Home
> Uncategorized > அகப்பாடு பத்து
அகப்பாடு பத்து
Avoid blogs, they are endless ego (அகப்பாடு) trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.
– Sujatha
எனக்குப் பிடித்த தலை பத்து வலைப்பதிவுகள் இவை. இவற்றை பட்டியலிடுவதற்கு சில குறிவைகளை (criteria) வைத்துக் கொண்டேன்.
10. மாலன்
9. பெயரிலி
8. பிச்சைப்பாத்திரம்
7. சிக்கல்
6. பிகேஎஸ்
5. பெட்டை
4. எண்ணங்கள்
3. கண்ணோட்டம்
2. உருப்படாதது
1. போட்டுத் தாக்கு
பொதிவாக (+ve) பிடித்தது மட்டும் குறித்து வைக்காமல், எதிர்மறை எண்ணங்களுக்காக படிக்கும் பத்து. இவற்றை பட்டியலிடுவதற்கும் சில குறிவைகளை வைத்துக் கொண்டேன்.
10. வெங்கட்
9. அனாதை
8. அண்டை அயல்
7. காஞ்சி பிலிம்ஸ்
6. அபிதாசரண்
5. கோயிஞ்சாமி
4. இட்லி வடை
3. முகமூடி
2. நேசகுமார்
1. ரோசா வசந்த்
Categories: Uncategorized
அய்யோ பாலா, போட்டுத் தாக்கு பக்கத்துல 1 ஐ பார்த்த உடனே மூர்ச்சையாகிவிட்டேன். ஸ்கூல்லேயும் காலேஜ்லேயும் பாடங்களில் வாங்கும் அதிகபட்ச மார்க் 1 (ஆனா ரேங்க் இல்லை). அதே 1 என் வலைப்பதிவுக்குமா? புல்லரிக்குதுண்ணே!!
அப்படியே பிரைஸ் கிரைஸ் ஏதாச்சி உண்டாங்கண்ணா?
உங்களுக்குப் பிடிச்ச சன் டி.வி. சீரியலில் மெஹா ஹிட் ‘கோலங்கள்’ சீரியல் இல்லை.. அதை சுட்டிக்காட்டியவுடன் ‘அது அதையும் தாண்டி புனிதமானது’ அப்படீன்னு கமெண்ட் அடிச்சீங்க.. அதே போல மேலே முதலில் சொன்ன பத்து (மாலன்….. போட்டுத்தாக்கு வரிசையில்) எல்லாவற்றையும் தாண்டி புனிதமான தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 மெஹா ஹிட் வலைப்பூ ஒன்றை மறந்திட்டீங்களே சார்..!
வாயில் விரல் போடுவதை விடாத மாதிரியே இன்னும் பள்ளி மதிப்பெண்களை மறக்காமல் இருக்கிறீர்கள். (படம் பார்த்தேன் (yummy ;-)) போஸ்டர் பார்த்தேன்… மன்னன் ஸ்டைலில் ஒண்ணு பெருசா, ரெண்டு பெரிதா என்று வழுக்கி விட யாராவது வராவிட்டால் சரிதான்.
>>புனிதமான தமிழ் வலைப்பூக்களில்
ஐ… இப்படியும் ஒரு லிஸ்ட் போடலாம் போல் இருக்கிறதே :-)) ஐடியாத்தானுக்கு நன்றி.
Biased analysis. Better blogs like Desikan, Sundara vadivel, Mathy should have replaced some useless blogs.
————-
* இவற்றில் சில மசாலாப் படங்கள் போல; பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்; விசிஆரை அணைத்த பிறகு மனதில் தங்காது.
* சிற்றிலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரியலாம்.
*அதிர்ச்சியூட்டும்நடைகொண்டிருக்கலாம்;
* விபரீதப் புரிதல்களை உணர்த்தலாம்.
* பதிவுகள் நாலு கிலோபைட்டைத் தாண்டி continuous partial attention தோன்றலாம்.
————-
மேற்கண்ட நாலு கேடகரியில், கோயிஞ்சாமி எந்த வகையில் அடங்குவார் என்று சொல்லியே ஆகவேண்டும்.
கோயிஞ்சாமிக்குத் தெரியாதா தாங்கள் எந்த வகையென்று (என்று ஜூட்டு விடுகிறேன்)
சைட் ல என்ன உங்க ரீசன்ட் போட்டோவா? 🙂
ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் என்று நடந்தபோது portrait வரைந்துவிட்டார்கள் ;;-)
venkat in post -veil serthatarkaga vanmayaga kandikkiren
மேலயோ கீழயோ, பத்துல ஒன்னுன்னு பெருமப்படறதா, இல்ல நம்ம பதிவுக்கு மசாலா தடவிட்டாங்களேன்னு வருத்தப்படறதான்னு முகமூடிய தவிர மத்தவங்க எல்லாரும் வருத்தப்படறாங்களாம்…
முகமூடி ஏன் வருத்தப்படலைன்னு கேக்கறீங்களா ::
// இவற்றில் சில மசாலாப் படங்கள் போல; பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்; விசிஆரை அணைத்த பிறகு மனதில் தங்காது // என்னோட முதல் பதிவு மஞ்ச மாக்கானும் பூதங்களும் பதிவையே தொலைபேசி, மின்னஞ்சல், நத்தை அஞ்சல் முதல் சகல வழிகளிலும் இன்னமும் வாசகர்கள் பாராட்டிகிட்டே இருக்காங்க…
// சிற்றிலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரியலாம் // சிறந்த தொப்பை காவலருக்கு பரிசு பதிவுக்கு எளிமையான வலைப்பதிவு பரிசு கிடைச்சத மறந்துட்டீங்களா
// அதிர்ச்சியூட்டும் நடை கொண்டிருக்கலாம்; விபரீதப் புரிதல்களை உணர்த்தலாம். // எளிமையான கருத்து, நேர்மையான நடை, தெளிவான படம்னு இருக்கற நாய், சிறுத்தை மற்றும் குரங்கு பதிவ படிச்சும் இப்படி சொல்ல எப்படி மனசு வருது உங்களுக்கு
// பதிவுகள் நாலு கிலோபைட்டைத் தாண்டி continuous partial attention தோன்றலாம் // இந்த கருத்து புரியர அளவு இப்ப தெம்பில்ல… இருந்தாலும் இது பொய்னு நிரூபிக்க என் முகமூடிக்கு பின் பதிவு ஒன்னு போதுமே…
எப்படியோ வந்த வேலை முடிஞ்சிது… இது மாதிரி பல க்ளாசிபிகேஷன்ஸ் போட்டு நம்ம பதிவ குறிப்பிடுங்க… என் முன் அனுமதி எதுவும் தேவை இல்ல…
அப்புறம் சொல்ல மறந்துட்டனே…
இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்…
முகமூடி,
ரொம்ப ஜெயா/சன் பார்க்காதீர். பாயிண்ட் பை பாயிண்ட் மறுப்பறிக்கை அப்படியே அரசியல் செய்தி மாதிரி இருக்கிறது 😉