Archive

Archive for January 30, 2006

What's up Da? – David

January 30, 2006 2 comments

பல்பொருள் அங்காடியில் இளைஞர்கள். சுரேஷ்  கண்ணனுக்கு ரத்தக்கொதிப்பை ஏற்றும் ஆடைகளுடன் இளைஞிகள். அனுசரனையாக விசாரிக்கும் பாட்டி. பெருசுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்களா? பாக்கியராஜ் சமாச்சாரம் எல்லாம் எப்படி உள்ளே நுழைக்கிறார்கள் என்பதை கூகிள் திரையில் காண அழைக்கிறார்.

வீடியோவை நேரடியாகக் காண…

Mylapore story : Tilo

January 30, 2006 4 comments

எந்த டவுன் போனாலும் மைலாப்பூர் போல் வருமா 😉 ஊர் பெருமையை எடுத்து வைக்கிறார் திலோத்தமா. சமீபத்தில் தெப்பக்குளத்தை சுற்றி நடந்த மயிலை விழாவை வெங்கட்ரமணன் நம்பிராஜன் சுவைக்கிறார்.

இந்த வருடம் தெப்பம் உண்டா?

Quiz – Gaurav

January 30, 2006 Leave a comment

கூகிள் இல்லாவிட்டால் முக்கால் அறிவு இல்லை என்னும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். தேடுபொறி இல்லாமல், மூளையைத் துழாவ அழைக்கிறார். எவ்வளவு விடை உங்களால் சொல்ல முடிந்தது?

Prof. George L Hart – Venkat

January 30, 2006 2 comments

சுந்தர.ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர் வரிசையில், பேரா.ஜார்ஜ் ஹார்ட், இந்த ஆண்டின் ‘இயல்’ விருது பெறுகிறார். அது குறித்த வெங்கட்டின் பதிவு.

Thirumavalavan Speeches

January 30, 2006 Leave a comment

ஓவியர் புகழேந்தியின் நூலான “அகமும் முகமும்” வெளியீட்டு விழாவில் ‘விடுதலை சிறுத்தைகள்’ தலைவர் தொல். திருமாவளவன் பேச்சைக் கேட்கலாம்.

Kalanidhi Gunasingham – Parasakthi Sundaralingam

January 30, 2006 2 comments

கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (அனைத்துலக தேடல்) குறித்த வாசக அனுபவம் + அறிமுகம்.

இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி முழுமையானதொரு நூலை உருவாக்குவதில் எனது பங்களிப்பாக இது போன்ற புத்தகத்தை ஆய்வுகளின் அடிப்படையில் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த முப்பது ஆண்டுகளாகவே என்னுள் இருந்தது.

Azhagi – Chameleon

January 30, 2006 2 comments

முதல் கதை, முதல் நாவல் என்பது போல் தங்கர் பச்சானின் முதன்முதலாக இயக்குநராகியது ‘அழகி’. முதல் காதலைப் பற்றி மட்டும் அல்லாமல் பிற உளவியல் ரீதியாக அலசுகிறார்.

மனிதர்களை மூன்று வகையாக மனவியலில் பிரிப்பர்.
1) தொடுப்பவர் (சண்டைக்கு வலிப்பவர்),
2) மீட்பர் (காப்பாத்தக் குரல் கொடுப்பவர்),
3) பலியாகுபவர்( அடிபடுபவர்) எனலாம்.
இந்த மூன்று வேஷங்களும் நாம் நம் வாழ்வில் பிறந்ததிலிருந்தே மாற்றி மாற்றி ஏற்று நடிக்கும் ஒரு வேஷம்.

SriSri RaviShankar vs. Dr. Zakir Nayak

January 30, 2006 Leave a comment

Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் “Art of Living” என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொகுப்புகள்.

Sony TV, Sun TV Web telecast

January 30, 2006 Leave a comment

இணையம் மூலமாக இலவசமாக சன் டிவியும் ஹிந்தி ரசிகர் என்றால் சோனி டிவியும் பார்க்கும் வழியையும் சொல்கிறார் ஜான் பாஸ்கோ.

Categories: டிவி, பொது

Ramanathan, Kudos..

January 30, 2006 Leave a comment

ஒண்ணும்  ஒண்ணும் ரெண்டு, ரெண்டும் ரெண்டும் நாலு ஒரு பதிவைப் போட்டாலே, பின்னூட்டம் எண்ணிக்கை நூத்தி சொச்சத்தைத் தொடும். 🙂 இப்ப இவர் லேசா, , இலக்கியம் பக்கம் லேசாத் தலையை சாய்க்கிறார்… என்ன ஏதுன்னு விளக்கமாக இங்கே..

வெறும் பில்டப்பா, இல்லே சீரியஸாக இறங்கியிருக்காரான்னு கூடிய சீக்கிரம் தெரியும்.