Home > Uncategorized > சுஜாதா

சுஜாதா


என் இனிய இயந்திரா ::

  • ‘ஜீவாவுக்குப் பகிரங்கக் கடிதம்!

    பொய் வியாபாரியே! வயதானவர்களைக் கொல்ல உனக்கு என்ன உரிமை? தப்பிப் போன கருக்களைக் கலைக்க என்ன உரிமை? அருமையான நூல்களைத் தடை செய்ய என்ன உரிமை? பாட்டையும் கூத்தையும் பண்பாட்டையும் நீக்க உனக்கு என்ன உரிமை? பதில் சொல். உலுத்தனே, டிசம்பர் மூன்று ஞாபகம் இருக்கட்டும்.’

    இவண்,
    ம.தி.க.
    (மக்களாட்சி திரும்ப வரும் கழகம்)

  • “ஃப்ரமோன் அனலைஸர் என்று ஒன்று இருக்கிறது. அது சுமாராக வேலை செய்கிறது!” ஜீனோ மூக்கை மூக்கை உறிஞ்சியது. “என் டிஸைனிலேயே ரொம்ப ‘வீக்’ மூக்குதான். அப்படியிருந்தும் மற்றொரு மிஷினை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த ஆள் ஒரு ஃப்ராடு! இது மனிதனே இல்லை.”
  • “கவலைப் படாதே. ஜீவா கவனித்து விட்டார். ஜீவா நமக்கெல்லாம் பெருந்தலைவர். அவர் கருணையுள்ளவர். அன்புள்ளவர். திறமையுள்ளவர்… ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு ஒன்றே… ஜீவா வாழ்க!”
  • “ஜீவா ஜீவா ஜீவாதாரம் ஜீவனோபாயம் ஜீவாத்மா” என்றது ஜீனோ.
  • ‘ஜேவ்’ மனிதர்களும் ரோபாட்டுகளும் விளையாடும் ஆட்டம். ‘ ஜேவ்’ என்கிற ஒரு ரோபாட் இயங்கும். அதை மனித கட்சிக்காரர்கள் பிடிக்க வேண்டும். பிடித்துக் கொல்ல வேண்டும். ரோபாட் மிகத் திறமையாக ஓடும். அது யாரையும் எதிர்க்கது. யாருக்கும் துன்பம் கிடையாது. முட்டாது, மோதாது. மைதானத்தின் எல்லையை மீறாது. அதைப் பிடிக்க வேண்டும், அவ்வளவுதான். ஜேவ் ஆடுவதற்கு, பிடிப்போன் – எடுப்போன் – அடிப்போன் என்று தனித் தனி விபாகங்கள் உண்டு. கடைசியில் ரோபாட்டைக் கொல்கிறவனுக்கு வெற்றிச் செல்வன் (வெ.செ.) என்கிற பட்டம் ஜீவாவே கொடுப்பார்.
  • “இன்று, இந்தக் கணத்தில், நான் உங்களுக்குத் தகுதியில்லாத தலைவன் என்று சொல்லுங்கள். உடனே விலகுகிறேன். இன்று இந்தக் கணத்தில் நான் உங்களுக்குத் தீங்கிழைத்து விட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் மார்பைப் பிளந்து கொள்கிறேன். இன்று, இக்கணத்தில் நான் உங்களைக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று சொல்லுங்கள். இதோ, என் காவலனின் லேசர் என்னைத் துளைக்கட்டும்…” – ஜீவா அந்த ஆயுதத்தை வாங்கித் தன் மார்பில் குறி வைத்துக் கொண்டு, “சொல்லுங்கள், நான் தகுதியில்லாதவனா?”

    “இல்லை… இல்லை” என்றன லட்சம் தொண்டைகள்.

  • “உங்கள் எல்லோரையும் ஆண்டது, ஆள்வது ஒரு புகை, ஒரு மாயத்தோற்றம் – ஜீவா!”
  • “இருங்கள்… இருங்கள். முழு உண்மையையும் சொல்லித் தீர்க்கிறேன்” என்று நிலா கதறினாள். “இவள்தான் நம் புதிய தலைவி!” என்ற கூட்டத்தினர், அவளை கவனிக்க விருப்பமின்றி ஆகாயத்தில் வீசப்பட்டாள். கீழே விழுவதற்கு முன் பந்தாகப் பிடிக்கப்பட்டாள்.
  • ‘யார் புரட்சிக்காரர், யார் சர்வாதிகாரி! யார் விடுதலை செய்கிறவர்கள்? யார் விடுவிக்கப் பட்டவர்கள்…? சற்றுமுன் ஜீவாவுக்காகக் கொடி அசைத்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்? ஜீவாவை சதிசெய்து கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் எங்கள் மூவரையும் இப்போது உயர்த்துகிறார்கள். இந்த ரவியும் மனோவும் யார்? இவர்கள்தான் சூத்திரதாரிகளா? இல்லை பிண்ணணியில் இதைவிட மகத்தான பொய் முக வடிவங்களா? ஒன்றுமே புரியவில்லையே!’
  • “அந்த நாய் சற்று அபாயகரமான நாய்! சொல்லிக் கொடுத்ததுக்கு மேலாகச் சிந்திக்கத் துவங்கிவிட்டது.”
    “நீ கற்றுக் கொடுத்ததுதான் ரவி.”

  • “என் கண்ணுக்கு முன்னால் வேண்டாம்! தயவு செய்து வேறு எங்கேயாவது கூட்டிப் போய் அதைக் கொல்லி. என் இனிய இயந்திர நண்பன் அது!”
    “ஒரு இயந்திரத்தின் மேல் ஏன் இத்தனை பாசம் என்று தெரியவில்லை.”

  • ‘எத்தனை பெரிய சக்தி இவர்கள்! விஞ்ஞானம், டெக்னாலஜி, பிம்பங்கள், குரல்கள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒருத்தியின் உண்மையான வடிவத்தை முழுவதும் கலைத்துவிட்டு, வேறு குணாதிசயங்களை ஒட்ட வைக்கும் இந்த மகத்தான சக்தியை எப்படி எதிர்ப்பேன்?’
  • “இதை ஏமாற்று என்று சொல்வது தப்பு. நீ மக்கியாவெல்லி படித்திருக்கிறாயா, இல்லை நீட்ஷே?” என்று கேட்டான் ரவி.
  • “சுதந்திரம் என்பதற்கே அர்த்தம் இல்லை. உன்னை சுதந்திரமானவள் என்று சொல்லிக் கொள்கிறாய். உன் புதிய சிந்தனை என்ன என்றுதான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எதிலிருந்து சுதந்திரம் என்பதைவிட எதற்காக சுதந்திரம் என்றுதான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்!”

    இன்று காலை பாஸ்டன் செல்லும் ரயிலில் திடீர் சோதனை. மோப்பம் பிடித்துக் கொண்டே நாய்கள் வந்தது. வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு நாயைத் தவிர சிறந்த சாதனம் வேறு எதுவும் இல்லை. முஸ்லீமாக இருந்தால் தீவிர சோதனை; பாதிரியாருக்கு பாதி சோதனை என்று செய்யத் தெரியாது. பைரவரைக் கொண்டே எல்லா இடத்திலும் பாதுகாவல் புரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தபோது. ‘என் இனிய இயந்திரா’/’மீண்டும் ஜீனோ’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!

    தமிழ் | Tamil | அறிவியல்

  • Categories: Uncategorized
    1. JVC
      July 28, 2005 at 10:56 pm

      ungalin comment-kku nandri. “en iniya iyandira”-vin e-version net kidaikkiradhaa?

    2. July 29, 2005 at 4:26 am

      ‘என் இனிய இயந்திரா’ பல முறை படித்தாயிற்று. இருப்பினும் உங்கள் பதிவு முழுவதும் ரசித்துப் படித்தேன். இத்தனை கவர்ச்சியாய் எழுதுவதற்கு இன்னொருத்தார் இனிமேல் தான் வர வேண்டும்.

      நன்றி.

    3. July 29, 2005 at 10:35 am

      JVC – Not sure… check Sulekha?

      ஒவ்வொரு முறைப் படிக்கும்போதும் ஒவ்வொரு புரிதல் தரும் என்பார்களே… நேற்று புரட்டிக் கொண்டிருந்தபோது, அந்த மாதிரி இருந்தது. நன்றி ஸ்ரீகாந்த்

    1. No trackbacks yet.

    Leave a Reply

    Fill in your details below or click an icon to log in:

    WordPress.com Logo

    You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

    Facebook photo

    You are commenting using your Facebook account. Log Out /  Change )

    Connecting to %s

    %d bloggers like this: