மரத்தடி ::
“வயது என்னை ஆண்டுக்கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம் இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று நானொரு தேர்ந்த பொறுக்கியாகிவிடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. ‘டெய்ஸி வளர்மதி’ என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன்”
“சற்றே தாமதித்தேன். அது கவித்துவம் நிரம்பிய அபத்த கணம்”
“பதிலற்று இருக்கும் வரையில் தான் கேள்விகளுக்கு உயிர். கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் தத்துவங்களின் சூட்சுமம்”
“சட்டைப் பையில் ஒரு அணில் குஞ்சை விட்டுக்கொண்டாற் போல் மனத்தில் ஒரு கனவை உலவ விட்டு வாழ்க்கை நடத்துவது எத்தனை குறுகுறுப்பைத் தருகிறது!”
“என் ஞாபக அடுக்குகளில் இருபது வருடத்துக்கான பழைமைச் சுவடுகள் ஏதுமின்றி, இன்று காலை சந்தித்தவர் போல், பார்த்ததுமே அத்தனை நரம்புகளையும் தட்டியெழுப்பிவிட வல்லவராயிருந்தார்.”
குதிரைகளின் கதை – பா ராகவன்
Like this:
Like Loading...
Related
Recent Comments