Archive

Archive for February 12, 2006

PudhupEttai – 'Suvadu' Shankar

February 12, 2006 Leave a comment

ப்ளாக்ஸ்பாட்டில் இருந்து புது இடத்துக்கு குடி பெயர்ந்திருக்கும் அமுல்பேபி, புதுப்பேட்டை பாடல்களை விமர்சனம் செய்கிறார்..

வா..வாத்தியாரே…

Mr.Karunanidhi, please quit from electoral politics..

February 12, 2006 Leave a comment

கருணாநிதி, அரசியலில் இருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டும் என்று சசிக்குமார் சொல்கிறார். விளக்கமான, ஆனால், ஒற்றைப் பரிமாணப் பார்வை…

Categories: அரசியல்

Gmail Drive – Krupa Shankar

February 12, 2006 6 comments

“…..விடுடா. லோகமே அட்ஜெஸ்ட்மெண்ட்லதான் வாழறது. கண்டுக்காதே. இன்னும் கேளு. நாம நாலு ஸிஸ்டம்ல புழங்கறவாளா இருந்தா இந்த ஜிமெய்ல் ட்ரைவ் வராது வந்த மாmoney. USB drive, CD/VCD எல்லாம் இனிமேல் வேண்டவே வேண்டாம். இந்த ஸிஸ்டம்ல இருக்கறதை ஜிமெய்ல் ட்ரைவ்ல பேஸ்ட் பண்ணிட்டா, அடுத்த சிஸ்டம்ல போய் அங்க இருக்கற ஜிமெய்ல் ட்ரைவ்ல எடுத்துக்கலாம். ஆத்து கம்ப்யூட்டர்ல போயும் ஆஃபீஸ் வேலையைப் பாத்துக்கலாம்.

அசின் படமெல்லாம் இனிமேல் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கறது ஈசியா இருக்கும் போலருக்கே…?

அபிஷ்டு அபிஷ்டு. புத்தி போறது பாரு. private virtual networkனு சொல்றாளே, இனிமேல் ஜிமெய்ல் ட்ரைவை வெச்சுண்டே வெர்ச்சுவலா நெட்வொர்க் பரிபாளிக்கலாம். பைசா செலவில்லே. கம்பனி ப்ராஞ்சுக்கெல்லாம் ஜிமெய்ல் பாஸ்வேர்டைக் குடுத்துட்டா போதும். அவா அவா அங்கேர்ந்தே ஒரே ஜிமெய்ல் அக்கவுண்ட்ல இருக்கற filesஐ உபயோகிச்சுப்பா………..”

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே..

Rand de basanti vs aytha ezhuththu – udhayakumar

February 12, 2006 1 comment

“….ஆயுத எழுத்துலயும், மூணு இளைஞர்களை வெவ்வேற கோணத்தில எடுத்திட்டுப்போயி, கடைசியில அவங்களை ஒரே நேர்கோட்டுக்கு கொண்டு வந்து, பிரச்சினையின் நடுமையத்தில சுழல விட்டுருப்பாரு நம்ம மணி. நல்ல ட்ரீட்மெண்ட், அந்த திரைக்கதை அமச்ச உத்தியத்தான், இந்த ஹிந்திப்பட் டைரக்டரும் கையாண்டு கடந்த, நிகழ் கால கட்டங்களை ஒன்னா கொண்டு வச்சு, பிரச்சினையை சொல்லப் பார்த்திருக்கார். கதை கருவோட நோக்கம் ரெண்டுக்கும் ஓன்னுத்தான். படம் பார்த்திட்டு வெளியில வரப்ப ஒரு சரியான தாக்கம் இருந்திச்சு. மொத்தத்தில இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழ்ல்லயும், ஹிந்தில்லையும் வரதில்லை. எப்பாவாது அத்தி பூத்தமாதிரி. ஹிந்திப்படம்னு ஒதுக்கிடாம போய் பாருங்க, நல்லா இருக்கு…..”

மேலே வாசிக்க

RMKV Viswanathan

February 12, 2006 1 comment

ஜவுளி விற்பனையில் பல புதுமைகளைப் புகுத்தி, பலரையும் தன் பக்கம் திருப்பிய ஆரஎம்கேவி. விஸ்வநாதன் ஒரு விபத்தில் இறந்து பதினைந்து நாட்களுக்கும் மேலாகிறது. நண்பர்கள், போட்டியாளர்கள், உற்பத்தியாளர்கள், உறவினர்கள் ஆகியோரின் இரங்கல் விளம்பரங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை.  கர்நாட சங்கீதத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு பற்றி கர்நாடிகா.காம் இலே வந்த நினைவுக் கட்டுரை… ( ரவிகுமார் வழியாக )

ayyo Pavam :-)

February 12, 2006 5 comments

·லிப்டிலே எக்கச்சக்கமா மாட்டிக்கிறதும் நல்லதுக்குத்தான் போலிருக்கு.. இல்லாட்டி இப்படி ஒரு பதிவு கிடைச்சுருக்குமா? இதே விஷயத்தை அவங்க ஊட்டுக்காரர் எழுதியிருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன்.. வேணாம், வம்பு 🙂

[lift-ile mAttikiRathum nallathukkuth thAn pOlirukku.. illAtti ippadi oru pOst keDaicchirukkumA? ithE vishayaththai, avangga vIttukkaarar ezuthiyirunthA eppaDi irukkumnu yOsicchup pArththen.. vEnAm vambu 🙂 ]

Marudhanayagam – Exclusive Pics – Lazy Geek

February 12, 2006 Leave a comment

எப்படி இருந்தாலும் படம் வரப்போறதில்லை.. நிழல்படங்களையாச்சும் பார்த்து சந்தோஷப்பட்டுக்கங்க 🙂