Archive

Archive for June 7, 2005

புத்தகக் குறி (மீமீ)

June 7, 2005 1 comment

புத்தகம் சொல்ல மீனாக்ஸ் அழைத்திருக்கிறார்.

எனது புத்தகங்கள்: இதுவரை புரட்டியது ஆயிரம் இருக்கும். பெற்றோர்கள் வாசகராகவும் நான் கடைக்குட்டியாகவும் இருப்பதால் சிறிய வயதிலேயே புத்தகங்கள் நல்ல துணையானது. விக்கிரமாதித்தன், அலிபாபா, மதனகாமராஜன், ஈசாப், திருவிளையாடற் புராணம், பக்த விஜயம், திருத்தொண்டர் புராணம் என்று ஆன்மீகமும் ராஜா-ராணிகளும் நீதிகளும் கலந்து கட்டி அடித்த காலம்.

கொஞ்ச காலம் கழித்து விகடனின் பொன் விழாவோடு கலாதர், மு. மேத்தா என்று தொடர்கதைகளில் நாட்டம் பிறந்தது. அந்தக் கால விகடன், இதயம் பேசுகிறது, போன்றவற்றில் வெளிவந்திருந்த தொடர்கள் எல்லாம் கத்தரிக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்டு வரிசைக்கிரமமாக பரணில் இருக்கும். லஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி என்று அலுக்க ஆரம்பித்த சமயம் தமிழ்வாணன் பரணை விட்டு இறங்கினார்.

சீன் (சான்) நதிக்கரையில் என்று ஆரம்பித்து ஜெனீவா, கத்தரிக்காய் எல்லாம் பரிச்சயமானார்கள். பாக்கெட் நாவல் குட்டி போட்டு க்ரைம், சுபா, புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர்-தான் எல்லாமே என்றாகிப் போனது.

தினமணிக் கதிரில் சில்லு எழுதி தேவ்லோகப் பிரஜையாக இருந்த கணிப்பொறியை அறிமுகம் செய்தார் சுஜாதா. ஏற்கனவே அரசல் புரசலாக அசத்தியவர் மொத்த வியாபரமாக மனதில் வியாபித்தார்.

நான்காண்டுகளாய் பிலானி வாசத்தில் ஸ்டீவன் கோவ், ஃபிலிஃப் கொட்லர், ஆண்ட்ரூ டானென்பாம், பெர்ட் ஷ்மிட் என்று கலந்து கட்டியாக குருக்கள் மாறிப் போனார்கள். குமுதத்தில் கூட கோப்மேயர் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த சுய முன்னேற்ற வெறி கொண்ட காலம். அனைத்து சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஹெரால்ட் ராபின்சன், கென் ஃபாலெட் என்று மெழுகுவர்த்தி கரைத்த காலம்.

வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் ஸ்ட்ருஸ்ட்ருப், லிப்மான், பூஷ், ரம்பா என்று அட்டை டு அட்டை உருட்டி தட்டி நோட்ஸ் எடுத்து வைத்துக் கொண்ட காலம் இன்றளவும் தொடர்கிறது. இப்பொழுது குறிப்பு எடுத்தால் வலைக்குறிப்பாவது மட்டுமே வித்தியாசம்.

அமெரிக்காவில் தனிமை – கதையல்லாத புத்தகங்களின் மேல் நாட்டம் ஏற்படுத்தியது. வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறிய பிறகு சுவைக்கும் சரித்திரம், நகைச்சுவை, இசை, கலை என்று ரசனை மாறியது.

நான்காண்டுகள் முன்பு சொக்கனின் அழைப்பில் ராயர் காபி கிளபில் ஒண்டிக் கொண்டேன். முருகன், வெங்கடேஷ், பாரா, எல்லே ராம் என்று பெருசுகள் சொல்ல சொல்ல கேள்வி கேட்டுக் கொண்டிருந்த காலங்கள். மீண்டும் தமிழ். அப்புறம் இலக்கியம். கடைசியாக இலக்கணம் என்று தமிழ்ப் பக்கம் திரும்பிய நேரம்.

அமெரிக்காவின் அதிவேகச் சுழலில் ஆட்பட்டதன் விளைவோ அல்லது குடும்பத்து வேலைகள் அழைப்பின் காரணமாகவோ – புத்தகங்கள் படிப்பது தொடர்வண்டிப் பயணங்களில் மட்டுமே என்று ஆகிப் போயிருக்கிறது. வாரயிறுதிகளில் நண்பர்கள், சினிமா, தூக்கம், தொலைக்காட்சி, தொலைபேசி, தமிழ்மணம் என்று தொழில்நுட்பத்திற்கும் லௌகீகங்களுக்கும் சந்தோஷமாக செல்வழிக்கும் காலம் இது.

நிறையப் புத்தகங்களைப் புரட்டுகிறேன். முன்னுரையும் முதல் சாப்டருடனும் நின்று போய் இருக்கும் புத்தகங்கள் நிறைய இருக்கிறது. நூலகத்தில் இருந்து ஆசையாக எடுத்துக் கொண்டு வந்து பத்து பக்கங்களுக்குப் பிறகு அபராதம் கட்டி திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கடைசியாக வாங்கிய புத்தகம்: மண்ணாங்கட்டி :: சிட்டி (நிவேதிதா)
கடைசியாகப் படித்த புத்தகம்: அண்ணா :: என் சொக்கன் (கிழக்கு)

சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்: (இது கொஞ்சம் பெரிய பட்டியல் என்பதால் ஜூட்)

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் புத்தக அலமாரி வரை செல்ல கண் மறுக்கும். அந்த மாதிரி கூகிள், புக்-ஷெல்ஃப் உதவியின்றி என்னைப் பெரிதும் பாதிக்கும் படைப்புகள்:

1. கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
2. கிறுக்கல்கள் – ரா பார்த்திபன்
3. குருதிப்புனல் – இந்திரா பர்த்தசாரதி
4. வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்
5. அலகிலா விளையாட்டு – பா ராகவன்

நூலகத்தில் முன்பதிவு செய்த புத்தகங்கள்:

1. Freakonomics : A Rogue Economist Explores the Hidden Side of Everything by Steven D. Levitt, Stephen J. Dubner

2. Blink : The Power of Thinking Without Thinking — by Malcolm Gladwell

3. Dictionary Days — by Ilan Stavans

4. The End of Poverty : Economic Possibilities for Our Time — by Jeffrey Sachs

5. All the President’s Men — by Carl Bernstein, Bob Woodward

தமிழில் ஏன் இப்படி இன்னும் வருவதில்லை என்று ஏங்கும் ஆங்கிலப் புத்தகங்கள்:

1. Fooled by Randomness: The Hidden Role of Chance in Life and in the Markets by Nassim Nicholas Taleb

2. All the Dave Barry You Could Ever Want by Dave Barry

3. Passing Time in the Loo by Stevens W. Anderson

4. The Daily Show with Jon Stewart Presents America (The Book): A Citizen’s Guide to Democracy Inaction

5. The Age of Paradox by Charles Handy

நான் குறிக்கப்போகும் ஐந்து வலைப்பதிவாளர்கள்:

கறுப்பி
காஞ்சி பிலிம்ஸ்
ராம் சி
பிபி
மாது காண்பதுவே

இவர்கள் தவிர புத்தகக்கடையில் புழுவானவர்களும் குதியுங்களேன்!

Categories: Uncategorized

ரோஜா

June 7, 2005 2 comments

காதல் ரோஜாவே
எங்கே
நீ எங்கே
கண்ணீர் வழியுதடி
கண்ணே

கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ
ஏதானதோ
சொல்

தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளியோடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகமிரண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா?
சொல்!

வீசுகின்ற தென்றலே
வேளையில்லை
நின்று போ

பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை
ஓய்ந்து போ

பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை
தீர்ந்து போ

பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ

பாவையில்லை
பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்பே
சேவையென்ன சேவை?

Categories: Uncategorized