Archive
'puthu' Gilli, An Announcement
இங்கே வருகிற நண்பர்கள் அனைவரும், கில்லியில் எடுத்துப் போடப்படும் சுட்டிகளில் ஏதாவது ஒன்றோ இரண்டோ க்ளிக்-கத்தகுந்தவையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்களே தவிர, கில்லி கோஷ்டியின் சொந்தக் கதை சோகக்கதைகளைக் கேட்க அல்ல என்பது தெரியும். இருந்தாலும், சில முக்கியமான தருணங்களில், நின்று பேச வேண்டியதாகிறது..
தமிழ்ப் புத்தாண்டில் இருந்து புது கில்லி ( இருங்க, இருங்க..சுட்டியைச் சொடுக்க வேண்டாம்..இன்னும் வேலை முடியவில்லை).
வலைமுகவரியைத் தவிர வேற மாற்றங்கள் ஏதும் கிடையாது. சரி, புது இடத்துக்கு சென்ற பிறகாவது, கொஞ்சம் உருப்படியாக இருக்குமா? கிடையாது. உருப்படியான, சீரியஸான விஷயங்களைச் செய்வதற்கு அனேகம் பேர் இருக்கிறார்கள். கில்லி is for fun. இன்றைக்கு மாதிரியே, என்றைக்கும் இதே தரத்தில் தான் தொடர்ந்து இயங்கும்.
இறுதியாக, சென்ட்டி-யாக சில விஷயங்கள். [ இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டே வாசிக்கவும். ஒரு effect க்காக..]
கில்லியின் இற்றைப்படுத்தப் பட்ட தலைப்புக்களை, தன் முகப்புப் பக்கத்தில், இடம் பெறச் செய்து, அதன் மூலம், அதிகமான வாசகர்களை பெற்றுத் தருகின்றதோடு மட்டுமல்லாமல், புதிய கில்லிக்கு இலவசமாக இடம் தந்து உதவிய தேன்கூடு இணையத்தளத்துக்கு முதல் நன்றி.
ஒரு டிசம்பர் மாத இரவில், விளையாட்டாய் மனதில் தோன்றிய எண்ணம், பாலாஜியின் துணையுடன் செயல் வடிவம் பெற்று, சுமார் 600 சொச்சம் இடுகைகளுடன் இந்த இடத்தில் நிற்கிறது. இத்தனை நாள் இந்த கில்லி ஆட்டம் ஓரளவுக்காவது சிறப்பாக நடந்தது என்று யாராவது நினைத்தால், அதற்கு கில்லி கோஷ்டி மட்டும் பொறுப்பல்ல. பிறருக்கு அதிகமாகத் தெரியாமல் ஆதரவும் உதவியும் தரும் நண்பர்களும் காரணம். அவர்களுக்கு நன்றி.
தவிர, அவ்வப்போது கில்லி பற்றி, தத்தமது பதிவுகளில் நல்லவிதமாக எழுதி, இமேஜை உயர்த்தி விடும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைகளை அனுப்பிவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தங்கள் பதிவுகளின் சைட் பாரில் நிரந்தரமாக இடம் தந்திருக்கும் மூக்கு சுந்தர் , Kaps , பிரேமலதா , ராமானுஜம் , சித்தார்த் , சன்னாசி , செந்தில் (jackofall), வித்யா , முகுந்தன் , ப்ரதிப் , ஷ்யாம் சுந்தர் , சந்துரு , ஆனந்த் , தமிழன் , ஸ்ரீகாந்த் மீனாக்ஷி போன்ற நண்பர்களுக்கும் நன்றி.
நியாயமாக, இவர்கள் அனைவருக்கும், backlink கொடுப்பதுதான் இணையமரபு, இருந்தாலும், கில்லியின் 'கொளுகை' அதற்கு இடம் தராது என்பதால், இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. தப்பா நினைச்சுக்க வேண்டாம்.
கடந்த சில நாட்களாக ஒழைச்சு ஒழைச்சு, ரொம்ப அசதி.. ஆகவே அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக்கு no updates. நாளை வழக்கமான நிகழ்ச்சிகள், வழக்கம் போலவே தொடரும், தமிழ் புத்தாண்டு வரை இங்கே, அதற்குப் பிறகு அங்கே
பிரகாஷ்
Kasi in FM Rainbow
காசி, ரெயின்போ பண்பலை அலைவரிசையில், தமிழ் இணையம் குறித்து, ஒரு தொடர் நிகழ்ச்சி அளித்து வருகிறார். இதைக் குறித்து காசி..
தமிழ் இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவுகள் மட்டத்தில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்கள் பற்றி இணையத்துக்கு வெளியே இயங்கும் ஊடகங்களில் அதிகம் தெரிவதில்லை. இயன்ற அளவு அத்தகைய ஊடங்ககளில் இந்த செய்திகள் வரச்செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அவற்றில் ஒன்று வானொலி மூலம் சுருக்கமாக சில செய்திகளை சொல்லுவது. அகில இந்திய வானொலியின் கோவை நிலைய இயக்குநர் கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களுடன் இதுபற்றி அளவளாவியபோது இதற்கு ஒரு வழிகிடைத்தது. அதன்மூலம் வாராவாரம் கோவையிலிருந்து ஒலிபரப்பாகும் ரெயின்போ எஃப்.எம். மூலமாக ஒரு உரையாடல் வடிவத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம்.
என்கிறார்..
அவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கோப்பு, புதிதாக ஆரம்பிக்கப்ட அவரது வலைப்பதிவில் கிடைக்கும்.
கேளுங்கள்.
Legalised Loving Period…
….என்றால் என்ன தெரியுமா? நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடைப்பட காலம். மீனாக்ஸ் மாதிரி ரொமாண்டிக்கான ஆளை பார்ப்பது சிரமம். வருங்கால மனைவியைச் சந்திக்கப் போய் வந்தவர் காதிலே, ' மாங்குயிலே பூங்குயிலே' பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறதாம்.
இருக்கும்வே 🙂 பின்னால பார்க்கத்தானே போறோம், வேற என்னல்லாம் பாட்டு கேக்கப்போவுதுன்னு..
Digital Cinema – UthayaKumar
டிஜிடல் திரைப்படத்தின் நுட்பங்களை எளிமையாக விளக்குகிறார் உதயகுமார் இங்கே..
Recent Comments