Archive

Archive for April 5, 2006

TN & Srilankan Fishermen, Border Issues – Vanthiyathevan

April 5, 2006 1 comment

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை இவ்விரு நாடுகளில் (குறிப்பாக இலங்கையில்) நடக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நிகழ்வுகள் நடந்த காலகட்டங்களைக் கொண்டு அலச ஆரம்பித்திருக்கிறார். பூராயமும் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

Categories: ஈழம், பொது

Veiled tears – Chameleon

April 5, 2006 Leave a comment

ஒரு தேவதையின் நகல் பனியில் உருகுவதைப் போன்ற
உணவிற்குப் பின் விரும்பிக் கேட்கப்படும் இசை போன்ற
விரும்பிய செயல்களைச் சாதனையாக எண்ணுவது போன்ற
யாரோ ஒருவருக்குத் தெரிந்த ஒரு உண்மையைப் போன்ற

நான் மறைக்கும் கண்ணீர்த் துளிகள்

Call center movie

April 5, 2006 Leave a comment

மிடி, ட்ராக், என்றெல்லாம் விளக்குவதற்கு நடுவில் பிபிஓ-க்களின் பிரதாபங்களை பரிகசிக்கும் படங்களைப் பார்க்க சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவராஜன். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)

Thambi, a dissection by Shoba Shakti

April 5, 2006 1 comment

அடேங்கப்பா…

தம்பி படத்தை, இத்தனை ஆழமாக, அகலமாக அறுத்துக் கூறு போட முடியுமா?

போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ?

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?

இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன?

சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை

லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ?

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்….

பொறி பறக்கிறது..  அப்பப்ப மூச்சு விட்டுப் படிங்க..

[சுப.வீர பாண்டியன் எழுதிய விமர்சனம்]

Why Not Stalin? – Naga.Elangovan

April 5, 2006 7 comments

இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை.அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது

குடும்ப அரசியல்  என்று சொல்லி ஊடகங்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து, ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனம் செய்வதை, புள்ளி விவரங்களுடன் ஒரு பிடி பிடிக்கிறார் நாக.இளங்கோவன்.

Write a script for Big B & Jackie Chan – Amutha

April 5, 2006 1 comment

கதை உடத்தெரியுமா உங்களுக்கு? டபுள் ஹீரோ சப்ஜெக்ட். ஐஸ்வர்யா ராய் & ஹாலி பெரி தான் நாயகிகள். இவங்களுக்குப் பொருத்தமாக ஒரு கதை சொல்லுங்க பார்க்கலாம்.. என்று சொல்கிறார் அமுதா

( படத்தை தயாரிக்கப் போவது யார் என்று சொல்லவே இல்லையே? 🙂 )

Apparsami Koil Street – Ammani Jr

April 5, 2006 6 comments

லஸ் கார்னரில் எடு ஒரு லெஃப்டு
நேரா போய்கீனே ராயப்பேட்டவுல லெஃப்டுல ஒரு கட்டு

அங்கதான் இருக்கு எங்க அப்பர்சாமி கோயில் தெரு
எங்க ஸ்ட்ரீட்டு விஐபி லிஸ்ட கொஞ்சம் பாரு

பக்கத்து வீட்டு பரூர் ஃபாமிலி
அவங்க வயலின் வாசிப்புல செம கில்லி

முழுசாப் படிங்க..

Categories: பொது

Epic Book on DMK Luminary – Rajni Ramki

April 5, 2006 3 comments

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை ஒரே புத்தகத்தில் அடக்கி, பின்னணியில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் கொணர்ந்திருக்கிறாரேமே! கலக்குறாரு…

'Kalyanamaam Kalyaanam' Ultaa Pulta – Sammatty

April 5, 2006 Leave a comment

Naanjil Naadan's Sathuranga Kuthiraigal

April 5, 2006 4 comments

கல்யாணமாகிவிட்ட கல்யாணியுடன் அவன் கொண்ட மிருதுவான காமம் நயமாகச் சொல்லியிருப்பார். "ஈரத் துணி கிடந்த தணுப்பும், இலேசான முதல் வியர்வையும், மிருதுவும் மெல்லிய வாசமும் குழைவும் கொண்டதாக இருக்கும் இந்தப் பெண்ணுடம்பு."

"குளித்துவிட்டு வந்தவள் கைகளை உயர்த்தி ஈரத் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். ஈரத்துணி மாற்ற உள்ளே போனாள். ஆம்பல் தண்டுபோல் பெண் உடம்பின் குளிர்ச்சி. தழுவலின் குழைவு. சந்தன சோப்பும் மஞ்சள் பொடியும் மூக்கில் ஏற்றிய வாசனையின் போதை. பேறுகளின் வெள்வரியோடிய அடிவயிறு. கருமை பரந்திருந்த காம்புகள். முதல் அடுக்குச்சதை மடியும் இடுப்பு."

மரத்தடியில் ரெகாவின் பதிவு.