Archive
Neyveli – 50 – Tamilsasi
நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு குறித்து சசிகுமாரின், விளக்கமான பதிவு.
LTTE, Lion Lanka & American Eagle – Porukki
சமீபத்திய அமெரிக்க அறிக்கைகளையும், இலங்கை நிலையையும் விடுதலைப் புலிகள் குறித்த எண்ணங்களையும் அலசும் பதிவு.
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படும் விடுதலைப் போராட்டம் அமெரிக்க அதன் கூட்டாளிநாடுகளின் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிரானதுதான். மக்களிடம் போகாமல் வல்லாதிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுவது புலிகளின் அறியாமையல்ல. இந்த மக்கள்தான் அன்றைய வியட்நாம் யுத்தம் என்றாலும் இன்றைய ஈராக் யுத்தம் என்றாலும் தங்கள் அரசுகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். மக்கள் பற்றிய அவர்களது புரிதல், அவர்களது “அரசியல்” அடிப்படையிலிருந்து வருகிறது. போராட்டத்தை உணருங்கள் என்ற கோரிக்கையை வைக்க வேண்டியது இவர்களிடமல்ல, இந்த நாடுகளிலுள்ள மக்களிடமே.
இலங்கை அரசின் நிலையோ இன்னும் கேவலமானது. நாடு பொருளாதாரத்தில் வங்குரோத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது. தாங்கள் தூக்கிப்பிடிக்கும் (பெருந்)தேசியவாததிற்கு உண்மையாக இருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. முழுநாட்டையுமே யுத்தத்திற்குள் தள்ளிவிட்டு இப்போது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் செங்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.
Arivoli Iyakkam – Udukkai
“இருளும் ஒளியும்” – அறிவொளி இயக்க அனுபவங்கள் என்னும் ச.தமிழ்செல்வனின் புத்தகம் குறித்த வாசக அனுபவங்கள்.
என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது.
இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment.
Thumbs Up ad Chiranjeevi – Reva Ananda
சிரஞ்சீவிக்கு பத்மபூஷன் விருது கிடைத்து விட்டதாமே? ‘தம்ஸ் அப்’ விளம்பரத்தில் நடித்து பிரச்சினையாகி விலகிக் கொண்டது போல் இல்லாமல், பதம்பூஷனைச் சுற்றி எதுவும் வெடிக்காமல் இருக்க வேண்டும்!
AIDS Banner – Kiruba
இணையத்தில் விளம்பரம் செய்வது கஷ்டமான கலை. பாப்-அப் வந்தால் எரிச்சல் உண்டாகும். இடது பக்கத்தின் ஈசானிய மூலையில் இருந்தால் இருட்டடிப்பு ஆகிவிடும். ஜீவாதாரமான பிரச்சினைக்கு உயிரோட்டமான விளம்பரம் என்கிறார் கிருபா.
Taking Cinema to Rural TN
விகடன் கட்டுரையை நம்முடன் பகிர்கிறார் மதி கந்தசாமி.
காலையில எழுந்திருச்சு வயல் வேலைக்குப் போயிடுவேன். அப்புறம் கீதாரிகளோடு அலைஞ்சுட்டு, சாயங்காலம் சினிமா போடக் கிளம்பிடுவேன். ‘குருதத்’தோட ‘பியாசா’வில் தொடங்கி, ரோமன் போலன்ஸ்கியோட ‘பியானிஸ்ட்’ வரைக்கும் போடுவேன்.
கோடாங்கிபட்டியில், ‘விக்டோரியா டிசிகா’வின் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ படம் போட்டு முடிஞ்சதும், ‘என்ன, இந்தப் படம் யாருக்காவது புரிஞ்சுதா? இதோட கரு என்னன்னு சொல்ல முடியுமா?’னு கேட்டேன். உடனே ஒரு பெரியவர் எழுந்து, ‘இந்த உலகத்துல கா வயித்துக் கஞ்சிக்குக்கூட வழியில்லாம ஏழைபாழையா பொறந்த எல்லோருமே இதுல வர்ற சைக்கிள் திருடன் மாதிரிதா, இல்லீங் களா?’ன்னார்.
Humane Animals – SK
‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே, பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே’ என்றார் களத்தூர் கமல். இரையைக் கூட நேயத்துடன் பார்க்கும் படங்களை இட்டு, மனிதநேயம் எப்பொழுது வரும் என்று கேட்கிறார் எஸ்.கே.
Erich Segal – Raasaa
ஆறு மணி நேரம் பகலில் ட்ரெயின் பயணம் மேற்கொள்வது ஆனந்தமான அவஸ்தை. பராக்கு பார்த்து சிறுகதைக்கு ப்ளாட் தேடலாம். ‘காதல்’ இயக்குநர் போல் திரைக்கதையை சக பயணியிடமிருந்து எடுக்கலாம். அல்லது கொங்கு ராசா போல் வாசக அனுபவமே பெறலாம்.
Recent Comments