Archive

Archive for June 16, 2005

என்னைப் பெரிய ஆளாக்காதீங்க

June 16, 2005 6 comments

நடிகர் விஜய் :: நிருபர் ஒருவர், “நீங்கள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திச்சு ஒரு ‘கவர்’ கொடுத்தீங்க! அது என்ன விவகாரம்?” என்று கேட்க.. “அது எங்க சொந்த விஷயம்” என்றார் ரொம்ப யோசித்து.

“அதற்காக பத்திரிகையாளர்களிடம் கூட விளக்கம் சொல்லக்கூடாதா?” என்று திரும்பக் கேட்டார் நிருபர். சற்று நேரம் எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்த விஜய் இறுதியில் மீண்டும் “அதுதான் எங்க சொந்த விஷயம்னு சொல்றோமே!” என்றார் சற்று டென்ஷனுடன். இதையடுத்து எழுப்பப்பட்ட பல கேள்விகளும் விஜய்க்கு டென்ஷன் ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துவிட்டன.

  • “விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார். அதற்கு உங்களின் ஆதரவு இருக்கா..?”
  • “சுனாமி பாதித்த பகுதியில் அந்நிய மொழி நடிகர் ஒருவர்தானே வந்து உதவிகள் செய்தார்? நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    ‘பிரஸ் மீட்’ முடிந்ததும் இடக்கு மடக்கு கேள்வி கேட்ட ஒரு நிருபரை நெருங்கி, ‘என்ன கேள்வி கேட்கறீங்க. யோசிச்சுக் கேளுங்க. மாட்டிவிடப் பார்க்கறீங்களா?’ என்று ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நிருபரின் நெஞ்சில் பதித்து எச்சரித்துவிட்டே நகர்ந்தார்.

  • Categories: Uncategorized