Archive
Sri Vainava Nool Aasiriyar
ஹரியண்ணா என்று இணையத்தில் அழைக்கப்படும் திரு. ஹரிகிருஷ்ணனுக்கு ‘ஸ்ரீ வைணவ நூல் ஆசிரியர்’ விருது கிடைத்திருக்கிறது.
டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கிழக்கு பதிப்பகத்தாரிடமிருந்து விலாசம் வாங்கிக்கொண்டு அவர்கள் மூலமாக ஸ்ரீ வைணவ மகா சங்கம் நான் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ நூலுக்காக விருதளிக்க எண்ணியிருப்பதாகச் சொன்னார்கள். திருத்தொண்டர் வரிசையில் முன்னணியில் நிற்கும், நூறாண்டு நிறைந்த பெரியவர் திரு எதிராச ராமநுச தாச சுவாமிகள் முன்னிலையில், சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் மாண்புமிகு A குலசேகரன் அவர்கள் வழங்க, ‘ஸ்ரீ வைணவ நூல் ஆசிரியர்’ என்ற விருதைப் பெற்றுக்கொண்டேன்.
Marco Polo and Rustichello of Pisa
மார்கோபோலோவின் பயணக்குறிப்புகளைக் கொண்டு மன்னன் சுந்தரபாண்டி தேவரையும் அந்தக்கால தமிழகத்தைப் பற்றியும் சில தகவல்களை ஆதிரை தந்திருக்கிறார்.
Nagareshu Kanchi
காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர் ஆலயம். கச்சபேஸ்வரர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், மாதங்கேச்வரர் ஆலயம், கைலாசநாதர் கோயில் என்று நிழற்படங்களைக் காட்டுகிறார் ஆனந்த் விநாயகம்.
National Security Agency
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொலைப்பேச்சை ஒட்டு கேட்பது, தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்காவில் வெடித்திருக்கும் இந்த வேவு பார்க்கும் பிரச்சினை குறித்த தகவல்களை ஸ்ருசல் பகிர்கிறார். டான் பிரவுனின் ‘டிஜிட்டல் போர்ட்ரஸ்’, Black World Operations & Programs, ரசல் டைஸ், NSA, RSA என்று தகவல்கள் நிறைந்திருக்கிறது.
நாலு பேர் இருக்கும் நாட்டுக்கு நல்லது என்றால், ஒற்றறிவது ஒகே. எது தேசத்துக்கு நல்லது என்று யார் தீர்மானிப்பதில்தான் தெளிவில்லை.
He-She Hum Tum
‘Men are from Mars & Women are from Venus’ என்பதற்கேற்ப காதல் வாழ்வில் சிணுங்கல்களும், செல்லங்களுமாக பிரபு விவரிக்கிறார்.
She: Naan surya smart sonna thappu, nee asin paathu drool panna thappu illai la
He: Err
She: Nee office la irukkara ponnunga paathu sight adippe. And adhayum en kitta vandhu solluve. Aaana naan oru cine star smart aa irukkan sonna thappu
காரணமில்லாமல் கணவன் யோசித்துக் கொண்டிருப்பதும், நிச்சயதார்த்தம் ஆனவுடன் முதல்முறையாக காதல்வசப்படுவதும், பெங்களூர் மெயிலில் திருமணத்துக்கு முன்பும் பின்பும் என்று பல ரீல்களை மலர வைக்கிறார்.
vaLLuvar kOttam – Muthu
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. இது விவேக் சொல்லும் வசனம் இல்லை… வள்ளுவர் கோட்டத்துக்கு வாய் இருந்தால் இப்படித்தான் புலம்பும் என்று முத்து சொல்கிறார்.
Bookfair 2006 – Snapshots – II
புத்தகக் கண்காட்சியில் எடுத்த சில புகைப்படங்கள்.
nAladiyar in english – Chenthil
இந்தப் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா?
நாப்பாடல் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்
தீப்புலவர் சேரார் செறிவுடையார் – தீப்புலவன்
கோட்டியுள் குன்றக் குடிப்பழிக்கும் அல்லர்க்கால் தோட்புடைக் கொள்ளா எழும்
இந்த நாலடியார் பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும்? செந்தில் பெயர்க்கிறார் இங்கே..
woodlands drive-in – Ramakrishnan
உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் ஓட்டல், சென்னை நகரத்தின் முக்கியமான அடையாளம். நகரின் மத்தியில் இருந்தாலும் அமைதியான சூழ்நிலை… எத்தனை நேரம் உட்கார்ந்திருந்தாலும், யாரும் கேட்கமாட்டார்கள்.. உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் பற்றிய ராமகிருஷ்ணனின் அழகான பதிவு
Recent Comments