WSJ.com – Cybersecurity’s New Challenges ::
எரிதங்கள் அதிகரிப்பதற்கும் பிளவர்கள் பெருகியதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
கல்லூரி மாணவர்கள்தான் முன்பு கொந்தர்களாக ஆக்கபூர்வமாக கணினிகளை ஊடுருவினார்கள். இன்றோ கன்னக்கோல் வைக்கும் பிளவர்கள் நிறுவனங்களைக் குறி வைக்கிறார்கள்.
உன்னத நோக்கம் கொண்டு ராபின்ஹுட் போல் கருதப்பட்ட கொந்தர்கள் இப்போது பரிநிரலிகளை எழுதுகிறார்கள். சட்டவிரோதமாக பணத்தைக் கொள்ளையடிக்கும் பிளவர்கள் பெருகிவரும் காலம் இது.
ப்ளாக்மெயில் பிளவர்கள் பிறருடைய மின்மடல்களைப் படிப்பது எளிதாகி இருக்கிறது. சொந்தக் கணினி பாதுகாப்பில்லாமல் இருப்பதுதான் முதற் காரணம். யாஹூ/ஹாட்மெயில் போன்ற வழங்கிகளிடமிருந்தேப் படிப்பதும் சாத்தியம். அங்கிருந்து உங்களைச் சென்றடையும் வழியில் படிப்பது மூன்றாவது வழி.
என்னதான் தங்கள் கணினியைப் பாதுகாக்க முடிந்தாலும், மொத்த தொழில் நுட்ப உலகத்தையும் பாதுகாப்பது இயலாத காரியம். எளிதில் ஊகிக்கக் கூடிய கடவுச் சொற்கள், தவறுதலாக எங்கோ சுட்டி வலைக்கள்ளர்களிடம் மாட்டிக் கொள்ளுதல் போன்ற மனித இயல்புகள் இருக்கும்வரை பிளவர்கள் பிழைத்து வருவார்கள்.
முழு செவ்வியும் கேட்க: எம் பி 3
Recent Comments