Archive
Telly Awards from Chinna Ammani
ரெகுலரா தமிழ் சீரியல் பார்க்கறதுண்டா? ஓயாம வில்லத்தனம் செய்கிற பொம்பிளேஸையும், அழுது வடிகிற முன்னாள் சினிமா ஈரோயினிகளையும், பார்த்து பார்த்து , இவங்களை எல்லாம் போட்டு சரமாரியா கலாய்ச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா? அம்மணி விருது கொடுக்கிறாங்க.. பாக்கறீங்களா?
Blushing Embarassment
மெரினாவில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருந்தான்.
‘ரெண்டு அம்பது பைசா’
நல்ல டீலைக் கண்டால், பொங்கியெழும் பாக்கெட் மணி, இரண்டு குச்சி ஐஸை வாங்கியது. ஐந்து ரூபாயைப் பிடுங்கிய போதுதான், நாமம் வாங்கிக் கொண்டது விளங்கியது.
விக்கெட் ஏஞ்சலார் ‘சாவுகிராக்கி’யான கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.
Nothing to be ashamed of?
‘கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் – ஒரு சர்ச்சை’ என்னும் தலைப்பில் இந்த மாத தென்றல் இதழில் மணி மு. மணிவண்ணன் எழுதியிருக்கிறார்:
பொதுவாக அமெரிக்கப் பாடங்களில் மேற்கத்திய வரலாறு, அதன் தொடர்புள்ள யூத, கிறித்தவ, இஸ்லாமிய வரலாறுகளின் ஆழம் இந்திய வரலாறு பற்றி இருப்பதில்லை. பெரும்பாலும் இதற்கு இந்தியா பற்றிப் பள்ளிப் பாட நூலாசிரியர்களின் அறியாமைதான் காரணம். மேம்போக்காக கர்மா, பசு, ஜாதி (karma, cows, caste) என்ற சூத்திரத்துக்குள் இந்திய வரலாற்றை அடக்கி, இந்தியாவின் ஏழைச் சேரிப்பகுதிகள், சினிமா போஸ்டரைத் தின்று கொண்டிருக்கும் நோஞ்சான் பசுமாடு, காசியில் நடக்கும் ஈமக்கடன் கிரியைகள் இவற்றின் படத்தை இட்டு, ஒரு மாபெரும் நாகரிகத்தின் வரலாற்றை கார்ட்டூன் போலச் சிறுமைப் படுத்திவிடுவார்கள்.
பள்ளி ஆசிரியர் ‘சாண்டா’ எல்லாம் உடான்ஸ் என்று சொன்னதற்காக, அவரை ‘பொது மன்னிப்பு’ கேட்க வைக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும் கான்சாஸிலும் ஆதாம், ஏவாளில் இருந்துதான் குரங்கு பிறந்ததாக ஏட்டு சுரைக்காய் சமைக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதுடன், இந்தியா குறித்த உண்மை உணர்வையும், மதச்சின்னங்கள் தாண்டிய ஆன்மிக மதிப்பையும் அமெரிக்கவாழ் இந்தியச் சிறுவர்களிடையே உருவாக்குவதற்கு ‘பிரம்மா’ பிரயத்தனம் செய்ய வேண்டும்.
Where is your thali?
புதுசாக கல்யாணம் செய்துகொண்ட வீணாவுக்கும், அவங்க அம்மாவுக்கும் நடக்கிற சுவாரசியமான வாக்குவாதத்தைப் படிங்க..படிச்சீங்களா? இப்ப இதைப் படியுங்க…
வயிறு வலிச்சா நான் பொறுப்பில்லை 🙂
JP Chandrababu – A Book
ஆஹா… சந்திரபாபு புஸ்தகம் வந்துடுச்சு டோய்… ஏம்பா… புஸ்தக விலை, எத்தனை பக்கம், என்னிலேந்து கெடைக்கும், இந்த வெவரமெல்லாம் போடமாட்டீங்களா? என்னமோ போங்க 🙂
Arul's take on IR Bashers ( Thiruvasagam Symphony)
முதலிலே இங்கே இருந்தார்.. அப்பறம் இங்கே போனார்… இப்ப பார்த்தா இந்த இடத்துலே இருக்கார்.. போனதுக்கு, இளையராஜாவின் திருவாசகம் பற்றின கொஞ்சம் பழைய விவாதம் ஒண்ணை கண்டு பிடிக்க முடிஞ்சது.
ராஜா சொல்வதில் முக்கியமானது அவர் இருபத்தைந்து வருடமாக சொல்லிவரும் ” இருப்பதே ஏழு சுரங்கள். அதை வைத்துத் தான் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்” என்பதும்,” எனக்கு தியாக ராஜர் கிருதியும், நாய் குறைப்பும் ஒன்றுதான். எல்லாவற்றிலும் இசை இருக்கிறது” என்பதும் தான். இதுதான் ராஜாவின் சாரம். நம் எழுத்தாளர்களெல்லாம் எங்களது சிருஷ்டியாக்கும், தானாக எழுத வருது, எல்லாம் சாமி கடாட்சம் என்ற ரீதியில் பினாத்திக் கொண்டிருக்கும் போது இதைவிட ஒரு கலைஞன் எப்படி தன் “சிருஷ்டி” ரகசியத்தைப் போட்டு உடைக்க முடியும். அய்யா இதையே அய்ரோப்பிய வடிவஇயல்வாதிகள் இலக்கியம் ஓவியம் இசை என்பதில் manifesto போட்டு ஒரு நூறுவருஷம் செயல் பட்டு அதுவே semiotics என்றெல்லாம் மாறி கல்விக்கூடங்களின் ஆராய்ச்சி பார்மால்டிஹைட் இறுக்கங்களாக மாற்றி கன காலமாச்சு. அதை இப்படி கண்ணெதிரே ஒரு கலைஞன் தமிழகத்து மக்கள் அத்தனை பேருக்கும் ரசித்து லயிக்குமாறு எல்லா எல்லைகளையும் காட்டியிருக்கிறான். இதைவிட இந்த அறிவு ஜீவிகளின் பன்னாடை எதிர்க்கலாச்சாரம் சாதித்து விடுமாக்கும்? நடப்பு உலகத்தில் சுற்றிவர இருப்பதை வைத்துச் சிந்திக்காமல் சும்மா தெரிதா விட்கன்ஸ்டைன் என்று உதிர்த்துக் கொண்டு ஒரு தலைமுறைக்கு அப்புறம் இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லாம் சரியில்லை. இவர்கள் கால் சென்டருக்குத்தான் லாயக்கு.
Is India a Nation State? – Ask Thangamani
இந்திய ஒருமைப்பாடு – இது ஒரு கெட்ட வார்த்தையா? அந்த வார்த்தையோட நெஜ அர்த்தம் என்ன? தேசிய ஒருமைப்பாடுங்கறதும், இந்தியாவின் பன்முகத்தன்மைங்கறதும், ஒண்ணோட ஓண்ணு முரண்படுகிற விஷயங்களா? எனக்கும் தெரியலை… தங்கமணி என்ன சொல்றார்ன்னு கேளுங்க.. பின்னூட்டங்களும் சுவாரசியம்..
Making of 'Athavan SiRukathaigaL'
தாங்கள் உருவாக்கிய புத்தகங்கள் பற்றிய தொடரில், ‘ ஆதவன் சிறுகதைகள்’ உருவான விதம் பற்றி பத்ரி எழுதுகிறார்.
…ஆ.இரா.வெங்கடாசலபதி கொண்டுவந்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிக்குக் கடைசியில் பின்குறிப்புகளாகப் பலவற்றைச் சேர்த்திருப்பார். அதேபோல பின்குறிப்புகள் அல்லது அடிக்குறிப்புகள் சிலவற்றைச் சேர்க்கலாமா என்று யோசித்தோம். பின், வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டுவிட்டோம்…
செஞ்சிருக்கலாம். நல்லா இருந்திருக்கும்.
IR's song from 'Magudi' – listen here
மகுடி படத்திலே, ‘ கரட்டோரம் மூங்கில் காடு’ என்கிற ராஜா பாடிய பாடலைக் கேட்டிருக்கீங்களா? இங்கே கேளுங்க.. கூடவே, கீதா தீனதயாளன் , பாட்டைப் பற்றியும் எழுதியிருக்காங்க..
Recent Comments