Home > Uncategorized > பாவண்ணன்

பாவண்ணன்


Thanks AnyIndian.comமுந்தாநாள் ‘வணக்கம் தமிழக’த்தில் பாவண்ணன் வந்திருந்தார். பாவண்ணனோடு என்னுடைய பழக்கம் என்பது, தொடர்ந்து திண்ணையில் வாசித்தது, கொஞ்சம் ஆங்காங்கே புத்தகங்கள் படித்ததது மட்டும்தான். இருந்தாலும் நீண்ட நாள் பழகியவரை பார்ப்பது போல்தான் இருந்தது. பேச்சுத் தமிழில் இயல்பான உரையாடலில் அவர் மொழிபெயர்க்கும் கன்னடமும், எனக்கு ஆங்காங்கே வந்துவிழும் ஆங்கிலமும் ஒரு சொல் கூட விழாமல் பதிலளித்தார்.

எழுத்தாளர்களை சந்திக்க செல்லுதல் விபரீதமான நிகழ்வு. வேலைக்கு சேர்ந்திருந்த இளவயதுகளில் மாதாமாதம் மிச்சம் பிடித்து, டிக்கெட் எடுத்து, சிவராம் கரந்த்தை நேரில் பார்க்க செல்கிறார்.

‘மாக்கோலம் போடுவதற்கு அவள் வரவில்லையே…
அவள் கோலம் காண்பதற்கு வழியில்லையே’

என்று ஏமாற்றம் அடையாமல், சாய்வு நாற்காலியில் நாளிதழ் படிப்பதை தூரக்க நின்று தரிசித்துவிட்டுத் திரும்பி விடுகிறார். ஏற்கனவே எங்கோ படித்த நினைவிருந்தாலும், அவர் வாயால் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரி காலத்தில் பாவண்ணன் ‘மண்ணும் மனிதரும்‘ படித்துவிட்டு பல காலத்துக்கு அதன் தாக்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்.

வாசிப்பனுபவத்திற்கு மரம், கனி, சுவைக்கு நிகர் என்றார். மரம் போன்ற புத்தகத்தின் நிழலை அணுக வேண்டும். கிட்டப் போனால்தான் கனி என்னும் அனுபவம் கிடைக்கும். நாவில் நிற்கும் தனிச்சுவையாக வாசகனின் மனத்தை அது சென்றடைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். பாவண்ணன் விவரிக்கும்போது சுவையாக இருந்தது.

படிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தவர், விபத்தாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். சரஸ்வதி ராம்நாத்தின் வற்புறுத்தலின் பேரில் கன்னட நாடகத்தை முதன்முதலில் மொழியாக்கம் செய்தார். தொடர்ந்து அவருடைய ஆதர்ச சிவராம் கரந்த், கன்னட நாடகங்கள் என்று சாகித்ய அகாடெமி கிடைத்திருக்கிறது.

ராஜாஜியின் வியாசர் விருந்தில் மஹாபாபாரதப் போர் மிகவும் நேர்த்தியாக சூட்சுமங்களையும் சூழ்ச்சிகளையும் வியூகங்களையும் குயுக்திகளையும் விவரிக்கும். பாவண்ணனுக்கு விருதைக் கொடுத்துள்ள ‘பர்வா‘வும் குருஷேத்திரப் போரை குறித்த படைப்பு. பெண் கதாபாத்திரங்களின் பார்வை மூலமே கதை சொல்லப் படுகிறது.

போர் தொடுக்கும்போது காரணங்கள் தேவையில்லை. சண்டை மூண்டபின்பே ‘ஏன்… எதற்கு’ என்பதெல்லாம் சமைக்கப் படுகிறது என்பது தற்காலத்துக்கும் (ஈராக்) பொருந்தும்வகையில் என்பதை நாவல் விவரிக்கிறது.


பாஸ்கரன் என்ற இயற்பெயருடைய இவர் பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல் திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்.

சிறுகதை தொகுப்பு
வேர்கள் தொலைவில் இருக்கின்றன
வெளிச்சம்
தொலைந்து போனவர்கள்

நாவல்
பாய்மரக் கப்பல்
வாழ்க்கை ஒரு விசாரணை

கவிதை தொகுப்பு
குழந்தையைப் பின் தொடரும் காலம்

1986ஆம் ஆண்டில் மிகச்சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றது இவரது “முள்” சிறுகதை. 1981-இல் புதுவை அரசு நடத்திய குறுங்காவியப் போட்டியில் பரிசு பெற்றார். இலக்கிய வீதியின் சிறுகதைப்பரிசு, கணையாழி இதழ் நடத்தும் தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டிப் பரிசு என்பவற்றைப் பெற்றுள்ளார். இவருடைய நாவல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது.

anyindian.com::

 • அக்னியும் மழையும்(க்ரீஷ்கர்னாட்)
 • அடுக்கு மாளிகை
 • ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் தொகுப்பு: பாவண்ணன்
 • ஆழத்தை அறியும் பயணம்
 • எட்டுத் திசையெங்கும் தேடி
 • எனக்குப் பிடித்த கதைகள்
 • எழுத்தென்னும் நிழலடியில்
 • ஏழு லட்சம் வரிகள்
 • ஏவாளின் இரண்டாவது முடிவு
 • ஒரு மனிதரும் சில வருஷங்களும்
 • கடலோர வீடு
 • தீராத பசி கொண்ட விலங்கு
 • நூறுசுற்றுக் கோட்டை
 • நேற்று வாழ்ந்தவர்கள்
 • பொம்மைக்கு இடம் வேண்டும் (குழந்தைக் கவிதைகள்)
 • வலை

  பாவண்ணனின் கதைகள் பற்றி ஜெயமோகன்
  [நன்றி: சதங்கை ஏப்-ஜுன் ’97]

  பாவண்ணனின் படைப்புலகின் முதல் சிறப்பு அதன் நேர்மையும் பாசாங்கின்மையும் ஆகும். வாழ்க்கையை முன்வைத்து படைத்தல் என்ற கடமையிலிருந்து இந்த பதினைந்து வருடக் காலத்தில் அவர் ஒரு முறைக்கூடப் பிறழ்ந்ததில்லை.

  தமிழிலக்கிய சூழலில் சீரிய படைப்பாளிகளிடம் கூட வணிக எழுத்தின் ஜாலங்களின் சாயம் ஒட்டியிருக்கும். குறிப்பாகக் கடைசித் தலைமுறைப் படைப்பாளிகளிடம். பாவண்ணனின் உண்மையுணர்வு கவசம் போல அவரைச் சூழ்ந்து அவர் படைப்புலகின் தனித்தன்மையைப் பாதுகாக்கிறது.

  பாவண்ணனுக்கு நன்றி கலந்த வணக்கம்


  | | | |

 • Categories: Uncategorized
  1. August 5, 2005 at 8:31 pm

   பாவண்ணன் குறித்த தகவல் அளித்தமைக்கு நன்றி.

  2. August 5, 2005 at 9:59 pm

   I have read’ pavaNNan’s enakkup pidiththa kathaikaL .. kathaiyOtu avar vaazvil nadantha sambavangaLai avar ezuthiyirukkum vitham padippathaRku suvaraSyimaaKa irukkum …

   I think pavaNNan is working in Bangalore only ..

   Thanks for this post …

   maravantu
   bangalore

  3. August 6, 2005 at 4:34 am

   பாவண்ணன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ‘சொத்தவிளை’ கடற்கரை நான் பிறந்து வளர்ந்த மண் .என்னுடைய வீட்டிலிருந்து நீங்கள் குறிப்பிட்ட கடற்கரை வெறும் 200 மீட்டர் தான் .சின்ன வயதில் தினமும் விளையாடிய இடம் .நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.

   -ஜோ

  4. August 6, 2005 at 9:10 pm

   –கடற்கரை நான் பிறந்து வளர்ந்த மண் —

   சமீபத்தில்தான் ‘தீராத பசி கொண்ட விலங்கு’ படித்தேன். புதுச்சேரி சுற்றுவட்டார மணம் வீசும் பதிவுகள். குறிப்பாக கடல் காற்று வீசத் தொடங்கும் அறிவியல் பின்புலத்தை, மணவாழ்வின் அடிநாதத்திற்கு முடிச்சுப் போடும் கட்டுரை ரொம்பப் பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். உங்களுக்கு மீண்டும் சொந்த ஊருக்கு சென்ற உணர்வு வரலாம்.

   —suvaraSyimaaKa irukkum —

   இதற்கு முன் இந்த மாதிரி நடையில் ‘திருக்குறள் கதைகள்’, சாலமன் பாப்பையா/புஷ்பவனம் போன்றவற்றையே பார்த்திருக்கிறேன். குறளோ, நீதி நெறி விளக்கமோ மனதில் நிற்பதற்காக கதை சொல்வார்கள். ஆனால், புனைகதைக்கு, நிகழ்கால நடப்பை ஒப்புமைப்படுத்தி – மனதில் நிறுத்திய ‘எனக்குப் பிடித்த கதைகள்’ உலக எழுத்தாளர்களையும், உள்ளூர் மாணிக்கங்களையும் ஒருசேர எனக்கு அறிமுகப்படுத்திய கட்டுரைகள்.

  5. August 9, 2005 at 7:52 am

   You have honoured a tamil writer properly. you need not have given the quotations of Jeyamohan. like this he can write a hell lot of words on hell a lot of writers

  6. August 9, 2005 at 8:11 am

   எஸ்.ராமகிருஷ்ணன் : பாவண்ணன், பெண்களின் அகவுலகச் சிக்கல்கள் குறித்துக் கூர்ந்த அக்கறை கொண்டவர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார்.

   அவரது ‘அடி’ என்ற கதை, புறக் கணிக்கப்பட்ட பெண்ணின் துயரக் குரலை வெளிப்படுத்துகிறது. பச்சை மரங்களில் விழுந்த வெட்டு போல, இக்கதை வாசகனின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடக் கூடியது. கதை, விலக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. திருமணமாகிச் சேர்ந்து வாழ்வதற்கு இஷ்டமில்லாமல் விலக்கி வைக்கப்பட்ட பெண் ஒருத்தி, தன் கணவனைத் திரும்பத் தேடி வருவதில் கதை துவங்குகிறது.

   திருமணமாகிச் சேர்ந்து வாழப் பிடிக்காமல், பெண்ணால் விலக்கி வைக்கப்பட்டவன் என்று ஏதாவது ஒரு ஆண் இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை! தங்கசாமி, ராதா இருவரும் சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு நாள் ராதா, ஏதோ வீட்டு வேலையில் இருந்தபோது, குழந்தை தவழ்ந்து போய், புழக்கடை கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறது. அந்தச் சம்பவம் ராதாவைச் சித்தம் கலங்கச் செய்துவிடுகிறது.

   ஆனால், தங்கசாமி சில மாதங்களில் யாவையும் மறந்து, குடும்பம் நடத்த முயல்கிறான். ராதாவால் அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. மேலும், குழந்தைச் சாவை தங்கசாமி மறந்துபோனதைத் தாங்க முடியாமல், வெறிகொண்டவளாகிறாள். சொந்தக்காரர்கள் ஏற்பாட்டின் பேரில், தங்கசாமி இரண்டாம் திருமணம் செய்துகொண்டுவிடுகிறான். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. ராதாவைத் தள்ளி வைத்துவிட்டு, அவளுக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்கிறான். ராதா எப்போதாவது தங்கசாமி வீட்டின் முன்பு வந்து, மிகக் கொச்சையான வசைகளைத் திட்டி, அவனோடு சண்டையிடுவாள். பிறகு துரத்திவிடுவார்கள்.

   கதை துவங்கும்போதும் அப்படி ராதா வந்து தெருவில் நின்றுகொண்டு கத்துகிறாள். அதைச் சகிக்க முடியாமல் தங்கசாமி அவளை அடிஅடியென அடித்துவிடுகிறான். அடிபட்ட வலியுடன் தெருவில் புரண்டபடி அவனைப் பார்க்க வேண்டும் போல மனதில் இருந்ததாகவும், அதனால் சும்மா பார்த்துப் போகத்தான் வந்த தாகவும் சொல்கிறாள். அது பைத்தியத்தின் குரலாகத் தெரியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. அவிழ்ந்து கிடந்த தனது உடைகளைச் சரிசெய்தபடி, ராதா திரும்பவும் கல்லை எடுத்து தங்கசாமி மீது வீசியபடி கத்திக்கொண்டு தெருவில் நடந்து போகிறாள். யார் பைத்தியமாக நடந்துகொண்டது என்ற புதிர் கதையைச் சுற்றிலும் படர்ந்து விடுகிறது.

  1. No trackbacks yet.

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  Connecting to %s

  %d bloggers like this: