Archive

Archive for February 2, 2008

சற்றுமுன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் – இதுவரை: செய்தித் தொகுப்பு

February 2, 2008 Leave a comment

அமெரிக்காவில் உள்ள ஜனநாயக, குடியரசு கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலுக்கு தேர்வாகும் வேட்பாளர்கள், வரும் நவம்பர் 4ம் தேதி நடைபெறு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

இதுவரை நடந்த நிகழ்வுகள், முன்னேறியுள்ளவர்கள், இன்றைய நிலை மற்றும் ஆதரவளிப்போரின் தொகுப்பு:

Associated Press -  - washingtonpost.com

ஜனநாயக கட்சி சார்பில் ஹில்லரி க்ளிண்டன் முன்னிலையில் இருக்கிறார். இவர் நியு ஹாம்ஷைர், நெவாடா மற்றும் ஃப்ளோரிடாவை வென்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதியான பில் க்ளின்டனை கணவராகப் பெற்றிருப்பது சில தேர்தல் பிரசாரங்களில் ஆதாரமாகவும், சிற்சில இடங்களில் சறுக்கலாகவும் இருக்கிறது.

பெஃப்ரவரி ஐந்தாம் தேதி நடக்கும் தேர்தலில் குறைந்தது 11 மாகாணங்களை ஹில்லாரி வெல்லும் வாய்ப்பில் உள்ளதாக கணிக்கப்படுகிறது. அவை: அரிசோனா, அர்கன்ஸாஸ், கலிஃபோர்னியா, டெலாவேர், மாஸாசூஸ்டஸ், மிஸ்ஸௌரி, நியூ ஜெர்சி, நியு யார்க், ஓக்லஹொமா,டென்னிஸீ மற்றும் யூடா.

ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதியாகப் போட்டியிடுவதற்கு கிட்டத்தட்ட சரிசமமாகப் பொட்டியிடும் பராக் ஒபாமா, முதன் முதலாக நடந்த ஐயோவாவை வென்று சிறப்பாக துவக்கினார். தன்னுடைய நேர்மறையான பேச்சுகளினாலும், திறனான செயல்பாடுகளினாலும் ஹில்லாரி மற்றும் பில் க்ளின்டனின் பிரச்சாரத்துக்கும் பணபலத்துக்கும் சரிசமமாக ஈடுகொடுத்து, நியு ஹாம்ஷைரிலும் நெவாடாவிலும் மிகச்சிறிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

ஆப்பிரிக்க – அமெரிக்கர்களைப் பெருமளவில் கவர்ந்து தெற்கு கரோலினாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்தும் மாஸசூஸெட்ஸ் ஆளுநர் தெவால் பாட்ரிக் மற்றும் செனேட்டர் கென்னடி, முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கெர்ரி ஆகியோரின் ஆதரவைப் பெற்றும் தொடர்ந்து போட்டியில் ஹில்லாரிக்கு ஈடு கொடுத்து முன்னேறி வருகிறார்.

அலபாமா, கனெக்டிகட், ஜியார்ஜியா மற்றும் இல்லினாய் மாகாணங்களில் இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனினும், அது தவிர பெஃப்ரவரி ஐந்தாம் தேதி நடக்கும் கலிபோர்னியா, மாஸசூஸெட்ஸ், டென்னிஸி போன்ற இடங்களில் ஏதாவது ஒன்றையாவது ஹில்லரியிடமிருந்து தட்டிப்பறித்தால் வேட்பாளருக்கான வேட்டையில் வெற்றியடையலாம் என்று கருதப்படுகிறார்.

ப்ளோரிடாவின் வெற்றியைத் தொடர்ந்து குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கெயின் முன்னிலை வகிக்கிறார். அவரின் சொந்த இடமான அரிசோனா தவிர வட கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பல இடங்களை சொந்த இடமாக சொல்லும் மிட் ராம்னிக்கு யூடாவையும் மாஸசூஸ்ட்ஸையும் எளிதில் கைவசப்படுத்திக் கொள்வார் என்று கணிக்கிறார்கள்.

கிறித்துவத்தின் மேல் தீவிர பற்றுடைய தெற்கு அமெரிக்க மாகாணங்களை மைக் ஹக்கபீ வெற்றி பெறுவார் என்கிறார்கள்.

கலிஃபோரினியாவில் வெல்பவரே குடியரசு கட்சிகள் சார்பில் வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில் அந்த மாகானத்தின் கவர்னர் ஆர்னால்ட் ஷ்வாஸ்நேகரின் பரிந்துரை செனேட்டர் ஜான் மெக்கெயினுக்கு கிடைத்துள்ளது அவரின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது.

Getty Images - CNN

தொடர்புள்ள வலையகங்கள்:

1. BBC NEWS | Special Reports | Vote USA 2008

2. Election Guide 2008 – Presidential Election – Politics

3. NPR: Election 2008

4. Election Center 2008 – Election & Politics News from CNN.com

5. Elections – washingtonpost.com

Categories: America, Elections, Polls, USA