Home > Uncategorized > குவாண்டம் கணினி

குவாண்டம் கணினி


புத்தக விமர்சனம் ::

Venkatramanan's Quantum Computer Book Review by Divakar Ranganathan in Tamil India Today

குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

நன்றி: இந்தியா டுடே (தமிழ்)

| |

Categories: Uncategorized
 1. August 12, 2005 at 12:03 am

  தமிழில் Quantum Computing புத்தகமாக என்று ஒரு நிமிடம் வியந்து பயந்து போய் விமர்சனத்தைப் படிக்க mobile computing, hacker, firewall என்ற சொற்களைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டேன்!! தமிழில் கணினி நூல் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும் என்றாலும், தலைப்பின் அர்த்தத்தைப் பற்றிக் கொஞ்சமாவது ஆய்வு செய்து இத்தலைப்பைத் தவிர்த்திருக்கலாம்.

  -Vinodh
  http://visai.blogspot.com

 2. August 12, 2005 at 8:41 am

  வெங்”கிட்டு” சயிண்டுவிஸ்டு ஆண்டி-சுசாதா, ஆண்டி-அமேரிக்கானு பட்டய கெளப்பிகினு கீரதை பாத்து நோக்கு பொறாமையா அம்பி? நியோ-தலித்து, தொறந்த “ப்ரா”மண அடையாளம்னு அவரு முற்போக்கு ஆவரதப் பாத்து நோக்கு வயித்தெரிச்சலா? விசிதா வீரியன் சீ விசித்ர வீரியன் சீ விசிதா சூரியன் சீன்வாசு கம்பெடுத்துகினு அடிக்க வராரு பாரு ஒன்னை. வெங்”கிட்டு” சாரு சராசரியை உய்விக்க வந்த சூப்பு ஸ்டாரு. யாரை அடிச்சா திருப்பி அடிவுலாதுனு பாத்து அடிக்கரதுல கில்லாடி. அடிவிழுர எடத்துல, அய்கை வருதுனு சீனு போட்ருவாரு. என்னா வீரம் வெங்”கிட்டு” வீரம். என்னா அரிவு வெங்”கிட்டு” அரிவு. அவர் புலுக சீ புகல கெடுக்க வந்த கோடாரிக் காம்பு நீ. அவர வுடு கன்னு. அவுருக்கு சயின்சு எய்த வராது. சயின்சை வெச்சி மத்தவன திட்ட தெரியிம். தம் பின்னாடி (அய் மீன் தலிக்கி பின்னாடி நய்னா) வெளக்கு மாட்டிக்க தெரியிம். இதெல்லாம் எல்லார்க்கும் தெரியிமே.

  இந்த ஆர்ட்டிகிளருல மேட்டர் இருக்குபா. அக்சப்ட்டடு. ஆனாக்க, பொலவர்க்கு அரிவியல் பாடம்னு சொல்ரது எம்மாம் சரி? பொலவரு படிச்சா, வெங்”கிட்டு” டமில்ல எவ்லோ மிஸ்டிக்கு பாப்பாங்கலோ. இன்னாமோ போ.

  ஒன்னு தெரிது. உன்க்கு தில்லு ஜாஸ்தியாயிடுச்சுபா.

  – i No i

 3. August 12, 2005 at 9:30 am

  ஒரு மாதத்துக்கு முன்பு வந்த இவ்விமர்சனத்தை வாசித்திருந்தேன். இந்தக் விமர்சனத்துக்கான துணைத் தலைப்பே, ( ‘ நல்ல நோக்கத்தை விட முக்கியம் நல்ல எழுத்து உத்திகள்) விமர்சகரின் குறி எது என்று சொல்கிறது. ஜனரஞ்சகமாக எழுதப் பட்ட விஷயத்தை ரசிப்பது தவறில்லை. ஆனால், கனமான விஷயத்தை, தகவல் பூர்வமான கட்டுரைகளை, dry ஆக இருக்கிறது என்று ஒரேயடியாகத் துடைத்துப் பெருக்குவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

 4. August 12, 2005 at 9:42 am

  வினோத்,
  தலைப்பை வைத்துவிட்டு கதை எழுதுவோம்; கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கவர்ச்சிகரமான கட்டுரைத் தலைப்பை எடுத்து, புத்தகத்துக்குப் பெயரிடுவார்கள் (எ.கா.: ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்’ – சுஜாதா)

  அந்த மாதிரிதான் இந்தப் புத்தகமும் தலைப்பைப் பெற்றிருக்கலாம்.

 5. August 12, 2005 at 9:57 am

  ஐகாரஸ்,

  —கனமான விஷயத்தை, தகவல் பூர்வமான கட்டுரைகளை, dry ஆக இருக்கிறது என்று ஒரேயடியாகத் துடைத்துப் பெருக்குவது —-

  கட்டுரையில் இருந்து:

  “பல கட்டுரைகளில், சொல்கிற விஷயத்திற்கு எந்த அறிமுகமும் செய்து வைக்காமல் நேரடியாக அதைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுகிறார் ஆசிரியர். ‘ஏன்’ என்பதற்கும் ‘எப்படி’ என்பதற்கும் தொடர்பு இருப்பதில்லை.

  தகவல் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய, சுவாரஸ்யமான துறை. அதை சில கட்டுரைகளில் இலக்கு இல்லாமல் எழுதியிருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளில் உள்ள வரைபடங்கள் அதிகம் உதவுவதில்லை.
  …”

  —இவ்விமர்சனத்தை வாசித்திருந்தேன்—

  நம்ம வலைப்பதிவர் எழுதிய புத்தகத்தின் விமர்சனம் வந்திருக்கிறது. வலைப்பதிவில் போடவே இல்லையே… இப்பொழுதுதான் என் கண்ணில் பட்டது. எனக்கு இந்தியா டுடே-கள் ஆடி அசைந்துதான் வந்து சேருகிறது.

 6. August 12, 2005 at 10:16 am

  இந்தியா ருடே விமர்சகர் அநாவசியத்துக்குக் குறைகள் தேடியிருப்பார் போல இருக்கின்றது. 😦

  குறைகளுக்கு மேலாக நிறைகளாக எத்தனையோ நல்ல விடயங்கள் நூலைப் பற்றிக் குறிப்பிட இருக்கின்றன. அவற்றினை விட்டுவிட்டு, ஏன் தும்பைப் பிடித்தாட்டியிருக்கின்றாரென்று தெரியவில்லை. குறைகளென்று அவர் சொல்லும் சில ஏற்றுக் கொள்ளக்கூடியனகூட அல்ல. அவர் “green house effect, rule of thumb ஆகியவற்றுக்கு விநோதமான மொழிபெயர்ப்புகள்” என்கிறபோது, அவர் சொல்வதுதான் விநோதமாகத் தெரிகின்றது. [ஆனால், ‘Green house effect’ இற்கு “பச்சில்ல விளைவு” என்பது இலக்கணவகையிலே பொருந்தாது என்பது கிடக்கட்டும். Green என்பது பசுமை என்ற கருத்திலேதான் இங்கே வருமேயொழிய பச்சை என்று நேரே பெயர்க்கும்வண்ணமான கருத்திலே வராது; கூடவே, ‘பச்சை + இல்லம்’ என்பது புணர்ந்து ‘பச்சில்லம்’ ஆகாது.]

 7. August 12, 2005 at 10:17 am

  பாலாஜி – நானே இந்தப் பக்கத்தை அலகிட்டுப் போடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன் (என்னுடைய புத்தகத்திற்கு வரும் எல்லா விமர்சனங்களையும் பொதுவில் வைக்கிறேன்). என்னிடம் சரியான ஸ்கேனர் இல்லை, எனவே நண்பருக்காகக் காத்திருந்தேன். நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்ததற்கு நன்றி.

  வினோத், இனோயி – புத்தகத்தைப் படித்துவிட்டு கருத்துச் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

 8. August 12, 2005 at 10:30 am

  நமது விமரிசகர்களும் எழுத்தாளர்களும், போர்ஹே,தஸ்தோவ்ஸ்கி என்றால் முன்னுரை கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம், புதுபேட்டையிலும், ஆலந்தூரிலும் பிறந்து வளர்ந்து இலக்கியம் எழுதியவர்கள் பாருங்கள். ப்ரூஸ் ஸ்டெர்லிங் எந்த பகுதி, வ்ண்ணாரப்பேட்டைதானே? ஆனால், அறிவியல் என்றால்தான் எல்லாவற்றையும் ஒரே கட்டுரையில் எதிர்ப்பார்ப்பார்கள். பொதுவான தமிழக நடைமுறையைக் காட்டுகிறது திவாகரனின் கட்டுரை, அதாவது , க்ராக்கிங் என்றே கடைசி வரை எழுதுவோமென்றும், “நல்ல உத்திகள்” என்று நோக்கத்தை விட்டுவிடுவோம் என்றும். நல்ல உத்திதான்.

  புத்தகததை வாசிக்கவில்லை, அதனால், விமர்சனத்தை மட்டுமே விமர்சிக்கிறேன். 🙂

 9. Anonymous
  August 12, 2005 at 10:46 am

  How can he compare an english book vs a tamil book ? If at all, those parlances should be done with precursors in the locale arena and not with some luminary writers of the western world.

 10. August 12, 2005 at 10:50 am

  —அநாவசியத்துக்குக் குறைகள் தேடியிருப்பார் போல இருக்கின்றது—

  குறைகள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார். காலச்சுவடில் இவருடைய கட்டுரைகளைப் பார்த்த ஞாபகம்!?! எப்பொழுது/என்ன கட்டுரை/எப்படி எழுதுகிறார் என்பது தேடிப் பார்த்தால்தான் தெரியும்.

 11. August 12, 2005 at 11:40 am

  பெயரிலி – நான் பசுமையில்லம் என்றே முதலில் எழுதியிருந்தேன். பெரியண்ணன் சந்திரசேகரன் உள்ளீட்ட சில பெரியவர்கள் பரிந்துரைத்ததால்தான் அப்படி மாற்றினேன்.

  தமிழில் எழுதும்பொழுது ஒரளவுக்குப் பின் வெறும் வார்த்தையைத் தேடிக்கொண்டிருப்பதில் சலிப்பேற்பட்டு தோராயமாக (நாளைக்கு ஒருவர் நல்லதாகச் சொல்லவாவது இது உதவட்டுமே என்ற நினைப்பில்) சொல்லிவிட்டு நகரவேண்டியிருக்கிறது.

  மற்றபடி – புத்தகத்தின்மீது விமர்சகருக்கான எதிர்பார்ப்பு நன்றாகப் புரிகிறது. எல்லாரையும் திருப்தி செய்யும் சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்திருப்பதால் அவரைத் திருப்திப்படுத்தும் திறமை எனக்கில்லை என்று எண்ணிக்கொண்டு ஒதுங்க வேண்டியதுதான்.

  ஒரு சுவாரசியமான விஷயம் – புத்தகம் விற்றுவிட்டது என்று பதிப்பாளர் சொல்லிய பத்தாவது நாளில் இந்த விமர்சனம் வெளிவந்தது.

 12. August 13, 2005 at 3:54 am

  பாலா:
  என்னைப் பொறுத்தவரை, Technical புத்தகங்களுக்கு தலைப்பிடும் போது சிறுகதை புத்தகங்களுக்கும் புதினங்களுக்கும் தலைப்பிடுவதைப் போல் தலைப்பிடக்கூடாது, இது எந்த மொழியாக இருந்தாலும் சரி. The title should capture the contents of the book. You dont normally see a book in English that says “Quantum Computer” and talks of network security. Maybe, இது விமர்சனம் குறிப்பிடுவதைப் போல புலவர்களுக்காக எழுதப்பட்டதாக இருப்பின் என்ன தலைப்பை வேண்டுமானாலும் வைக்கலாம், but not for technical folks. இது என் தாழ்மையான கருத்து.

  வெங்கட்:
  வாய்ப்பு கிடைப்பின் படித்து என் கருத்துகளை தெரிவிக்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கும், புத்தகத்தின் வெற்றிகரமான விற்பனைக்கும் வாழ்த்துகள்.

  -Vinodh
  http://visai.blogspot.com

 13. August 13, 2005 at 7:21 am

  வெங்கட்,

  –நானே இந்தப் பக்கத்தை அலகிட்டுப் போடவேண்டும்—

  நன்றி.

  —புத்தகம் விற்றுவிட்டது என்று பதிப்பாளர் சொல்லிய பத்தாவது நாளில் இந்த விமர்சனம் வெளிவந்தது. —

  வாழ்த்துக்கள். (புத்தகம் விற்றவுடன் போடப்பட்ட உங்கள் பதிவின் மூலமும் இதைத் தெரிந்து கொண்டேன்.)

  சும்மா வம்புக்காக… புத்தகம் விற்றுப் போவது மட்டும்தான் குறிக்கோளா 😉 மக்களையும் சென்றடைய வேண்டாமா 🙂

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: