Archive
Anniyan Censored
sify.com: வரும் 17ம் தேதி வெளியாகவுள்ள அந்நியன் படத்துக்குத் தமிழக சென்ஸார் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. இதுவரை வந்த ஷங்கர் படங்களிலேயே இந்தப் படத்துக்குத்தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்ஸார் சர்டிபிகேட் கொடுக்கப் பட்டிருக்கிறது. “படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள்,”நல்ல மெஸேஜ் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்” என்று ஷங்கரிடம் சொன்னார்களாம். “இதையே பெரிய கிஃப்டாக நினைத்தேன்” என்கிறார் ஷங்கர்.
thatstamil: படம் ரூ. 35 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம். போட்ட காசை விட ரூ. 10 கோடியை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த வருடம் பெரும் பொருட்செலவில் தயாரான தேவதாஸ் படத்திற்கு ரூ.35 கோடி செலவானதாம். இதற்கு அடுத்து அதிக பொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 525 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது.
(சந்திரமுகி ரூ. 30 கோடி அளவுக்கு பிசினஸ் ஆனது. 600 பிரிண்ட் போடப்பட்டது.)
Recent Comments