டால், வாக்குகள் பறிபோகும். அதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக்கி, கண்டுக்காமல் இருப்பதுதான் சரி என்பது எல்லாக் கட்சிகளின் சொல்லப்படாத மெüன உடன்படிக்கை. ஆனால் தலித் எழுத்துகள், இப்படித் தப்புவதில்லை. அவர்கள்தான் தாம் வாழும் அனுபவத்தை கொள்கைப் பூச்சில்லாமல் எழுதுகிறார்கள்.

* கவிதாயினி சுகந்தி சுப்ரமணியன்
மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்…. என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

* மூன்று கோடிப் பேர் தேவை – எல் அண்டு டி
உண்மையில் சிறியதோ, பெரியதோ எந்தக் கட்டுமானப் பணி நடக்கும்போது தலைமைப் பொறியாளர்களும் மேற்பார்வையிடும் அதிகாரிகளும் மட்டும் வல்லுநர்களாக இருந்தால் போதாது. களப் பணியாளர்களான கொத்தனார், கம்பி கட்டுபவர், மின்சாரப் பணியாளர்கள் இப்படி எல்லோருமே தாம் செய்யும் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல முறையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால்தான் பணி செவ்வனே நடைபெற்று நீண்ட காலம் பயனுறும் வகையில் அமையும்.

* கவிதை வெளி
முகுந்த் நாகராஜன், சுஜாதா விஜயராகவன், வைகைச் செல்வி, ச. பிரியா, ஆனைமலை, அண்ணாகண்ணன், நரன், வெண்ணிலாப்ரியன்

* வாசனை எண்ணெய்க்கு வளமான எதிர்காலம்
இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் “வெட்டிவேர்’ தைலம் வடிக்கப்படுகிறது. மல்லி, மருதாணி, சந்தன மரம், சிட்ரோ நெல்லா, பச்சோலி போன்றவற்றிலிருந்தும் தைலம் வடிக் கின்றனர். சுமார் 200 வகை வாசனைத் தைலங்கள் பெருமளவிலும் ஏறக்குறைய 800 வகை ஓரளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* மரத்தூள் ஓவியங்கள் – செய்முறைக் கட்டுரை
எல்லா மரத்தூளையும் சாக் பவுடருடன் சேர்த்து, பெவிகாலுடன் குழைத்தால் இந்தக் கலவை உறுதியாகும். சற்றே சொரசொரப்பான எந்தப் பொருள்கள் மேலும் ஒட்டி, டிசைன் செய்ய அருமையாக வரும். எளிய முறை கொண்ட இரட்டைக் கிளிகளைச் செய்ய தேவைப்படும் பொருள்களை எழுதி, வழிமுறைகளையும் குறிப்பிடுகிறேன். இதே தொழில்நுட்பம் மீதிப் படங்களுக்கும் பொருந்தும்.

* தெய்வீக உடல் :- 2
மனித உடலும் புதிய உருமாற்றத்திற்கான ரசவாதத்திற்கு உள்ளாகும். முன்பு விலங்கு நிலையிலிருந்து நிமிர்ந்து நின்று சிந்திக்கும் மனித வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக்கொண்டது போல், மனித உடல் இப்போது புதிய சக்திகளை வளர்த்துக்கொண்டு ஆன்மீக சக்தியையும் அதிமன உணர்வையும் வெளியிடும் தகுதியைப் பெறவேண்டும்.

* தமிழில் கலப்பு!!???
பிற மொழிகளின் ஆதிக்கத்தினின்றும் தமிழைப் பாதுகாக்கும் வேட்கை, இன்று நேற்று அல்ல, முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் வலுவாக எழுந்தது. ஆக்கபூர்வ மாக வெளிப்பட்ட அவ்வுணர்வை மறை மலையடிகள் போன்ற தமிழறிஞர்கள் போற்றி வளர்த்தனர். தமிழகமெங்கும் தூய தமிழ்மணம் கமழச் செய்தனர்.

* நான் என்ன சொல்லட்டும்?
சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து அவ்வளவு முக்கியமா? ஒரே மணி நேரத்தில், பெரியம்மா, பெரியப்பா முன்னால் பல்லைக் காட்டிக்கொண்டு சேவகம் செய்யும் முகம் அப்படியே மாறிவிட்டதே என்ற ஆச்சரியத்துடன், அப்பா, அம்மாவையே பார்த்தவாறு என்னையறியாமல் தலையை ஆட்டினேன்.

* நூல் நயம்
ஆன்மிக வினா விடை : சுவாமி கமலாத்மானந்தர் 3 பாகம்
ஊரும் திரிபும் இழிவும்!: தொகுநர்- அ.சி. சின்னப்பாத்தமிழர்
ஜே. ஆர். டி. டாடா – வாழ்க்கை வரலாறு: அறந்தை மணியன்
மெய்ப்பொருள் ஞானம் : துருவன்

* பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்
இந்தப் பாப்பரசர் சென்ற இடங்களிலெல்லாம், நிலத்தில் வீழ்ந்து, அந்நாட்டு மண்ணை முத்தமிட்டு, தன்னை, தனது அன்பைக் காட்டி நின்ற உத்தம மனிதர். மாற்ற முடியாத “பாக்கின்சன்’ நோய் வந்த பின், நிலத்தில் வீழ்ந்து, முத்தமிட முடியாத காரணத்தால், தான் போன நாடுகளின் மண்ணை, பிரம்புக் கூடையில் கொண்டு வரச் சொல்லி, அந்த மண்ணை முத்தமிட்டு, அந்த மண்ணின் மீது, தன் ஆசீர்வாதமிட்டு, இந்தப் பூமியின் காலடியில் நாம் அனைவரும் ஒரே குலம் என்று கூறித் தன் அன்பைக் கொடுத்தார். அன்பினால் உலகத்தை ஆளலாம் என்ற நல்ல தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர் இந்த அற்புத மனிதரே!

* நிறங்களால் எழுதிய கவிதைகள்
பச்சை வண்ணத்தின் எல்லாவகைப் பிரிவுகளிலும் அடங்கக்கூடிய கோடுகளால் ஆன பின்னணியில் தலை கவிழ்ந்திருக்கும் நங்கை ஒருத்தியின் சித்திரம், வசீகரமாக உள்ளது. நங்கையும் பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கிறாள். அவள் கூந்தல் நாலா பக்கமும் பறந்தபடி இருக்கிறது. நாலாபக்கமும் சுழன்று சுழன்று அலைபாயும் கூந்தல் கோடுகள் விரிந்த பின்னணியில் எங்கெங்கும் படர்ந்து நெளிவதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

* சவாலே சமாளி
என் பயணச்சீட்டும் அதிலேயே இருந்ததால் சங்கிலியைப் பிடித்திழுத்தும் வண்டி வெகுதூரம் வந்துவிட்டது. பணப்பை எங்குபோய் விழுந்ததோ தெரியாது. ஒரு நிமிடம் தவித்து போய் விட்டேன். பிறகு பயணச் சீட்டுப் பரிசோதகர் சமாதானம் கூறி, கவலைப்படாதீர்கள் என்றார்.

* தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியையே தமிழர் பயனுறுத்த வேண்டும் என்ற கொள்கையற்ற சூழ்நிலையில், பிறமொழிகளை வாழ்வுடன் இணைக்காமல் தமிழர் வாழ்வு முழுமை பெறாது என்ற பிறழ்ச்சிச் சிந்தனையாளரின் உள்ளீடுகள் சமூகத்தின் நச்சு வேராகியதால், தமிழைப் பாடமாகப் படித்தோர் தாழ்நிலையினர் என்ற கருத்துருவாக்கம்.

* வேலை தேடாதீர்கள் வேலை கொடுங்கள்
1960கள் வரை பட்டதாரிகள் குறைவாக இருந்தனர். எனவே பட்டப் படிப்பு முடித்த உடனேயே அவர்களுக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்து வந்தது. 1970களில் இது மாறியது. நிறையப் பேர் பட்டப் படிப்புப் படித்தனர். பட்டமேற்படிப்பும் படித்தனர். அப்போது பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாத நிலை. அச்சமயம் மத்திய, மாநில அரசுகளே அதிகபட்சமாக வேலைகளைக் கொடுத்து வந்தனர். மிகக் குறைந்த அளவிலேயே தொழில் துறை வளர்ச்சி இருந்துவந்தது.

* சிறிய தூண்டில் பெரிய மீன் : 2
நாம் போடும் திட்டம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அது பலன்களைப் பலமடங்கு அதிகமாகத் தர வேண்டும். ஓட்டப் பந்தய மைதானம். வண்ண வண்ண ஜிகினா கால்சட்டைகள். மேலே முண்டா பனியன். அவையும் வெவ்வேறு நிறங்களில். பல எண்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. ஓடத் தயாராய்க் குனிந்து ஒரு கால் முன் நீட்டிக் கவனமாய் வீரர்கள் இருக்கிறார்கள். போட்டியினை நடத்துபவர், “டுப்’ என்று சுடுகிறார். அனைவரும் உடனே ஓடத் தொடங்குகிறார்கள். ஓட்டம், பேய் ஓட்டம். இலக்கு, வெற்றிக் கோட்டை, ரிப்பனை நெஞ்சால் முட்ட வேண்டும்.

* வெற்றித் திருமகள் : அஞ்சலி அரோரா
வெற்றிக்கு, உடல் ஊனம் தடையேயில்லை என்று சொல்லும் அஞ்சலி அரோரா, பதினைந்து வயது வரை உலகைச் சாதாரணமாய்த்தான் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள், வைரஸ் காய்ச்சலில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. தாயும் தமக்கையும் உதவத் தன், குறைகளை ஏற்றுக்கொண்டார், தன் முன்பு வைக்கப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளப் புறப்பட்டார்

* ஒரு வாக்குமூலம்
காரணப் பெயர் கொண்டவன் கிருஷ்ணன் என்று ஊரிலே சொல்வதைக் கேட்டிருக்கிறான். அவன் பெற்றோர் இருவரும் சிறைச்சாலையில் இருந்தபோது பிறந்தவன் என்பதால், கிருஷ்ணன் என்பது, பொருத்தமான பெயர். சிறைச்சாலை சென்றது விடுதலை போராட்டத்தில் அல்ல. திருவிழா நடைபெற்ற ஊரில் ஒரு குழந்தையின் கழுத்துச் சங்கிலி சம்பந்தப் பட்ட தண்டனைதான்.

* மார்க்கெட்டிங் துறையில் பெருகும் வேலை வாய்ப்புகள்
இன்று சந்தையாக்கம் குறித்த பல்வேறு தகவல்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் மட்டுமே ஒரு நிறுவனம் இயங்கிய காலம் மாறி, தேசிய அளவிலும் உலகளாவிய அளவிலும் நிறுவனத்தின் இயக்கங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஒவ்வோர் இடத்திற்கும் தகுந்தவாறு தனது நடவடிக்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் விலை அடிப்படையில் மட்டும் பொருட்கள் தமக்குள் போட்டியிட்ட நிலையும் மாறி, பொருளின் இதர தன்மைகளை வாடிக்கை யாளர்கள் நோக்கத் தொடங்கியுள்ளனர்.

* பாடகி : வாமன கதை
இவளின் மனச் சோர்வைப் பார்த்து எனக்கு வியப்பாய் இருந்தது. கர்னாடக சங்கீதத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவள், வசுதா. சின்ன வயதில் கற்றுக் கொண்டும் இருக்கிறாள். பிறகு படிப்பு, வேலை என்று வழக்கமான காரணங்களால் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் சங்கீதம் கேட்காமல் அவளால் இயங்க முடியாது

* கலையுலகில் பொன்விழாவை நோக்கி மூன்றெழுத்து மன்னர்கள்
தமிழ் நாடக வரலாற்றில் மூன்றெழுத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக அண்மையில் பொன்விழா தாண்டி, மூன்று ஆண்டுகள் முடித்த ம.அ.அ. (யுனைட்டட் அமேச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்)யின் முத்திரை, தமிழ் நாட்டு ரசிகர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த ஒன்று. இதன் நிறுவனர் ஒய்.ஜி.பி. (மூன்றெழுத்து)யின் குடும்பம், ஒரு மாபெரும் கலைக்குடும்பம்; இலக்கியக் குடும்பம்; கல்வி வளர்ச்சிக் குடும்பம். மூன்றெழுத்து மன்னர்களில் இன்னொருவர், ஏ.ஆர்.எஸ். என்று அறியப்படும் ஏ.ஆர். சீனிவாசன். பணிநிமித்தமாக அமால்க மேஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான நல்ங்ங்க் – ஹ – ழ்ஹஹ் நிறுவனத்தின் மேலாளராக இவர், பல ஆண்டுகளாக உழைத்தாலும் நாடக, திரையுலக, சின்னத் திரையுலகங்களில் ஏ.ஆர்.எஸ். என்று சொன்னாலே எழுந்து நிற்கும் அளவுக்கு மதிப்பு ஈட்டியவர்.

* வேண்டும், சமுதாய அக்கறை
சரி. படிப்பு, பயிற்சி, பட்டறிவு… ஆகியவற்றைப் பெற்று விட்டீர்கள். சுயதொழில் புரிய முடிவு எடுத்துவிட்டீர்கள். தொடக்கத்தில் நட்டத்தை ஏற்கும் மனப்பக்குவம், விடா முயற்சி, தன்னம்பிக்கை, நாணயம் ஆகிய பண்புகளையும் கொண்டுள்ளீர்கள். வாருங்கள். நீங்கள் எந்தத் தொழிலிலும் கால்பதிக்கலாம். ஆனால், சற்றே சிந்தியுங்கள்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: