Archive

Archive for October, 2007

Kalki Cartoons – Mu Ka & Karnataka

October 10, 2007 Leave a comment

Sonia Manmohan Congress Karunanidhi Govt MinorityKumarasamy Ediyurappa BJP JD Karnataka Ethics

Categories: Cartoons, Kalki, Politics

Tsunami Corruption charges – Nagapattinam collector takes action against NGO

October 4, 2007 Leave a comment

தொண்டு நிறுவனங்களுக்கு தடை :

நாகை கலெக்டர் அதிரடி

நாகப்பட்டினம் : சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டுவதில் முறைப்படி செயல்படாத இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சீர்காழி, கொட்டாய்மேடு கிராமத்தில் சுனாமி பாதித்த 165 குடும்பங்களுக்கு வீடு கட்ட “கேர் பிளான்’ தொண்டு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. நிர்ணயித்த காலத்திற்குள் வீடுகள் கட்டவில்லை. நாகை தெத்தி கிராமத்தில் 190 வீடுகள் கட்ட ” ஜாமியாத் உலமா ஹிந்த்’ என்ற தொண்டு நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. இதுவும் முறைப்படி பணியை முடிக்கவில்லை. இவற்றின் ஒப்பந்தத்தை ரத்து செய்து கலெக்டர் ஜவகர் உத்தரவிட்டார். இந்த நிறுவனங்கள் மறுவாழ்வு பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories: Uncategorized

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

October 4, 2007 Leave a comment

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’ 

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்: எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா: இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்: திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்: கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்: பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா: கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்: மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Categories: Uncategorized

Satire – Biodata & Cartoons

October 3, 2007 2 comments

kalki_rahul_sonia_gandhi_congress_role_party_position.jpgbjp_advani_kumudam_niranjan_bio_data_satire.jpg

Categories: Uncategorized