Archive
Web Links – Ravi Srinivas
தமிழகத் தேர்தல் அரங்கு, இட ஒதுக்கீடு, மேதா பட்கர், உலகமயமாதல், அமெரிக்காவும், குடியேற்றமும், இணையத்தில் சுதந்திரமும், கட்டுப்பாடும் என்று படித்த உரல்களைத் தட்டலாம்.
Parisu – PK Sivakumar
அப்படியெல்லாம் சுலபமாக அவனை மறந்துவிடுகிற நண்பன் இல்லை துரை என்பதும் அவனுக்குத் தெரியும். போக முடியாததற்கு அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானம் இது என்று அவனுக்குத் தோன்றியது.
பழைய ஞாபகங்கள் கொணர்பவை சந்தோஷமா துக்கமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் இனம்பிரித்து அறிய முடிவதில்லை.
மார்ச் 2006 மாத வடக்குவாசல் இதழில் – (இந்த இதழ் டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களால் நடத்தப்படுகிறது) – சிவக்குமாருடைய "பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்" என்ற கதையை பகிர்ந்து கொள்கிறார்.
கவனம் சிதறாமல் பயணிக்கிறது; ஆங்காங்கே எண்பதுகளின் க்ளிஷேக்கள் எட்டிப் பார்த்தாலும் இதமான நடையில் விறுவிறுவென நகரும் படைப்பு.
feminism – Selvanayaki
என்ன தெளிவான, தீர்க்கமான சிந்தனை..
சமூகத்தாலும், குடும்பத்தாலும். படிக்கலாம், பட்டமும் வாங்கலாம்; காரியதரிசியாகலாம், கலைத்துறையிலும் சாதிக்கலாம்;எழுதலாம், இலக்கியமும் படைக்கலாம்; ஆனால் இத்தனையிலும் அவளின் மனைவி, மருமகள் பதவிகளுக்கென்று உள்ள வேலைகளிலிருந்து,அடக்கமாக நடந்துகொள்வது வரை நிறைவேற்றியேயாக வேண்டும். அதைப் பொறுத்துத்தான் அவளின் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. பெருகிவரும் விவாகரத்துகளின் பின்னணியில் ஒரு நுட்பமான காரணமாக இன்றைய பெண்களின் மேற்சொன்ன "அடக்கம்" மீறுதலும் உண்டு.
முழுதும் வாசிக்க…
A letter in Warren Buffet Style – Meenaks
warren buffet பாணியில் ஒரு கடிதம். மீனாக்ஸ் எழுதுகிறார்.
ம்ம்ம்ம்ம்.
Gaanaa..Azad
வாள மீனுக்கு வெலாங்கு மீனுக்கு கல்யாணம்.. இந்தப் பாட்டை ஒருதரமாவது கேட்டிருப்பீர்கள். இது நிஜமாகவே கானா என்கிற இலக்கணத்துக்குள் அடங்குகிறதா? கானா கவிஞர் ஆசாத், பிரித்து மேய்கிறார் இங்கே ( உப செய்தி :இவர் கானா பற்றிய நூல் ஒன்றை எழுதியவர்)
மாப்பிள்ள வாளமீனு பழவேற்காடு தானுங்கோ(வ்)! – அந்த
மணப்பொண்ணு வெலாங்குமீனு மீஞ்சூரு தானுங்கோ(வ்)!'வரிகளில் உலகநாதன் சென்னைத் தமிழின் கானா மொழியை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார்.நாட்டியம், வாத்தியம் என்று இயைபுத்தொடையாக கானாவின் இலக்கணம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதான நாட்டியம்! – அய்ய
மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்!கானாக்களில் மரபாக எழுதப்படும் இன்னொரு உத்தி, 'டா' சேர்த்துக்கொள்வது.
Google's influence on Journalism, Good or Bad?
செய்திகளின் தலைப்புகள், வாசகர்களை, ஈர்க்கக் கூடியதாக இருக்கும் படி செய்தியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது கூகுள் தேடியந்திரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்கிறார்..
….news organizations large and small have begun experimenting with tweaking their Web sites for better search engine results. But software bots are not your ordinary readers: They are blazingly fast yet numbingly literal-minded. There are no algorithms for wit, irony, humor or stylish writing. The software is a logical, sequential, left-brain reader, while humans are often right brain…
Comedy Bazaar II – V for Vendakka, Vic Vega
சரி, படம் உங்களுக்கு புடிக்கலை,, அதுக்காக இப்படியாப் போட்டு வாருவது?
Comedy Bazaar I – Machi TV on Salman 'Shirtless' Khan's arrest
சல்மான் கான் கைது குறித்து பிரபுவின் மச்சீ டீவி வழங்கும் சிறப்புப் பார்வை, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
Recent Comments