Goat Proverbs in Tamil :: Aaramthinai on Velladu
கால்நடை வளம் – ஆடு
————————————————————–
சுருங்கச் சொல்லி மக்கள் உள்ளங்களை ‘சுருக்’கெனத் தைப்பது பழமொழி.
விவசாயத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் பழமொழிகள் விளக்கப்படுகின்றன. இது ஓர் இலக்கிய அனுபவமாகவும் உங்களுக்கு அமையலாம்.
1. அக்கிரகாரத்துக்குள் ஓர் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.
2. ஆடி வந்தது, ஆட்டுக்கிடா செத்தது.
3. ஆடி வெப்பல் ஆட்டுக் கிடைக்குச் சமானம்.
4. ஆடு ஊடாடக் காடு விளையாது.
5. ஆடு காற்பணம், புடுக்கு முக்காற் பணம்.
6. ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை.
7. ஆடு கிடந்த இடத்தில் புழுப்புத்தானும் கிடையாது.
8. ஆடு திரிந்த இடமும், அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.
9. ஆடு கெட்டவன் ஆடித் திரிவான், கோழி கெட்டவன் கூவித் திரிவான்.
10. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
11. ஆடு கொடுக்காத இடையன் பசுவைக் கொடுப்பானா?
12. ஆடு கொடுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.
13. ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?
14. ஆடு தழை தின்பது போல.
15. இரண்டு ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம்.
16. ஆடு தீண்டாப் பாளையை மாடு தீண்டுமா?
17. ஆடு நனைந்தாலும் குட்டி நனையாது.
18. ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
19. ஆடு பயிர் காட்டும், ஆவிரை நெல் காட்டும்.
20. ஆடு மிதியாக் கொல்லையும், ஆளனில்லாப் பெண்ணும் வீண்.
21. ஆடு வைப்பதை விட ஆழ உழுவதே நலம்.
22. ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பாலில்லை.
23. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறும் தம்மா கும்மா, அந்தக் கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா.
24. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, இந்த மதி கெட்ட மாட்டுக்கு மூன்று கொம்பு.
25. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா?
26. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக்குட்டித் தீனிக்குப் பஞ்சமா?
27. ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டி தழுவுகிறதா?
28. ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா?
29. ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடமில்லையா?
30. ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டின் வயிறு நிறையாது.
31. ஆனைவால் பிடித்துக் கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா?
32. இனம் இனத்தோட, வெள்ளாடு தன்னோட.
33. எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா?
34. கண்டால் தெரியாதோ கம்பளி ஆட்டு மயிரை.
35. கம்பளி மூட்டையென்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.
36. கம்பளி மேல் பிசின்.
37. கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?
38. கம்பளியில் ஒட்டின கூழைப் போல.
39. கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்திருக்கிறதா?
40. கரடி கையில் உதை பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம்.
41. கரடிக்குப் பிடித்த இடமெல்லாம் மயிர்.
42. கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம்.
43. கலியாணப் பந்தலிலே கட்டின ஆடு போல.
44. காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறது போல.
45. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்பு போகாது.
46. குட்டிக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
47. குருடன் ஆடு மேய்க்க எட்டாளுக்கு வேலையா?
48. கொடாத இடையன் சினை ஆட்டைக் காட்டினது போல.
49. கொழுத்த ஆடு குட்டி போட்டாலும், வழுக்கட்டை வழுக்கட்டைதான்.
50. கோனான் கோலெடுக்க நூறாடும் ஆறாடாச்சுது!
51. சண்டை செய்யும் இரண்டு கடாக்கள் நடுவில், நரி நின்று நசுங்கினது போல.
52. செத்த ஆடு காற்பணம், சுமைக்கூலி முக்காற்பணம்.
53. செம்மறியாடு வெளியே ஓட, திருட்டு நாய் உள்ளே.
54. துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி, என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.
55. தொழுவம் புகுந்த ஆடு பிழுக்கை இடாமல் போகுமா?
56. நரிக்கு இடங் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும்.
57. நரிக்கு பெரிய தனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
58. பெருமைக்கு ஆட்டை அடித்து, பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.
59. முன்னே ஆட்டைப் பிடி, பின்னே மாட்டைப் பிடி.
60. ரெண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது.
61. வெள்ளாடு குழைகின்றது போல.
62. வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அலைந்ததாம்.
i need goat forming assistence
i need a goat forming assistance