Home > Uncategorized > வலைப்பதிவு தேவைகள்

வலைப்பதிவு தேவைகள்


நாளொரு பதிவும் பொழுதொரு குறிப்புமாக தமிழில் வலைப்பூக்கள் இரண்டாண்டுகளைத் தாண்டி விட்ட இந்தக் காலகட்டத்தில் சில புதிய சேவை தேவைகளின் பட்டியல்:

1. குறியீடு – Tagging

தலைப்பை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கவர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம். படம் மட்டுமே கொண்டு பதிவு போடலாம். ஆனால், அனைத்தையும் ஒரேயொரு வார்த்தையால் விளக்க வேண்டும். பதிவைப் படிப்பவர்களும் குறியீடு (tag) செய்யலாம். அல்லது ஒலி-பதிவாக இருந்தால் கேட்பவர்களும் குறியீட்டை கொடுக்கலாம். அதன் பிறகு தமிழ்மணம் போன்ற வலைமனைகளில் ஃப்ளிக்கரைப் போல் புகழ் பெற்ற தமிழ் குறியீடுகளை எளிமையாகத் தொகுக்கலாம்.

சுருக்கமாக ‘சேது’ என்று இன்று தேடினால் சேது சமுத்திரத் திட்டமும், நான்காண்டுகள் முன்பு தேடியிருந்தால் ‘சேது’ திரைப்படமும் தெரியவரும். அதுவே சேது கல்லூரியை குறித்து எவராவது பதிந்திருந்தால் ‘நுழைவுத் தேர்வு’ என்னும் குறியீட்டின் கீழ் கிடைக்கும்.

2. கருத்தோடை – Attention Stream

தமிழ்மணம்.காம் அனைத்துத் தமிழ் பதிவுகளையும் தொகுத்து ஒரே பக்கத்தில் கொடுக்கிறது. அதே போல், ஒரே குறியீடுகளில் வந்திருக்கும் அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து ஒரே பக்கத்தில் கொடுப்பதற்கு ‘கருத்தோடை’ (Attention Stream) பயன்படுகிறது.

அன்னியன் திரைப்படம் குறித்து புகைப்படங்கள், வம்புகள், விளாசல்கள், விமர்சனங்கள், எதிர்பார்ப்புகள், தகவல்கள் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் கவனிக்கக் கொடுப்பதன் மூலம், படம் குறித்த மொத்த பார்வை கிடைக்கும். இதே போல் ‘திருவாசகம்’ வெளியீடு பற்றிய பலதரப்பட்ட கருத்துக்களை படிக்கும்போது வலையின் பரந்த பார்வைகள் அனைத்தும் வாசிக்க, கேட்க, பார்க்க முடியும்.

3. மதிப்பு அமைப்பு – Reputation Systems

‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்பது தமிழ்ப் பதிவுகளில் புதிதாக நுழைபவருக்கு ஏற்படுவது இயல்பு. மேலும் சிலர் ‘கஜினி’ என்று பதில் போடுபவர்தான் ‘தோசை’ என்று பதிய ஆரம்பித்திருக்கிறார் என்று எழுதுவார்கள். புகழ் பெற்ற ‘ஈ-பே’ சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ‘அமேசானில்’ பொருள் விற்பவர், இதுவரை நம்பகமாக செயல்பட்டிருக்கிறாரா என்று தெரிந்து கொண்ட பிறகு, பழைய சாமானைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் வலைப்பதிவுகளிலும் இதே போன்ற ‘மதிப்பு அமைப்பு’களின் (Reputation Systems) தேவை அதிகரித்திருக்கிறது. புத்தக விமர்சனம் எழுதுவதில் இவர் வல்லுநர்; ஆனால் சமையல் குறிப்புகளைக் கொடுத்தால் நம்ப வேண்டாம் என்று ஒருவரை மதிப்பிடலாம்.

4. The Long Tail

‘சந்திரமுகி’ போன்ற ரஜினி படங்கள் பெறும் கவனிப்பை ‘ஜமீலா’ போன்ற நல்ல படைப்புகள் பெறுவதில்லை. Wired இதழின் க்ரிஸ் ஆண்டெர்ஸன் இதை ‘நீண்ட வால்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

குறும்படத் தயாரிப்பாளருக்கு படத்தை விநியோகிப்பதில் பிரச்சினை. புதிய இசையமைப்பாளருக்கு, ரசிகர்களிடம் ஆல்பத்தைக் கொண்டுபோவது கஷ்டமாக இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் மூலம் பார்ப்பதற்கரிய திரைப்படங்களை பார்க்கலாம். அமேசான் மூலம் கிடைப்பதற்கரிய புத்தகங்களை சகாய விலையில் பெற முடிகிறது.

தமிழிலும் இதே போன்ற முத்துக்களை சாஸ்வதமாகப் பிராபல்யபடுத்தும் முயற்சிகள் தேவை.

– பாலாஜி
பாஸ்டன்

Categories: Uncategorized
 1. July 4, 2005 at 7:06 am

  தலீவா… என்னவோ ஆச்சு உமக்கு..! தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வந்தோமா… நம்ம ஜாதிக் கட்சியை நல்லா பிரபல ‘படுத்தி’னோமா.. சம்பந்த்தமேயில்லாமல் ஊரிலே மழை பெய்யாததக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை கண்டமேனிக்கு திட்டினோமா அப்படீன்னு இல்லாம, தமிழ் வலைப்பூ வளரணும், ஆக்கப்பூர்வம் அது இதுன்னு என்னவோ பேசினுக்கீர?!

 2. Anonymous
  July 4, 2005 at 6:33 pm

  :->
  -balaji

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: