Archive

Archive for March 2, 2006

Pakistan blocks Blogspot

March 2, 2006 Leave a comment

ப்ளாகர்.காம் சென்ஸார் செய்யப்பட்டதால் பாகிஸ்தான் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை. (வழி: தேஸிபண்டிட்)

  1. Shirazi (பாகிஸ்தானில் இருந்து)
  2. நேஹா (பாகிஸ்தானில் வசித்தால் எவ்வாறு ப்ளாக்ஸ்பாட் படிப்பது?)
  3. சத்யபிரகாஷ் (காரணம் என்னவாக இருக்கலாம்)

Vulnerability in Gmail – Anthony

March 2, 2006 Leave a comment

மெய்யாலுமே பதினாலு வயசுப் பயலா அல்லது என்னை மாதிரி டகால்டி வயசு காட்டுறானா என்று தெரியாட்டியும், சொல்ற மேட்டர் சீரியஸான நுட்பக் குறைபாடு. (வழி: ஸ்டீவ்)

Dynamic complaint generator – Keerthi

March 2, 2006 Leave a comment

சென்னையில் ரொம்ப ட்ராஃபிக்காமே? எங்கே போய் முறையிடுவது… புகார் கடிதங்கள் எழுதுவது குறித்து டோண்டுவும் அட்வைஸ் கொடுக்கிறார்.

GodFather Audio Wrapper – Prabhu

March 2, 2006 1 comment

‘கண்ணைப் பார் சிரி’, ‘பூச்சாண்டி கிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்’ என்றெல்லாம் பயமுறுத்துவாங்களே… அந்த மாதிரி ‘காட்ஃபாதர்’ ஒலிவட்டின் முகப்பு இருக்கிறதா?

அஜீத்தே பயந்து போய் ‘திருப்பதி’யை முன்னாடி ரிலீஸ் செய்கிறார் போல!

Zero Degree by Chaaru Nivethitha – Muthu

March 2, 2006 Leave a comment

சிதறல் ஸ்டைலில் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து, கதை சொல்லி, சாருவின் ஸீரோ டிகிரியையும் விமர்சிக்கிறார் ‘தமிழினி’ முத்து.

Broad gauge from Coimbatore – Radhakrishnan

March 2, 2006 Leave a comment

இந்திய இருவுள் வாயில் (Railway) அலுவல் மற்றும் வியாபாரத்துக்கும், மறுவழிப் பயணங்களுக்கும் (return journeys) சிற்றூர் பயணிகளுக்கும் பயன்படுமாறு மாறவேண்டும் என்று மானகைத் துறை (management field) துப்புகள் தருகிறார்கள் கோவைக்காரங்க…

ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் மக்களுக்கு ரயில் நிலையம் ‘தொலைவில்’ என்றாகிவிட்டது. விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. கோவை-பொள்ளாச்சிக்கு இடையே மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்கும்!

இந்த மாதிரி வடக்கில் செய்து இருவுள் வாயில் லாபம் ஈட்டிய செய்தியை தேசிகன் பகிர்கிறார்.

ஒரு சின்ன பிளாட்பாரம், நான்கு பென்ச்கள், குடிக்க ஒரு தண்ணீர் குழாய் என்று 8 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அதை ஸ்டேஷனாக ஏற்றுக்கொண்டு அதன் வழியாக போகும் ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த சம்மதித்தனர். இந்த ஸ்டேஷன் கட்டிய ஒரு வருடத்தில் 12,918 பயணிகள் ரயில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். ரயில்வேக்கு இதனால் கிடைத்த வருவாய் 1.5 லட்சம் ரூபாய்!

(தமிழாக்க வார்த்தைகள்: இராமகி)

TN Election Top 10 Movies – Dev

March 2, 2006 1 comment

சன் டிவி ஸ்டைலில் சிவகாசி, நட்புக்காக, தவமாய் தவமிருந்து படங்களில் இன்றைய அரசியல்வாதிகளை கொலுவிருக்க விட்டிருக்கிறார். அடுத்து அதிமுக வெளியீடுகள் வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Selvi Serial – Selvakkumar

March 2, 2006 5 comments

செல்வி சீரியலில் ராதிகாவுக்கு இது வரை மூன்று கணவர்கள். இப்படியே போனால் இன்னும் எத்தனை பேர் செல்விக்கு கணவனாக வருவார்கள்?  வாக்கெடுப்பு நடத்துகிறார் செல்வக்குமார்.

Categories: டிவி, பொது

From Chukku Kaapi to Cappuccino

March 2, 2006 3 comments

ஆங்கிலப் பதிவுகள் அதிகமாக இடம் பெறுகிறதோ என்று நண்பர் ஒருவர் குறை பட்டுக் கொண்டார்.

எனில், இது போன்ற பதிவுகளை யாரிடம் போய் பகிர்ந்து கொள்வது?

“….The first change in lifestyle for me occurred in Chennai. Chennai was completely different. Watching a movie for Rs.40 was a one time life experience for most people in my village. I had to adapt to such things since I had to be a part of the group. Otherwise you feel let out. My habits started changing. For example, you look into the glass before drinking water to check whether it is clean. I went to my first Coffee Pub in Chennai. I remember saying some time back “Loosu paya thaan Coffee publa poi mukkaa manineram wait panni oru black coffeeya 50 Ruba kaasu kuduthu kudippaan” – I did it….. “

ஒரே வார்த்தை… கலக்கல்!

( பரிந்துரை : பிரேமலதா )

Cinemasala

March 2, 2006 Leave a comment

ஒரு புதிய வலைப்பதிவு.

தன்னோட முதல் இடுகையிலே என்ன சொல்றார்ன்னா,

…நானும் உதவி இயக்குனர் தான் (சும்மானாச்சும்). கதைச் சொல்லப் போறேன்…அந்தக் கதையை நீங்க கேக்கப் போறீங்க..விருப்பம் இருக்கிறவங்க என்னோட கமெண்ட்ஸ் மூலமா டிஸ்கஷன் பண்ணப் போறீங்க. கதை எதைப்பத்தி வேணா இருக்கலாம். சொந்த கதை, சோக கதை, சுட்ட கதை, சுடாத கதை, அரைச்ச மாவு, இது வரை அரைக்காத மாவு, ரஜினிக்கு ஏத்த கதை, விவேக்குக்கு ஏத்த கதை, இப்படி எதைப் பத்தி வேணா இருக்கலம்.

அம்மா செண்ட்டிமெண்ட், தாலி செண்ட்டிமெண்ட கதை கூட செல்லலாம். ஆனா…வலைப்பதிவுல யாராவது முட்டை, ஆசிட் வீசினாங்கன்னா, நான் பொறுப்பில்ல

உங்களுக்கும் உதவி இயக்குனர் ஆசை இருக்கா, என்னோட சேர்ந்திடுங்க, ஒரு கூட்டுவலைப்பதிவா ஆரம்பிச்சிடுலாம்..

மேலே வாசிக்க…