Archive

Archive for July 6, 2005

அலைபாயுதே

July 6, 2005 4 comments

சென்ற வாரத்தில் ஒரு நாள், எழுத்தாளர் ஐஷ்வர்யனோ காஷ்யபனோ நேர்காணலில் இருந்தார். மேலோட்டமாக பேட்டி எடுக்கிறார்கள். ‘வணக்கம் தமிழக’த்தின் சிறப்பு விருந்தினரைப் பற்றிய முன் அறிமுகம் இல்லாவிட்டால் மனதில் பதிவது கஷ்டம்தான். ‘மாலினி என் பெயர்’ தொடர்கதை எழுதிய விதத்தை சொல்லிக் கொண்டிருந்தார். ஈழத்துப் பிண்ணணியில் எழுதப்பட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் பெண்ணின் கதை. கடந்தகால நினைவுகள் தப்பிவிடுகிறது. ஈழத்தில் இருந்து தமிழகம் வந்தது, கணவனின் நிர்ப்பந்தங்கள், இலங்கைச் சூழல் என்று சுவாரசியமாக இருந்தது.

அமெரிக்கக் கூடைப்பந்து போட்டியை மீண்டும் சான் ஆண்டோனியா ஸ்பர்ஸ் ஜெயித்திருக்கிறார்கள். மிக எளிதாக வென்றிருக்க வேண்டியது. நடுவர்களைக் கொண்டு ஏழு ஆட்டங்களுக்கு இழுத்தடித்தார்கள். இருந்தாலும் பார்ப்பதற்கு ஆர்வம் குன்றவில்லை. வாடர் கூலர் அருகே கதைப்பதற்கும் சரக்கு நிறையவே கொடுத்தார்கள். ரெட் சாக்ஸும் சூடு கிளப்புகிறார்கள். நட்சத்திர வீச்சாளர் கர்ட் ஷில்லிங் இல்லாமலேயே வெற்றிகளை குவிக்கிறார்கள். இந்த வருடமும் நியு யார்க் யான்கீஸுக்கு ஆப்பு வைக்கலாம்.

குடியரசு கட்சியினர் தந்திரசாலிகள். புஷ் நியமித்த நடுவர்களுக்கு ரொம்ப நாளாக தலைவலி. சுதந்திர கட்சியினர் ஃபிலிபஸ்டர் போட்டு தடுத்து வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் ஏழாவது சர்க்யூட் போன்ற செஷன்ஸ் கோர்ட் மன்றங்களுக்கான நீதிபதிகள்தான். கானர் ஓய்வு பெற்ற பிறகு நியமிக்கப்படும் உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தேர்வுகள் அல்ல. இருந்தாலும் கருக்கலைப்புக்கு எதிரிகளும், சுற்றுப்புறச்சூழல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்றிருக்கும் நீதிபதிகளும் தெரிவு ஆகக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள்.

ஃப்ரிஸ்ட் போட்ட கிடுக்கிப் பிடியோ… மெக்கெயின் போட்ட சொக்குப்பிடியோ…

சுதந்திர கட்சியினர் வழுக்கி விழுந்தார்கள். சர்ச்சைக்குரிய அனேகரை ஒத்துக் கொண்டு, ஒரிருவரை மட்டும் ஃபிலிபஸ்டர் போட்டு தாற்காலிகமாக நிறுத்தி வைக்க ‘டீல்’ போட்டு சமாதானமடைந்து விட்டார்கள்.

சாம, தான, பேதம் எல்லாம் சரிப்படாது. குடியரசு (கட்சி)க்காரர்களுக்கு இன்றும், என்றும் ‘தண்டம்’ மட்டுமே காரியங்களை சாதிக்க வைக்கிறது.

‘அந்தரங்கம்’ தீபா அறிமுகமான படம். ‘வளரும் பயிர்…’ என்பது போல் முதல் படத்திலேயே தாராளமாக நடித்திருக்கிறார். அந்தக்கால இளைய தளபதி ‘கமல்‘தான் ஹீரோ. விஜய் போலவே நன்றாக ஜொள்ளியிருந்தார். முழுப்படமும் பார்ப்பதற்கு பொறுமையில்லை.

டிஜிடல் வீடியோ ரெகார்டர் என்பது செல்பேசிக்கு அடுத்த முக்கிய பதார்த்தமாகப் படுகிறது. வேண்டுகிற நிகழ்ச்சிகளை வேண்டுகிறபோது பார்க்கவைக்கிறது. பின்னிரவு பத்து மணிக்கு ‘வணக்கம் தமிழகம்’ சொல்ல வைக்க முடிகிறது.

Categories: Uncategorized