Archive

Archive for March 23, 2006

சமூக நலத்திட்டங்களைச் சந்தைப்படுத்தல்

March 23, 2006 3 comments

நாம் எல்லோரும் பல சமயங்களில் சமூக நலம் சார்ந்த விஷயங்களில் பங்களிக்கிறோம்.  சில சமயம் அதைப்ற்றிய பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறோம்.  சந்தைப்படுத்தலின் ஆதாரக் கோட்பாடுகளை எப்படி இலாப நோக்கமற்ற விஷயங்களிலும் கையாளலாம் என்று சொல்கிறார் மீனாக்ஸ்.

மறந்துபோன மாரியப்பா

March 23, 2006 Leave a comment

சுதந்திரப்போராட்டம், நாடகம், திரையிசை, தமிழிசை என்று பல துறைகளில் பிரபலமாயிருந்த எம்.எம். மாரியப்பாவை நமக்கு நினைவூட்டுகிறார் ரத்தினவேலு மேற்கொண்டார். மாரியப்பாவைப் பற்றி ஊர்ப்பெருசுங்க சொல்வதைச் சின்ன வயசில் கேட்ட ஞாபகம் இருக்கிறது.

Categories: இசை, பொது

A film on Ramanujan – Tilo

March 23, 2006 1 comment

The multi-million dollar film will be shot in Erode (where Ramanujan was born) and Kumbakonam (where he grew up) in Tamil Nadu, and in Cambridge where he spent five years.
Ramanujan returned to India in 1919, and died there a year later. His vegetarian diet in war-time Britain and the harsh winters took their toll on his health

மேலும்…

( திலோ வழியாக )

Suba Veera Pandian on Thambi Movie

March 23, 2006 4 comments

பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லாத சுப.வீரபாண்டியன், ‘தம்பி’ படத்தை எக்கச்சக்கமாகப் பாராட்டுகிறார்.. என்ன காரணம் என்று தெரியும் தானே?

MIES VAN DER ROHE – Pot"tea" kadai

March 23, 2006 Leave a comment

ஆர்க்கிடெக்சர்லே இத்தனை விஷயம் இருக்கா? அடேங்கப்பா…

மீஸ் வாண்டர் றொ (1886 – 1969) செருமனி, ஆச்சேனில் (Aachen) பிறந்தவர். கட்டுமானப் பணியில் தேர்ந்தவராக இருந்த அவரது தந்தையோடு பத்தொன்பது வயது வரையிலும், பின்னர் பெர்லினில் இருந்த கைதேர்ந்த கட்டிடக்கலை நிபுணராக இருந்த பீட்டர் பெஹ்ரன்ஸ் (Peter Beherens) அவர்களின் கட்டிடக்கலைக் கூடத்தில் நான்காண்டுகள்(1908 – 1912) பணி புரிந்தார்.அங்கே அவர் ப்ருஷ்ய (prussia) கட்டிடக்கலையின்பாலும்,புதிய மேம்பட்ட கட்டிடவடிவமைப்பின்பாலும் கொண்ட ஆர்வத்தினால் பெர்லினிலேயே தனக்கென்று ஒரு சிறிய கட்டிடக்கலைக் கூடத்தை அதே ஆண்டில்(1912) தொடங்கினார். பின்னர் ப்ருஷ்ய(prussian) கட்டிடக்கலை நிவுனரான கார்ல் ஃப்ரீட்ரிச் ஷின்க்கெல் அவர்களின் வடிவமைப்பின் மீது ஊக்கம் கொண்டு, அதை தன்னுடைய இரும்பு மற்றும் கண்ணாடிகளால் கூடிய வடிவமைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான இவரது கட்டிட வடிவமைப்புகளில் இரும்பும், கண்ணாடியும் பிரதானமாக இருந்தது.

மேலும்…

Thats the way they like it.. :-) – Srikanth Meenakshi

March 23, 2006 4 comments

ஹிந்துவில் வந்த ஒரு செய்தியின் தலைப்பு..

Congress hardens stand on DIC(K)

ஸ்ரீகாந்த் வழியாக

Kindey Sale Center – Narain

March 23, 2006 1 comment

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வறுமை காரணமாக, மக்கள் சிறுநீரக விற்பனையில் இறங்கியிருக்கிறார்கள். நாராயண் எழுதுகிறார்.

இந்திய கிராமங்களின் கதைகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மேலே சொன்ன விஷயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் நிலை. மஹாராஷ்டிராவில் ஷிங்காபூர், டோர்லி, லெஹேகான் மற்றும் ஷிவானி ரசுல்பூர் என்கிற நான்கு கிராமங்கள் பகிரங்கமாக தங்கள் கிராமங்களை விற்க முன்வந்திருக்கிறார்கள். பிற விவசாயிகள் தங்கள் கிட்னிகளை விற்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜூன் 2005லிருந்து இன்று வரை கடன் தொல்லை தாங்காமல் 309 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசின் பஞ்சு கொள்முதல் விலையில் ஏற்பட்ட மாறுதல்களும், உலக சந்தையில் ஏற்பட்ட சரிவாலும் இந்த நிலை.

மேலும்…
 

Categories: சமூகம்

CTS gives iPOd to employees

March 23, 2006 1 comment

Cognizant Technology Solutions, பிலியன் டாலர் நிறுவனமானதை முன்னிட்டு, தங்கள் ஊழியர்களுக்கு iPod ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. வாங்கிய எஸ்.ப்ரதீப், எழுதுகிறார்..