Archive
உடுப்பதற்கு ஆடை கூட இல்லாதவர்கள்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் நடிகைகள் ஜஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்ற பட்டியலை தரும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு பீகார் அரசு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் தாமதம் செய்தது. குறிப்பிட்ட தேதிக்குள் தந்தே ஆக வேண்டும் என்று அரசு கெடுபிடி செய்தது. எனவே அவசரம் அவசரமாக அரசுக்கு மாவட்ட நிர்வாகங்கள் பட்டியல் அனுப்பியது. அதைப் படித்துப் பார்த்த போது வறுமையில் வாடுவோர் பட்டியலில் ஐஸ்வர்யாராய், மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி, மாதுரி தீட்சித், ரவீணா டாண்டன் ஆகியோர் பெயர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
முசாபர்பூர் மாவட்டத்தில் இந்த கணக்கு கொடுத்து இருந்தனர். இந்த கணக்கெடுப்புப்பணியை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிக்க சோம்பல்பட்டு மாணவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் வீடு வீடாக செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடி விளையாட்டாக நடிகைகளின் பெயர்களை எழுதி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிட்டனர். இப்போது இந்தப் பட்டியலை சரிபார்த்து தவறுகள் களையப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அக்கப்போர்
“அட, புள்ளிவிவரப் புலியே… விஜயகாந்த் கட்சியில கொ.ப.செ-வா சேரப் போறியா, என்ன?”
– அனு… அக்கா… ஆன்ட்டி…
“மெயிலும் மெயிலும் கொள்ளையடித்தால், வைரஸ் என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டம் நிறைஞ்சு வழிஞ்சால் சர்ச்சை என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டமே வராவிட்டால் சரிச்சையானவர் என்று அர்த்தம்”
– தொலைபேசியில் கேட்டது
“ஒரு வாரத்துக்கு பத்து அனானிமஸ் வலைப்பதிவு வந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை; வியாதி!”
– அரட்டையில் பார்த்தது
பழைய புத்தக வியாபாரி
தெருவோர நூலகன்; படிக்கத்
தெரியாத வாசகன் தேர்ந்த
வறுமைக்கு அறிவை விற்கும்
வாத்தியார் என்பேன் இவனை
படித்தவர் வேலை இன்றி
பாவமாய்த் திரிய; இவனோ
படிப்போரை கொண்டு வாழும்
பாமரப் பள்ளிக் கூடம்
வேதநூல்; வீட்டுக் குறிப்பு;
வேதியல்; கலையை பேசும்
ஆதிநூல்; அறத்தை காக்கும்
அகராதி; இத்தனை பிரிவில்
எந்த நூல் உயர்வு? இல்லை
எந்த நூல் தாழ்வு? இவனின்
சிந்தைக்கு தெரிந்ததெல்லாம்
சில நிமிட பேரம்; முடிவில்
கிழிந்த நூல் தைக்கும் ஆசை
கிழிபட்ட நாளை; யாரோ
இழந்ததை எடுத்து விற்கும்
இவனொரு காகித மேய்ப்பன்
படித்தென்ன கிழித்தாய் சொல்க
பழிபேசி திரியும் நம்மில்
படிக்கவே கிழிந்த நூலை
பரப்புவான் கிழிசல் மூட
வைத்தகண் வாங்கா வண்ணம்
வாசிக்கும் பழக்கம் கொண்டால்
புத்தகப் புழுவே என்று
புகழ்வோம்; ஆனால் இவனோ
புழுமேயும் புத்தகத்தை
புழுதியான உட்கருத்தை
கழுவாத வயிற்றுக்காக
கடைவிரிப்பான் கூவிக்கூவி
உள்ளிருக்கும் மகிமை யாது?
ஒருக்காலும் உணர்ந்தானில்லை
செல்லரித்த அழுக்கு நூலாய்
செலவழிவான் சகாய விலைக்கு
புதியநூல் வாங்கி அதிலே
பூக்கின்ற வாசம் நுகர்வோர்
விதியதன் நெடியை இவன்மேல்
வீசுதல் அறியக் கடவீர்.
Thx: Anandha Vikadan
Recent Comments