அரைகுறைப் படமும்
அந்தக்கால ஆனந்த விகடனில் ‘அரைகுறைப் படமும் அவசர பிச்சு‘வும் வரும். மறுபதிப்புகளிலும், சில அசல்களையும் பார்த்து அசந்திருக்கிறேன்.
‘காது காதுன்னா வேது வேது’ என்று புரிந்து கொண்ட கதையை எங்களவர்களும் தப்பும் தவறுமாய் தேவைகளை எழுதி வைப்பார்கள். ஜாதகத்தை பலப்படுத்துவதற்காக, நாங்களும் சந்தைக்கு இன்னும் வராத பீட்டா, ஜாவா, ஷார்ப் எல்லாம் பயன்படுத்தி எழுதிவிடுவோம். கண்ணால் காணாததை கண்டதாகச் சொல்லும் போலி சாமியார் போல் சிலர் அதை உபன்யாசித்து விற்று வைப்பார்கள்.
இந்த கேலிச் சித்திரத்தை பத்து வருடம் முன்பு பார்த்து ‘நம்முடையது இவ்வாறு இருக்காது’ என்று சிரித்துச் சென்றிருக்கிறேன். வேலையில் அமர்ந்த சில காலத்திலேயே செய்முறை விளக்கம் கிடைத்தது. மறக்க முடியாத புகைப்படம்.
போன படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.
அமெரிக்காவில் (இங்கிலாந்திலும்?) மே மாதக் கடைசி திங்கள்கிழமை விடுமுறை. நண்பர்களை சந்தித்துப் பேச முடிந்தது. ‘நீ… என்னப்பா! ஓரமாக உட்கார்ந்து கொண்டு கதைக்குதவாததை வைத்து ப்ளாக் நடத்துகிறாய்’ என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.
நானும் ரொம்ப சேரியமாய் ‘முன்பெல்லாம் பேசுவோம்; பகிர்ந்து கொள்வோம். சிலர் அவற்றை எழுத்திலும் சேமித்து வைக்கிறார்கள். விவாதத்துக்குள்ளாக்கிறார்கள்.’ என்றெல்லாம் விளக்க முயன்றேன்.
எனினும் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் படிமம் இதுதான்:
1. 🙂
2. ThankGod 🙂
அண்ணே,
முதலாவது படத்திலே, கட்டாங்கடைசியிலே முக்கியமான ஒண்ணை முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி விட்டுட்டீங்களே. உங்களுக்காக, நான் அள்ளிப்போட்டிருக்கிறேன்
;-))
பெயரிலி வயித்த வலிக்குது சிரிச்சு
கார்த்திக்… எதுக்கோ நன்றி சொல்றீங்கன்னு தெரியுது 😛
பெயரிலி… ப்ளாகர் சேவை தொங்குவதை நினைவூட்டறீங்க போல 😉
பெயரிலி, உங்க படத்துக்கு இந்தப் பேரு எப்படி? “What the customer gets from the Customer Support”.
பாபா,
//எதுக்கோ//
கார்த்திக்கு ப்ளாகுறதுக்கு நாமதான் நன்றி சொல்லணும் :))
யப்பா…. கலக்குறீங்களே… சிரிச்சி சிரிச்சி நெஞ்சு வலிக்குதப்பு.