Archive
கோவில் 1 கடத்தல் 2 காசு ?
BBC NEWS | South Asia | ‘Held captive by the Tamil Tigers’ ::
கோயம்பத்தூர் அருகே பதீஸ்வரர் கோவில் பேரூரில் இருக்கிறது. ஈழப் பதீஸ்வரர் கோவில் லண்டனில் இருக்கிறது.
கோவில் என்றாலே நரியை பரியாக்கிய மாணிக்கவாசகர் முதல் இன்றைய முத்தையா ஸ்தபதி வரை ஏதாவது விவகாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
(கழுகு விகடன்: “இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கோயில் வேலைகளை யாருக்குக் கொடுப்பது என்று முடிவெடுக்க வேண்டியது ஸ்தபதியின் வேலைதான். பல கோடி ரூபாய் கான்ட்ராக்ட் தொடர்பான விஷயம் அது. இந்தப் பதவியில் இருப்பவர்கள் நினைத்தால், பினாமி பெயர்களில் கான்ட்ராக்ட்களை எடுத்துக்கொண்டு கொழிக்கலாம்.”)
சுனாமி நிதி தருவதற்காக இலங்கைப் பக்கம் சென்ற ராசிங்கம் ஜெயதேவனை விடுதலைப் புலிகள் பிணைக்கைதியாக வைத்திருந்திருக்கிறார்கள்.
எல்.டி.டி.ஈ. இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
விவேகானந்தனும் ஜெயதேவனுடன் கூட சென்றிருக்கிறார். லண்டன் வாழ் தமிழர்களிடம் சுனாமி நிதி திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்காக இருவரும் புலிகளைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்.
சிவயோகம் டிரஸ்ட்டுக்கு லண்டன் வெம்ப்ளி கோவிலை எழுதி கொடுப்பதற்காக 42 நாள் கழித்து விவேகானந்தன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். திரைப்படத்தில் பிணைக்கைதியை பிடித்து வைத்திருப்பது போல், கையெழுத்தாவதற்காக, மேலும் இருபது நாள்களுக்கு ஜெயதேவன் சிறையில் இருந்திருக்கிறார்.
கோவிலை அடிப்படையாகக் கொண்டு பணம் திரட்டுவதே இந்தக் கடத்தலின் நோக்கமாக ஜெயதேவன் நினைக்கிறார். கோவிலை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இங்கிலாந்தின் இன்ன பிற தமிழ் அமைப்புகளையும் அடைவதே குறிக்கோளாக இருந்திருக்கும் என சொல்லியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு பணம் போவதாக சொல்வதை சிவயோகம் ட்ரஸ்ட்டை நடத்தும் என். சீவரத்தினம் மறுத்திருக்கிறார். தான் புலிகளின் ஆதரவாளராக இருந்தபோதும் நிதி விநியோகத்தை வெளிப்படையாக நடத்துவாக சொல்லியிருக்கிறார். திரட்டப்படும் நிதி அனைத்தும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் மட்டுமே செல்வதாக குறிப்பிடுகிறார்.
ஆளுங்கட்சியின் தலையீட்டினாலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் கோவில் மீண்டும் பழைய நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு பணம் கைமாறியது, 2001-இல் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்த கடத்தலில் சம்பந்தமிருக்கிறதா, ஜெயதேவனை பிணைக்கைதியாக வைத்தது யார் என்பதை ஸ்காட்லாண்ட் யார்ட் விசாரிக்காவிட்டாலும், உள்ளூர் போலீஸ் விசாரித்து வருகிறது.
கோவில் 1 கடத்தல் 2 காசு ?
BBC NEWS | South Asia | ‘Held captive by the Tamil Tigers’ ::
கோயம்பத்தூர் அருகே பதீஸ்வரர் கோவில் பேரூரில் இருக்கிறது. ஈழப் பதீஸ்வரர் கோவில் லண்டனில் இருக்கிறது.
கோவில் என்றாலே நரியை பரியாக்கிய மாணிக்கவாசகர் முதல் இன்றைய முத்தையா ஸ்தபதி வரை ஏதாவது விவகாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
(கழுகு விகடன்: “இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கோயில் வேலைகளை யாருக்குக் கொடுப்பது என்று முடிவெடுக்க வேண்டியது ஸ்தபதியின் வேலைதான். பல கோடி ரூபாய் கான்ட்ராக்ட் தொடர்பான விஷயம் அது. இந்தப் பதவியில் இருப்பவர்கள் நினைத்தால், பினாமி பெயர்களில் கான்ட்ராக்ட்களை எடுத்துக்கொண்டு கொழிக்கலாம்.”)
சுனாமி நிதி தருவதற்காக இலங்கைப் பக்கம் சென்ற ராசிங்கம் ஜெயதேவனை விடுதலைப் புலிகள் பிணைக்கைதியாக வைத்திருந்திருக்கிறார்கள்.
எல்.டி.டி.ஈ. இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
விவேகானந்தனும் ஜெயதேவனுடன் கூட சென்றிருக்கிறார். லண்டன் வாழ் தமிழர்களிடம் சுனாமி நிதி திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்காக இருவரும் புலிகளைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்.
சிவயோகம் டிரஸ்ட்டுக்கு லண்டன் வெம்ப்ளி கோவிலை எழுதி கொடுப்பதற்காக 42 நாள் கழித்து விவேகானந்தன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். திரைப்படத்தில் பிணைக்கைதியை பிடித்து வைத்திருப்பது போல், கையெழுத்தாவதற்காக, மேலும் இருபது நாள்களுக்கு ஜெயதேவன் சிறையில் இருந்திருக்கிறார்.
கோவிலை அடிப்படையாகக் கொண்டு பணம் திரட்டுவதே இந்தக் கடத்தலின் நோக்கமாக ஜெயதேவன் நினைக்கிறார். கோவிலை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இங்கிலாந்தின் இன்ன பிற தமிழ் அமைப்புகளையும் அடைவதே குறிக்கோளாக இருந்திருக்கும் என சொல்லியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு பணம் போவதாக சொல்வதை சிவயோகம் ட்ரஸ்ட்டை நடத்தும் என். சீவரத்தினம் மறுத்திருக்கிறார். தான் புலிகளின் ஆதரவாளராக இருந்தபோதும் நிதி விநியோகத்தை வெளிப்படையாக நடத்துவாக சொல்லியிருக்கிறார். திரட்டப்படும் நிதி அனைத்தும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் மட்டுமே செல்வதாக குறிப்பிடுகிறார்.
ஆளுங்கட்சியின் தலையீட்டினாலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் கோவில் மீண்டும் பழைய நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு பணம் கைமாறியது, 2001-இல் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்த கடத்தலில் சம்பந்தமிருக்கிறதா, ஜெயதேவனை பிணைக்கைதியாக வைத்தது யார் என்பதை ஸ்காட்லாண்ட் யார்ட் விசாரிக்காவிட்டாலும், உள்ளூர் போலீஸ் விசாரித்து வருகிறது.
அன்னியன் தேவை
வி.விவேகா : Junior Vikatan.com :: மதுரை பஸ் ஸ்டாண்டு…
பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு ஆள் வந்தான். அவன் கையில் ஒரு துணிப்பை. சுற்றுமுற்றும் பார்த்தபடி என்னிடம் பேச ஆரம்பித்தான். நானும் அவனை ஒருவித சந்தேகத்துடன் கவனித்தேன். அவனிடமிருந்த பையை பிரித்து என்னிடம் காட்டினான். அதில் புத்தம் புதிய புடவைகள்.
“நான் ஒரு ஜவுளிக்கடையில வேலை பார்க்குறேன். ஜவுளி பார்சல்களை லாரிகளில் இருந்து இறக்கி வெச்சதால கூலியா கிடைச்சது. இந்த மூணு புடவைகளையும் எடுத்துக்கங்க! இருநூறு ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்” என்று திடீர் வியாபாரம் பேசினான். அந்தப் புடவைகளின் மதிப்பு நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். என்னதான் இலவசமாகக் கிடைத்தாலும், இவ்வளவு விலை குறைச்சலாக யாரும் விற்க மாட்டார்கள்! ‘எங்கேயாவது திருடின புடவையாக இருக்கும்’ என்று நினைத்து, ‘வேண்டாம்பா’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
இருந்தாலும் விடாப்பிடியாக என்னைத் துரத்திய அந்த ஆள், ஐம்பது ரூபாய்க்கு இறங்கி வந்துவிட்டான். அப்போதும் நான் மசியவில்லை. ஒருகட்டத்தில், “நீங்க சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன். அது சரிதான்! திருட்டுப் புடவைங்கதான் சார். ஆனா, புது புடவை. என்னால தினமும் தண்ணிப் போடாம இருக்க முடியாது. அதுக்காகத்தான் திருடினேன். காசுக்காக விக்கிறேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தான். நான் அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால், எனக்கு பின்னால் வந்த ஒரு நபர், அதே புடவைகளை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்று விட்டார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டு, அந்த ஆள், அருகில் இருந்த ஒயின்ஷாப் பக்கம் ஒதுங்கியதை பார்த்தேன். இந்தமாதிரி திருடர்களை நாம் புறக்கணிக்காதவரையில் அவர்கள் திருட்டுத் தொழிலை எந்நாளும் விடமாட்டார்கள். பொருள் வந்தவிதத்தைப் பார்க்காமல், திருடர்களை ஊக்குவிக்கும் இந்தமாதிரியான நபர்களும் திருடர்கள்தான் என்பதை உணர்வார்களா?
அன்னியன் தேவை
வி.விவேகா : Junior Vikatan.com :: மதுரை பஸ் ஸ்டாண்டு…
பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு ஆள் வந்தான். அவன் கையில் ஒரு துணிப்பை. சுற்றுமுற்றும் பார்த்தபடி என்னிடம் பேச ஆரம்பித்தான். நானும் அவனை ஒருவித சந்தேகத்துடன் கவனித்தேன். அவனிடமிருந்த பையை பிரித்து என்னிடம் காட்டினான். அதில் புத்தம் புதிய புடவைகள்.
“நான் ஒரு ஜவுளிக்கடையில வேலை பார்க்குறேன். ஜவுளி பார்சல்களை லாரிகளில் இருந்து இறக்கி வெச்சதால கூலியா கிடைச்சது. இந்த மூணு புடவைகளையும் எடுத்துக்கங்க! இருநூறு ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்” என்று திடீர் வியாபாரம் பேசினான். அந்தப் புடவைகளின் மதிப்பு நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். என்னதான் இலவசமாகக் கிடைத்தாலும், இவ்வளவு விலை குறைச்சலாக யாரும் விற்க மாட்டார்கள்! ‘எங்கேயாவது திருடின புடவையாக இருக்கும்’ என்று நினைத்து, ‘வேண்டாம்பா’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
இருந்தாலும் விடாப்பிடியாக என்னைத் துரத்திய அந்த ஆள், ஐம்பது ரூபாய்க்கு இறங்கி வந்துவிட்டான். அப்போதும் நான் மசியவில்லை. ஒருகட்டத்தில், “நீங்க சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன். அது சரிதான்! திருட்டுப் புடவைங்கதான் சார். ஆனா, புது புடவை. என்னால தினமும் தண்ணிப் போடாம இருக்க முடியாது. அதுக்காகத்தான் திருடினேன். காசுக்காக விக்கிறேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தான். நான் அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால், எனக்கு பின்னால் வந்த ஒரு நபர், அதே புடவைகளை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்று விட்டார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டு, அந்த ஆள், அருகில் இருந்த ஒயின்ஷாப் பக்கம் ஒதுங்கியதை பார்த்தேன். இந்தமாதிரி திருடர்களை நாம் புறக்கணிக்காதவரையில் அவர்கள் திருட்டுத் தொழிலை எந்நாளும் விடமாட்டார்கள். பொருள் வந்தவிதத்தைப் பார்க்காமல், திருடர்களை ஊக்குவிக்கும் இந்தமாதிரியான நபர்களும் திருடர்கள்தான் என்பதை உணர்வார்களா?
தமயந்தி
எஸ்.ராமகிருஷ்ணன்
கயிற்று ஊஞ்சல்
ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நகரை விலக்கிய சிறிய கிராமம் ஒன்றின் மரங்கள் அடர்ந்த பகுதியில் தனித்திருந்தது. உள்ளே நுழைகையில் இலைகளுக்குள் ஒளிந்துகொண்டு பறவைகள் சப்தமிடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தார்கள். காப்பகத்துக்குள் நுழைந்தபோது, அது மாலை பிரார்த்தனை நேரம்.
பனிச் சிற்பங்களைப் போல உறைந்துபோன நிசப்தத்தில் முதியவர்கள் வணங்கியபடி நின்றிருந்தனர். உதடுகள்கூட அசையவில்லை. பிரார்த்தனைப் பாடலைப் பாடும் பெண்ணின் குரல் நடுங்கிக்கொண்டு இருந்தது. பிரார்த்தனை முடிந்து வெளியேறும் பலரது கண்கள் கசிந்திருந்தன. அழுதிருக்கிறார்கள். அதைத் துடைத்துக்கொள்ளக்கூட மனதற்று நெற்றி நிறைய திருநீறும் வேதனையை அடக்கிய முகமுமாக அவர்கள் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அநேகமாக அவர்களைத் தேடிப் பார்வையாளர்கள் வருவது வெகு அபூர்வம் என்பது புரிந்தது. குழந்தைகள் ஒருவரையருவர் இடித்துக்கொண்டு உட்காருவதுபோல நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ஒன்றிரண்டு முகங்களில் வயதை மீறி கூச்சமும் வெட்கமும் கலந்து வெளிப் பட்டது.
என்ன பேசுவது என்று தெரியவில்லை. மாலை வெயில் மரங்களுக்கிடையில் கசிந்துகொண்டு இருந்தது. ரெம்ப்ராண்டின் ஓவியம் ஒன்றின் முன் அமர்ந்திருப்பது போல, இமைக்காத கண்களும் சலனமற்ற முகமுமாக என் முன் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். பெரும்பான்மையான முதியவர்களின் கண்கள் உலர்ந்துபோயிருந்தன.
பேச்சை எங்கிருந்து துவங்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. எதையோ மறந்துபோனவரைப் போல ஒரு முதியவர் தன் அறைக்குள் சென்று, கண்ணில் விடும் சொட்டு மருந்தை எடுத்து வந்து இன்னொரு வயோதிகரிடம் தந்தார். அவரும் பாட்டிலைத் திறந்து சொட்டு மருந்து போட்டுவிட்டார். பிறகு இருவரும் பால்யத்திலிருந்து பழகி வந்த இரண்டு சிறார்களைப் போல ஒருவர் தோள் மீது மற்றவர் கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்.
எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் ஓசை கேட்டது. முதல்முறையாக ஒரு பாட்டி லேசான புன்னகையோடு சொன்னார்… ‘‘மயிலு சார்!’’ மற்றவர் களும் தலையாட்டிக்கொண்டார் கள். ஆனால், பேச்சு துளிர்க்கவே இல்லை. தண்ணீர் வற்றிப்போன கிணற்றைப் போல சொற்களும் மனதில் வற்றிப் போய்விட்டனவா?
மரத்தடியில் அமர்ந்திருந்த பெண் களில் ஒரேயருவர் மட்டும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயமளவு குங்குமம் வைத்திருந்தார். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே இருந்தார். அவரது பெயரைக் கேட்டபோதும் தரை பார்த்தபடியே பதில் சொன்னார்.
நரைத்த தலையும் சாந்தமான முகமுமாயிருந்த ஒரு பெண்மணி மட்டும் எழுந்து நின்று, பாதி மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்… ÔÔநான் பாரத் சர்க்கஸில் வேலை செய்தவளாக் கும். எங்க சர்க்கஸ் பல நாடுகள் சுற்றி வந்திருக்கு. எந்தெந்த தேசம் என்று பெயர் மறந்துபோச்சு. பார் விளையாடுறதுல நான் எக்ஸ்பர்ட். பன்னிரண்டு வயசிலே சர்க்கஸ்ல சேர்ந்தது. இருபத்தஞ்சு வருசம் அதில இருந்தாச்சி… இப்பவும் கயிற்றிலே நல்லா ஆடுவேன். ஆனா, வயசாகி தலை நரைச்சவள் பார் ஆடுறதை யார் பாக்கிறது சொல்லுங்கோ… அதான் என்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. சர்க்கஸ்ல இருந்துட்டதால சொந்தம் பந்தம் எல்லாம் விட்டுப் போயாச்சு. அதுனால, வெளியே வந்தப்புறம் எங்கே போறதுன்னு தெரியலை. சர்க்கஸ் கயிற்றிலே ஊஞ்சலாடினப்பகூட பயமா இல்லை. ஆனா, அங்கிருந்து வெளியே வந்தப்புறம்தான் பயம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சது. யார் வீட்லயும் இருக்க முடியலை. எங்கே போறதுன்னும் தெரியலை. அதான் இங்கே வந்து சேர்ந் துட்டேன். சர்க்கஸ்ல ட்ரெயினிங் எடுத்த வளாக்கும்! ஒரு நோய்நொடி கிடையாது. ஆயிரம் தடவை கை தட்டு வாங்கியிருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமில்லை. தனியா என் கையை நானே தட்டிக்கிட வேண்டியதுதான்’’ & பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொண்டு, அமைதியாகி விட்டார். மிருகங்களுக்குக்கூட அடைந்து கிடக்க ஒரு கூண்டு இருக்கிறது. ஆனால், சர்க்கஸில் வேலை செய்து வெளியேற்றப்பட்டவளுக்கு போக்கிடமில்லை என்பது மனதை உறுத்துவதாக இருந்தது. இருட்டு ஒரு புகையைப் போல எங்கும் பரவத் துவங்கியது. அவர்கள் மரத்தடியிலிருந்து கலைந்து போகத் துவங்கினார்கள்.
உள்ளே வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு இருந்தன. சிறிய மரக் கட்டில், அதன் ஓரத்தில் சிறிய மர அலமாரி. அதில் துவைத்து மடித்துவைத்த துணிகள். ஒரு மெழுகுவத்தி, தீப்பெட்டி. கொசுவத்திச் சுருள். நாலைந்து பழைய கடிதங்கள். அழுகைக் கறை படிந்த தலையணைகள். விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அவரவர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டார்கள். இன்றைய நாள் முடியப்போகிறது. ஒவ்வொரு நாளையும் அவர்கள் மனதுக்குள்ளாகக் கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். உறக்கமும் விழிப்புமற்ற ஒரு சயன நிலையில் அவர்கள் கண்கள் சொருகியிருக்கின்றன.
காப்பகத்தின் நிர்வாகி அனைவரை யும் சாப்பிட அழைத்தார். நிழல்களைப் போல அவர்கள் நடந்து போகிறார்கள். உணவருந்தும் சப்தம்கூட கேட்கவில்லை. பின் மெதுவாக படுக்கைக்குத் திரும்பு கிறார்கள். ப்ளாக்போர்டில் ஈரத் துணியை வைத்து அழித்தபடியே நிர்வாகி சில பெயர்களை எழுதுகிறார். அது என்னவென்று கேட்டபோது, ÔÔஒவ்வொரு நாளும் சிலர் மௌன விரதம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதன்படி, நாளைக்கு மௌன விரதம் இருப்பவர்களின் பெயர்கள் இவைÕÕ என்று சொன்னார்.
ஏற்கனவே மௌனத்தின் தாழிக்குள் வீழ்ந்து கிடப்பவர்கள்தானே, இனி எதற்காக தனியே ஒரு நாள் மௌன விரதம் என்று கேட்க நினைத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தபோது நாள் முடிந்து இரவின் நீண்ட பொழுதுக்குள் யாவரும் ஒடுங்கிக் கொண்டு விட்டார்கள். உறக்கத்தில் அவர்களுக்குக் கனவுகள் வருமா? நிச்சயமாகத் தெரியவில்லை.
பிரார்த்தனைகளும் மௌன விரதமும் அவர்களுக்கு என்ன தந்துவிட முடியும்? அவர்கள் யாசிப்பது சாப்பாட்டை அல்ல, மனித உறவை! அதுவும் ஒரே ஒரு ஆள் தன்னைப் புரிந்தவர் இருந்தால்கூடப் போதும், சமாதானமாகி விடுவார்கள். ஆனால், அதுகூடச் சாத்தியமாவதில்லை.
ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்திவிடுவதும்தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை. மகாபாரதத்தில்கூட கௌரவ சேனையின் கடைசி ஆளாக மிஞ்சும் அஸ்வத்தாமா, பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று விடுகிறான். உத்திரையின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் மீதுகூட அம்பு எய்கிறான். அவனுக்குக் கிடைக் கும் தண்டனை விசித்திரமானது.
உலகில் நண்பர்கள் யாருமற்றுப் போய், சாவும் இல்லாமல் அவன் சுற்றியலைய வேண்டும் என்று சாபம். வில்லாளிகளில் இந்திரனுக்குச் சமமானவனும் துரோணரின் புத்திரனு மான அஸ்வத்தாமா, இந்த கடுமையான தண்டனையைச் சுமந்துகொண்டு சாவை விலக்கியவனாக தனிமையில் இன்றும் அலைந்துகொண்டு இருக்கிறான் என்கிறது மகாபாரதம்.
சிறுவயதில் நமக்கிருந்த பிரச்னை தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவது. முதுமையிலும் அதுதான் பிரச்னை என்று மார்க் ட்வைன் ஒரு முறை எழுதியிருந்தார். நிஜம்தானே! குழந்தை கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கவனத்தை ஈர்த்துக்கொண்டு விடுகின்றன. முதுமையில் அதற்கும் சாத்தியமில்லை. இந்தத் தனிமைக்குப் பயந்துதான் பல வயோதிகர்கள் அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிடு கிறார்கள். குடும்பங்களில் குழந்தை கள் அளவுக்கு வயோதிகர்களும் வசையும் திட்டும் வாங்குவது அன்றாடமாகிவிட்டது.
வாழ்வுக்கான போராட்டம் சிக்கலாகத் துவங்கியதும் உறவுகளும் நம்மைச் சுற்றிய மனிதர்களுடன் உள்ள நெருக்கமும் சிக்கலாகிவிடு கின்றன. இதைத் தனது கதையன்றின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமயந்தி. இவரது Ôஅனல்மின் நிலையங்கள்Õ என்னும் கதை குடும்ப உறவுகளின் உண்மையான முகங்களை வெளிப்படுத்துகிறது. தமயந்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் தீவிர படைப்பாளி. இவரது கதைகள் உழைக்கும் பெண்களின் போராட்டங் களைப் பிரதிபலிக்கின்றன. சுய அடையாளமற்றவளாக பெண் நடத்தப்படுவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் எதிர்ப்புக் குரல் இவர் கதைகளின் அடிநாதமாக உள்ளது.
‘அனல் மின் நிலையங்கள்’ கதை ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டினை விவரிக்கிறது. குறிப்பாக, தூத்துக்குடி கடற்கரையில் உருவாக்கப் பட்ட அனல்மின் நிலையத்தின் காரண மாக அங்குள்ள மீன்பிடித் தொழில் எப்படி மறைமுகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்பதைப் பற்றியகதை.
கடலில் ஆஷ்டைக் எனப்படும் சாம்பல் களம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனல் மின் நிலையத்தின் கழிவு நீர் கடலில் கலந்துவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் காரணமாக சாம்பல் கற்கள் பாறை போலாகி இறுக்கமாகிவிடு கின்றன.
இந்தக் கழிவின் பாதிப்பால் இனப்பெருக்கமற்று மீன்கள் குறைந்தும் அழிந்தும் போய்விடு கின்றன. இதனால் அவர்களின் பிரதான மீன் பிடிப்பாக இருந்த சிங்கரால் பிடிப்பு அறவே பாதிக்கப் பட்டுவிடுகிறது. அப்படி பாதிக்கப் படும் ஒரு மீனவன்தான் செபஸ்தியான். அவனுடைய தாய்க்கு முன்பு போல வீட்டில் வளமை இல்லை என்ற குறைபாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் அவள் தினமும் செபஸ்தியானின் மனைவி கிரேஸோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறாள்.
ஒரு நாள் கிரேஸின் அண்ணன் விருந்தாளியாக வருகிறான். அன்றும் அந்தச் சண்டை நீள்கிறது. இனிமேல் கிழவியை தங்களோடு வைத்துச் சமாளிக்க முடியாது என்று கிரேஸ் அழுது கூப்பாடு போடுகிறாள். வழியில்லாமல் செபஸ்தியான் அம்மாவைத் தன் அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறான். ஆனால், அம்மா போக மறுக்கிறாள். கட்டயாப்படுத்தி விருதுநகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு கூட்டிப் போகிறான் செபஸ்தியான்.
அங்கே அவன் மதினி அவர்களை வீட்டுக்குள்ளேயே விட மறுக்கிறாள். என்ன செய்வது என்று மறுபடியும் அம்மாவைத் தன் வீட்டுக்கே அழைத்து வருவதற்காக பஸ் ஏறிக் கூட்டி வருகிறான். வழியில் அம்மாவின் பசிக்குத் தேவையான பிஸ்கட்டும் டீயும் வாங்கித் தருகிறான். பஸ் கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறது. அங்கே பஸ் ஸ்டாண்டில் அம்மாவைத் தனியே உட்கார வைத்துவிட்டு, தூத்துக்குடி பஸ் இருக்கிறதா என்று பார்த்து வருவதாகச் சொல்லி, புறப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறி அவளுக்குத் தெரியாமல் ஊருக்கு கிளம்பிவிடு கிறான் செபஸ்தியான் என்பதோடு கதை முடிந்து விடுகிறது.
பயன்படுத்தி எறிந்த காலி டப்பாக்கள், பழைய காகிதங்களுக்குக்கூட ஏதோ ஒரு விலை, மதிப்பு இருக்கிறது. ஆனால், வயோதிகத்துக்கு அந்த மதிப்புகூட இல்லாமல் போய்விட்டிருக்கிறது. காலம் வயோதிகத் தின் பட்டியலில் நம் பெயரையும் ஒரு நாள் எழுதும் என்பதை நாம் மறந்துவிடுவதுதான் காரணமா?
ஆங்கில இலக்கி யத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர். இவருடைய முதல் கதை 1978&ல் ஆனந்த விகடனில்வெளி யானது. தமயந்தி சிறுகதைகள் என்பது இவரதுமுதல் சிறுகதைத் தொகுப்பு, அக்கக்கா குருவிகள் என்கிறஇவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில் சூரியன் எஃப்.எம் வானொலியில் பணியாற்றி வருகிறார்.
கோணங்கி
http://www.vikatan.com/av/2005/sep/04092005/av0602.asp
எஸ்.ராமகிருஷ்ணன்
புகை நடுவில்
பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து எழுந்து பால்கனியில் வந்து நின்றால், இருளைக் கரைத்துக்கொண்டு யாருமற்ற தெருவில் மழை தனியே நடந்துபோய்க்கொண்டு இருக்கும் அபூர்வ காட்சியைக் காண முடியும்.
பால்யத்தின் பொழுதுகளும் பின்னிரவு மழைக் காட்சிகள்தான்.
திடீரென, எப்போதோ உடன்படித்த சிறுவர்களின் முகம் கனவில் ததும்பத் துவங்குகிறது. பெயர்கூட மறந்துபோன வகுப்புத் தோழன், காக்கி டிராயரும் வெள்ளைச் சட்டையும் திருநீறு பூசிய முகமுமாய் கனவின் படிகளில் வந்து அமர்ந்திருக்கிறான். என்ன சொல்வ தற்காக அவன் கனவில் பிரவேசிக்கிறான் என்று தெரியாது. ஆனால், அடுத்த நாள் முழுவதும் மனம் பிரிவின் துக்கத்தில் ஊறிக்கொண்டே இருக்கும். ஏதேதோ நகரங்களில் சுற்றியலையும்போது, இது போன்று வெவ்வேறு வயதில் நடந்தவை கனவுகளாக வந்திருக்கின்றன.
கடந்த ஆண்டின் மழைக்காலத்தில் மதிய பொழுதில் எனக்கொரு போன் வந்தது. போனில் பேசிய பெண் மிகவும் தயக்கமான குரலில், நான் எஸ்.ராமகிருஷ்ணன் தானா என்று நாலைந்து முறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்.அவள் பெயர் சித்ரா என்றும், என்னோடு பள்ளியில் படித்தவள் என்றும் அவள் நினைவுகூர்ந்தபோதும் அவளது முகத்தை என்னால் நினைவு படுத்திப் பார்க்க முடியவில்லை.
அவள் திருத்தணியில் வசிப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள். எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்று சொல்லிய பிறகு, ‘எனக்கு ஒரு உதவி செய்யணும். உன்னால முடிஞ்சா நீ செய்வாயா?’ என்று மிக உரிமையுடன் கேட்டாள். ‘கட்டாயம் செய்கிறேன்’ என்று அவளை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.
அன்று மாலையில், அவள் தன் இருபது வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நேரில் பார்த்தபோதும், மனதில் அதற்கு முன்பு அவளை பார்த்திருந்த நினைவின் அடையாளங்களே இல்லை. அவளின் தலை பாதி நரைத்துப் போயிருந்தது. முகத்துக்குப் பொருந்தாத கண்ணாடி அணிந்திருந்தாள். ஏதோ நேற்றுதான் பள்ளியிலிருந்து பிரிந்து சென்றதைப் போல, கடகடவென ஏதோ கேட்கத் தொடங்கினாள்.
அவள் எந்த வகுப்பில் எப்போது படித்திருப்பாள் என்று நானாக நினைவில் தேடிக் கொண்டேயிருந்தேன். சில நேரம் அவள் பரிச்சயமானவள் போல் தோன்றினாள். சில வேளை யோசிக்கையில் முற்றிலும் அறியாதவளாக இருந்தாள். அவளின் மகன், விருப்பமில்லாத ஒரு இடத்துக்குத் தன்னை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் போல தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தான்.
அவளது கையில் சிறிய மஞ்சள் பை இருந்தது. அவள், தான் காதிகிராஃப்டில் வேலை செய்வதாகவும், தனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள், இவன் ஒருவன் மட்டும்தான் பையன் என்றும், அவளின் கணவன் அம்பத்தூரில் வெல்டராக வேலை பார்ப்பதாக வும் சொன்னாள். இரண்டு நிமிஷங் களுக்கு ஒரு முறை, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத புகை மூட்டம் உருவானது.
பிறகு, அவள் தன் பையில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்து கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தட்டில் வைத்து, தன் மகளுக்குத் திருமணம் என்று சொல்லி நீட்டினாள்.
நான் திருமணப் பத்திரிகையை வாங்கிப் பிரித்துக்கொண்டு இருந்த போது அவள் தயக்கத்தோடு திரும்பவும் கேட்டாள்… ‘‘உன்கிட்டே ஒரு உதவி கேட்கணும்னு சொன்னேனில்லே… கேட்கக் கூச்சமா இருக்கு’’ என்றாள். ‘‘பரவாயில்லை, சொல்லு!’’ என்றதும், வார்த்தைகளை மென்று விழுங்கிய படியே சொன்னாள்… ÔÔஎன் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு பேர்கிட்டே தானம் கேட்டு பணம் வாங்கி தாலி செய்றேன்னு கோயில்ல வேண்டிட்டு இருக்கேன். அவளுக்குக் கல்யாண தோஷம். அதுக்குத்தான் இந்த வேண்டு தல். ஆறாயிரம் ரூபாய் வேணும். சொந்தக்காரங்க யார்கிட்டேயும் கேட்டு வாங்கக் கூடாது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரு இருக்கா… அப்போதான் உன் நினைப்பு வந்துச்சு. சரி, கேட்டுப் பார்க்க லாமேனு உன் போன் நம்பரை பத்திரிகை ஆபீஸ்ல கேட்டு வாங்கினேன்!ÕÕ
‘‘அதனால என்ன… நான் தருகிறேன்’’ என்று சொன்னதும் அவள் முகத்தில் லேசான வெட்க மும், சந்தோஷமும் துளிர்த்தது. என்னுடைய அறையில் இருந்த புத்தகங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், ‘‘எப்பவும் புத்தகம் படிச்சுட்டே இருப்பியா?’’ என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையாட்டினேன். பிறகு, அவளுக்கும் என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றுப் போனதைப் போல மௌனமாக என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அந்த சிரிப்பின் நுனியில் சொல்ல முடியாத வேதனை படிந்திருப்பதைக் காண முடிந்தது.
பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் தந்தபோது அவள் கைகள் லேசாக நடுங்குவதைக் கவனித்தேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வர வேண்டும் என்று நாலைந்து முறை கேட்டுக் கொண்டாள். பிறகு அவள் பையில் இருந்து பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
அது 1979&ல் திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த போட்டோவில் இரண்டாவது வரிசையில் நிற்கும் சிறுவனைக் காட்டி, ‘‘நீ எப்படி இருந் திருக்கே, பாரு’’ என்றாள். நான் மௌனமாகச் சிரித் துக்கொண்டேன். ‘‘இந்த போட்டோ வில் நான் எங்கே இருக்கேன் என்று உன்னால் சொல்ல முடிகிறதா?’’ என்று கேட்டாள்.
நான் தயக்கத் துடன் சொன்னேன்… ‘‘திருப்பத்தூரில் நான் படித்ததே இல்லை. இந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை.’’ அவள் முகம் சட்டென மாறியது. பதற்றம் அடைந்தவள் போல சொன்னாள்… ‘‘இல்லை, எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. திருப்பத்தூர்ல கோயில் பக்கம் உங்க வீடு இருந்தது. உங்க அக்கா பேருகூட சுந்தரிதானே?’’
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்காவே கிடையாது; வேறு யாரையோ நினைத் துக்கொண்டு பேசு வதாகச் சொன்னேன். அவள் என்ன செய்வதெனத் தெரியாமல், ‘‘பேருகூட ராமகிருஷ்ணன்னு போட்டிருக்கு’’ என்றாள். ‘‘அது நானில்லை’’ என்று உறுதியாகச் சொன்னதும், அவள் சேலை நுனியால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவளாக,
‘‘அப்போ அது வேறு யாரோவா? ஸாரி சார்! என்கூடப் படிச்சவர்னு நினைச்சுத் தப்புப் பண்ணிட்டேன்!’’ என்றபடி மஞ்சள் பைக்குள் போட்டிருந்த பணத்தை அவசரமாக எடுத்து என்னிடமே திரும்பக் கொடுத்தாள்.
‘‘பரவாயில்லை, வெச்சுக்கோங்க’’ என்றபோதும் கேட்க வில்லை. ‘‘இல்லை சார்! உங்க போட்டோவைப் பார்த்தப்ப தெரிஞ்ச முகம் மாதிரி இருந்துச்சு. நான் ஏமாத்தணும்னு செய்யலை. என்னை மன்னிச்சிருங்க’’ என்றாள்.
நான் பணத்தை வாங்க மறுத்தவனாக, ‘‘அதனால் என்ன, இப்போயிருந்து நாம ஃப்ரெண்டாக ஆகிக்கொள்ளலாம் தானே?’’ என்றேன். அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தவள், பணத்தை எனது மேஜையில் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தாள்.
‘‘உங்களோட படிக்காம போனதுக்காக நான் உண்மையில் இப்போதான் வருத்தப்படுறேன்’’ என்றேன். கைகளைப் பிசைந்துகொண்டே இருந்தவள், பிறகு அந்தப் பள்ளிக்கூட புகைப்படத்தை வாங்கிக்கொண்டு, தான் புறப்படுவதாகக் கிளம்பினாள். எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரிய வில்லை. வாசல் வரை போனவள் திரும்பவும் உள்ளே வந்து, ‘‘என்னை மன்னிச்சிடுங்க சார்! உங்களைச் சிரமப் படுத்திட்டேன். நீங்க கல்யாணத்துக்கு அவசியம் வரணும்’’ என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போனாள். அவளோடு படிக்கவில்லை என்ற உண்மையை எதற்காகச் சொன்னேன் என்று என் மீதே கோபமாக இருந்தது.
பால்யத்தின் புகைமூட்டத்தில் நாம காண்பது எல்லாம் அழிந்த சித்திரங்கள் தானா? அந்தப் பெண்ணின் திருமணப் பத்திரிகையைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே இருந்தது. உலகில் மிகக் குறைவான நிமிடங்களில் தோன்றி மறைந்த நட்பு இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ? என்ன உறவு இது!
பால்யத்தின் அழியாத சித்திரங்களை தனது கதைகள் எங்கும் படரவிட்ட தமிழின் அரிய கதைசொல்லி ‘கோணங்கி’. அவரது கோப்பம்மாள் என்ற கதை மிக நுட்பமாகவும் கவித்துவமாகவும் எழுதப்பட்ட அரிய கதையாகும். நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமான சிறுகதையாசிரியரான கோணங்கி, தனக்கென தனியான புனைவுலகை உருவாக்கியவர்.
கோப்பம்மாள் என்ற சலவைத் தொழிலாளி வீட்டுச் சிறுமியின் வாழ்வை விவரிக்கிறது இக்கதை. கோப்பம்மாளுக்குப் பள்ளிப் படிப்பைவிடவும் வீட்டு வேலைகள் அதிகம் இருந்தன. வீடு வீடாகப் போய் ஊர்க்கஞ்சி எடுக்க வேண்டும். தெருவில் திரியும் கழுதைகளை வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பள்ளிக்குப் போகும்போது கூடவே தம்பியைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும். அவனோ பள்ளியில் ஆய் இருந்து வைத்துவிடுவான். அதற்காகத் தினமும் வாத்தியாரிடமும் கோப்பம்மாள் அடிபட நேரிடும். இப்படியிருந்த அவளது வாழ்வில், அவளோடு படிக்கும் மாரியப்பன் என்ற சிறுவன் மட்டுமே மிக நட்பாக இருந்தான்.
அவனையும் கோப்பம்மாளையும் ஒரு நாள் சீருடை அணிந்து வராததற்காக ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேற்றி விடுகிறார். தன்னிடம் ஊதாச் சட்டைகளைத் தவிர வேறு சட்டைகளே இல்லை, அந்தச் சட்டைகளும்கூட, இறந்துபோன தனது அய்யாவின் சட்டையை வெட்டித் தைத்தவைதான் என்கிறான் மாரியப்பன். அதிலிருந்து இருவருக்குள்ளும் பெயர் தெரியாத சிநேகம் ஒன்று ஏற்பட்டுவிடுகிறது.
அவள் வீடு வீடாகப்போய் ஊர்க்கஞ்சி வாங்கி வரும்போது, அதில் ஒரு கவளம் அள்ளி உண்பான் மாரியப்பன். அதை ரசித்தபடியே கோப்பம்மாளே இன்னொரு கவளம் அள்ளித் தருவாள். இப்படியிருந்த அவள், ஒரு நாள் ருதுவாகிறாள். அது முதல் அவள் வெளியே வருவது இல்லை.
மாரியப்பனும் படிப்பைத் துறந்து ஆடு மேய்க்கப் போய்விடுகிறான். அதன்பிறகு கோப்பம்மாளுக்குப் பதில் அவளது அம்மா கஞ்சி எடுக்க வருகிறாள். கோப்பம்மாளைப் பார்ப்பதே அரிதாகிவிடுகிறது. பின்னொரு நாள் அவளைப் பெண் கேட்டு தெற்கிலிருந்து ஆள் வருகிறார்கள். ஊரைவிட்டுப் போவதற்குள் ஒரு தடவையாவது மாரி யப்பனைப் பார்க்க வேண்டும் என்று கோப்பம்மாள் ஆசைப்படுகிறாள். ஆனால், பார்க்க முடியவேயில்லை.
என்றோ துவைப்பதற்காக எடுத்து வைத்திருந்த மாரியப்பனின் பழைய ஊதா சட்டை மட்டும் கந்தல் கந்தலாகி அழுக்கு மூடடையில் கிடக்கிறது. உப்பரித்துப்போன அந்தச் சட்டையை மார்போடு அணைத்துக்கொண்டு யாரும் கேட்டுவிடாமல் கேவிக் கேவி அழுகிறாள் கோப்பமாள். பிறகு திருமணம் முடிந்து போகும்போது, கொண்டு போகவேண்டிய மஞ்சள் பையில், அந்த ஊதா சட்டையையும் எடுத்து வைத்துக்கொள்கிறாள். அதை இருள்பூச்சிகள் பார்த்தபடி சத்தமிட்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது.
பிராயத்தின் நினைவுகள் மழை விட்டும் மரக்கிளைகளில் இருந்து சொட்டிக்கொண்டு இருக்கும் மழை நீரைப்போல உதிர்ந்துகொண்டுதான் இருக்கும்போலும்! என்னோடு படிக் காமலே எனக்கு மிகவும் நெருக்க மாகிப்போன சித்ராவின் நட்புக்காக இப்போதும் மனதில் மெல்லிய ஏக்கம் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன உறவில் அவளோடு நான் பேசுவது என்றுதான் தெரியவில்லை.
தமிழ் நவீன கதையுலகின் தனித்துவமான குரல் கோணங்கி யுடையது. கவிதைக்கு மிக நெருக்க மாக உள்ள உரைநடையும், அரூபங்களைமொழியில் சாத்திய மாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர்.
மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.
இவரது பாழி, பிதுரா என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களை தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை.
47 வயதாகும் முழுநேர எழுத்தாளரான கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கிறார். சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரிச்சான குஞ்சு
எஸ்.ராமகிருஷ்ணன்
நேற்றிருந்த வீடு
வங்கியில் பணிபுரியும் என் நண்பர் சரவணன், கிழக்குத் தாம்பரத்தின் உள்ளே ஓர் இடம் வாங்கி, புதிதாக வீடு கட்டியிருந்தார். வழக்கமாக புதிய வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் காலையில்தான் விழா நடத்துவார்கள். ஆனால், சரவணன் யாவரையும் மாலையில் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு. வீட்டின் வெளியே, சிறிய தோட்டம் அமைப்பதற்காக இடம் விட்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காக இரவு உணவு, ஒரு பக்கம் தயாராகிக்கொண்டு இருந்தது.
வீட்டைச் சுற்றிக் காட்டும்போதே, இருட்டத் தொடங்கியிருந்தது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் விதவிதமான விளக்குகள். ஒரு அறையில் பெரிய லாந்தர் விளக்கு தொங்கிக்கொண்டு இருந்தது. சுவர்களில் நவீன டியூப்லைட்கள். போதாததற்கு சிறியதான மெர்க்குரி விளக்குகள். வெளிச்சம் ஒரு நீருற்று போல வீடெங்கும் பொங்கிக்கொண்டு இருந்தது. வீட்டின் வெளியிலும் நான்கு மூலைகளிலும் டியூப் லைட்டுகள். ஏன் இத்தனை விளக்குகள் என்று எண்ணும்படி அவை அமைக்கப் பட்டு இருந்தன.
சரவணன் அதைக் கவனித்தவர் போலச் சொன்னார்… ‘Ôவீட்ல மொத்தம் நாற்பத்தெட்டு லைட் போட்டிருக்கேன் சார். ராத்திரியானா மொத்த லைட்டையும் எரியவிட்றணும். விடிய விடிய எரியட்டும். வீடு எப்பவும் வெளிச்சமா இருக்கணும்…’’
நான் வேடிக்கையாகக் கேட்டேன்… ‘Ôதூங்கும்போதுகூட விளக்கை அணைக்கமாட்டீர்களா?’Õ
அவர் தலையசைத்தபடியே சொன்னார்… ‘Ôபத்து வருஷமா நான் தூங்கும்போதுகூட லைட் எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். இல்லைன்னா பயமா இருக்குது.’’
ஒரு குழந்தையைப் போல பேசுகிறாரே என்று தோன்றியது. வீட்டைப் பார்க்க வந்தவர்கள், வீட்டிலிருந்த விளக்குகளைப் பற்றி வியந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அருமையான உணவுக்குப் பிறகு, நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்த வானத்தின் அடியில், நாங்கள் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டோம். சரவணன், தான் கட்டிய வீட்டைத் தானே பார்த்துக் கொண்டு இருந்தார்.
ÔÔஇந்த வீடு கட்ட ஆரம்பிச்ச அன்னியிலேர்ந்து தினம் இங்கே வந்து இதே இடத்தில் உட்கார்ந்து பார்த்துட்டேயிருப்பேன். பாதி கட்டி முடிஞ்சபோது சிமென்ட் பூசாத சுவரை தடவிக் கொடுப்பேன். சில நேரம் அந்த ஈர வாசனையை நுகர்ந்து கிட்டிருப்பேன். வீடு கட்டுறது ஒரு தனி யான அனுபவம். எத்தனையோ பிரச்னை, சிக்கல்னு வந்தாலும் கண்ணு முன்னாடி வீடு கொஞ்சம் கொஞ்சமா வளர்றதைப் பாக்குறது தனி சுகம்!
கதவில்லா வீட்டைப் பாக்கும்போது அது நம்ம தோள் மேல கை போட்டு நின்னு பேசிட்டிருக்கிற மாதிரி ஒரு நெருக்கம் வந்திடும். ஒவ்வொரு புது வீடு கட்றதுக்கு பின்னாடியும் கண்ணுக் குத் தெரியாத எத்தனையோ அவமான மும் ரணமும் இருக்கத்தான் செய்யுது.
வீடு கட்டி முடிச்சு, கதவு ஜன்னல் எல்லாம் பொருத்தி வெச்ச அன்னிக்கு கை நடுங்குது. கரகரனு கண்ணுல தண்ணி கொட்டிருச்சு. நிஜமா அழுதுட் டேன். வீடு வெறும் இடம் இல்லை. ‘நான் தோத்துப்போகலை. நல்லாதான் வாழறேன்’னு காட்ற சாட்சி அது.
மதுரைல நாங்க வாழ்ந்த வீட்டை, கடன் வாங்குறதுக்காக அப்பா அடமானம் வெச்சுட்டாரு. வட்டி கட்ட முடியலைனு வீட்டு கரன்ட்டை கட் பண்ணிட்டாங்க. எல்லாரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற வயசு. வீட்ல பகல்லயே குண்டு பல்பு எரிஞ்சா தான் வெளிச்சம் வரும். கரன்ட் போனதில் இருந்து, வீட்ல எப்பவும் இருட்டுதான். எங்கம்மா ஆத்திரத்தில், கெரசின் விளக்குகூட வைக்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்தாள். இருட்டுலியேதான் சாப்பிடுவோம். இருட்டுலியேதான் படுத்துக்குவோம். தினம் ராத்திரில யாராவது அழுகிற சத்தம் கேட்கும்.. அக்காவா, அண்ணனா, அண்ணியா, அம்மாவானு முகம் தெரியாது. இருட்டு எங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தின்னுகிட்டே இருந்துச்சு.
கடன் தொல்லை தாங்க முடியாம அப்பா வீட்டைவிட்டு ஓடிப் போயிட் டாரு. வீட்டை வித்துட்டுப் புறப்பட லாம்னு நினைச்சாக்கூட கடன்ல இருந்து தப்ப முடியாதுனு தெரிஞ்சுபோச்சு. வேற வழியில்லாம ராத்திரியோட ராத்திரியா யாருக்கும் தெரியாம, கொஞ்சம் துணியை மட்டும் எடுத்துக்கிட்டு வீட்டை அப்படியே சாமான்களோட விட்டுட்டு மெட்ராஸ§க்கு வந்துட் டோம். முப்பது வருஷமாச்சு! ஒரு தடவைகூட எங்க வீடு என்ன ஆச்சுனு பாக்கப் போகவே இல்லை.
நடுவுல ஒரு தடவை எங்க அண்ணன் மட்டும் போய்ப் பாத்துட்டு வந்தான். ‘வீட்டை இடிச்சு அந்த இடத்தில் பெரிய செருப்பு கடை வந்திருச்சு’ன்னு சொன்னான். வீட்டை இடிக்கிறப்போ எங்க சாமான்களை எல்லாம் அள்ளி தெருவில் போட்டாங்களாம். அந்த நாற்காலியை ஆயிரம் ரூபாய் கொடுத்து அண்ணன் வாங்கிட்டு வந்தான். அதைப் பாக்கப் பாக்க ரெண்டு நாளைக்கு யாருக்கும் சாப்பாடு இறங்கலை.
எங்க எல்லோரோட உடம்புலயும் இருட்டு ஒட்டிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கு. எப்படியோ வேலை செஞ்சு மேலே வந்துட்டோம். இப்போ அண்ணன் பெங்களூர்ல வீடு கட்டியிருக்கான். அக்கா காஞ்சிபுரத்துல இருக்கா. அவளும் பெருசா வீடு கட்டிட்டா. நான்தான் பாக்கி. நானும் இப்போ வீடு கட்டிட்டேன். சொல்லுங்க சார், இருட்டுலியே சாப்பிட்டு இருட்டுலியே முகம் கழுவி வாழ்ந்ததை மறக்க முடியுமா?’’
வானில் இருந்த நட்சத் திரங்கள் ஒடுங்கியிருந்தன. சரவணன் வீட்டின் பிரகாச மான வெளிச்சத்தைக் காணும் போது விளக்கிச் சொல்ல முடியாத வேதனை என் உடலைக் கவ்வுவதாக இருந்தது.
வர்ணம் பூசப்பட்டு ஒளிரும் வீடுகளுக்குப் பின்னால் கறுப்பும் வெளுப்புமான கதைகள் ஒளிந்திருப்பதுதான் வாழ்வு சொல்லும் நிஜம் போலும்! கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஆட்டு இடையர்கள் ஊர் ஊராகப் போவது போல நகர வாழ்வில் வீடு மாற்றி வீடு என்று அலைபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.
வீட்டை உருவாக்கிக்கொள்வது எளிதானதில்லை. அது நீண்ட கனவு. சிலருக்குச் சில வருடத்தில் அது சாத்தியமாகிறது. பலருக்கு அது எட்டாக்கனவாகவே எஞ்சி விடுகிறது. மகாகவி பாரதிகூட காணி நிலத்தில் அழகிய தூண்கள் கொண்ட வீடு கட்டி வாழ்வதற்கு தானே ஆசைப்பட்டிருக்கிறான்!
வீடு பறிபோவதுதான் வாழ்வு நசிவதற்கான முதல் அடையாளம். எத்தனை கடன்கள் இருந்தாலும் வீடு இருக்கும் வரை யாவும் திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வீட்டை இழந்த பிறகு வாழ்வில் மிஞ்சுவதெல்லாம் போக்கிடமற்ற தனிமையும் அவமானமும்தான்.
இத்தகைய அவமானத்திலிருந்து மீள முடியாத மனிதன் மூர்க்கமாகி விடுகிறான்; அல்லது, புத்தி பேதலித்து விடுகிறான். இந்த நிகழ்வுக்கு சாட்சி சொல்வது போலிருக்கிறது ‘கரிச்சான குஞ்சு’வின் ரத்த சுவை என்கிற கதை. சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட கரிச்சான் குஞ்சு, மிகக் குறை வாகவே தமிழில் எழுதியுள்ளார்.
ராமு என்பவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு அவனைக் காண்பதற்காகச் செல்லும் அவனது நண்பரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. ஊரில் சுற்றித் திரியும் மூர்க்கமான குரங்கு ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு குரங்கு போகும் இடங்களுக்கெல்லாம் தானும் கூடவே அலைகிறான் ராமு.
அவன் குடும்பம், கடன் தொல்லை யால் வீட்டை இழந்து நொடித்துவிட்டது. வீட்டை காலி செய்வதற்கு கோர்ட் இரண்டு மாத காலம் அவகாசம் தந்திருக்கிறது. அந்த நிலையில்தான் ராமுவுக்கு புத்தி பேதலித்துவிட்டது.
ராமுவின் வீட்டைக் கடனுக்காக எழுதி வாங்கியவர் கோபாலய்யர். அவர் வேண்டும் என்றே வட்டியை அதிகமாக வாங்குவதற்காக பம்பாயில் இருக்கிற தன் தங்கையின் பெயரால் கடன் பத்திரம் எழுதித் தருகிறார். அதனால் ஒவ்வொரு முறை கடனை முடிக்கப் போகும்போதும் பத்திரம் தங்கையிடம் இருப்பதாகச் சொல்லி வட்டியை மட்டும் வசூல் செய்கிறார்.
சில வருடங்களில் வட்டி அதிகமாகி, கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால் வீடு கடனில் மூழ்கிப் போய்விடுகிறது. அன்றிலிருந்து ராமு சித்தம் கலங்கிவிட்டது என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ராமுவைச் சந்தித்துப் பேசுகிறான் ஒரு நண்பன். ராமு தனக்கு உண்மையில் சித்தம் கலங்கிவிடவில்லை என்றும், ஒரு நாள் தான் ஒரு முரட்டுக் குரங்கைப் பார்த்தாகவும், அது ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாகவும், அப்போது குரங்கு தன் கையில் வழியும் நாயின் ரத்தத்தைச் சுவைத்துப் பார்க்கவே அந்த ரத்த ருசி அதற்குப் பிடித்துவிட, அன்றிலிருந்து அது மாமிச பட்சிணியாக மாறி விட்டதாகவும் சொல்கிறான். அதைக் கேட்ட நண்பன், ‘‘குரங்கு அப்படியானதில் உனக்கு என்ன பிரச்னை?’’ என்று கேட்க, ‘‘தாவர பட்சிணியான குரங்குகூட ரத்த சுவைக்குப் பழகி, மாமிசபட்சிணியாக மாறிவிடு வதைப் போன்றதுதான் கோபாலய்யர் வேலையும். அவர் கடன் கொடுக்கத் தொடங்கி அதுவே பின்பு வட்டித் தொழிலாகி இன்று ரத்தம் குடிக்கப் பழகிவிட்டார். நான் கோபாலய்யரின் பின்னால் அலைவது போல நினைத்துக்கொண்டுதான் குரங்கின் பின்னால் அலைகி றேன். அது என்ன செய்யும் என்று எனக்குப் புரியவே இல்லை’’ என்கிறான் ராமு.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த முரட்டுக் குரங்கு இன்னொரு குரங்காட்டி கொண்டு வந்திருந்த பெண் குரங்கு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய் அதையும் கொன்று விடுகிறது. குரங் காட்டி முரட்டுக் குரங்கை சுருக்குப் போட்டுப் பிடித்துவிடு கிறான். ஆனால், ஊர்க்காரர்கள் அது தெய்வாம் சம் கொண்டது என்று விட்டு விடச் சொல் கிறார்கள்.
குரங்காட்டி விட மறுக்கவே அவனை அடித் துப் போட்டு விட்டு குரங்கை அவிழ்த்து விடுகிறார்கள். கோபாலய்யரும் குரங்கும் ஒன்று தான் என்று தெரிந்ததால் தானோ என்னவோ ராமு குரங்கைப் பார்த் துக்கொண்டே இருக்கிறான். ஊர்க்காரர்கள் அவனைப் பைத்தியம் என்று சொல்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.
ருஷ்ய விவசாயி கள், புதுமனை புகுவிழா நாளில், வீடு ஒரு விருட்சத் தைப் போல நன்றாக வேர்விட்டு மண்ணை இறுக்க மாகப் பற்றிக் கொள்ளட்டும் என்று வாழ்த்து வார்களாம். காற்றையும் வெளிச்சத்தையும் தனக்குள்ளாக வாங்கிக்கொண்டு வீடும் சதா எதையோ பாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏனோ வீட்டின் பாடல், நம் செவிகளுக்குக் கேட்பதே இல்லை.
‘பசித்த மானுடம்’ என்ற அரிய நாவலை எழுதி, தமிழ் நாவல் உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் கரிச்சான் குஞ்சு. தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள சேதின்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நாராயணசாமி. இவரது நெருங்கிய நண்பர் எழுத்தாளர் கு.ப.ராஜ கோபாலன் ‘கரிச்சான்’ என்ற புனைபெயரில் எழுதியதன் நினைவாக, தன் பெயரை ‘கரிச்சான் குஞ்சு’ என்று மாற்றிக் கொண்டவர். இசையில் ஆழ்ந்த புலமை படைத் தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து மறைந்த இவர், இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
கிருஷ்ணன் நம்பி
மிதந்து செல்லும் கனவு
எஸ்.ராமகிருஷ்ணன்
மாலை நேரமொன்றில் புத்தம் புதிய எண்டோவர் காரை நாகேஸ்வரராவ் பார்க்கின் முன்னால் நிறுத்திவிட்டு, இருவர் உள்ளே இறங்கிச் செல்வதைப் பார்த்தேன். இரண்டு நிமிஷ நேரத்தில் புழுதி படிந்த வேஷ்டியும் அரைக்கை சட்டையும் அணிந்து கையில் வேர்க்கடலைப் பொட்டலத்துடன் வந்த ஒரு பெரியவர், அந்த காரின் அருகில் வந்து, எக்கி நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தார். குனிந்து டயர்கள் எப்படி இருக்கின்றன என்றும் பார்த்தார்.
பிறகு, நீண்ட நாள் பரிச்சயமானவர் போல டிரைவர் முன்பு வேர்க்கடலைப் பொட்டலத்தை நீட்டியபடி, ‘வண்டி திருச்சி ரிஜிஸ்ட்ரேஷனா?’ என்று கேட்டார். டிரைவர் தலையாட்டினார். ‘வண்டியின் விலை என்ன? ஏ.சி. எப்படி வேலை செய்கிறது? பெட்ரோலா, டீசலா?’ என்று அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே இருந்தார். டிரைவர் சலிப்புற்றவராக, ‘நீங்கள்லாம் வாங்க முடியாது சார். எதுக்கு வீண் பேச்சு?’ என்றார்.
அதைக் கேட்டதும் பெரிய வருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. Ôஏன்… விலைக்கு வாங்காட்டா காரைப் பத்தித் தெரிஞ்சுக்கிடக் கூடாதா? உலகத்தில் இல்லாத அதிசயமான காரு பாரு… நான் ஒண் ணும் படிக்காத முட்டாள் இல்லை. நானும் பத்து கம்பெனில வேலை செஞ்சவன்தான். உனக்குத் தெரிஞ்சதைவிட எனக்கு அதிகம் காரைப் பத்தி தெரியும். தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்னு நினைக்கிறியா? தாஜ்மகாலை நமக்குப் பிடிக்கும். அதுக்காக அதை விலை கொடுத்தா வாங்குறோம். அதே மாதிரி எட்ட இருந்தே பாத்துட்டுப் போறேன்.’’
டிரைவருக்குக் கோபம் அதிகமாகி இருக்க வேண்டும். ‘பொழுது போகலைனா என் உசிரை ஏன்யா எடுக்கிறே? வண்டியை தொடாமப் பேசு’ என்றார். பெரியவருக் கும் டிரைவருக்கும் பேச்சு முற்ற, பார்க்கில் என் எதிரில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டு இருந்த ஓர் இளைஞன், அவசரமாக வெளியே போய் அந்தப் பெரியவரை உள்ளே இழுத்து வந்தான். பூங்கா முழுவதும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
இதற்குள் வியர்வை வழிய நடைப் பயிற்சி முடித்துவிட்டு, காரின் உரிமை யாளர்கள் வெளியேற நடந்து வந்தார்கள். விருட்டென பெரியவர் எழுந்து அவர் களிடமே போய், ‘வண்டி ஆன் ரோடு என்ன விலையாகுது சார்?’ என்று கேட் டார். அவர்கள் முறைத்துப் பார்த்தபடி பதில் சொல்லாமல் போனார்கள். பையன் தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்து இருந்தான். பெரியவர் புல்தரையில் அமர்ந்து தனக்குத்தானே எதையோ பேசிக்கொண்டு இருந்தார்.
அந்த இளைஞன் என்னைப் பார்த்து சிரித்தான். Ôஅப்பா சார். அவருக்கு ஒரு சின்ன பிரச்னை’ என்றான். ‘அப்படியா’ என்று தலையாட்டினேன்.
Ôஎதைப் பார்த்தாலும் அவருக்கு ஆசை சார். சிட்டியில ஓடுற கார், புதுசா கட்டுற பிளாட், நியூ மாடல் பைக் இப்படி எதைப் பார்த்தாலும் உடனே விலை விசாரிச்சு நூறு கேள்வி கேட்பாரு. அவ்வளவு ஏன்… அண்ணா நகர்ல புதுசா ஒரு பீட்சா கார்னர் திறந்திருக் கிறதா பேப்பர்ல படிச்சுட்டு, பஸ் பிடிச்சு அங்கே போய் ஒவ்வொரு அயிட்டமா விலை விசாரிச்சிட்டு வந்தார். அவருக்கு வந்திருக்கிறது என்ன நோய்னு எங்களுக்குப் புரியலை. அவரால தினம் தினம் பிரச்னைதான்.’
பெரியவர், சற்று முன்பு நடந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரில் மக்காச்சோளம் விற்பவரிடம் என் னவோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு இருந்தார். பையன் பேச்சின் நடுவே அவர் என்ன செய்கிறார் என்று அடிக்கடி பார்த்துக்கொண்டான்.
Ôஎங்கப்பா முப்பது வருஷம் வேலை பாத்திருக்கார். எல்லா இடத்திலயும் இவரோட பேச்சைத் தாங்க முடியாம வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இப்போ வேலைக்குப் போகலை. மந்தவெளில ஆயிர ரூவா வாடகை வீட்ல இருக்கோம். வீட்ல அம்மாவும் மூணு தங்கச்சியும் இருக்காங்க. அப்பாவுக்கு அது எதுவும் பெருசா தெரியலை சார்! எவனோ, எதையோ வாங்கிட்டா இவருக்கு என்ன? உலகத்திலே இவருக்குத் தெரியாம யாரும் எதுவும் வாங்கிரக் கூடாதுனு நினைக்கிறார். எதுக்கு இந்தப் பேராசைனுதான் தெரியலை. ‘சாப்பாடு’னு பேப்பர்ல எழுதிக் காட்டினா வயிறு நிறைஞ்சிடுமா சொல்லுங்க?’ என்றான்.
நகரம் ஆசைகளின் விளைநிலம். மாநகரச் சாலையில் நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு நிமிஷமும் உங் களை அறியாமலே சிறியதும் பெரியது மாக ஆசைகள் துளிர்ப்பதும் அழிவது மாக இருக்கின்றன. புதுப்புது கார்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அண் ணாந்து பார்க்கவைக்கும் நட்சத்திர விடுதிகள். விதவிதமான டி.வி., ஹோம் தியேட்டர், நவநவீன உடைகள், காபி ஷாப், சைனீஸ் உணவு விடுதி, புதுப்புது வகை பைக்குகள், நகைக் கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், பட்டாம் பூச்சி போன்ற இளம் பெண்கள், இப்படி காணும் ஒவ்வொன்றும் எவர் மனதிலோ ஒரு ஆசையின் விதையை ஊன்றுகிறது. அவர்கள் சில நிமிஷ நேர மாவது அந்தக் கனவில் உலவுகிறார்கள். கண்ணால் பார்த்தபடியே அதை ரசிக்கிறார்கள். பிறகு பெருமூச்சு விட்டவர் களாகக் கடந்து போய்விடுகிறார்கள். கடற்கரையில் நடந்து செல்லும்போது பதியும் ஈரமான காலடிகளைப் போல, ஆசைகள் நம் கண் முன்னே உருவாகி, கண்முன்னே அழிந்தும் விடுகின்றன.
மத்தியதர வாழ்க்கையை வாழும் மனிதன், ஆசைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மனதில் ரகசியமாக எப்போதும் வைத்திருக்கிறான். அதைப் பற்றிச் சொந்த மனைவி, குழந்தையிடம்கூடப் பேசுவது கிடையாது. ஒருவேளை, தான் விரும்பியதை அடைய முடியாமல் போய்விட்டால், அவர்கள் தன்னைக் கேலி செய்வார்களோ, மதிக்க மாட்டார் களோ என்ற பயமாகக்கூட இருக்கக் கூடும். இதில் ஆண் & பெண் என்ற பேதமில்லை.
கீரைப்பாத்திகளில் கீரை வளர்வதை விடவும் வேகமாக ஆசைகள் வளர்ந்து விடுகின்றன. அடக்கப்பட்ட ஆசைகள் யாவும் அழிந்து போய்விடுவதில்லை. ஒன்றோ இரண்டோ அடங்க மறுத்துப் பீறிடும்போது மனிதன் தன் அவஸ்தை நிலையை மறந்து, ஆசையின் பின்னால் அலையத் துவங்கிவிடுகிறான்.
புதுமைப்பித்தனின் கதையன்றில் கடவுளைத் தனது வீட்டுக்கு அழைத்து வருவார் கந்தசாமிப் பிள்ளை என்கிற கதாபாத்திரம். வீட்டில் அவரது குழந்தை, ‘அப்பா, எனக்காக என்ன வாங்கி வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கும். கந்தசாமிப் பிள்ளை, ‘என்னைத்தான் வாங்கி வந்திருக்கிறேன்’ என்பார். உடனே குழந்தை, ‘உன்னைத்தான் எப்போதும் வாங்கிட்டு வர்றயே… ஒரு பொட்டுக்கடலை யாவது வாங்கிட்டு வரக் கூடாதா?’ என்று ஆதங்கத்துடன் கேட்கும்.
கந்தசாமிப் பிள்ளை என்ன பேசுவது என்று தெரியாமல் தலை குனிவார். அவருக்கு அருகில் நின்ற கடவுளும் குழந்தையை பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு வந்துவிட்டோமே என்று சோர்ந்து தலை குனிவார் என்று எழுதியிருப்பார் புதுமைப்பித்தன்.
இதுதான் மத்தியதர வர்க்க வாழ்வின் அடையாளம். இந்த வாழ்வில் உழன்று கொண்டு இருக்கும் ஒரு மனிதனின் மன விசித்திரத்தினை வெளிப்படுத்தும் அபூர்வமான கதை கிருஷ்ணன் நம்பியின் எக்ஸென்டிரிக். கிருஷ்ணன் நம்பியின் கதைகள் அன்றாட வாழ்வின் சுகதுக்கங்களைப் பதிவு செய்பவை.
1959&களில் ஒரு நிறுவனத்தில் குமாஸ்தா வாக வேலை செய்யும் ஒரு மனிதனின் சம்பள நாளில் துவங்குகிறது எக்ஸென்டிரிக் கதை. அவனுக்கு எண்பது ரூபாய் சம்பளம். புது நோட்டுகளாகத் தருகிறார்கள். சம்பளத்தைவிட அதிகக் கடனும் நெருக்கடியும் கொண்ட குடும்ப வாழ்க்கை. வீட்டில் மனைவி அவன் கொண்டுவந்து தரும் எண்பது ரூபாய்க்குள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று தெரியாமல் மூச்சுத் திணறுகிறாள்.
சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவல கத்தைவிட்டு வெளியே வரும் அவன், ஒரு காபி குடிப்பதற்காக ஓட்டலுக்குச் செல்கிறான். தினமும் அவனது செலவுக் காக இரண்டணா தருகிறாள் அவனது மனைவி. அதில் ஒன்றரை அணா காபிக்கு, அரையணா ஒரு சிகரெட் பிடித்துக்கொள்வதற்கு. அதனால் ஒரு சிகரெட்டை வாங்கி இரண்டாக உடைத்து வைத்துக்கொண்டு, இரண்டு வேளைகளில் புகைக்கிறான் அவன்.
ஓட்டல் வாசலில் நீல நிறத்தில் புத்தம் புதிய கார் ஒன்று நிற்பதைக் காண்கிறான். அதனுள் ஒரு நாய்க் குட்டியை அணைத்தபடி குண்டான பெண் உட்கார்ந்திருக்கிறாள். அந்த காரும், பெண்ணும், நாய்க்குட்டியும் அவனது மனதில் பொறாமையை உருவாக்குகிறார்கள்.
அந்த காரில் தான் பயணம் போனால் எப்படி இருக்கும் என்று அவன் மனம் கற்பனை செய்கிறது. அந்தக் கற்பனை ஒரு கனவு போல விரிகிறது. கடல் நீலத்தில் ஒரு பட்டுப் புடவை கட்டிக்கொண்டு மனைவி அவனுடன் வர, இருவரும் மிக சந்தோஷமாக சரசமாடுவது போன்று நினைக்கும்போதே மனதில் ஆசை பூக்கத் துவங்கிவிடுகிறது. எல்லாவற்றுக்கும் பணம்தான் தேவையாக இருக்கிறது. ஆனால், அது தன்னிடம் இல்லை. நினைக்க நினைக்க, அவன் மீதே அவனுக்கு ஆத்திரமாக வருகிறது.
‘பசித்த வேளையில் ஒரு டிபன் சாப்பிடக்கூட முடியாமல் என்ன வாழ்க்கை இது? எதற்காக இப்படி வாழ்கிறோம்?’ என்று தோன்றுகிறது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராது, நாம்தான் அதைத் தேடிப் போக வேண்டும் என்று நினைத்தவுடன் அவனுக்குத் தனது சம்பளப் பணம் முழுவதையும், அன்று இரவுக்குள் செலவு செய்து தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி உண்டாகிறது. ஓட்டலுக்குள் புதிய மனிதனாக நுழைகிறான்.
வீட்டில் இருக்கும் ஆயிரம் கடன் களும் அவன் கண்ணைவிட்டு மறைந்து போகின்றன. ஓட்டலின் முன்பு எதிர்ப்படும் மூட்டை தூக்கும் ஒருவனையும் அழைத்துக்கொண்டு சாப்பிட நுழைகிறான். விதவிதமான உணவுகளைத் தருவித்துச் சாப்பிடுகிறார்கள். சர்வருக்கு ஒரு ரூபாய் டிப்ஸ் தருகிறான். ஓட்டலை விட்டு வெளியே வந்து டாக்சி பிடித்து கடற்கரைக்குப் போகிறான். கடற்காற்று ஏகாந்தமாக இருக்கிறது. இந்த ஒரு நாளுக்குள் வகைவகையான இன்பங்களை அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆசை பொங்குகிறது.
பின், டாக்சியில் ஏறி ஒரு சினிமாவுக் குப் போகிறான். படம் விட்டதும் வெளியே வந்து எங்கே போவது என்று தெரியாமல் டாக்சி டிரைவரிடமே எங்கே போகலாம் என்று கேட்கிறான். இருவரும் ஒன்றாகக் குடிக்கிறார்கள். பாலக்காட்டுப் பெண் ஒருத்தியிடம் கூட்டிப் போகிறான் டிரைவர். யாவும் முடிந்து இரவு வெளியே வரும்போது அப்படியும் பத்து ரூபாயும் இரண்டணாவும் மீதமிருக்கிறது.
வழியில் தென்பட்ட பிச்சைக்கார னுக்கு இரண்டணா தானம் தருகிறான். வீட்டை நெருங்கும்போது பையில் உள்ள பத்து ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே எடுக்க முயற்சிக்கிறான். பணத்தைக் காண வில்லை. எங்கோ வழியில் தொலைந்து போயிருக்கிறது. வீட்டுக் கதவைத் தட்டு கிறான். மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறக்கிறாள். சம்பளம் வாங்க வில்லையா என்று கேட்கிறாள். நாளைக்குத்தான் சம்பளம் என்று சொன்னபடி அவன் வீட்டுக்குள் நுழைவதாக கதை முடிகிறது.
எளிய விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத வாழ்வின் கசப்பு ஒரு நாளில் முற்றிப் பீறிடுவதை இக்கதை துல்லியமாக வெளிப் படுத்துகிறது. விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மத்தியதர மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி, அதனுள் ஊசலாடிக்கொண்டு இருக்கிறான். என்ன செய்வது… எட்டுக் கால்கள் இருந்தும் சிலந்தி தன் வலைக்குள்தானே ஊர்ந்து அலைகிறது! நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த அழகிய பாண்டியபுரத்தில் 1932&ல் பிறந்தவர் கிருஷ்ணன் நம்பி. இவரது இயற்பெயர் அழகிய நம்பி. சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும் எழுதியிருக்கிறார். நெருக்கடியில் உழலும் மனிதனின் சுகதுக்கங்களை மெல்லிய பகடியான தொனியில் விவரிப்பவை இவரது கதைகள். ‘யானை என்ன யானை’ என்ற குழந்தைகள் கவிதைத் தொகுப்பும் நீலக்கடல், காலை முதல் என்னும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 1976&ம் வருஷம் தனது 44 வயதில், எதிர்பாராத நோய்மையால் மரணமடைந்தார் கிருஷ்ணன் நம்பி.
எஸ்.சம்பத்
கதாவிலாசம்
ஒற்றை அறை
எல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
மற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன லில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கப் படுகிறது. அறையில் படுக்கை, அலமாரி யாவும் சுத்தமானதாக இருக்கின்றன. சுவரில் உள்ள ஹேங்கரில் ஒழுங்காக உடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் மிகச் சிறியதாக இருக்கிறது. (கண்ணாடி முன் நின்ற படி தன்னைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுளீர் என்று வலிப்பது போலிருக்குமோ!) காலையில் அலுவலகம் புறப்படும்போது வெளுத்த உடையும் திருநீற்றுக் கீற்றுமாக அவர்கள் சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். ஆனால், அவர்களது மனதில் குளத்துத் தண்ணீரில் தெரியும் மேகம் போல, பெண்களின் மீதான ஆசை ஊர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசிக்கொள்வது கிடையாது.
திருமணம் செய்துகொள்ளாததால், ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், காமத்திலிருந்து விடுபட முடியுமா? கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வ தும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாக வும், அறியாமை நிரம்பியதாக வுமே இருக்கிறது.
காமம் குறித்த அறிதல் பதின்பருவத்தில் துவங்குகிறது. வேட்டைக்குச் செல்பவன், மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக் கும், எந்தத் திசையிலிருந்து எந்தத் திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல கொஞ்சம் கொஞ்சமாக செவி வழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்துகொள்ளத் துவங்கு கிறோம். அதன் பிறகு, நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே!
ஆணோ, பெண்ணோ எவராயினும், காமம் உடலில் தோன்றும் ஒரு சூறாவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது.
இங்மர் பெர்க்மனின் ‘வர்ஜின் ஸ்பிரிங்’ என்றொரு படத்தில், மிகப் பரந்த பசுமையான புல்வெளி ஒன்று காட்டப்படுகிறது. தொலைவில் நாலைந்து ஆட்டிடையர் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவாலயத்துக்குச் செல்கிற ஓர் இளம்பெண் கையில் பூக்கூடையுடன் கடக்கிறாள். ஏகாந்தமான காற்றும், அழகும் அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
கடந்துபோகும் வழியில் உள்ள இடையர்களைக் கண்டு அவள் சிரிக்கிறாள். அவர்களும் கபடமின்றிச் சிரிக்கிறார்கள். ஆனால், நிமிஷ நேரத்தில் அவர்களது முகம் மாறுகிறது. ஒரு மிருகத்தைப் போல காமம் அவர்களது கண்களில் கொப்பளிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் யாருமில்லை என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.
உடனே பாய்ந்து, அந்தப் பெண்ணைத் தங்களது இச்சைக்குப் பலியாக்கிவிடுகிறார்கள். யாருமற்ற அந்தப் பிரதேசத்தில் ஒரு பெண் உருக்குலைந்து, உதிரப் பெருக்கோடு கிடக்கும் காட்சியைப் பெர்க்மன் காட்டுகிறார். அப்போதும் அதே புல்வெளி, பசுமை மாறாமல் காற்றில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. காம சுகிப்பை இப்படித் திரையில் காணும்போது முகத்தில் அறைவது போலத்தான் இருக்கிறது.
இது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. சம காலத்திலும்கூட காமம் இப்படி ஒரு மூர்க்கத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளதை நாம் அன்றாடம் காண முடி கிறது. பெண் வீழ்த்தி நுகரப்பட வேண்டிய வள் என்ற எண்ணம் காலங்காலமாகவே மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
ஆண், காம உணர்ச்சி களுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள் கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. ஆண்டாள், தனது பாடலில் தனக்குக் காமம் ஏற்படுத்தும் வலியை, பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதைக் கடந்து, உடலின் தீராத குரல் என்றுதான் தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்தவரையில் விருப்பத்துடன் தன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பல முறை யோசிப்பதுதான் குடும்பங் களில் நடக்கிறது. தாக மிகுதியால் வரும் மிருகம் தண்ணீரைக் கண்டதும் குடிப்பதற்குத் தான் முயற்சிக்குமே தவிர, தண்ணீரில் தனது உருவம் தெரிவதை நின்று ரசிக்காது. அப்படித்தான் விளக்கை அணைத்துவிட்ட வுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வது போல, காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துவிடுகிறது.
காமத்தை அறிவது ஒரு கலை என்று இந்திய சமூகம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்தபோதிலும், அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.
உடலை நாம் அறிந்துகொள்ளாததுதான் காமத்தைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு முதல் காரணம். உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தை எப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் உறங்கும்போது நம் கனவில் புலி பாய்வதாக இருந்தால்கூட உடல் தானே திடுக்கிட்டு விழித்துவிடுகிறது. உண்மையில், உடல் ஒரு விசித்திரமான இசைக் கருவி. அதிலிருந்து நாம் விதவிதமான இசையை வாசிக்க முடியும். ஆனால், அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.
எனக்குத் தெரிந்த மேன்ஷன்வாசி களில் ஒருவரான நித்யானந்தம், நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெண் பார்த்து பேசி ஒப்புக் கொண்டார். திருமணம் தூத்துக்குடி அருகில் உள்ள ஏதோ கிராமத்தில் நடந்தது. மேன்ஷன் அறையில் இருந்த நண்பர்கள் பலரும் தனது திருமணத் துக்கு வரவில்லை என்பதால், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப் பதாகத் தனக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போன் பண்ணி சொன்னார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. அன்று மாலை லேசான தூறல் விழுந்துகொண்டு இருந்தது. நித்யானந்தம் தலைக்கு டை அடித்து, புது கோட்\சூட் அணிந்து, ஆறு மணிக்கே புதுப் பெண்டாட்டியுடன் வந்து நின்றிருந்தார்.
நானும் இன்னொரு நண்பனும் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இரண்டு பேர் மட்டுமே வந்திருந் தார்கள். நித்யானந்தத்தின் முகம் இறுக்கமாக இருந்தது. நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. எவரும் வரவே இல்லை. மணி ஒன்பதாகியபோது, மழை வலுத்திருந்தது. மண்டபத்தில் பதினோரு பேர் மட்டுமே இருந்தோம். இருநூறு பேருக்குத் தேவையான சாப்பாடு தயாராக இருந்தது. புது மனைவி நகத்தைக் கடித்தபடி நின்றுகொண்டு இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத நித்யானந்தம் கோபத்தில் வெடித்துப் பேசினார்…
‘‘நாப்பத்தஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல… அதான், இந்த அவமானப்படுறேன். கூட இருந்தவன், வேலை பாக்கிறவன்னு ஒருத்தன்கூட வரலை, பாருங்க! எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன்! எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு!’’ என்றபடி விடுவிடுவென மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டுப் போய்விட் டார்.
அறைக்கு வந்தபோது பலரும் அவர் சொன்னது போலவே, ‘நித்யானந்தத் துக்கு எதுக்குய்யா அம்பது வயசுல கல்யாணம்? பொம்பளை ஆசை லேசில் விடுதா..? இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம்!’ என்றார். அறைவாசிகள் அதையும் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர் சிரித்து எவரும் பார்க்கவே இல்லை.
பால் உணர்ச்சிகள் குறித்த கதைகள் பெரும்பாலும் மலிவான தளத்தில் எழுதப்பட்டு வரும் சூழலில், அதன் நுண்மையான அதிர்வுகளைப் பதிவு செய்த கதை… எஸ்.சம்பத் எழுதிய ‘சாமியார் ஜூவிற்கு போகிறார்’. சம்பத், நவீன தமிழ் இலக்கியத்தின் தனிக் குரல். மிகக் குறைவாக எழுதியவர். குறைவான காலமே வாழ்ந்த வரும்கூட. அவர் எழுதிய சிறுகதைகளில் மறக்க முடியாததும், வெகு நேர்த்தி யானதும் இக்கதையே!
தினகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் செல்கிறான். அன்று விடுமுறை நாள். அவனது மனைவி பத்மா காலையிலிருந்தே பால் உணர்ச்சிமிக்கவளாகத் தாபத்தில் இருக் கிறாள். கணவனிடம் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையில், அவர்கள் மிருகக்காட்சி சாலைக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள்.
அவளுக்கு எப்படியாவது அன்று முழுவதும், கணவனைத் தனது பிடியிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உருவாகிறது. இதனால் அவனுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்கிறாள். மிருகக்காட்சி சாலையில் அன்று ஏகக் கூட்டம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக கணவனுடன் சரசம் செய்கிறாள். அன்று எதிர்பாராதவிதமாகக் கூண்டில் இருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்துவிடுகிறது. அதைக் கண்டு, பலரும் அலறி ஓடுகிறார்கள். புலி எங்கே பாய்வது என்று தெரியாது தடுமாறி ஓடுகிறது. முடிவில் அது சுடப்பட்டு இறக்கிறது.
இந்தக் காட்சி, வீடு திரும்பிய பிறகும் தினகரனுக்கு மிகுந்த மனவேதனையை உருவாக்குகிறது. மனைவியோ காமத்தால் அதிகம் பீடிக்கப்பட்டவளாகிறாள். மனிதன் தன்னால் அடக்க முடியாத வற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி, அடக்கி வைத்திருக்கிறான். சுதந்திரத்துக்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது அவனது மனைவியின் காமமும் அந்தப் புலி தப்பியது போன்றது தான் என்று தினகரன் புரிந்து கொள்கிறான்.
அன்று கூடலில், தினகரன் ஒரு பஞ்சைப் போல எடை அற்றவனாக இருப்பதாகச் சொல்கிறாள் அவன் மனைவி. அவனோ புலி, கூண்டை விட்டு வெளியே வந்ததும், தனது சுதந்திரத்தைத் தேடியே! அதை அடைவதற்குள் புலி கொல்லப்பட்டு விட்டதே என்று ஏதேதோ புலம்பியபடி கனவு காணத் துவங்கு கிறான்.
ஒரு விளக்கின் சுடரைப் போல காமம் சதா அசைந்துகொண்டே இருப்பதைப் பற்றி நுட்பமாகச் சித்திரிக்கும் கதை இது. ஒருபுறம் அதிவேக நாகரிகம், காமத்தை மலினப் பொருளாக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவது போல பால் உணர்வுகளின் அறியாமை நம்மைப் பீடித்திருக்கிறது.
காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம்! எஸ்.சம்பத் 1941&ல் திருச்சி யில் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அரிய வகை எழுத்து இவருடை யது. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சம்பத், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார். இவரது ÔஇடைவெளிÕ என்ற நாவல், மரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன் வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும்.
சம்பத்தின் அப்பா ரயில்வே உயர் அதிகாரியாக வேலை செய்தவர் என்ப தால் வளர்ந்தது, படித்தது யாவும் டெல்லியில்! Ôருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்துலகை உருவாக்க வேண்டும்Õ என்று ஆசை கொண்ட சம்பத், எதிர்பாராத மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாக, தனது 42&வது வயதில் மரணமடைந்தார்.
இன்றும் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வழிகாட்டுதலாக இவரது எழுத்துகள் உள்ளன.
சா.கந்தசாமி
கதாவிலாசம்
நிழல் குதிரை
எஸ்.ராமகிருஷ்ணன்
நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை!
மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும் வியப்பளிக்கும். குறிப்பாக, குதிரையின் மிரட்டும் கண்கள், அதன் வேகம் சொல்லும். மண் குதிரைகள் என்று நம்புவதற்கு இயலாதபடி அதன் வார்ப்பு, காலம் கடந்தும் அங்கே புத்துரு கலையாமல் இருக்கின்றன.
அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவரைக் கண்டேன். அறுபதைக் கடந்திருக்கும். செம்புழுதியேறிய வேஷ்டி. தலை, எண்ணெய் காணாமல் சிக்குப்படிந்திருந்தது. பீடிக் கம்பெனியின் விளம்பர பனியனை அணிந்திருந்தார். கோயிலின் இருபுறமும் அடுக்கிவைக்கப்பட்டு, மழையாலும் காற்றாலும், தலையும் கால்களும் வீசி எறியப்பட்ட குதிரைகளின் முன் நின்றபடி, தானாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.
சாமிக்குச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு வெளிர் மஞ்சளும் நீலமும் பூசப்பட்ட புதுக் குதிரைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. வயசாளி மெதுவாக நடந்து, அந்தக் குதிரைகளை தன் விரலால் சுண்டிப் பார்த்தார். முகத்துக்கு நேராகத் தன் கைகளை நீட்டிப் பார்த்தார். பிறகு எரிச்சல் அடைந்தவரைப் போல, ‘‘குதிரையா இது..? கோவேறுக் கழுதை மாதிரியில்ல இருக்கு’’ என்று திட்டினார். அவரை யாரும் சட்டைசெய்யவேயில்லை.
பகல் முழுவதும் அவரைக் கவனித்தபடியே இருந்தேன். அவருக்கு அந்தத் திருவிழாவோ, அதன் மேளதாளங்களோ, சந்தோஷமோ, எதுவுமே பிடிக்கவில்லை. மேளம் அடிப்பவர் முன் போய் நின்றபடி, ‘‘என்னய்யா சாணி மிதிக்கிற மாதிரி அடிக்கிறீங்க..?’’ என்று சத்தம் போட்டார். சாமி கும்பிட வந்த பெண்களைப் பார்த்து, ‘‘சாமி கும்புட வந்தவுளுக மாதிரி தெரியலை… சர்க்கஸ்காரிக மாதிரி மினுக்குறாளுக…’’ என்று ஏசினார்.
திருவிழாவின் சந்தோஷம் அவரைத் தீண்டவே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவராக நடந்து போய், வெளிறியிருந்த ஒரு மண் குதிரையின் முன் உட்கார்ந்து, அதை ஆசையாகத் தடவி விட்டபடி இருந்தார். அவர் அருகில் போய் அமர்ந்தேன். என் காதுபடச் சொன்னார்… ‘‘மண் குதிரைதானேன்னு நினைச்சுக்கிட்டாங்க. இதுக்கும் உசிரு இருக்குய்யா! கையை நீட்டிப் பாரு… அது மூச்சு விடுறது உன் புறங்கையில தெரியும். இங்கே நிக்கிற குதிரைங்க எல்லாம் ராத்திரி எல்லோரும் போன பிறகு ஒண்ணுக் கொண்ணு பேசிக்கிட்டு இருக்கும் தெரியுமா… இப்போ செலுத்துற குதிரைங்க எல்லாமே ஊமைக் குதிரைங்க!’’.
நான் ஆமோதித்துத் தலையசைத் தேன். அவர் தொலைவில் உள்ள ஒரு குதிரையைக் காட்டி, ‘‘அது காது அழகைப் பாரேன், செஞ்சுவெச்சு அம்பது வருசமாச்சு… புதுப் பெண்டாட்டி மாதிரி எம்புட்டு அழகா இருக்குது!’’
அவர் காட்டிய திசையில் இருந்த குதிரையைத் திரும்பிப் பார்த்தபோது, அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. ‘‘கண்ணுட்டுப் பார்த்தா போதாது… கையால தொட்டுப் பார்த்துட்டு வா!’’
எழுந்து அந்தக் குதிரையைத் தொட் டுப் பார்த்தேன். என்ன அருமையான வார்ப்பு! ‘‘எப்படி இருக்கு?’’ என்று கேட்டார் பெரியவர். நன்றாயிருப் பதாகச் சொன்னேன்.
‘‘மண் குதிரையைத் தொடுறப்போ அதைச் செஞ்சவன் கையைத் தொடுற மாதிரி உணர்ச்சி வரணும். அதெல்லாம் யாருக்கு இருக்கு? பானை, சட்டி, பொம்மைன்னு மண்ல எத்தனையோ செய்றாங்க. அதுல சோறாக்குறோம், கொழம்பு வெக்கிறோம், ஆனா, அதைச் செஞ்சவன் விரல் ரேகையும் அதில் படிஞ்சிருக்குன்னு நாம பாக்குறதே இல்லை!’’ | பெருமூச்சிட்டபடி அவரிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும், யாரோ என் முகத்தில் அறைந்தது போல இருந்தது.
நான் அவரின் கைகளை அப்போதுதான் பார்த்தேன். அகலமான கைகள். ‘‘நீங்கள் குயவரா?’’ என்று கேட்டேன். அவர் வேண்டாவெறுப்பாக, ‘‘இங்க இருக்க பாதிக் குதிரைக நான் செஞ்சதுதான்!’’ என்றார். கோபத்துக்கும் எரிச்சலுக்குமான காரணம் அப்போது தான் புரிந்தது.
இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந் தோம். அவர் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஒரு சிறுவனைப் போல ஆசையை அடக்க முடியாமல் கேட்டேன்… ‘‘உங்க கையைத் தொட்டுப் பார்க்கலாமா..?’’
அவர் லேசாகச் சிரித்தபடி, ‘‘கையில் என்னய்யா இருக்கு? மனசுல இருக்கு… அதுதான் மண்ணை வனையுது. மண் லேசுப்பட்டது இல்ல. அதுக்கும் குணம் இருக்கு, வாசம் இருக்கு. கட்டுன பெண்டாட்டியாவது நம்ம சொல் பேச்சுக் கேட்பா… மண்ணு லேசில் படியாது!’’ என்றார்.
அன்று முழுவதும் அவரோடு இருந்தேன். சிதிலமடைந்துபோன குதிரைகளின் தலைகளை, கால்களை அவர் ஓரமாக அடுக்கிவைத்தபடி இருந்தார். திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் குதிரைகளின் கண்கள் கூச்சம்கொண்டு அசைவது போலவே தெரிந்தன.
நீண்ட உரையாடலுக்குப் பின்பு அவரிடம், ‘‘எதற்காக உங்களுக்கு எதையுமே பிடிக்கவில்லை?’’ என்று கேட்டேன். அவர் ஆத்திரமடைந்தவர் போல, ‘‘நமக்கு என்ன மதிப்பிருக்கு சொல்லுங்க? எல்லாப் பயலுகளும் குடிக்கிறதுக்கும், ஆடுறதுக்கும்தான் வர்றாங்க. மூளி மூளியா மண்ல செஞ்சு கொண்டு வந்து வெச்சா, சாமி எப்படி தரிசனம் கொடுக்கும்? எல்லாம் ஏமாத்தாப் போச்சு! மண்ணோட உள்ள உறவு தாய்ப்பால் மாதிரி. நாம தான் சப்பிச் சப்பிக் குடிக்கத் தெரிஞ்சுக்கணும். அது வத்தாம பாலைக் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கும்ÕÕ என்றார்.
தனது கலை அழிந்து வருகிறது என்ற கோபத்தின் கீழே வேறு ஏதோ காரணம் இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் இருந்து நடந்து சாலையின் விளிம்புக்கு வந்தபோது கேட்டேன், ‘‘உங்ககூட யாரு வந்திருக்கா..?’’
அவர் உடைந்து போன குரலில் சொன்னார், ‘‘இந்த மண் குதிரைகளைத் தவிர, எனக்கு வேற யாருமே இல்லைய்யா! பெத்த பிள்ளைக எல்லாம் பிழைப்பு தேடி மெட்ராசு, பாம்பேனு போயிட்டானுக. ஒருத் தனுக்கும் இந்தத் தொழில் பிடிக்கலை. எனக்கு இதைவிட்டா வேறு தொழில் தெரியாதுய்யா! பரம்பரையா குசவங்க நாங்க. இன்னிக்கு இருக்கனா, செத்தனான்னு பார்க்கக்கூட எனக்கு யாரும் இல்லை. பெரியவங்களை விடுங்க… ஆறு பேரப் பிள்ளைக இருக்குதுங்க. ஒருத்தருக்கும் என்னை வந்து பார்க்கத் தோணலை. என்கிட்ட என்ன இருக்கு? என்னால முடிஞ்சது மண்ணுல ரெண்டு பொம்மை செஞ்சு தருவேன். பேரன், பேத்தி எல்லாம் டவுன்ல இங்கிலீஷ் படிக்கிறவங்க. இதெல்லாம் பிடிக்குமா? ஏழையாப் போயிட்டா, சொந்தத் தாத்தானுகூட பார்க்காம உறவு அத்துப்போயிரும்னு ஆகிப் போச்சுய்யா. நானும் குதிரை செய்றதையெல்லாம் விட்டுட்டேன். மிச்சமிருக்கிறது தலை போன இந்தக் குதிரைகதான். அதுககூட பேசிக்கிட்டுக் கெடக்கிறேன்!’’
என்ன பேசுவது என்று தெரியாத அமைதி என்னைக் கவ்விக்கொண்டது. அங்கிருந்த மண் குதிரைகளைத் திரும்பிப் பார்க்க குற்ற உணர்வு ஏற்பட்டது. அவர் ஆத்திரம் அடங்கா தவர் போலச் சொன்னார்… ‘‘பத்து வருசத்துக்கும் மேலாச்சு… திருவிழாவுக்குக்கூட ஊருக்கு வர மாட்டாங்க. நானும் எந்தப் பிள்ளை வீட்டுக்கும் போறது இல்லை. எவன் கிட்டயும் கையேந்த மாட்டேன். இந்த மண்ணு இருக்கிற வரைக்கும் பொழச்சுக் கிடப்பேன். இல்லேன்னா மண்ணுக்குள்ளேயே அடங்கிருவேன். நானெல்லாம் மண்புழு மாதிரிதேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மண் ருசி மட்டும்தான்! என்ன… வயசு ஆக ஆக மனசு கேட்க மாட்டேங்குது. பேரன் பேத்திகளைத் தேடுது. வீட்ல நிறைய விளையாட்டுச் சாமான் செஞ்சு போட்டிருக்கேன். என்னிக்காவது என்னைத் தேடி வந்தா விளையாடட்டும். இல்லேன்னா நான் செத்ததும் குழியில அந்தப் பொம்மைகளையும் சேத்துப் பொதைச்சிர வேண்டியதுதான்!’’
பேச்சு அடங்கி நாவு ஒடுங்கிவிட்டது. அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். அது நடுங்கிக்கொண்டே இருந்தது. மண் குதிரைகளில் இவரும் ஒருவர் போலாகிவிட்ட நிலை புரிந்தது.
ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டு, பேரன், பேத்தியைப் பார்க்கக்கூட முடியாத நிலை என்பது எத்தனை துக்ககரமானது. அப்படி வாழ்வது மண் குதிரைக்குச் சமமானதுதானோ?
திருவிழா முடிந்து அந்த மைதானமே காலியாகி இருந்த போதும், அதை விட்டு வெளியேறிப் போக மனதற்றுப் போய்விட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத வலி காற்றில் சுற்றிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும் வழியில் எனக்கு சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை நினைவுக்கு வந்தது.
ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைப் பற்றிய கதை. இருவரும் மீன் பிடிக்கப் போகிறார்கள். ஒரு மீன் அவர்களது தூண்டிலில் சிக்காமல் அலைக்கழிக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தாத்தா முயற்சிக்கிறார். அவரால் முடியவில்லை. பேரன் அதை தான் பிடித்துவிடுவதாக சவால்விட்டு, தூண்டிலோடு போய் மீனைப் பிடித்துவிடுகிறான். பேரனின் வெற்றி தாத்தாவின் சுயபெருமையின் மீது விழுந்த அடிபோல் ஆகிவிடுகிறது. தன்னால் பிடிக்க முடியாத மீனை, பேரன் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேரனைத் திட்டுகிறார். ஆனால், அன்றிரவு அவர் மனது பேரனின் சாகசத்தை நினைத்துப் பெருமைப்படுகிறது.
வெளிப்படாத அன்பு என்பது கல்லுக்குள் தேரை இருப்பது போல, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலே வாழ்வது போன்றது. தாத்தாவின் அன்பு யாரும் திறக்காத சிப்பிக்குள் உள்ள முத்தைப் போன்றது. அதைத் தீண்டுவதும் கைவசமாக்குவதும் என்றோ அபூர்வமாகவே நடந்தேறுகிறது.
எல்லா வீடுகளிலும் வெளிப் படுத்த முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார் கள். நம் நிழல் கூடவே வந்தாலும், அது எதையும் பேசுவது இல்லை. அதுபோல இவர்களின் அன்பும்!
அருவியாகச் சப்தமிடும் போதுதான் தண்ணீரை வியந்து பார்க்கிறோம். குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனம் ஒருபோதும் புரிந்துகொள்ளப்படுவதே இல்லைதானோ?
சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி, தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். இவரது ‘சாயாவனம்’ நாவல் தமிழில் குறிப்பிடத்தக்கது. ஓவியம், நுண்கலைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட சா.கந்தசாமி, குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரித்து வருகிறார். சா.கந்தசாமி தொகுத்த ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பு, மிகக் கவனமாகவும் நுட்பமாகவும் தொகுக்கப்பட்டது. இவருடைய கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘சா.கந்தசாமி கதைகள்’ என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.
Recent Comments