Home
> Uncategorized > உண்மை அன்பு
உண்மை அன்பு
இசைஞானி இளையராஜா ::
எந்த ஒரு பொருளுக்கும்
தீங்கு செய்யாதிருப்பது அன்பு
நாம் ஒன்றின் மீது அன்பு கொள்ளும்பொழுது
நாம் கவனம் செலுத்தும் அந்தப் பொருளும் நாமும்
அதனால் துன்பத்தை அனுபவிக்கிறோம்
இரண்டு உயிர்களுக்குத் துன்பத்தை (தீங்கை)
விளைவிக்கக் கூடிய செயலை ‘அன்பு’ என்று
எப்படிச் சொல்ல முடியும்?
எந்த ஒரு விளைவையும்
ஏற்ப்டுத்தாத செயலே அன்பு!
லைலா மஜ்னுவை விரும்பினாள்.
மஜ்னு லைலாவை விரும்பினான்.
தனிப்பட்ட இருவரின் விருப்பம் (நமது)
உண்மை ‘அன்பு’க்கு உதாரணம் அன்று!
அது நமக்கு எந்த விதத்திலும் உதவாது.
அன்புக்கு விளக்கமாக இதுபோன்ற
உதாரணங்களைச் சொல்வதால்தான் –
அது என்ன என்று அறிய முயலும்
முயற்சியைக் கூட நாம் கைவிட்டுவிட்டோம்!
யாருக்கு யார் எழுதுவது – இசைஞானி இளையராஜா :: கவிதா (ரூ. 250/-)
Categories: Uncategorized
bala i never knew that you can dance so well . put the smiley in the right place
என்னைப்பா நான் (அல்லது என்னோட பேர்) ஒழுங்கா இருக்கிறது பிடிக்கலியா!? ஏதோ போலி அன்பு இருக்கிற மாதிரி – உண்மை அன்புன்னு ஒரு பதிவு போடறீங்க:)
250 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிறீங்க… பரவால்ல அதுக்கோசரம் இன்ன ரெண்டு பதிவு கூட போட்டுக்கோ சாமி…
ரவி,
நீருயிரிக்காட்சியகத்தில் ஜெல்லி (Jelly) மீன் நேற்று என்னைப் பார்த்தது.
நான் 95 சதவீதம் தண்ணீரினால் நிரம்பியிருக்கிறேன். நீயோ 95% ‘தண்ணி’ நிரப்புகிறாயே?
எனக்கு எலும்பு கிடையாது. கல்யாணத்திற்குப் பின் ஆண்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா?
எனக்கு மூளை கிடையாது. உனக்குக் கூட அப்படித்தான் என்று இணையத்தில் சாடுகிறார்களே 😉
இதயத்தை குறித்து என்ன நினைக்கிறாய் என்றெல்லாம் தன்னிடம் இல்லாத கண்ணைக் கொண்டு பார்த்து கேட்டது போல் தோன்றியது… :->
அன்பு,
நினைத்தேன்… நீங்க வருவீங்கன்னு. இன்னும் இரண்டு என்ன; நாலைந்து போட்டு விடலாம்.