Archive
Google Maps Mars – Mugunth
இன்று கூகிள் பக்கத்தில் கவனித்திருந்தீர்கள் என்றால் அங்குள்ள கூகிள் சின்னத்தில் செவ்வாய் கிரகப்படம் இருப்பதைக் கண்டிருக்கலாம்.
அறியாத பெயராக இருக்கிறதே… Percival Lowell யாரு என்று யோசித்தபோது கைகொடுக்கிறார் முகுந்த். இது தொடர்பாக மோகன்தாஸின் சுருக்பதிவு.
Vettayaadu Vilayaadu – Sujatha
‘சுஜாதா ஒரு படத்துக்கு வசனமெழுதவில்லை என்றால் வசதி – இது போன்ற வெளிப்படையான விமரிசனங்கள் படிக்கக் கிடைக்கின்றன‘ என்று ஸ்ரீகாந்த் மீனாக்ஷி பாராட்டுவதற்கு ஏற்ற ‘வேட்டையாடு விளையாடு’ ஒலித்தட்டு வெளியீட்டு விழாக் குறிப்புகள்.
Missed SMS
யோசிப்பவர் மற்றும் கைப்புள்ளவின் குறுமொழிகள் மிஸ் ஆகாமல் சிரிக்க வைக்கும்.
Singapore Experiences – Azad
சிங்கப்பூரில் முஸ்தபாவின் வாசலில்தான் சுதந்திரமாகப் புகைக்க முடிகிறது. ஒரு டீ, ஒரு புகை, டீக்கடை பெஞ்சு என்னதான் வெளிநாடு சென்றாலும் எனது வழக்கம் மாறுமா? இரவு பன்னிரண்டு மணிக்கு முஸ்தபாவின் வாசலில் டீயை உறிஞ்சிக்கொண்டே லிட்டில் இண்டியாவின் சாலையில் இருக்கும் ஏகப்பட்ட இந்தியக் கடைகளின் பெயர்ப் பலகைகளைப் படித்துக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை.
ஆசாத்தின் முத்திரை நகைச்சுவையுடன் சிங்கப்பூர் பயணக்குறிப்புகள்.
Saudi Arabia Experiences – 'Calgary' Siva
‘இது நான் சந்தித்த சில மனிதர்களின் குணாதிசயைங்களைப் பற்றியது; அரேபிய நாடுகளின் சட்டதிட்டங்களை விமர்சரிக்க அல்ல‘ என்று சொன்னாலும் மனிதரை விட்டுவிட்டு மண்ணின் குணாதிசயங்களை எழுத முடியுமா?
5K VICHARTI (Think-tank) – Badri
The New Party VICHARTI in power will offer rupees 5000 every month to every Indian Citizen.
வலையக முகவரி VICHARTI என்னும் பெயரில்தான் சிக்கியதோ என்னவோ… கட்சி ஆரம்பிச்சுட்டாங்க. பத்ரி அலசுகிறார். என்னோட வாக்கு இவர்களுக்குத்தான்! வாங்க… அப்ளிகேஷன் போடலாம்.
Shivaji – Shreya – Sharjah : Dubaivaasi
சிவாஜி பட நாயகி ஷ்ரேயா நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்த போது, முழுவதும் தெலுங்கு அணிக்கே ஆதரவு தந்ததை அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதனால் எரிச்சலடைந்துள்ள தமிழ்நாட்டு நடிகர்கள், அவரை சிவாஜி தமிழ்ப் படத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்… 😀
ThamizManam Star Effects – Vinu Ranganathan
இந்த வார தமிழ்மண நட்சத்திரமாக இருப்பதனால் கிடைக்கும் பலாபலன்கள் ‘Butterfly Effect’ போல் எங்கெல்லாம் அதிர்வெழுப்புகிறது 🙂
2005 Food Blog Awards
சமையற்கலைக்காவே விருது கொடுத்து கௌரவிக்கிறாங்க. பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொன்றும் சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு வரப்பிரசாதம். (வழி: இந்திரா / கே)
Great Recipes in Action – Karthi Kannan
‘உங்க சமையல செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்’ என்றெல்லாம் நழுவாமல், பிறரின் குறிப்புகளை செய்து, படமும் பிடித்து எச்சிலூற வைக்கிறார். (பரிந்துரை: மொட்டைவிண்ணப்பம்)
Recent Comments