Archive

Archive for March 7, 2006

Myth of Amen-Ra – Suresh M

March 7, 2006 Leave a comment

“அமென்-ரா” யார்? துர்தேவதையா… கட்டுக்கதையா… அதீத கற்பனையா?

Categories: பொது

Singapore Tamil Book Readers' Club

March 7, 2006 Leave a comment

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும்.

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் ஜெயமோகனின் ‘காடு‘ நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர்.

பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்‘ விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டது.

Women’s Day

March 7, 2006 Leave a comment

மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம். விடுதலைப்புலிகளின் மகளிர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது, என்ன காரணம் என்று தெரியுமா? கே டி குமரனின் விரிவான பதிவு.

Mahanadhi

March 7, 2006 5 comments

ஆரம்பத்தில் காவேரி, சென்னை கூவத்தில் முடிவு என்று நதியின் மூலம் கதாபத்திரத்தின் எண்ணவோட்டத்தை சொல்கிறார் ரேவா. எல்லாரும் கமலை கவன்னிக்கிறப்ப சதிஷ் துணை நடிகர்களுடன் தொடங்குகிறார்.

இப்போ இருக்கற உலகத்தில எல்லாம் மாறிப்போச்சு கிருஷ்ணா. ‘நேர்மை’ங்கற வார்த்தை கெட்ட வார்த்தை ஆயிருச்சு. நீ ஆத்திரப்படறதில அர்த்தமே இல்ல. பொறுமையா இருக்கக் கத்துக்க. இந்தா ‘பாரதியார் கவிதைகள்’.

அன்பே சிவம்‘ இப்பொழுதுதான் கவனிக்கப்பட்டது. சன் டிவியில் இன்று ‘மஹாநதி’ வருகிறது.

Europe Visit Experiences – Thilagabama

March 7, 2006 1 comment

14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க   சிந்திக்க  வைத்திருந்தது. சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத  சூழலை இங்கேயும் காண முடிகின்றது.

தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள்.

கவனித்ததை நுண்ணியமாக தமிழகச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

Destination Unknown (Agatha Christie) – Abhimanyu

March 7, 2006 Leave a comment

சாகத் துடிக்கும் ஹிலாரி, ஓலிவ் பெட்டெர்செனாக மாறி, தன் வாழ்க்கையின் இறுதி நாள் எப்பொழுது வரும் என்று தெரியாது தொடங்கும் பயணமே ‘UNKNOWN DESTINATION’ நாவல். புலனாய்வு கதைகளுக்கு பெயர்போன அகாதா கிறிஸ்டியின் படைப்பு.

சுருக் அறிமுகம்.

Newsvine

March 7, 2006 Leave a comment

TN Elections III – therthal2006 (Bala)

March 7, 2006 Leave a comment

கார்த்திக் சிதம்பரத்துக்கு சீட் வேணுமாம். இவருக்கு எதுக்கு எம்மல்லே சீட்டு, அப்பாட்ட சொன்னா, ராஜ்யசபா வழியாக அமைச்சரவைக்குள்ளேயே புகுந்துடலாமே? 🙂

more updates >>

A short Story – Ramanitharan Kandiah

March 7, 2006 2 comments

ஒரு படைப்பியல்வாலியின் இழக்கிய அனுபவங்கள்.

நான் கதை எழுதும் முயற்சியை கைவிட்டதற்கு இந்தக் கதையும் ஒரு காரணம். வாசிக்கும் போது மூச்சு முட்டி ‘பக்கெட்டை உதைப்பதற்கான’ வாய்ப்புகள் அதிகம். நிதானமாக வாசிக்கவும். 

[ஏப்ரல் 2000 இலே எழுதப்பெற்று, ஜனவரி 2005 இலே மீள் பிரசுரம் ஆனது.]

Tamil Book Club – Mathy

March 7, 2006 Leave a comment

கீற்றுக் கொட்டகை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வரிசையில், புத்தகங்களைக் குறித்த பதிவுகளின் தொகுப்பாக, ‘தமிழ் புக் கிளப்’ எனும் தொகுப்பு வலைப்பதிவை மதி துவங்கியிருக்கிறார்.
இத்தகைய முயற்சிக்குக் காரணமாக அவர்

“தமிழ்வலைப்பதிவுகளில் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். பலர், தாங்கள் வாசித்த புத்தகங்களைப்பற்றி பல அற்புதமான இடுகைகளை இட்டிருக்கிறார்கள். அம்மாதிரியான இடுகைகள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கின்றன. ஆனால், அந்த இடுகைகளைத் தேடி எடுப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. ஏதோவொரு வலைப்பதிவில் இந்தப் புத்தகம் பற்றிப் படித்திருக்கிறோம். நல்லதொரு அறிமுகம் அது. வாங்குவதற்கு முன்பு ஒரு முறை பார்த்துவிடுவோம் என்று எண்ணினாலும் சுலபத்தில் செயற்படுத்த முடியாது இருக்கும் “

என்றும்

கடந்த மூன்று வருடங்களில் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்பட்ட நூல் அறிமுகங்கள் ஏராளம். எல்லாவற்றையும் தனியொரு ஆளாகத் தேடியெடுப்பது முடியாத காரியம். நூல் அறிமுகங்கள், வாசக அனுபவங்கள், நூல்களில் இருந்து பக்கங்களைத் தட்டச்சிட்டுப் பகிர்ந்துகொண்டவர்கள் அவரவர் பதிவுகளில் எழுதியிருக்கும் இடுகைகளின் சுட்டிகளை இங்கே பகிர்ந்துகொண்டால் வரும் நாட்களில் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக (நேரம் கிடைக்கும்போது) உள்ளிடுகிறேன்

என்றும் சொல்கிறார்.

உருப்படியான முயற்சி. வாழ்த்துக்கள்