Archive
The myth of the sacred peasantry
முன்பொரு காலத்தில் தமிழ் மேடைகளில் பாட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். சீரிளம் நாட்டுக்கு சென்றப்பின் ஆங்கிலத்தில் மட்டுமே வீச்சு நடக்கிறது. விவசாயி என்பவன் முதலாளியா, தொழிலாளியா என்று தடம் புரளாமல் இன்ன பிற யோசிக்கும் கேள்விகளை மன்மோகனாருக்காகவும் (நமக்காகவும்தான்) முன் வைத்திருக்கிறார்.
Oliver Goldsmith’s The Deserted Village
Ill fares the land, to hastening ills a prey,
Where wealth accumulates, and men decay:
Princes and lords may flourish, or may fade;
A breath can make them, as a breath has made;
But a bold peasantry, their country’s pride,
When once destroyed can never be supplied.
Heartfelt Heartless
குப்பையிலும் மாணிக்கம் தேடுவது போல ‘நியூ’ படத்திலும் நெகிழ்கிறார் கைப்புள்ள. எளிமையாக, நவீன அலங்காரம் இல்லாத நச் காவிதையாக மனம் வாங்கச் சென்றேன்! பதிந்திருக்கிறார். யதார்த்தமான வலைக்குறிப்புகள்.
How to Vote?
இண்டி ப்ளாக் விருதுகளில் எவ்வாறு வாக்களிப்பது என்பதை என் போன்ற கம்ப்யூட்டர் கைநாட்டுகள் (நன்றி: தருமி) கூட அறிந்து கொள்ளுமாறு பவுல்ரவிசங்கர் விளக்குகிறார்.
உங்கள் வாக்கினைப் பதிவு செய்யும் முறைகள்
1. ஓட்டுச் சாவடிக்குச் செல்ல வலைத் தடம்: http://indibloggies.org/final-polls-begin
Doc Prescribes
‘லக்க லக்க லக்க’ வருவதற்கு முன்பே லக்கராஜு வலைப்பதிவில் க்வாலிடி நகைச்சுவை கிடைத்து வந்தது. அவரின் சமீபத்திய ஜோக்கின் தமிழாக்கம்:
தொலைபேசி அழைக்கிறது. “மிஸஸ். சந்திரன் இருக்காங்களா?”
“சொல்லுங்க”
“நான் ஆஸ்பத்திரியில் இருந்து பேசறேன். நீங்க வந்த சமயம் இன்னொரு சந்திரன் சாரும் வந்திருந்தாங்க. ரெண்டு பேரோட ரிப்போர்ட்டும் குழம்பிடுச்சு!”
“என்னது?”
“ஒருத்தருக்கு அல்செய்மர்ஸ்; இன்னொருத்தருக்கு எயிட்ஸ்! உங்க கணவருக்கு எது என்று எனக்குத் தெரியாது. இனொரு தடவை இதே டெஸ்ட்களை எடுக்க இன்ஷூரன்ஸ் ஒத்துக்காது!”
“அப்போ நான் என்ன பண்ணறது?”
முடிவை நீங்கேளே கண்டுபிடிக்கலாம். பிறகு சுதீர் பரசுராம் பக்கம் சென்று சரிபார்க்கவும்.
Indiblog 2005 Awards – Individual's Picks
இண்டி ப்ளாகீஸ் வாக்களிப்பு கூடிய சீக்கிரமே ஆரம்பித்துவிடும். சாதாரணத் தேர்தல் போல் இல்லாமல், வலைப்பதிவர்களின் தேர்தல் என்பதால், யாருக்கு உங்கள் பொன்னான வாக்கு, ஏன், மற்றவர்களுக்கு ஏன் வோட்டளிக்க மாட்டீர்கள் போன்றவற்றையும் எல்லாரும் பதிய வேண்டும்; பதிவார்கள்.
சாம்பிளுக்கு திலீப் டிசௌசா கொடுத்திருக்கிறார்.
uyirmai function – FIR – Azad
நேற்று நடைபெற்ற உயிர்மை விழாவின் ‘முதல் தகவல் அறிக்கை’ -அமீரகத்தில் இருந்து விடுமுறைக்கு சென்னை வந்திருக்கும் ஆசாத்திடமிருந்து, சுடச்சுட
விழா பற்றிய முந்தைய பதிவு
HalwaCity Vijay explains Waterfall model
மென்பொருள் உருவாக்கம் பற்றிய நகைச்சுவையான உதாரணங்களுடன் ஒரு பதிவு
Requirement Gathering
“என்னங்க! இந்த மாசம் 10000 ரூபாய் உங்க சம்பளத்துல கூட வந்திருக்குதே. எனக்கு நகை வாங்கி தாங்கங்க?
“10000 ரூபாய்க்கு வேட்டா? புருஷனாகப்பட்ட பாவத்திற்கு இந்த பரிகாரம் கூட செய்யலேன்னா எப்படி? எந்த மாதிரி நகை வேணும்”
“சந்திரமுகி படத்துல ஜோதிகா போட்டு வருவாளே அந்த மாதிரி இரட்டைவட செயின் நல்ல இருக்குதுங்க”
“தங்கம் வெல ஏகமா ஏறிகிடக்கே. அந்த இரட்டை வட செயின் பட்ஜெட்டை உதைக்குமேடி. வேணும்னா மாங்கா போட்ட மூக்குத்தி இப்போ வாங்கி தாரானே. அந்த மூக்குத்தி போட்டுக்கிட்ட அப்படியே சூர்ப்பனகை மாதிரி சூப்பரா இருப்பியே. அய்யோடா! அப்புறம் பைசா சேர்ந்தவுடனே பெரிய்ய்ய செயின் வாங்கி தர்றேனே”
“ஏங்க ஏங்க கட்டாயம் 2 நாள்ல வாங்கிக் கொடுத்திருங்கங்க”
“சரி சரி”
முழுசும் இங்கே
Recent Comments