Archive

Archive for July 7, 2005

War of the Worlds

July 7, 2005 2 comments

முன்குறிப்பு: The War of the Worlds by H. G. Wells Project Gutenberg-இல் கிடைக்கீறது.

Tamiloviam ::

சாலையில் எரியும் மெர்க்குரி விளக்கைப் பார்த்து பயந்து இருக்கிறீர்களா? நகரத்தின் ஒளி வெள்ளத்தை மீறி வானத்தில் தெரியும் சனி, வெள்ளி போன்ற நட்சத்திரங்களைப் பார்த்து பயந்ததுண்டா? War of the Worlds பார்த்தபிறகு பயம் வரலாம். எனக்கு வந்தது.

தமிழில் பிரும்மாண்டத்துக்கு பெயர் போனவர் சங்கர் என்றால் பிரும்மாண்டத்திக்கு பெயர் போன் ஹாலிவுட்டிலேயே ராட்சத டைனோசார் பட்ஜெட் போட்டு பிலிம் காட்டுபவர் ஸ்பீல்பெர்க். ‘மைனாரிட்டி ரிப்போர்ட்’டுக்குப் பிறகு ஒரு திருடனின் கதை (Catch Me If You Can), விமானப் பயணியின் கதை (The Terminal) என்று நகைச்சுவையோடு சிந்திக்க வைத்த பிறகு, மீண்டும் அறிவியல் புனைகதைக்கு டாம் க்ரூய்ஸுடன் கைகோர்த்திருக்கிறார்.

முன்னாள் கணவன் டாம் க்ரூயிஸிடம், மகனையும் மகளையும் வாரயிறுதிக்கு விட்டுச் செல்கிறார், விவாகரத்தான மனைவி. எண்பதுகளுக்கு முந்தைய இந்திய கணவர்களுக்கு மருந்துக்கும் பொறுப்பிருக்காது. குழந்தைகளின் விருப்பு, சமையல் கலை போன்றவற்றில் நாட்டமும் இருக்காது. டாம் க்ரூய்ஸ¤ம் அவ்வாறே.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இடி மின்னல் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தன் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக ஓடும் தந்தையின் கதைதான் ‘வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்‘.

ஒவ்வொரு காட்சியிலும் ஏமாற்றாத பிரும்மாண்டம். அரள வைக்கும் பிரமிப்புகள். ஈராக் போர், 9/11 வர்த்தக மையம், போன்ற உண்மை சம்பவங்களின் கோரம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை மிரட்சியுடன் சினிமாஸ்கோப்படுத்தி இருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

வேற்றுகிரகவாசிகள் எப்படி பாதாள லோகத்துக்குள் சென்றார்கள் என்பதையும் போகிற போக்கில் காட்டுகிறார்கள். மின்-காந்த ஈர்ப்பு சக்திகள், இடி மின்னல் மேக மூட்டத்திற்கான காரணம் ஆகியவற்றையும் சுருக்கமாக ஊடகச் செய்திகளின் மூலம் விளக்குகிறார்கள். சைன்ஸ் ·பிக்ஷனாக இப்படம் இருந்தாலும், இவ்வித அறிவியல் புனைவுகளை விட தந்தையின் உணர்வுகளைப் படம் பிடிப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

வீட்டிற்கு வெளியே போயிங் 747 நொறுங்கிக் கிடக்கும் காட்சி மட்டுமே ‘கலை’ இயக்குநரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. ஓய்வு கொடுக்கப்பட்ட நிஜ விமானத்தை வாங்கி, உதிரிகளாகக் கழற்றி, லாஸ் ஏஞ்சலீஸ் அருகே பரப்பி, அவற்றின் நடுவே மிச்ச மீதி இடிபாடு வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். கொல்லைப்புறத்தில் நிஜ விமானம் எப்படி விபத்துக்குண்டாகியிருக்குமோ, அப்படியே அச்சு அசலாக அதிர வைக்கிறது.

‘மைனாரிட்டி ரிபோர்ட்’டில் குட்டியாக ஓடி வந்து, மனிதரின் கண்களை சோதித்துச் சென்ற எட்டுக்கால் பூச்சிகள், இங்கு மூன்றே கால்களுடன் டி.ரெக்ஸ் டைனோசார் போல் பிருமாண்ட வாகனமாக மாறியிருக்கிறது. முதன் முதலாக பாதாளத்திலிருந்து மூன்று கால் ராட்சதன் வெளிவரும் காட்சி உண்டாக்கும் திகில், கடைசிக் காட்சி வரை தொடர்கிறது.

க்ளைமாக்ஸில் ரகுவரன் திருந்தி போலீஸிடம் சரணடைவது போலவே அனைத்து அண்டை அயல் வாகனங்களும் ஏலியன்களும் வீழ்ந்து, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புவது ‘சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா’ என்றெண்ண வைக்கிறது. ஒரிஜினல் எச். ஜி. வெல்ஸ் (H.G. Wells) 1898-இல் எழுதப்பட்ட கதையும் இவ்வாறே முடிந்திருக்கிறது. எல்லோரின் கார்களும் ஓடாமல் நிற்கும்போது டாம் க்ரூய்ஸ் மட்டும் பாய்ந்து பாய்ந்து வண்டியோட்டுவது, க்வார்ஸ் கடிகாரம் உட்பட அனைத்து மின்னணுச் சாதனங்களும் செயலிழக்கும்போது, ஏதோவொரு பிரகிருதி மட்டும் கேம்கார்டரில் வேற்று கிரக வருகையைப் படம் பிடிப்பது என்று சினிமாத்தனங்கள் படத்தில் நிறையத் தென்படலாம்.

எனினும், அந்நியர்களின் அகலவீச்சை ரத்தம் ஒரே நிறமாக, கண்ணுக்கெட்டிய புல்வெளி, காடு வரை சிவப்பாக்குவது நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகிறது. மகளுக்காக எவ்வித காரியத்தையும் செய்யும் தந்தையாக டாம் க்ரூய்ஸ் கலக்கியிருக்கிறார். மனைவி இல்லாத வீட்டில் பழசாகிப் போன பால், உணவு மேஜையின் மேல் மோட்டார் என்ஜின், ஃப்ரிட்ஜுக்குள் உணவு எதுவும் இல்லாமல் வித விதமான கெட்சப் மட்டும் நிறைந்திருத்தல் போன்றவற்றை அலட்சியமாக காட்டுவதிலாகட்டும்; ஆரம்பத்தில் பளபளாவென்று இருக்கும் தோல் ஜாக்கெட், மெதுவாக அழுக்காகி நிறம் மாறுவதில் ஆரம்பித்து சின்ன சின்ன அரங்கப் பொருட்களிலும் அக்கறை தெரிகிறது.

ஈ.டி.யில் கூட அந்நிய கிரகவாசிகளை சாதாரண பாவனைகளுடன் காட்டாதவர், இந்த மாதிரி அச்சுறுத்தும் செய்கைகளைச் செய்பவர்களை திரையில் உலவ விடுவது முதலையையும் பாம்பையும் கரப்பான்பூச்சியையும் பார்த்து மிதித்த அருவருப்பைக் கொடுக்கிறது. ஏதாவதொரு படத்திலாவது விக்ரம் போன்ற புன்னகையுடனும் சூப்பர் ஸ்டார் போன்ற ஸ்டைலுடனும் ஏலியன்கள் உலா வந்து வில்லத்தனம் செய்யவேண்டும்.

ஜார்ஜ் புஷ் ஆதரவாளர்களைக் கூட படத்தில் கிண்டலடிக்கிறார். கையில் ஓட்டைத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வீட்டுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு, அனைத்து அன்னியர்களையும் கொன்றுவிடலாம் என்று டயலாக் விடும் டிம் ராபின்ஸன், சில குடியரசு கட்சி ஆதரவாளர்களை நினைவு கூற வைக்கிறார். டாம் க்ரூயிஸின் மகளாக வரும் டகோடா ஃபானிங், கண்சிமிட்டாமல் கத்தி கத்தியே நமது வயிற்றிலும் புளியோதரையைப் பிசைகிறார்.

மூன்று பேருக்கு நிகழ்வதை முக்கியப்படுத்துவதால் படத்துடன் எளிதில் ஒன்றமுடிகிறது. பயப்படவும் வைக்கிறது. வெறுமனே சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் ‘இண்டிபெண்டன்ஸ் டே’ போல் மனதில் பதியாமல் போகும். அதீத அழிவுகளும் தோல்வியும் காண்பித்தால் ‘ஏ.ஐ.’ போல் வெகுஜனமக்களிடம் செல்லாமல் போய்விடும். அப்பா செண்டிமெண்ட்டை மையப்படுத்தி சாதாரண குடிமகனின் இயலாமையைக் கொண்டு அந்நியர் வருகையைக் காட்சிபடுத்தி அசத்தியிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

Categories: Uncategorized

இந்தியாவும் வான்புலிகளும்

July 7, 2005 22 comments

முன்குறிப்பு: Guardian Unlimited | World Latest | Terror Attacks Near 3,200 in 2004 Count: செப். பதினொன்றுக்கு முன்பெல்லாம் அமெரிக்காவை பொறுத்தவரை தீவிரவாத நிகழ்வு என்றால் அயல்நாட்டவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். பத்தாயிரம் டாலருக்கு மேல் பொருட்சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும். தற்போது தராசு மாறியிருக்கிறது. அரசாங்கத்தைத் தாக்கும் எந்த சம்பவமும் தீவீரவாதமாகக் கருதப்படுகிறது. கடந்த வருடத்தில் 3,192 பயங்கரவாத நிகழ்வுகளில் 28,433 பேர்கள் இறந்தோ, காயமடைந்தோ (கை/கால் இழப்பு?), கடத்தப்பட்டோ இருக்கிறார்கள்.

இலங்கையில் தீவிரவாதம் குறித்த தகவல்கள் அறிய இந்தத் தளம் பயன்பட்டது.

Tamiloviam ::

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.

ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.

ரஷியா அடக்கி வாசிக்கும் இன்றைய பூகோள அரசியலில் சீனாதான் அமெரிக்காவுடன் மல்லுக்கு நிற்கிறது. அமெரிக்க-ரஷிய பனிப் போர் முடிந்தவுடன் ஆயுதங்களின் அணிவகுப்பும் அணு ஆயுதங்களும் குறையும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். பணவீக்கம் ஏற்படும்போதெல்லாம் யுத்தங்களின் மூலம் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக் என்று சண்டைக்குப் போனது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற புதியவர்களும் அணு ஆயுத சக்தியுள்ள நாடுகளாக மாறினார்கள். பாதுகாப்புத் துறைக்காக உலக நாடுகள் வருடத்திற்கு நூறாயிரம் கோடி (1 ட்ரில்லியன்) டாலர்களை செலவழிக்கிறார்கள். இதில் வளரும் நாடுகள் மூன்றில் இரண்டு பங்கை வாங்குகிறார்கள்.

உதாரணமாக, தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.

இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக ‘ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய‘த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, ‘வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது’ எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.

தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர ஆயிரம் கி.மீ., 600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.

ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ ஆரம்பம் முதலே இந்திய – இலங்கை ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து வருகிறார். பா.ம.க. ராமதாஸ¤ம் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார். கம்யூனிஸ்ட்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள். இலங்கை விவகாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பட்டும்படாமலும் தி.மு.க. இருந்து வந்திருக்கிறது. கூட்டணியின் மற்ற கட்சிகள் சொல்வதைக் கேட்டு, ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிராகக் கருத்து சொன்னால், அது மத்தியில் ஆளும் காங்கிரஸை எதிர்ப்பது போல் ஆகிவிடுமே என்று தி.மு.க. தலைமை யோசிக்கிறதாக ஜூனியர் விகடன் கழுகு எழுதுகிறது.

விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.

1982-ஆம் ஆண்டில் இருந்து 2002-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய மரணத்தை சந்தித்த புலிகளின் விபரம்:

ஆண்கள் பெண்கள்
போராளிகள் 13,612 3,767

தரைக்கரும்புலிகள் 59 18

கடற்கரும்புலிகள் 117 46

இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் உள்ள இரணமடு கிராமத்தில் வான்புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே சோதனையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏவுகணைகளில், பிருத்வி மட்டுமே தற்போது இரணமடுவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். திருச்சியில் இருந்து இருபது நிமிட தூரத்தில் இரணமடு அமைந்திருக்கிறது. இதனால் ‘சூர்யா’ ஏவுகணைகளையும் இராணுவம் பயன்படுத்த ஆரம்பிப்பது பாதுகாப்பிற்கு வலு சேர்க்கலாம்.

நேபாளத்தில் நீடிக்கும் குழப்பம், பாகிஸ்தானுடன் சேற்றிலொரு கால் பேச்சுவார்த்தைகள், சீனாவுடன் நேசக்கரம், மியான்மரை கண்டும் காணாமல் விட்டிருத்தல், பங்களாதேஷ் ஊடுருவல் போன்ற இன்றைய புவியியல் அரசியலில் இலங்கையையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது இந்தியாவுக்கு மிகவும் அத்தியாவசியமான நிலை. கல்பாக்கம் போன்ற அணு நிலையங்களிலோ அல்லது கேரளா/தமிழ்நாட்டின் முக்கிய இடங்களையோ விடுதலைப் புலிகளிடம் பிணையாகக் கொடுத்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது.

விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து:

“இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115”.