Archive
ஜாக்ஸன் துரை
போகிற போக்கில் சில எண்ணங்கள்:
1. அன்று ஒஜே சிம்ஸன்; இன்று ஜாக்ஸன்.
2. பணம், புகழ் எல்லாம் வந்தாலும், வாழ்க்கையில் ‘தேடல்’ இருந்து கொண்டேதான் இருக்கிறது.
3. புகழ்பெற்றவர்களை — சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இயலாத காரியம்.
4. அமெரிக்காவில் நக்கீரனும் நெற்றிக்கண்ணும் மிஸ்ஸிங்.
5. எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்க, ஊடகங்களும் (நானும்தான் :-), இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் தந்து எழுதுகிறார்கள்.
6. இதன் பிறகும் குழந்தைகள் ‘நெவர்லாண்’டுக்கு அனுப்பப் படலாம்.
7. உண்மை என்ன என்பதை வாக்குமூலம் கொடுத்தாலும், பணம் குற்றஞ்சாட்டியவரைக் கூட சரிய வைக்கும்.
8. ஊருக்கு பெரிய மனிதன், கையைப் பிடித்து இழுத்தால், அனைவரும் வேடிக்கை பார்ப்பார்கள்; கண்டிக்க மாட்டார்கள்.
துவக்கு
நெடுமாறன்: தென்றல் படத்தின் மூலம் தமிழ்க் குடமுழுக்கு விழாவைக் காட்டிய ஒரே காரணத்திற்காக இயக்குனர் தங்கர்பச்சான் சொல்ல முடியாத அளவுக்கு அவமானங்களுக்கும் புறக்கணிபிற்கும் ஆளாகியுள்ளார். இளம் இயக்குனர் புகழேந்தி ஈழத்தமிழர் அகதிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்த ‘காற்றுகென்ன வேலி’ என்னும் படத்தை திரையிடுவதற்கே அவர் உச்சநீதி மன்றம் வரை சென்று போராட வேண்டியிருந்தது. தமிழன் என்ற உணர்வோடு உள்ள இயக்குனர்கள் வ.செ.குகநாதன், சீமான், வேலுபிரபாகரன். வெ.சேகர் போன்றவர்களை ஒதுக்கித்தள்ளும் முயற்சி நடைபெறுகிறது.
தளிர்ப்பு – காசி. ஆனந்தன்
இலையுதிர்க் காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல் மேய்ந்த மாடுகள் மரத்தை
இரக்கத்தோடு நோக்கின.
‘உன் இலைகள்
விழுந்துக்கொண்டிருக்கின்றன.
உன்னைப் பார்த்தால்
அழவேண்டும் போல்
இருக்கிறது..’ என்று ஒரு மாடு
தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது-
‘நான் அதைப்பற்றிக்
கவலைப்படவில்லை. புதிய
தளிர்களுக்காக அவை
விழத்தான் வேண்டும்.’
நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது.
‘விழுவதெற்கெல்லாம்
அழுவதற்கில்லை.’
தெளிவு – த. பழமலய்
திருவாட்டியோ
‘குதிரை, குதிரைதான்
கழுதை, கழுதைதான்’ என்பவர்.
நன் மக்களுக்கோ நான்
ஊறிய இடம்
உப்புக்கிணறாம்.
முன்னறி தெய்வங்களின் ஆறுதல்
‘பொசுப்பு இவ்வளவுதான்.’
சுற்றப்பட்டோர் ஏமாற்றம்:
‘கரைசேர்ந்துட்டான்!’
மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
சொல்லவும் செய்கிறார்கள்.
ஒன்றைப் பாருங்களேன்:
‘நானா இருந்தா இப்படி
நடந்து போயிக்கிட்டு இருக்க மாட்டேன்.
கார் வச்சிக்கலாம் நீங்க!’
‘எல்லாம் இருக்கட்டும்
ஒங்கள பத்தி
நீங்க என்ன நெனக்கிறீங்க?’
அதான் கொளப்புறாங்களே!
தெளியவா-?
விடமாட்டார்கள்!
நன்றி: yahoo groups | thuvakku ilakiya amaippu
Recent Comments