Archive
Google Page Creator
கூகுளாண்டவர், சொந்தமாக இணையப்பக்கம் உருவாக்கிக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மதியின் அறிமுகம் இங்கே. அந்தகாலத்தில் geocities, lycos, போன்றவர்கள் செய்த விஷயம் தானே இதுவும்? இல்லை என்றால் வேற ஏதாச்சும் திரிசமன் இருக்கிறதா? தெரியவில்லை..
வெங்கட்டுக்கு இதிலே ஏதோ அபிப்ராயபேதம் போலிருக்கிறது.
The Bird Flu Bible – Praveen K
சேரியமான H5N1 கிருமி கூட ப்ரவீணைப் படித்தால் ‘கோழியக் காணோம்; கொக்கரக்கோ கேக்கணும்’ என்று ஓடிவிடும். (எச்சரிக்கை: அலுவலில் படித்து சிரித்து மாட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது!)
Thambi Music Review
வித்யாசாகர் ஏமாற்றவில்லை என்கிறார் சுரேஷ்குமார். இரக்கமில்லாதவர் கூட ஆம் என்று வழிமொழிந்திருக்கிறார்.
Technology through woman's eyes – Thara
சில வருடங்களுக்கு முன்பு, ஆப்பிள் நிறுவனத்தின் Robin Abrams, ஐநா சபையில் பெண்களின் பார்வையிலான தொழில்நுட்பம் குறித்து நிகழ்த்திய உரையை, தாரா, தமிழில் தருகிறார், தன்னுடைய கருத்துக்களுடன் சேர்த்து…
Krish Srikkanth, Welcome
பாகிஸ்தான் தொடரின் வெற்றிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளின் வெற்றிக்கு ஆதாரமான ஒரு அணி உருவாகிவிட்டது என்கிறார் புதிதாக ஆங்கிலத்தில் வலைப்பதியத் துவங்கி இருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்..
History of Pi – Dilip D'Souza
“…….Archimedes was a great champion of method, and that’s the truly interesting thing about the history of pi. Typical of the man, he found a method to calculate pi to any desired degree of accuracy. Later mathematicians used his method to find closer approximations to pi than Archimedes ever did, but get this: it was 19 centuries before a completely new approach to the problem was found…….”
சுவாரசியமான பதிவு
Simone de Beauvoir – Podichi
“…..பாலியல் ஒடுக்குமறை என்பது ஒரு யதார்த்தமாகச் சூழ ‘இருக்கிற’போது, அதை மீறும் விழைபும் அந்த மீறலுக்கு துணையாகிற தந்திரங்கள், மோசடிகள், கயமைத்தனங்கள் என்பனவின் இருப்பும், யதார்த்தமானதே. ஆனால் எல்லாவிதமான ஒடுக்குமறைகளிற்கும் எதிரான குரல்களையும் மாற்றங்களையும் வரவேற்பதாய்ச் சொல்கிற, மனித உரிமைகளிற்கான குரல் கொடுப்பாளர்கள், “என்ற சொல்லப்படுகிற” முற்போக்காளர்கள், ‘இந்த’ விடயத்தில் மட்டும் “இரண்டு கை தட்டினால்தானே சத்தம்” என்கிற ரீதியான மகா கேவலமான புரிதலோடு தைரியமாய்(!) ‘நான்தான் முற்போக்காளன்’ ‘நான்தான் கலகக்காரன்’ ‘நான்தான் பெண்(ஈ)ணீயவாதி’ எனத் திரிவதாய் இருக்கிறார்கள், அன்றும் இன்றும் இனிமேலும் என, பெண்கள்தம் எதிர்காலத்தையெல்லாம் தம் ‘குப்பை’களைக் கூட்டி எரித்தபடி!…..”
மேலே வாசிக்க…
Theatre Nisha's 'THREE'
பெப்ரவரி 4,5 அன்று மேடையேறிய ‘மூன்று’ நாடகங்களுக்கு சென்றவரின் பதிவு. சிவகாமி பெத்தச்சி அரங்கம் ரொமபப் பெருசு போல?
The trilingual production consisted of three short stories – Mohabbat, The Quilt and Pooshanikaai Ambi. The first part was Bala’s monologue; since I am not a hindi pundit I refrain from commenting on that one. It was followed by “The Quilt” by Ismat Chugtai. The third part was “Pooshanikaai Ambi” by Pudumaipithan.
A walk thru Arab Street – Vidya
பராக்கு பார்த்து நிற்பது ஃபேவரிட் பொழுதுபோக்கு. சிங்கப்பூரின் வண்ணமயமான ‘அராபிய தெரு’வில் கையில் கேமிராவுடன் வலம் வந்திருக்கிறார்.
World's Best-Designed Newspaper(s)
கருத்தாழமிக்க செய்திகளை யார் அச்சடிக்கிறார்கள் என்பது விவகாரமான கேள்வி. அழகியல் ரீதியில் எந்த செய்தித்தாள் கண்ணைக் கவர்கிறது? (வழி: காப்ஸ்)
Recent Comments