Archive
Vijayganth, Vijay TV & Book Fair
சினிமா வில்லன்கள் எவ்வளவு துன்புறுத்தினாலும் இறுதியில் கேப்டன் தடைகளை உடைத்து விடுவார். விஜய் டிவி வில்லனையும், தான் வில்லனான கதையையும், விஜய்காந்த்தின் வில்லர்களையும் சதயம் PIN (ஏன்?!) குறித்திருக்கிறார்.
Tamil's First Musical Theater Play
ப.வ. இராமசாமி ராஜுவின் ‘பிரதாபசந்திர விலாசம்‘ நாடகம் குறித்து திண்ணையில் இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். நாடக ஆசிரியரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பு, நாடக அறிமுகம், அந்தக்காலத்தியச் சமூகவரலாறு விவரணை போன்றவை, பதிவை தவறவிடாத ஒன்றாக ஆக்குகிறது.
விசுவாசக்காதகந்தான் வில்லன். அவனுடன் இருப்பவர்களுடைய பெயர்கள், குசும்பா மாஸ்டர் (குசும்பு என்றால் விஷமம்), சுண்டேமாஸ்டர் (அவன் ஞாயிற்றுக்கிழமைதோறுந்தான் நண்பர்கள் கண்ணுக்குப் படுவான், மற்றைய நாட்களில், கடன்கொடுத்தவர்களுக்கு பயந்து தலைமறைவாகஇருப்பான்), பத்தாயி மாஸ்டர் (பத்தாயி என்றால் அக்காலத்திய சென்னை cockneyல் சாராயம்), வெட்டுணி (துஷ்டன், இதுவும் சென்னை நகர்ப்புறத்து slang), இடிமுழுங்கி (முழு அயோக்கியன்), சட்பட், படீல். கதாநாயகன் பிரதாபசந்திரன் கூட இருப்பவர்கள், விதியாசாகரர், நிபுணகோசர், குணாலயர், சுதேசமித்ரர், சமயோசிதர், லௌகீகர் (நடைமுறைவாதி, philistine), புராதனர்(traditionalist).
kAthal – Thangamani
தங்கமணி, அரசியல், சமூக நிகழ்வுகள், அவலங்கள் குறித்து, முற்போக்காக எழுதுவார்னு தெரியும். ஆனால், காதல் பற்றி? காதல் பற்றிய இடுகையிலும், முற்போக்கு வாடை ( அதாவது எழுத்திலே) அடிக்கிறது என்றாலும், மிக நல்ல பதிவு.
Carnatic Music – Telugu or Tamil? An interesting analogy
மார்கழி சீசன் முடிந்தாலும், ராமின் வலைப்பதிவு ஓயவில்லை.. கர்நாடக இசைக்கு, தமிழை விட, தெலுங்குதான் தோது என்று இந்திரஜித் சொல்றார். அவருடைய ஏரணத்தில் ( logic) தப்பு இருக்கிற மாதிரி தெரியலையேன்னு பார்த்துகிட்டே வந்தா, பின்னாடியே, அந்த தர்க்கத்துக்கு ராமின் counter.. இதிலேயும் தப்பிருக்கிறமாதிரி தெரியலை.. இன்னாடா இது ஒரே கொயப்பம்? 🙂 இதுல யார் சொல்றது சரி?
any takersu?
Do we have quality magazines for kids? – Aruna
குழந்தைகளின் நேரங்களை, தொலைக்காட்சியும், கணிணி விளையாட்டுக்களும் தின்று கொண்டிருக்கும், அருணாவின் அக்கறை நியாயமானது.. வெளிப்படும் நேர்த்தியும் தான்
A Serial on Kamarajar – Dandanakka
டண்டணக்கா.. அவர் பேர் தான் அப்படி.. ஆனா எழுதறது உருப்படி..விடாம தொடர்ந்து, காமராஜர் பற்றி ஒரு சீரியல் எழுதிட்டு வரார்.. சில பல இடங்களில் இருந்து எடுத்து கோர்த்து எழுதறார்னாலும், ஒட்டு மொத்தமாக ஒரு இடத்திலே வெச்சு வாசிக்க சுவாரசியமாத்தான் இருக்கு… பல புதிய தகவல்கள்
T.Nagar – FAQ – Praveen
தீபாவளி அல்லது மற்ற பொங்கல் சமயங்களில், வேண்டாம், அக்ஷய திரிதியை சமயங்களில், தி.நகர் மனித சமுத்திரத்தில் விழுந்து, நீந்தி, எழுந்து, உயிர் பிழைத்து வந்தவர்களுக்கு பிரவீணின் புலம்பல் ஆறுதலாக இருக்கும்..
Recent Comments