Archive
Read – Nov 24, Monday
1. வாசகசாலையும் போதனா சுதந்திரத்தின் எல்லைகளும்
An Authoritative Word on Academic Freedom – Stanley Fish Blog – NYTimes.com: Stanley Fish discusses the merits of “For the Common Good: Principles of American Academic Freedom,” to be published in 2009 — two distinguished scholars of constitutional law, Matthew W. Finkin and Robert C. Post, that argues that academic freedom should be seen in the context of practical sense.
2. இராக்கிற்கு சுதந்திரம் கொணர்ந்த அமெரிக்காவும் இந்தியாவிற்கு விடுதலை தந்த பிரிட்டிஷாரும்
East India Company :: Book Review – ‘The Decline and Fall of the British Empire 1781-1997,’ by Piers Brendon – Review – NYTimes.com
3. பாரிஸ் என்றாலே புகைபிடித்தலுடன் மதுவருந்தல் அல்லவா?
Across France, Cafe Owners Are Suffering – NYTimes.com: “Business at Paris, declined after a smoking ban took effect.”
4. தாய்நாட்டின் குரல் கேட்கிறதா? முதல் தலைமுறையினர் இந்தியாவிற்கு திரும்பினால்?
The World – India Calling – NYTimes.com By ANAND GIRIDHARADAS
5. கத்தாரில் பெரும் பொருட்செலவில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அருங்காட்சியகம்
Museum of Islamic Art, in Doha, Qatar – NYTimes.com: There is nothing timid about the ambitions of the new Museum of Islamic Art that opens in Qatar next week.
மைத்ரேயன் :: Literature Critics: A Comparison between Tamil & Western World
பொதுவாக ஒரு நாகரிகம் தன் பழமையை இழந்து நவீன யுகத்துக்கு இழுத்து வரப்படும்போது நேரும் ஏராளமான சிதைவுகள், மறு உயிர்ப்புகள், புதுக் கனவுகள், காலியாகும் கூடுகள் என்று ஏதேதோ நடக்கும். இந்தக் காலத்தில் எழுந்ததுதான் மேலை உரைநடை இலக்கியம்.
ஏன் உரைநடை இலக்கியம் 16ஆம் நூற்றாண்டுக்குப்பிறகுதான் எழுந்தது என்பதே ஒரு வசீகரமான வரலாற்றுப் புதிர். அச்செழுத்து கிட்டிய பிறகுதான் அதைப் பொது ஜன இலக்கியமாகக முடிந்தது,
விலை குறைய ஆரம்பித்தது ஒரு புத்தகத்துக்கு என்பது ஓரளவு வசதி இருந்தவர் கூட அவற்றை வாங்க இடம் கிடைத்தது என்றெல்லாம் ஒரு புறமும், பொதுக் கல்வி மேற்கில் பரவ ஆரம்பித்ததும் பலதர மக்களிடம் எழுத்து பரவியதும் பொதுஜன இலக்கியம் எழுந்தது என்றும் ஒரு புறமும் என்று பல விதமான விளக்கங்களுண்டு.
இவை அனேகமாக பொதுப் புத்தி விளக்கங்கள்.
ஆழமான விளக்கங்களுக்கு வால்டர் ஓங் உடைய நூல்களைத் தேடிப் படிக்க வேண்டி வரும்.
இன்னொரு புறம் மக்கள் திரள் வரலாற்றை எழுதிய மார்க்சிய வரலாற்றாசிரியர்களான, எட்வர்ட் P. தாம்ஸன், ரேமண்ட் வில்லியம்ஸ் போன்றாரின் புத்தகங்களையும் படிக்கலாம்.
இந்த குழுவில் இன்னொருவரான பண்பாட்டு விமர்சகர் என்றறியப்படும் ரேமண்ட் விலியம்ஸ், வாழ்நாளில் ஒரு கணிசமான பகுதியை, முன்னைய தலைமுறை எஃப்.ஆர். லீவிஸ் உடைய சில கருத்துகளைத் தம் இலக்காக வைத்துக் கொண்டு அவற்றை அடைவதில் முனைப்பு காட்டினார் என்று எனக்கு இப்போது தெரிய வந்து வியப்படைந்தேன்.
இந்த புத்தகத்தில் பக்கம் 162 இல் இருந்து செல்லும் அத்தியாயத்தில் இதை நீங்கள் காணலாம் . Raymond Williams/ By Fred Inglis *chapter 8 pg 162 to 196 இல் விலியம்ஸ் எப்படி தன் நாவல்களை எழுதத் துன்பப்பட்டார் என்று காணலாம்.
*விலியம்ஸ் தன் நண்பர் எட்வர்ட் பா. தாம்ஸனைப் போலவே 19ஆம் நூற்றாண்டில் மாறிய பண்பாட்டின் கூறுகளை ஆய்ந்தவர். குறிப்பாக கிராமம் எதிர் நகரம் என்ற பண்பாட்டு முரண்களை ஆராய்ந்தவர். இணைப்புகளையும் தொட்டுக் காட்டத் தயங்காதவர். ஃபார்முலா மார்க்சிய அபத்தங்களை இந்த இரண்டு பேரும் தாண்டி யோசிக்கத் தெரிந்த மனிதர்கள். அதனால் ஃபார்முலா கட்சிகள் இவர் இருவரையும் ஒதுக்கியே வைத்திருந்தன.
இவர்களைப் போன்ற இலக்கியப் படைப்புகளில் ஊறி சமூக மாறுதல்களை வெறும் அரசியல் பொருளாதாரச் சட்டகங்களில் மாத்திரம் அடைத்துப் பார்க்காமல், பண்பாடு என்பதை ஒரு மனித வாழ்வின் அத்தியாவசியம் என்று எடுத்துக் கொண்டு ஆய்ந்த வரலாற்றாசிரிய / விமர்ச்கர் குறைவு. இந்தியாவில் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கும் ஒரு அற்பப்பார்வைதான் எங்கும் காணக்கிட்டுகிறது.
யூமா வாசுகி – கவிதை
இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்
ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.
Gulebagavally : TMS – Vhithazha Kalli Ellaam Viragu vetta pogaiyiley
குலேபகாவலி :: டி எம் சவுந்தர் ராஜன் – வித்தாழக் கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே கத்தாழக் காட்டுக்குள்ள கரடி வந்து துள்ளுதடி
Balepandiya :: TMS – Yaarai Enge Vaipadhu endru
பலே பாண்டியா :: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – டி எம் சவுந்தர்ராசன்: யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல
Endhan ponn vannamae :: Naan Vazha vaippen
எந்தன் பொன்வண்ணமே :: டி எம் சவுந்தரராசன் – சிவாஜி கணேசன் & ரஜினிகாந்த் :: நான் வாழ வைப்பேன்
Tharai mel Pirakka Vaithai :: Padagotti
தரை மேல் பிறக்க வைத்தாய் – எம்ஜியார் :: டியெம் சவுந்தரராஜன்
TMS :: Iravinil Aattam
டி எம் சவுந்தர்ராஜன் :: இரவினில் ஆட்டம்; பகலிலே தூக்கம்
En Annan – kadavul en kal aanan
கடவுள் ஏன் கல்லானான்? – ம.கோ. ராமச்சந்திரன் :: என் அண்ணன்: டி எம் சௌந்தரராஜன்
Kulamagal Radhai :: Ulagam Ithiley Adagundhu
உலகம் இதிலே அடங்குது :: குலமகள் ராதை – எம்.ஜி.ஆர். :: டி எம் சௌந்தர்ராஜன்
Recent Comments