Archive

Archive for January 7, 2009

Padikka

January 7, 2009 Leave a comment

3

30.11.08 தொடர்கள்

பூரி ஜகந்நாதர், பிஜு பட்நாயக், நவீன் பட்நாயக், பரதேசப் பாதிரியார் ஒருவரை எரித்த பஜ்ரங் தளத்துச் செயல்வீரர், இன்னும் யோசித்தால் ஒன்றிரண்டு கிரிக்கெட் மேட்சுகளில் இந்தியாவுக்காக விளையாடிய தெபாஷிஸ் மொஹந்தி என்று ஒரிஸ்ஸாவைப் பற்றி நாம் அறிந்த செய்திகள் எல்லாம் வெகு சொற்பமாக இருக்கும். ஆந்திரக் கரையைத் தவறவிடும் புயல்கள் மட்டும் வருஷத்துக்கு ஒருமுறை ஒரிஸ்ஸாவைக் கடந்துபோகும். அப்போது வெள்ள நிவாரணம் கேட்பார்கள். மழையற்றுப் போனால் பஞ்ச நிவாரணம். நம் நாட்டில் இருக்கும் ஒரிஸ்ஸாதான். ஆனாலும் நமக்குக் கொஞ்ச தூரம். இல்லையா?

இதுவே கலிங்கம் என்கிற அதன் பழைய பெயரில் சொன்னால் உடனே மரம் நட்டு, பசுமைத் தாயகம் அமைப்பதற்கு முந்தைய காலகட்டத்து அசோக மன்னரின் யுத்தம் ஒன்று நினைவுக்கு வரும். கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு வருடங்களுக்கு முன்னால் பிறந்து, ஆண்டு அனுபவித்து, வாழ்ந்து, இறந்துவிட்டு, பாடப்புத்தகங்களில் மறுஜென்மம் எடுத்த மன்னர்.

மற்றபடி நமக்கு ஒரிஸ்ஸா அத்தனை நெருக்கமில்லை. ஆனால், இலங்கை மக்களுக்கு அது நெருக்கம். அசோக மன்னரின் கலிங்க யுத்தத்துக்கு வெகுகாலம் முன்னாலிருந்து அவர்களுக்கு ஒரிஸ்ஸா என்கிற கலிங்கம் பரிச்சயம். வெகுகாலம் என்றால் கி.மு. 543. பின்னாளில் இலங்கையின் முதல் மன்னனாக முடி சூடவிருந்த விஜயன், ஒரிஸ்ஸாவிலிருந்துதான் அங்கே புறப்பட்டுப் போனான்.

இலங்கையின் வரலாறை விஜயனிடமிருந்துதான் நாம் பேசத் தொடங்கவேண்டியிருக்கிறது. இது ஒரு விசித்திரம். ராஜராஜ சோழன் மாதிரி இங்கிருந்து படை திரட்டிக்கொண்டு போய் கொடி நாட்டி, நல்லாட்சியோ என்னவோ அளித்து, சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் விஜயனுக்கு கலர்ஃபுல் வெற்றிப் பின்னணிகள் கிடையாது. ஒரு தண்டனைக் கைதியாக ஒரிஸ்ஸாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவன். அதுவும் சும்மா இல்லை. பாதித் தலைக்கு மொட்டையடித்து, கப்பலேற்றி அனுப்பிவைத்தார் அவனது தந்தையான அந்நாளைய கலிங்க மகாராஜா.

ஆதி இலங்கையின் சரித்திரத்தைச் சொல்லும் மகா வம்சம், இந்தப் பாதி மொட்டை விவகாரத்தைக் குறிப்பிட்டாலும், விஜயன் அப்படியென்ன பெரிய குற்றம் செய்தான், மொட்டையடித்து நாடு கடத்துமளவுக்கு என்று விரிவாக விளக்குவதில்லை. `விஜயன் தீயவன், அவனது தொண்டர்களும் தீயவர்கள்’ என்று ஒரு வரியில் முடித்துவிடுகிறது மகா வம்சம். நிறைய பொறுமையும் மாய யதார்த்த வகைக் கதை படிப்பதில் ஆர்வமும் இருந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். ஜாலியாக இருக்கும்.

விஜயனின் தாத்தா ஒரு சிங்கம். சிங்கமென்றால், நிஜமான சிங்கம். இன்றைய பங்களாதேஷும் அன்றைய வங்க தேசமுமான குறுநிலத்தின் ராஜாவுக்கும், அவரது கலிங்க தேசத்து மனைவிக்கும் பிறந்த பெண்ணொருத்தி, இந்த சிங்கத்தைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். இளவரசி ஏன் சிங்கத்தை மணந்தாள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. சோதிடர்கள் அப்படித்தான் கணித்து வைத்தார்கள். எனவே அவள் அப்படியே செய்தாள். தீர்ந்தது விஷயம்.

அந்த இளவரசி சிங்க ஜோடிக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. சிக பாஹு என்பது பையனின் பெயர். சிக சிவாலி என்பது பெண்ணின் பெயர்.

வெளியே வேறு பெண் கிடைக்கவில்லையோ என்னவோ. சிக பாஹு, தன் சகோதரி சிக சிவாலியையே பின்னர் திருமணம் செய்துகொண்டு, வரிசையாக இரண்டிரண்டாகப் பதினாறு ஜோடி பிள்ளைகள் பெற்றான். மொத்த ஸ்கோர் 32. அதில் மூத்தவன்தான் மகா வம்சம் குறிப்பிடும் விஜயன்.

வாலிப வயதில் விஜயன் மிகவும் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஒரு கொடுங்கோல் இளவரசனான அவனை, நாட்டு மக்கள் மிகவும் வெறுத்து, மன்னருக்கு மனு கொடுத்தனர். உங்கள் பிள்ளையென்று பார்க்காதீர். அவனுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து எங்களை ரட்சிப்பீராக.

பிள்ளைப் பாசத்தால் கொல்லாமல் விடுத்து, பதிலுக்குப் பாதி மொட்டை அடித்து, அவனது எழுநூறு தொண்டர்களுடன் கப்பலேற்றி அனுப்பி வைத்தார் மன்னர் சிக பாஹு. ஒரு கப்பல் அல்ல. மூன்று கப்பல்கள்.

ஒன்றில் விஜயனும் அவனது ஆள்படைகளும். இன்னொன்றில் அந்தக் கூட்டத்தின் மனைவிமார்கள். வேறொரு கப்பலில் குழந்தை குட்டிகள்.

மன்னர் எதற்காக இப்படி தனித்தனிக் கப்பல்களில் அவர்களை அனுப்பவேண்டும்? துரதிருஷ்டவசமாக இப்போது கேட்டுத் தெளிவு பெற வசதியில்லை என்பதால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். விஜயன் கோஷ்டி தென் இலங்கைக்கு வந்து இறங்கியது. அவனது மனைவியும் அவன் கூட்டத்தாரின் மனைவிமார்களும் மஹில தீபிகா என்ற தீவுக்குச் சென்று இறங்கினார்கள். அந்த அப்புராணி பிள்ளை குட்டிகள் நாகத்தீவில் வந்து இறங்கின என்று மகா வம்சம் குறிப்பிடுகிறது.

மகா வம்சம் சொல்வது ஒருபுறமிருக்க, விஜயனின் பூர்வீகமான `சிம்மபுரா’ என்கிற சிஹ புரா சமஸ்தானம் இந்தியாவின் மேற்கு மாகாணமான குஜராத்துக்குச் சமீபத்தில்தான் இருந்திருக்கிறது என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. சிந்து நதிக்கு அந்தப்பக்கம் அதாவது இன்றைய பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பிராந்தியங்களில் எங்கோ என்றும் சொல்லப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கூட காந்தார மண்ணில் (என்றால் ஆப்கனிஸ்தான். மகாபாரத சகுனி முதல் இன்றைய ஹமீத் கர்சாய் வரையிலான ஆட்சியாளர்களைக் கண்ட தேசம்.) சிம்மபுர ராஜ்ஜியம் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்துக்குத் துல்லியமான வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். என்ன ஆனாலும் விஜயன் இங்கிருந்து புறப்பட்டுத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறான் என்பது வரை சந்தேகமில்லை.

அப்படி அவன் இலங்கைக்குப் போய் இறங்கியபோது அங்கே யார் இருந்தார்கள்?
இதில்தான் ஆரம்பிக்கிறது விஷயம்.

விஜயன், இலங்கையின் முதல் மன்னன். அதில் சந்தேகமில்லை. இளவரசனாக இருந்தபோது அழிச்சாட்டியங்கள் செய்து அடித்துத் துரத்தப்பட்டாலும், அங்கே போய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, (அதற்கும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் ஒரு யட்சியைத் திருமணம் செய்துகொள்கிறான். பிறகு சங்க காலப் பாண்டிய இளவரசி ஒருத்தியை மதுரையிலிருந்து வரவழைத்து மணக்கிறான். யட்சர்களைக் கொன்று கடாசிவிட்டு ஆட்சிப் பீடத்தில் ஏறுகிறான்.) ஒரு மாதிரி நல்ல மன்னனாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறான்.

சிங்க தாத்தாவைக் கொன்ற அவனது தந்தையை ஊரில் சிகலா என்று மக்கள் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதே பெயரை அவன் தனக்கும் தன்னுடன் வந்த எழுநூறு வீரர்களுக்கும் அடையாளமாக வைத்துக்கொண்டான். சிகலா இனம்தான் பின்னர் சிங்கள இனமானது என்று சொல்வார்கள்.

இன்னொரு விதமாகவும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. பழைய கலிங்க ராஜ்ஜியத்தின் சின்னமும் கொடியும் சிங்கம். சிங்கத்தின் பேரனான விஜயன் இலங்கைக்குப் போனபோது அங்கே இரண்டு பூர்வகுடிகள் இருந்தார்கள். வடக்கே இருந்தவர்கள் நாகர்கள். தெற்கே இருந்தவர்கள் இயக்கர்கள்.

நாகர், நாக வழிபாடு, நாகர் கோயில் எல்லாம் நம் பக்கமும் உண்டு. அதுவேதான். ஆனால், அந்த இயக்கர்கள் என்னும் ஆதி இனம், இந்தப் பக்கம் எங்கும் கிடையாது. இலங்கையில் மட்டும்தான். `எலு’ என்ற ஒரு மொழியை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆக, சிங்கம் போய் எலுவுடன் ஐக்கியமாகிறது. சிங்களம் பிறக்கிறது. போதுமா?

மகா வம்சம் என்னும் இலங்கையின் ஆதி வரலாறைச் சொல்லும் நூல், தனியொரு மனிதரால் எழுதப்பட்டதல்ல. பவுத்தம் இலங்கையில் பரவிய காலத்துக்குப் பிறகு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புத்த பிக்குகளால் வாய் வழியாகவும் நாள் குறிப்பு வடிவிலும் சொல்லி, எழுதி வைக்கப்பட்ட பல கதைகளை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரா என்கிற புத்த பிக்கு தொகுக்கிறார். வெறுமனே தொகுக்காமல், பிரதிக்கு அவரே ஒரு எடிட்டராகவும் இருந்திருக்கிறார். ஆதிகால புத்த பிக்குகள் எழுதி வைத்ததெல்லாம் ஒரே வழவழா. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் கொஞ்சம் வெட்டி ஒட்டி சரி பண்ணித் தருகிறேன் என்று ஒரு முன்குறிப்பும் கொடுக்கிறார்.

அதன்படி பிஹாரிலிருந்து பவுத்தமும் ஒரிஸ்ஸாவிலிருந்து விஜயனும் புறப்பட்டு இலங்கையைத் தொடுகிறார்கள். புத்தரே ஒரு நடை இலங்கைக்குச் சென்று வந்ததாகக் கூட ஒரு கதை உண்டு. கதைதான். ஆதாரங்கள் ஏதும் கிடையாது.
இலங்கையின் ஆரிய ஊடுருவல் இவ்வாறாக அமைந்ததாக சரித்திரம் சொல்கிறது.

ஆரியம் ஒன்று இருந்தால் முன்னதாக அங்கே திராவிடம் இருந்தாக வேண்டுமல்லவா? முன்னர் சொன்ன நாகர் இனத்தவர்கள்தான் அவர்கள். தமிழ் பேசும் மக்கள். வட இலங்கை முழுதும் பரவி வசித்தவர்கள்.

விஜயன் கூட முற்று முழுதான தெற்குப் பக்கத்திலேயே செட்டில் ஆனதாகத் தெரியவில்லை. நடுவே மலைப்பகுதியில் கடம்ப நதியோரம் தோற்றுவிக்கப்பட்ட `அனுராதகாமம்’ என்கிற இன்றைய அனுராதபுரம்தான் இலங்கையில் முறைப்படி அமைக்கப்பட்ட முதல் குடியிருப்புப் பகுதி. அதற்கு வடக்கே உபதிஸ்ஸகாமம் என்று இன்னொரு குடியிருப்பு அடுத்தபடியாக. இந்த `காமம்’ ஒன்றுமில்லை. கிராமம் என்று இன்று நாம் சொல்வதன் அன்றைய வழக்கு. அவ்வளவே.

இந்த மாதிரி இன்னும் சில வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொண்டு விஜயன் ஆட்சியில் அமர்ந்தான். அவனுக்குப் பின்னால் அடுத்த கப்பல்களில் வந்த பெண்டுபிள்ளைகள் இறங்கிய தீவுகள், அங்கே அவர்களது நிலைமை பற்றியெல்லாம் மகா வம்சம் பெரிதாகக் கவலைப்படவில்லை. விஜயனே கவலைப்படாமல் அடுத்த திருமணங்களில் தீவிரமாகிவிட்ட பிறகு, மகா வம்சம் என்ன செய்யும்?

ஆக, கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விஜயனும் அவனது எழுநூறு ஆதரவாளர்களும் இலங்கையின் ஆதி குடிகளுள் ஒருவரான இயக்கர் இனப் பெண்களுடன் இணைந்து உருவாக்கிய சந்ததியே இன்றைய சிங்கள இனத்தவர்.

அந்த வகையில், இன்றைய இலங்கைப் பிரச்னை என்பது ஆதியில் தோன்றிய பாதி ஒரிஸ்ஸாக்காரர்களின் சந்ததியினருக்கும் மீதி இடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த முழுத் தமிழர்களுக்குமானதாகிறது.

4

விஜயன் வந்தான். ஆண்டான். இறந்தான். அப்புறம் ஒரு வருடத்துக்கு அங்கே மன்னன்

கிடையாது. பிறகு கி.மு. 504-ல் பாண்டு வாசுதேவன். அப்புறம் அபயா என்று

இன்னொரு மன்னன். அதன்பின் பதினேழு வருடங்களுக்கு மன்னர்கள் இல்லை.

மீண்டும் 437-ல் பாண்டுக அபயா.அப்புறம் முட சிவன். பிறகு தேவனாம் பிரியதிஸா.

உதியா. மகாசிவா. சூர திஸா. சேனா குதிகா. அஸேலா. எலரா. தத்த காமனி. சதா

திஸா. துலந்தனா. லஞ்சதிஸா. கல்லத நாகா. வட்டகாமனி. மகா சூலி மகாதிஸா.

கோர நாகா. திஸா. சிவா. வடுகா. தாகு பாதிக திஸா. நிலியா. அநுலா.

குடகண்ணதிஸா. பதிகபயா.

ஒரு மரியாதைக்காக இருபத்தெட்டு வினாடிகள் செலவு செய்து இந்தப்

பெயர்களையாவது வாசித்துவிடுங்கள். இந்த வரிசையில் இன்னும் பல பேர் உண்டு.

விஜயன் காலம் தொடங்கி, அடுத்த இருநூறு வருஷங்களுக்கு இலங்கையை

ஆண்டவர்கள் இவர்கள். மகா வம்சம், கர்மசிரத்தையாக இந்த மன்னர்களின்

கதைகளைப் பக்கம் பக்கமாக வருணிக்கிறது. அவர்கள் ஆண்டு அனுபவித்தது,

கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று, குடிமக்களை வாழவைத்தது வகையறாக்

கதைகளுக்கு இடையே, பவுத்தம் தழைத்த வரலாறைச் சொல்வதுதான் அதன்

அடிப்படை நோக்கம்.

பவுத்தத்திலுமேகூட சித்தாந்தங்களை மேலே வைக்காமல், பிட்சுக்களின்

முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதே மகா வம்சத்தின் குறிக்கோள். ஒரு

காலத்தில் யூதர்கள் மத்தியில் `ராஃபிகள்’ (Rabbi) எனப்படும் அவர்களுடைய

மதகுருக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை (இதைப்பற்றி `நிலமெல்லாம்

ரத்தம்’ தொடரில் விரிவாகப் பார்த்திருக்கிறோம். நினைவிருக்கிறதல்லவா?) இத்துடன்

எளிதாக ஒப்பிட இயலும்.

அரசன் என்ன தவறு செய்தாலும் பிட்சுக்களின் காலில் விழுந்துவிட்டால் போதும். `நீ

செய்த செயல் தீச்செயல் ஆகும். மரியாதைக்குரிய பிட்சுக்களுடன் சமரசம்

செய்துகொள். அவ்வாறு செய்தால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய்!’ என்று மிக நேரடியாக

இதனைச் சொல்லிவிடுகிறது மகாவம்சம்.

பவுத்தத்தின் அடிப்படைகள் என்று நாம் மிக மேலோட்டமாக அறிந்தவற்றிலிருந்தும்கூட

இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம் வேறுபட்டிருப்பதை இதனுடன் ஒப்பிட்டு

அறிய இயலும். வழிபாடு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் தொடங்கி

அரசியல், சமூகக் கட்டமைப்பு வரை இந்த வித்தியாசத்தைப் பல தளங்களில் உணர

முடியும். இன்றைக்கும் அதிபரை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர்களாகவே

இலங்கை பிட்சுக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும்

பிட்சுக்களைத் திருப்தி செய்யக்கூடியதா என்று பார்த்துப் பார்த்துத்தான்

மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தேவை என்று கருதினால் பிட்சுக்கள் எவ்விதத்

தயக்கமுமின்றி அரசியல் களத்தில் இறங்கிவிடுவார்கள். போராட்டங்கள்,

ஆர்ப்பாட்டங்கள், கண்டனத் தீர்மானங்கள், சில கொலைச் சம்பவங்களும்கூட.

மத ஆராய்ச்சி இங்கு நோக்கமல்ல என்றாலும், இலங்கையின் சரித்திரத்தைப்

பேசும்போது பவுத்தத்தின் வருகையும், அது தழைத்த விதத்தை அறிவதும்

இன்றியமையாதது.

பிட்சுக்கள் பவுத்தத்தைப் பரப்பினார்கள். மன்னர்கள் பிட்சுக்களை ஆதரித்தார்கள். எங்கும்

பவுத்த விஹாரங்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன. மூலைக்கு மூலை பிரமாண்டமாக

நிறுவப்பட்ட புத்தர் சிலைகள், அவரை நினைவுகூர்வதற்கு அல்லாமல், பவுத்தத்தின்

மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு

மன்னனும் எத்தனை விஹாரங்களைக் கட்டினான் என்பதைக் கொண்டு, அவனது சிறப்பு

பதிவு செய்யப்பட்டது. ஒருவன் திறமையான அரசனா இல்லையா என்பதைக் கூட,

அவன் எத்தனை விஹாரங்கள் கட்டினான் என்பதைப் பார்த்துத்தான் மகா வம்சம்

சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது.

கி.மு. 273-லிருந்து 232 வரை ஆண்டு, மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் நிகரற்ற

பேரரசராக அறியப்பட்டவர், அசோகர். அவருடைய மகனும் மகளும், கி.மு. 250

-லிருந்து 210 வரை இலங்கையை ஆண்ட தேவனாம் பிரியதிசா என்னும் மன்னனின்

காலத்தில் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து அங்கே பவுத்தம் பரவத்

தொடங்கியதாக இலங்கை சம்பந்தப்பட்ட பொதுவான சரித்திரக் குறிப்புகள்

சொல்கின்றன.

கலிங்க யுத்தம், அதன் வெற்றி, இறுதியில் அசோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம்,

பவுத்தத்தைத் தழுவியது, அதனைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டது பற்றியெல்லாம்

நாம் அறிவோம். அதன் ஓர் அத்தியாயம், அசோகர் தன் மகன் மகிந்தனையும், மகள்

சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தது. உடன்பிறப்புகள் இருவரும்

புத்தர் மெய்ஞானம் அடைந்த இடத்தில் இருந்த போதி மரத்தின் கிளை ஒன்றை

இலங்கைக்கு எடுத்து வருவதாக மகா வம்சம் கூறுகிறது.

இலங்கையில் பவுத்தம் தழைத்ததற்கு இச்சம்பவம் ஒரு மிக முக்கியமான தொடக்கம்.

சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி மகா வம்சம் இதனை விரிவாக வருணித்தாலும்,

அசோகருக்கு மகிந்தன் என்றும் சங்கமித்திரை என்றும் இரு குழந்தைகள்

இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அசோகர் காலக்

கல்வெட்டுகளில்கூடக் கிடையாது. ஆனால் என்ன செய்ய முடியும்? மகா வம்சம்

சொல்லிவிட்டால் இலங்கையில் அப்பீலே கிடையாது.

மகா வம்சம் விவரிக்கும் மன்னர் பரம்பரையில் சில தமிழ் மன்னர்களும் உண்டு.

ராஜராஜ சோழனுக்கு முன்னால் சோழ தேசத்திலிருந்து படையெடுத்துச் சென்று,

வென்று ஆண்டவர் உண்டு. ஆனால் முழு இலங்கைத் தீவையும் ஆண்ட ஒரே மன்னன்

என்று யாருமில்லை. எல்லோரும் பிராந்திய மன்னர்கள்தாம், சிற்றரசர்கள்தாம்.

அல்லது சற்றே பெரிய சைஸில் ஒரு மன்னன், பகுதி வாரியாக அவனுக்குக் கப்பம்

கட்டும் சிறு மன்னர்கள்.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களுடன்

இதனை ஒப்பிடலாம். தேசியம் என்கிற ஒற்றை உணர்வைப் பொதுவில் எதிர்பார்க்க

இயலாத சூழல். அது பின்னிணைப்பாகப் பிறகு சேர்ந்த கருத்தாக்கம். இங்காவது

ஔரங்கசீப் காலத்தில் காஷ்மீர் முதல் ஆந்திரப் பிரதேசம் வரைக்கும் ஒரே பேரரசு

பரவியிருந்தது. இலங்கையில் அம்மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய மன்னர்கள்.

நிறைய யுத்தங்கள். வாரிசு அரசியல்கள். மகா வம்சமே, நாகர் அரசர்கள் பற்றியும்

யட்சர் குல மன்னர்கள் பற்றியும் (இந்த யட்சர்தான்தமிழில் இயக்கர் ஆகிறார்.) பல

இடங்களில் குறிப்பிடுகிறது.

இலங்கைத் தீவு முழுவதையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்த முதல் மன்னனாக

ராஜராஜ சோழனைத்தான் சொல்லவேண்டும். கி.பி. 1018 முதல் 1055 வரையிலான

முப்பத்தேழு வருடங்களுக்கு இலங்கையில் சோழக்கொடி பறந்தது. ராஜராஜ சோழனும்

ராஜேந்திர சோழனும் அந்நாட்டு பள்ளிப் புத்தகங்களிலும்

இடம்பெறவேண்டியவர்களானார்கள்.

இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இலங்கையில் புலிக்கொடி கட்டுவதற்கு ராஜராஜ

சோழன் அங்கிருந்த சில தமிழ் மன்னர்களையும் வீழ்த்த வேண்டியிருந்தது என்பதைச்

சுலபமாகப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவார்கள். இலங்கையின் தமிழர் வாழும்

வடக்கு, சிங்களர் ஆளும் தெற்கு என்றெல்லாம் அவர் பிரித்து யோசிக்கவில்லை.

அந்நாளைய எல்லா மன்னர்களுக்கும் இருந்தது போன்ற ஒரே லட்சியம்தான். நாடு

பிடிக்கும் லட்சியம். நம் இனம், மாற்று இனம் என்றெல்லாம் சோழப்பெருந்தகை

பார்க்கவில்லை. ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்து அழைத்து வந்தாரா? அது போதும்,

போற்றிப் பாடடி பெண்ணே என்று சொல்லிவிடுவார்கள்.

முப்பத்தேழு வருடங்கள் என்பது சற்றே நீண்ட காலகட்டம்தான். இல்லையா? முழு

இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன், முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று

வாய் வலிக்கும் வரை புகழ்ந்து தள்ளிவிட்ட பிற்பாடு, அதனைத் தக்கவைத்துக்கொள்ள

அடுத்து வந்த யாரும் சரியாக அமையவில்லை. ஒரு சிங்கள மன்னன் தான் அந்தக்

காரியத்தைச் செய்தான்.

பெயர், விஜயபாகு. கி.பி. 1055 முதல் 1110 வரை மத்திய இலங்கையில் உள்ள

பொலனருவாவைத் தலைநகராகக் கொண்டு இந்த மன்னன் நிறுவிய ஆட்சி,

இலங்கையில் பவுத்தம் புத்துணர்ச்சி கொண்டு அதிவேகமாக வளர்வதற்கு ஒரு

காரணமானது. விஜயபாகுவின் பேரன் பராக்கிரமபாகு இன்றைக்கும் பாடப்புத்தகங்களில்

வசிப்பவர்.

பொலனருவாவிலிருந்து முழு இலங்கையையும் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள்

காலத்தில் பெரும்பாலும் மன்னர் குடும்பத்துத் திருமணங்களெல்லாம் தென்னிந்தியப்

பெண்களுடனேயே இருந்து வந்திருக்கிறது. இதன்மூலம் அன்னியப் படையெடுப்புகளைத்

தவிர்க்க நினைத்திருக்கலாம். தேசத்தின் உள் கட்டமைப்பை ஒழுங்கு செய்து கொஞ்சம்

நிம்மதியான நல்லாட்சி வழங்க உத்தேசித்திருக்கலாம்.

ஒரு விஷயம். அப்போதுகூட மன்னர் குடும்பத்துக்குள்ளே, பங்காளிகளுக்குள்ளே

பகையும் சண்டையும் இருந்ததே தவிர, மக்களுக்குள் பிரிவினை அல்லது ஒற்றுமை

பற்றிய சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லை.

பொலனருவா பேரரசுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அரசு என்பது

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மாகா என்கிற மாகன் என்னும் கலிங்க மன்னன்

நிறுவிய அரசு.

அதுநாள் வரை தெற்கிலும் மத்தியிலும் நிலைகொண்டுதான் மன்னர்கள்

ஆண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வடக்கு எல்லையில் கடலோர யாழ்ப்பாணத்தில்

மையம் கொண்டு முழு இலங்கையிலும் வீசிய புயல் என்று இந்த மன்னனின்

படையெடுப்பைச் சொல்லலாம்.

இந்த மாகனைத் தமிழ் மன்னன் என்று யாழ்ப்பாண சரித்திரங்கள் சொல்கின்றன.

கூடவே குழப்புவதற்குத் தோதாக `கலிங்கத்திலிருந்து வந்ததமிழ் மன்னன்’ என்றும்

சொல்கின்றன. கலிங்கம் என்றால் இன்றைய ஒரிஸ்ஸா.

1215 என்பது தமிழகத்தில் பாண்டியர் காலம். ஜடாவர்மன் குலசேகரப் பாண்டியன்

ஆட்சி புரிந்த சமயம். அந்த வருடம்தான் மாகன், யாழ்ப்பாணத்துக்கு வந்து

இறங்குகிறான். அடுத்த வருடமே இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜடாவர்மனுக்குப்

பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்துவிடுகிறான். கலிங்க_ பாண்டிய

யுத்தங்களின் நீட்சியாகவே இந்தப் படையெடுப்பை நாம் எடுத்துக்கொள்ள இயலும்.

கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மாகன் யாழ்ப்பாணத்தில் இருந்து முழு

இலங்கையையும் ஆண்டிருக்கிறான். இலங்கையின் சரித்திரத்தில் அநேகமாக

முதன்முதலில் மதம் சார்ந்த தீவிரவாதச் செயல்களை ஆரம்பித்துவைத்தவன் என்று

இவனைத்தான் சொல்ல வேண்டும். தேசமெங்கும் பல பவுத்த விஹாரங்களை

உடைத்து நொறுக்கியது, புத்தர் சிலைகளை நாசம் செய்தது, சிங்களப் பெண்கள்

கற்பழிப்பு என்று இருபது வருஷங்களையும் ரணகளமாகவே கழித்துவிட்டுப் போய்ச்

சேர்ந்தான்.

பிறகு பாண்டியர்கள் வந்தார்கள். ஜெயவீர சிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்று அந்த

மன்னனுக்குப் பெயர். 1260-ல் யாழ்ப்பாணம் வந்து இறங்கி, கிட்டத்தட்ட பாதி

இலங்கைக்கு மேல் கைப்பற்றி ஆட்சி புரிந்த இந்த மன்னனின் காலத்தில் இருந்துதான்

நாம் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்களைச் சற்று க்ளோசப்பில் பார்க்க முடிகிறது.

அவர்கள் முத்துக் குளித்தார்கள். விவசாயம் செய்தார்கள். படித்தார்கள். பக்தி

செய்தார்கள். சாதிக்கொரு வீதி அமைத்து ஒரு மாதிரி பிரபுத்துவ சமத்துவம்

பேணினார்கள். நல்லூரில் மட்டும் அறுபத்து நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்களும்,

ஒவ்வொரு சாதியினரும் வசிக்கத் தனித்தனிவீதிகளும் இருந்திருக்கின்றன. `மேனிச்

சுத்தம் பராமரிக்காத தீண்டாச் சாதியினரை’ இந்த வீதிகளுக்குள் விடாதபடியினால்தான்

1816-க்கு முன்னால் வரை இலங்கையில் வயிற்றுப்போக்கு நோயே யாருக்கும்

வந்ததில்லை என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம்

சொல்கிறது.

முகம் சுளிக்கவே வேண்டாம். சாதி விஷயத்தில் நமக்குச் சற்றும் சளைத்ததல்ல

இலங்கை.

1505-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்து சேரும் வரையிலான

அத்தீவின் சரித்திரம் என்பது பெருமளவு மன்னர்களின் சரித்திரமாகவே

எழுதப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பெரிதாக

அறிந்துகொள்ள இயலாது.

அந்த வருடம் ஃப்ரான்ஸிஸ்கோ டி அல்மெய்தா (francisco de Almeida) என்ற முதல்

போர்த்துக்கீசியர் இலங்கையில் காலெடுத்து வைத்தார். சுற்று முற்றும் பார்த்தவருக்கு

ஏழு தனித்தனி ராஜ்ஜியங்களாக இலங்கை சிதறுண்டு, சண்டையிட்டுக் கொண்டிருந்த

காட்சிதான் முதலில் உறுத்தியது. அப்புறம் கொழும்பு நகரில் வானளாவ உயர்ந்து

நின்ற கோட்டை.

அடடே, பிரமாதமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டார்.

5

07.12.08 தொடர்கள்
பாபர் இந்தியாவுக்கு வருவது பற்றி எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். படாதபாடு

பட்டு ஹிந்துகுஷ் மலையைத் தாண்டி அப்போதுதான் அவர் காபூலுக்கு வந்திருந்தார்.

இந்தப் பக்கம், அதே சமயம் போர்ச்சுக்கலில் இருந்து ஃப்ரான்சிஸ்கோ த அல்மெய்தா

(Francisco de Almeida) என்கிற வர்த்தகர் – மாலுமி – படைத்தளபதி,

இந்தியாவுக்கான போர்ச்சுக்கல் மன்னரின் பிரதிநிதியாக கேரளக் கடற்கரைப் பக்கம்

வந்து இறங்கினார். அநேகமாக கோழிக்கோடு. சரியாகத் தெரியவில்லை. ஆனால்

வருடம் சரியாக இருக்கிறது. 1505. வாஸ்கோடகாமா வந்து போனதற்குச் சரியாக ஏழு

வருடங்கள் கழித்து.

ஃப்ரான்சிஸ்கோவுக்கு அப்போது ஐம்பது வயதுக்கு மேலே. அவரோடு அவருடைய மகன்

லாரன்ஸோ த அல்மெய்தாவும் (Lourenco de Almeida), ஆயிரத்தைந்நூறு படை

வீரர்களும் கூட வந்தார்கள். இருபத்திரண்டு கப்பல்களில் வந்துகொண்டிருந்த அந்தக்

கூட்டத்தின் ஒரு பகுதி, தற்செயலாக திசை தப்பி இலங்கையின் தெற்குப் பகுதிக்குப்

போய்ச் சேர்ந்தது. ஒரு புயலடித்தது என்று வையுங்கள். ஃப்ரான்சிஸ்கோவின் மகன்

லாரன்ஸோ, அந்தக் கப்பல்களில் ஒன்றில்தான் இருந்தார்.

இந்தியாவானால் என்ன, இலங்கையானால் என்ன? தெற்கு ஆசியாவில் வியாபாரம்

என்பதுதான் அவர்களுடைய ஆரம்ப இலக்கு. ஆங்காங்கே ஆண்டுகொண்டிருக்கும்

மகாராஜாக்களுக்குப் பரிசுப் பொருள்கள் கொடுத்து மடக்கி, வர்த்தக ஒப்பந்தங்கள்

செய்துகொள்வது. பிறகு உட்கார்ந்து தொழில் நடத்த ஒரு கோட்டை கட்டிக்கொள்வது.

முடிந்தால் இடங்களை வளைப்பது. அப்படியே தொடர்ந்து, இடத்தைக்

கொடுத்தவர்களின் மடத்தைப் பிடுங்கினால் தீர்ந்தது விஷயம்.

புயலில் மாட்டி, தற்செயலாகத் தென் இலங்கைப்பக்கம் வந்து சேர்ந்த லாரன்ஸோ

குழுவினருக்கு, அவர்களே எதிர்பாராவிதமாக அங்கே பலமான வரவேற்பு இருந்தது.

ஜெயவர்த்தனபுரம் என்று அழைக்கப்படும் அன்றைய கோட்டையை (kotte)

தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்துகொண்டிருந்த மன்னர் வீர பராக்கிரம பாகு,

அவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்து நலம் விசாரித்து, பிசினஸ் பேச ஆரம்பித்தார்.

எனக்கும் லாபம், உனக்கும் லாபம் என்றால் எந்தப் பிரச்னையுமில்லை, நீ எதை

வேண்டுமானாலும் விற்றுக்கொள், பதிலுக்கு எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்

என்று சொல்லிவிட்டார்.

யார் தருவார் இந்த அரியாசனம்? லாரன்ஸோ, மன்னருக்கு வணக்கம் சொல்லி

விடைபெற்றார். பக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கிறது, இதோ வந்துவிடுகிறேன்

என்று புறப்பட்டு, உடனடியாகத் தன் தந்தைக்குத் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பினார்.

அழகான தேசம். இரண்டே இரண்டு இன மக்கள்தான் வசிக்கிறார்கள். ஒன்று தமிழர்கள்.

அவர்கள் வடக்கே இருக்கிறார்கள். மற்றவர்கள் சிங்களர்கள். இவர்கள் தெற்கு ராஜாக்கள்.

இருவருக்கும் நீண்ட பாரம்பரியம். நிறைய சரித்திரம். வளமான பூமி. நிறைய

விளைகிறது. நல்ல மழை. மொத்தம் ஆறேழு மன்னர்கள் கூறு போட்டு

ஆண்டுகொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாட்சிமை பொருந்திய நமது போர்ச்சுக்கல்

மன்னர் மானுவேல் ஐயா சமூகத்துக்கு (kingmanuel1 ) காலக்கிரமத்தில் கடுதாசி

போட்டுவிடுங்கள். இங்கே நமக்கு நல்ல வர்த்தக சாத்தியங்கள் உண்டு. சீக்கிரம்

நமக்கொரு கோட்டை கட்டிவிடப் பார்க்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு நடை வந்து

போவது நல்லது.

1518-ல் கொழும்பு நகரில் போர்ச்சுக்கீசியர்களின் கோட்டை உருவாகிவிட்டது.

வலுவான அடித்தளம். கோட்டைக்கு மட்டுமல்ல. அவர்களுடைய வர்த்தகத்துக்கும்.

மன்னரின் வாரிசுகள் மூன்று பேர் இருந்தார்கள். அப்பனைக் கொன்றுவிட்டு தேசத்தை

ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த உத்தம புத்திரர்கள். இந்த

மூன்று பேருடனும் தனித்தனியே போர்ச்சுக்கீசியர்கள் நல்லுறவு வளர்த்தார்கள். நான்

செய்வது வர்த்தகம். எனக்கு நீயும் முக்கியம். உன் பங்காளியும் முக்கியம். உனக்கு

வேண்டியதைக் கேட்டால் நான் தட்டாமல் செய்கிறேன். எனக்கு வேண்டியதை எடுத்துச்

சாப்பிட அனுமதித்தால் போதும். அப்படித்தான் அவர்கள் தெற்கே கடற்கரையோர சிறு

நகரங்கள் ஒவ்வொன்றாக வளைக்க ஆரம்பித்தார்கள்.

போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரத்துக்காகக் கொண்டுவந்திருந்த பொருள்களுடன் வேறு

ஒன்றையும் அங்கே எடுத்து வந்து அறிமுகப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். கிறிஸ்துவம்.

மன்னர்களுக்குக் கப்பமும் மக்களுக்கு அப்பமுமாக வளர்ந்த அவர்களது வர்த்தகம், ஒரு

கட்டத்தில் தென்னிலங்கை முழுதும் மிக வலுவான ஆதிக்கத்துக்கு அடிகோலியது.

முன்னதாக கி.பி. பத்தாம் நூற்றாண்டில் படகோட்டிக்கொண்டு வந்த அரேபிய

வர்த்தகர்கள் மூலம் இஸ்லாம் அங்கே பரவியிருந்தது என்றாலும், இந்தளவுக்கு அல்ல.

இத்தனை தீவிரமாக அல்ல. குறிப்பாக சிங்களப் பகுதியில் அல்ல.

சிங்கள மன்னர்களுக்கு அப்போதுதான் தமது பாதுகாப்பு குறித்த ஆரம்ப அச்சங்கள்

உருவாக ஆரம்பித்தன. போர்ச்சுக்கீசியர்களைப் பற்றிய அச்சம் மட்டுமல்ல. இன்னும்

பலர் வருவார்கள். எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். எந்த வேடம்

தாங்கியும் வரலாம். வர்த்தகர்களாக. நேரடி யுத்த நாட்டம் கொண்டவர்களாக. மதத்தின்

முலாம் பூசியவர்களாக.

ஏனெனில், உலகம் முழுதும் ஐரோப்பிய வர்த்தகக் குழுக்கள் புதிய புதிய தேசங்களைத்

தேடிப் புறப்பட்டிருக்கின்றன. தெற்குக் கடல் முழுதும் வர்த்தகக் கப்பல்கள். ஆங்காங்கே

அகப்படும் ஒவ்வொரு குட்டி ராஜாக்களுடனும் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு

உள்ளே வந்துவிடுகிறார்கள். எந்த ஒரு பரந்த நிலப்பரப்புக்குள்ளேயும்

ஆண்டுகொண்டிருக்கும் மன்னர்களுக்கிடையே ஒற்றுமை கிடையாது. சந்தர்ப்பம்

கிடைத்தால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துச் சாப்பிடத்தான் அத்தனை பேருமே ஆலாய்ப்

பறக்கிறார்கள். இந்த ஒற்றுமையின்மைதான் வருகிற விருந்தாளிகளின் மிகப்பெரிய

பலமாகிவிடுகின்றது.

வேறு வழியில்லை. இன்னும் சற்றுப் பாதுகாப்பான இடத்துக்குத் தலைநகரை மாற்றி

விடலாமே?

கண்டிக்கு (kandy) நகர்ந்தது அப்போதுதான் (1592). செங்கடகலபுரா என்றும் மகா

நுவாரா என்றும் முன்னாள்களில் அழைக்கப்பட்ட கண்டி, மத்திய இலங்கையில் உள்ள

மலை நகரம். பதினான்காம் நூற்றாண்டில் விக்கிரம பாகு என்னும் மன்னனால்

உருவாக்கப்பட்ட நகரம். அடர்ந்த மலைக்காடுகளால் சூழப்பட்ட சௌகரியமான இடம்.

உட்கார்ந்து ஆள்வதற்கு. யாரும் அத்தனை சுலபத்தில் படையெடுத்து வந்துவிட

முடியாது.

செங்கடகலபுரா என்னும் பெயரை உச்சரிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட

போர்ச்சுக்கீசியர்கள்தான் இந்த ஊருக்கு சுருக்கமாகக் `கண்டி’ என்று பெயர்

வைத்தார்கள். அவர்கள் எதற்கு உச்சரிக்க வேண்டும்? தெற்கு எல்லை முழுவதையும்

அவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்களே என்று அச்சப்பட்டுத்தானே மன்னர்பிரான்

தலைநகரையே இங்கே மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார்? இங்கும் துரத்திக்கொண்டு

வந்துவிடுவார்களோ? இலங்கை முழுதையும் தின்று தீர்த்துவிட்டுத்தான் ஓய்வார்களோ?

ஒருவகையில் அந்தக் கவலை நியாயமானது. கண்டிப் பேரரசுதான் இலங்கையின்

கடைசி சுதந்திரப் பேரரசாக விளங்கியது. போர்ச்சுக்கீசியர்களும், பின்னால் வந்த

டச்சுக்காரர்களும், துரத்திக்கொண்டு இன்னும் பின்னால் வந்து கொண்டிருந்த

பிரிட்டிஷ்காரர்களும் இலங்கையில் கால் வைத்த பிறகு மண்ணின் மைந்தர்களால்

பெரிய அளவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் பக்கம் சிங்கள மன்னர்கள்

என்றால், அந்தப் பக்கம் தமிழ் மன்னர்களின் கதியும் அதுவேதான்.

வியாபாரிகளாகத்தான் நுழைந்தார்கள். நுழைந்த வேகத்தில் வளைத்துப்போடும் வித்தை

தெரிந்திருந்தபடியால் வந்த இடத்தில் ஆள ஆரம்பித்துவிட்டார்கள். 1505-ல்

இலங்கைக்குள் அடியெடுத்து வைத்த போர்ச்சுக்கீசியர்கள் 1619-ல் யாழ்ப்பாணத்தைப்

பிடிக்கும் வரை சற்றும் ஓயவில்லை. நிறைய யுத்தங்கள். ஆங்காங்கே தோல்விகள்.

அடிக்கடி வெற்றிகள். கோட்டைப் பிடித்தல் ஒரு பக்கம், கிறிஸ்துவப் பரவல் ஒரு

பக்கம். வடக்கே சைவ ஆலயங்களும் தெற்கே பவுத்த விஹாரங்களும் மட்டும் இருந்த

இலங்கைத் தீவில் மூலைக்கொரு கிறிஸ்துவ தேவாலயம் உருவாகத் தொடங்கியது

போர்ச்சுக்கீசியர்களின் காலத்தில்தான்.

கண்டியைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய அந்த மத்திய இலங்கைப் பேரரசையும்

கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளையும்தான் அவர்களால் இறுதிவரை பிடிக்க

முடியாமல் இருந்தது. அப்படியும் விடாமல் முயற்சியைத் தொடர்ந்துகொண்டேதான்

இருந்தார்கள். கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளையும்

மலையகத்தின் ஒரு சில இடங்களையும் கொஞ்சகாலத்துக்கு ஆக்கிரமித்து

வைத்திருந்தார்கள்.

வியாபார நிமித்தமாகவே வந்தார்கள் என்றாலும் காலப்போக்கில்

போர்ச்சுக்கீசியர்களிடம் ஒரு கனவு உருவாகி திடமாக எழுந்து நின்றது. முழு

இலங்கைத் தீவு என்னும் பெருங்கனவு. இந்தியாவில், கோவாவைத் தலைமையகமாகக்

கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த போர்ச்சுக்கீசிய காலனி ஆட்சியின் ஒரு

விரிவாக்கமாகவே அவர்கள் இலங்கை ஆக்கிரமிப்பைப் பார்த்தார்கள். ணிƒ‡ணீபீஷீ பீணீ

மிஸீபீவீணீ என்றுதான் அவர்கள் இலங்கையையும் அழைத்தார்கள். என்றால்,

தங்களுடைய இந்திய மாகாணங்களுள் இன்னொன்று என்று பொருள். கோவாவில்

இருந்த போர்ச்சுக்கீசிய மன்னரின் வைசிராய் பெயரில் கொழும்புவில் ஒரு கேப்டன்

ஜெனரல் உட்கார்ந்துகொண்டு ஆட்சி புரிந்தார்.

இலங்கைத் தீவில் அதுநாள் வரை நடைமுறையில் இருந்த ஆட்சி அமைப்பு

முறைகளில் எல்லாம் அவர்கள் கைவைக்கவில்லை. தமிழர் – சிங்களர் என்னும்

முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனத்தவர்களை, அவரவர் கலாசாரப் பின்னணியுடன்

முற்றிலும் புரிந்துகொண்டவர்களாகவே அவர்கள் இருந்திருக்கிறார்கள். சமூகத் தளத்தில்

இருந்த சாதி அடுக்குகள், நிலச்சுவான்தார் முறைமை போன்றவற்றிலும் அவர்கள்

மாறுதல் ஏதும் செய்யவில்லை. என்ன ஒரே ஒரு விஷயம், கிறிஸ்துவ மதப் பரவல்.

அதை அவர்கள் சற்றே தீவிரமாகத்தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டும்.

கையோடு அழைத்து வந்திருந்த பாதிரியார்கள் பொறுப்பில் ஓர் இயக்கமாகவே அது

நடைபெற்றது. சில இடங்களில் நாசூக்காக. சில இடங்களில் அடாவடித்தனமாக.

தெற்கு இலங்கையில் குறிப்பாகக் கடலோர கிராமங்களிலும் நகரங்களிலும் மிக

வலுவாக கிறிஸ்துவத்தை வேரூன்றச் செய்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக முழுத்

தேசத்துக்கும் அதனைப் பரப்ப அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு நல்ல

பலனைக் கொடுத்தது. ஆனால் ஒப்பீட்டளவில் சிங்களர்களை மாற்ற முடிந்த மாதிரி,

தமிழர்களை அவர்களால் மாற்றமுடியவில்லை என்பதே சரித்திரம் நமக்களிக்கும்

கணக்கு.

அதே சமயம், சிங்களர்கள் மத்தியிலுமே கூட மிகப்பெரிய அளவில் இந்த மதமாற்றம்

நிகழவில்லை. போர்ச்சுக்கீசியர்கள் கொண்டுவந்த கத்தோலிக்க கிறிஸ்துவத்தைக்

காட்டிலும், அவர்களுக்குப் பின்னால் டச்சுக்காரர்களின் வழியே அறிமுகப்படுத்தப்பட்ட

ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவம் இன்னும் ஆழமாகப் பரவியது. கடலோர

மீனவர்களிடையே (சிங்கள, தமிழ் மீனவர்கள் என இருசாராரிடையேயும்) ரோமன்

கத்தோலிக்க மதம் எளிதில் ஊடுருவியது.

போர்ச்சுக்கீசியர்கள் சிங்கள தமிழ் மாகாணங்களில் நிறைய பள்ளிக்கூடங்களை

நிறுவினார்கள். மாணவர்கள் அளவிலிருந்து மதத்தைப் பரப்புவதுதான் அடிப்படை

நோக்கம். போர்ச்சுக்கீசிய மொழி, சிங்களம், தமிழ் என்று மூன்று மொழிகளிலும்

பாடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் சாதி அளவிலும் பொருளாதார

அடுக்குகளிலும் கீழே இருப்பவர்களாகக் கருதப்படுவோர், போர்ச்சுக்கீசிய மொழியை

அறிவதன் மூலமே மேல் சாதிக்காரராக மதிக்கப்படக்கூடிய நிலை உருவாகத்

தொடங்கியது. அரசாங்கம் அவர்களுக்குப் பல சலுகைகளைக் கொடுத்தது. வேலை

வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைத்தன. பல சிங்களர்கள் வீட்டிலேயே போர்ச்சுக்கீசிய

மொழி பேசத் தொடங்கிவிட்டதாகவும், தமக்கு போர்ச்சுக்கீசியப் பெயர்களை

வைத்துக்கொண்டு அழகு பார்த்ததாகவும்கூடச் சில சரித்திர நூல்கள் சொல்கின்றன.

சிங்களர்கள் அனைவரும் பவுத்தர்களாக இருந்த நிலைமை மாறி, கிறிஸ்துவம்

தீவிரமாகத் தீவில் பரவத்தொடங்கியதில், கண்டிப் பேரரசை ஆண்டு வந்த மன்னர்கள்

மிகவுமே கவலை கொண்டார்கள். யாராவது வந்து இந்தப் போர்ச்சுக்கீசியர்களை

வெளியே துரத்த மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு 1602-ம் ஆண்டு

ஜோரிஸ் ஸ்பீல்பெர்க் (joris spilberg) என்னும் டச்சு கேப்டன் வந்தபோது அப்பாடா

என்றிருந்தது.

6

11.12.08 தொடர்கள்

கிழக்கை ஆளும் சீமானே, உமக்கு நல்வரவு. பெரிய கொம்பனாமே நீர்?

கேள்விப்பட்டேன். பேயாட்சி புரியும் போர்த்துக்கீசியர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ,

அங்கெல்லாம் துரத்திச் சென்று உதைக்கும் உம் வீரத்தை மதிக்கிறேன். சுத்த வீரன்

என்று நம்புகிறேன். வாரும், நாம் நண்பர்களாவோம். உமக்கும் எனக்குமான பொது

எதிரி என் தேசத்தில் உட்கார்ந்திருக்கிறான். ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடமாக

அல்ல. சனியன், நூற்று முப்பது வருடங்களுக்கு மேலாக. அவன் ஒண்டவந்த பிடாரி.

நான் உள்ளூர்ப் பிடாரி. வியாபாரத்துக்காக வந்தான். பிழைத்துப் போ என்று விட்டது

பெரும்பிழை. முக்கால் தேசத்தைத் தின்று தீர்த்துவிட்டான் மிஞ்சியிருப்பது என்னுடைய

கண்டிப் பேரரசு. இதுவும் இன்றைக்கோ, நாளைக்கோ. நண்பா, நீ எனக்கு உதவி செய்.

பதிலுக்கு நான் உனக்கு பல உபகாரம் செய்ய முடியும். வருஷம் தோறும் இரண்டு

கப்பல்கள் நிறைய இங்கு விளையும் வாசனாதி வஸ்துக்களை அன்பளிப்பாக உன்

ஊருக்கு ஏற்றி அனுப்புகிறேன். எனக்காகப் போரிட்டு நீ பிடிக்கப்போகும் கோட்டைகளில்

ஏராளமான பொன்னும் பொருளும் உண்டு. மூட்டை மூட்டையாகப் பணமுண்டு.

போர்த்துக்கீசிய தேசத்திலிருந்து வர்த்தக நிமித்தம் கொண்டுவந்து குவித்திருக்கும்

சரக்குகள் அநேகம். அனைத்தையும் எடுத்து எண்ணிப் பிரித்து, உனக்குச் சரிபாதி பங்கு

கொடுத்துவிடுகிறேன். வெறும் வாய்ச்சொல் என்று நினைத்துவிடாதீர். இதோ எழுதி

எடுத்து வந்திருக்கிறேன். நீரும் உமது பங்குக்கு ஏதாவது நிபந்தனை போடுவதென்றால்

போடும். கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுகிறேன். பிறகு

கைகுலுக்கிக்கொள்வோம். அடுத்த முகூர்த்தத்தில் நாம் கொட்டப்போகும் போர் முரசு,

போர்த்துக்கீசியனுக்குச் சாவு மணியாக ஒலிக்கக்கடவது.

1638-ம் வருடம் மே மாதம் இருபத்து மூன்றாம் தேதி. நிச்சயம் நல்ல நாள்

பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பில் வைத்துக் கையெழுத்தான

கண்டிப் பேரரசுக்கும் டச்சுக்காரர்களுக்குமான இந்த ஒப்பந்தம், மிக நீண்ட இருபது

அம்சத் திட்டங்களைக் கொண்டது. போர்த்துக்கீசியர்களை ஒழிப்பது ஒன்று மட்டுமே

இலக்கு. மாட்சிமை பொருந்திய கண்டி மன்னர் ராஜசிங்கே இதற்காக எந்த

எல்லைக்கும் போகத் தயாராகிவிட்டதை அந்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது.

போர்த்துக்கீசியர்களின் கோட்டைகளை டச்சுப்படைகள் முற்றுகையிடத் தொடங்கிய

நிமிடத்திலிருந்து, அதிகாரிகள் முதல் படை வீரர்கள் வரை அத்தனை பேருக்கும் மாதச்

சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டார். வேளைக்குச் சாப்பாடு போட ஒப்புக்கொண்டார்.

அவர்களுடைய சுக சௌகரியங்கள் அனைத்துக்கும் முழுப்பொறுப்பேற்பதாக எழுதிக்

கொடுத்தார்.

மட்டுமல்லாமல், கிழக்காசிய நாடுகளில் உள்ள (அவர்கள் கிழக்கிந்திய நாடுகள்

என்பார்கள். இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான பிராந்தியங்களில்

அன்றைக்கு டச்சுக்காரர்கள் கொடிநாட்டியிருந்தார்கள். எல்லாம் அவர்களுக்குக்

கிழக்கிந்தியத் தீவுகள்.) டச்சு காலனிப் பகுதிகளிலிருந்து படை திரட்டிக்கொண்டு

வருவதற்கு ஆகிற போக்குவரத்து, பராமரிப்பு, மராமத்துச் செலவுகளில் ஆரம்பித்து,

இது தொடர்பாக டச்சுப் படையினரைக் குத்தகைக்கு விடுவதற்காக டச்சு கிழக்கிந்திய

கம்பெனியாருக்கு வருடாந்திரக் கப்பம் வரை எத்தனை செலவு!

இதில் நம்பமுடியாத ஒரே விஷயம், தங்களுக்கு உதவி செய்த கையோடு

டச்சுக்காரர்கள் காலி பண்ணிக்கொண்டு ஊர் போய்ச் சேருவார்கள் என்று கண்டி மன்னர்

நினைத்ததுதான்.

ஐரோப்பிய வரைபடத்தில் வட மேற்கு எல்லையில் இரண்டு முதலைகள் எதிரெதிரே

படுத்தபடி ஏதோ தீவிரமான உலக விஷயம் அல்லது காதல் பேசுவது போல்

தோற்றமளிக்கும் நெதர்லாந்து, அன்றைக்கு அதன் ஒரு பகுதியான ஹாலந்தின்

பெயராலேயே அழைக்கப்பட்டது. டச்சு மொழி பேசுகிற மக்கள் என்பதால் அம்மக்களை

டச்சுக்காரர்கள் என்று இந்தப் பக்கம் சொல்லுவார்கள். இலங்கைத் தமிழர்களின் நல்ல

தமிழில் ஹாலந்துக்காரர்கள், ஒல்லாந்துக்காரர்களாகிப் போனார்கள்.

போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டு

முழுதும் இலங்கைக்கு வெளியே, உலகெங்கும் அவர்களுக்கும்

ஹாலந்துக்காரர்களுக்கும் ஓயாத யுத்தம். எங்கெல்லாம் போர்த்துக்கீசிய காலனி

இருக்கிறதோ, அங்கெல்லாம் பக்கத்தில் உரசிக்கொள்ள ஒரு டச்சுக்காலனி வரும்.

இதையே மாற்றியும் சொல்லலாம். பகையென்றால் அப்படியொரு பகை. ஏன் பகை,

என்ன பகை, எதனால் பகை என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் நாம்

இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பாவுக்குப் போய்விடுவோம். 1568-ம்

ஆண்டு தொடங்கிய டச்சுப் புரட்சி, எட்டு வருட யுத்தம், ஸ்பெயின் மேலாதிக்கம், அதன்

உள் குத்துகள், போர்ச்சுக்கலின் வெளிக் குத்துகள் என்று என்னென்னவோ பார்க்க

வேண்டிவரும்.

அவசியமில்லை. டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் ஆகாது. தீர்ந்தது

விஷயம்.

எனவே, டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்கிற பெயரில் அப்போது இந்தோனேஷியா

பக்கம் மிக வலுவான தளம் அமைத்து ஆண்டுகொண்டிருந்த டச்சுக்காரர்களை

உதவிக்குக் கூப்பிடலாம் என்று கண்டி மன்னர் நினைத்த வகையில் சரி. அவர்களும்

வியாபாரிகளாக நுழைந்து ஆட்சியாளர்களாக உட்காருகிறவர்கள்தானே என்று ஏன்

யோசிக்கவில்லை என்பதுதான் புதிர்.

கூப்பிட்டுவிட்டார். பேசிப் பயனில்லை. ஒப்பந்தமும் ஆகிவிட்டது. இதில் கவனிக்க

வேண்டிய அம்சம், கண்டி மன்னரும் சிங்கள மக்களும் மட்டுமல்ல; இலங்கையில்

இருந்த தமிழர்களும் போர்த்துக்கீசியர்களை ஒழிக்க டச்சுக்காரர்களை அழைப்பதே சரி

என்று கருதினார்கள். என்ன விலை கொடுத்தாவது போர்த்துக்கீசியர்களைத் துரத்திவிட

வேண்டும். அப்புறம் வரக்கூடிய பிரச்னைகளை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

எனவே டச்சு கப்பல் படையின் கமாண்டர் ஆதம் வெஸ்டர்வல்ட் (Adam

westerworld) தலைமையில் ஒரு பெரும்படை வந்து மட்டக்களப்பில் இறங்கியது.

கண்டி மன்னர் ராஜ சிங்கேவின் படைவீரர்கள் அவர்களை `வருக வருக’ என

வரவேற்றார்கள்.

சிங்களர்களும் இதைத்தான் சொன்னார்கள், தமிழர்களும் இதைத்தான் சொன்னார்கள்.

எனவே, வந்தவர்களுக்கு அமோகமான மக்கள் ஆதரவு.

நிறையப் பேசினார்கள். போர்த்துக்கீசியர்களை வீழ்த்துவது என்பது சாதாரணமான

செயலல்ல. நிதானமாக, பொறுமையாக, அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டிய

விஷயம். என்னென்ன தடைகள் இருக்கலாம்? என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும்?

எங்கே தடுமாற்றம் வரும்? என்ன தீர்வு? இலங்கையின் நிலவியல். காலநிலை. நதிகள்

மற்றும் மலைகள் பற்றிய விவரங்கள்.

முதன் முதலில் இலங்கைத் தீவில் கால் வைத்த டச்சு வியாபாரி ஜோரிஸ் ஸ்பீல்பர்க்

தொடங்கி, படை கட்டிக்கொண்டு புறப்பட்ட நாள் வரை யார் யாரெல்லாம் வியாபார

நிமித்தம் இலங்கையைச் சுற்றி வந்திருந்தார்களோ, அத்தனை பேரையும் கூப்பிட்டுப்

பேசினார்கள். மக்களைப் பற்றிக் கேட்டறிந்தார்கள். மன்னர்களை, அவர்களது

இயல்புகளை, பங்காளிச் சண்டைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். சிங்களர்கள்,

தமிழர்கள் இடையிலான கலாசார வித்தியாசங்களைப் புரிந்துகொண்டார்கள். பவுத்தம்

எத்தனை ஆழமாக அங்கே வேரூன்றியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்தார்கள்.

போர்த்துக்கீசியர்கள் அறிமுகப்படுத்திய கத்தோலிக்கக் கிறிஸ்துவம், ஆளும்

வர்க்கத்தினரிடையே எம்மாதிரியான கசப்புணர்வை உருவாக்கி வைத்திருக்கிறது

என்பதையும் கண்டார்கள்.

இந்த அரிச்சுவடிப் பாடங்களையெல்லாம் படித்துவிட்டுத்தான் யுத்தத்துக்கே

தயாரானார்கள். அதற்குள் பகுதிவாழ் மக்களிடையே அவர்கள் நெருங்கிப் பழகத்

தொடங்கியிருந்தார்கள்.

மட்டக்களப்பு, திருகோணமலை, நெகாம்போ (negombo), கல்லே என்கிற காலி

(galle) நகரங்களில் இருந்த போர்த்துக்கீசியக் கோட்டைகளை வெகு அநாயாசமாக

டச்சுப்படைகளால் வெல்ல முடிந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம், அந்தப்

பிராந்தியங்களில் வசித்த மக்கள் அளித்த ஒத்துழைப்பு. ராஜசிங்கேவின் உதவியெல்லாம்

இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.

ஒப்பீட்டளவில் அன்றைக்கு போர்த்துக்கீசியர்கள் பலவான்கள். பதினாறாம் நூற்றாண்டில்

ஸ்பெயினும் போர்ச்சுக்கலும்தான் போட்டி போட்டுக்கொண்டு உலகைக்

கூறுபோட்டுக்கொண்டிருந்தன. மேற்கே தென் அமெரிக்கா தொடங்கி, கிழக்கே

இந்தோனேஷியா வரை உலக உருண்டையை லட்டுருண்டையாக எண்ணி

அவர்கள்தான் பரவலாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் டச்சுப் படைகளால்

இந்தோனேஷியாவிலும் இலங்கையிலும் போர்த்துக்கீசியர்களை வீழ்த்த

முடிந்திருக்கிறது.

நிற்க. மேற்படி நான்கு இடங்களில் டச்சுப் படைகள் வெற்றி கொண்ட கோட்டைகளுள்,

இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச்களினால் புகழ்பெற்ற காலி தவிர, பிற மூன்று பகுதிகளும்

தமிழர் பகுதிகள். கொழும்பு நகருக்கு வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர்

தொலைவில் இருக்கும் நெகாம்போவிலும் (தமிழர்கள் இதனை `க்’ போடாமல்

நீர்கொழும்பு என்பார்கள்.) அன்றைக்கே தமிழர்கள்தாம் மிகுதி.

கண்டி மன்னர், இந்தக் கோட்டைகள் டச்சுப் படைகளின் வசமானதுமே அவற்றை

அழித்துவிடும்படி கேட்டார். போர்த்துக்கீசியர்கள் கட்டிய கோட்டைகள். நமக்கெதற்கு?

வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டு விட்டபிறகு நிர்மூலமாக்கிவிடுங்கள்.

சிரித்தார்கள் டச்சுக்காரர்கள். எழுதிக் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பத்திரத்தை எடுத்துக்

காட்டினார்கள்.

மன்னர்பிரான் மன்னிக்க வேண்டும். ஒப்பந்தத்தை நீங்கள் சரியாகப் படித்தீர்களா?

பாதகமில்லை. இப்போது ஒருமுறை படித்துவிடுங்கள்.

நாங்கள் இங்கே போர் புரியும் காலத்தில் எங்களுடைய வீரர்களுக்கு நீங்கள் மாதச்

சம்பளம் கொடுக்க வேண்டும். கொடுத்தீர்களா ஒழுங்காக? எக்கச்சக்க பாக்கி.

மட்டுமல்லாமல் ஆண்டுக் கப்பத்திலும் சொச்சம் வைத்திருக்கிறீர்கள். ஒப்பந்தப்படி

என்னவெல்லாம் செய்கிறேன் என்று சொன்னீர்களோ, எல்லாவற்றிலும் ஏதாவது ஓர்

இடத்தில் தொடரும் போட்டுவிடுகிறீர்கள்.

நாங்கள் என்ன பாவம் செய்தோம்? பிழைத்தாக வேண்டுமல்லவா? போர்க்காலத்தில்

எங்கள் வீரர்கள் பல சமயம் உறங்கக்கூட ஓரிடமில்லாமல் காட்டிலும் மேட்டிலும்

நின்றவாக்கில் தூங்கி விழுந்திருக்கிறார்கள்.

இந்தக் கோட்டைகளெல்லாம் இருந்துவிட்டுப் போகட்டுமே? இன்னும் நாம்

பிடிக்கவேண்டிய கோட்டைகள் எத்தனையோ இருக்கின்றன. அதுவரைக்கும்

எங்களுக்கென்று நாலு குடிசை இருப்பதில் என்ன கெட்டுவிடப் போகிறது?

ராஜ சிங்கே முதல் முறையாக சந்தேகப்பட்டது இந்த இடத்தில்தான். ஒப்பந்தத்தை

மீண்டும் எடுத்துப் பார்த்தார். பண பாக்கி இருப்பது உண்மையே. ஆனால் எந்த

இடத்தையும் டச்சுப்படைகள் ஆக்கிரமித்து, தமதாக்கிக் கொள்ள அனுமதிக்கவில்லை.

இதென்ன புதுத் தலைவலி?

அடக்கடவுளே, மன்னர் இப்படி மாற்றிப்பேசலாமா? நீங்கள் எழுதி கையெழுத்துப்

போட்டுக்கொடுத்த பத்திரம் இதோ இருக்கிறது பாருங்கள் என்று டச்சுப்படைகள்

தரப்பிலும் ஒரு பத்திரத்தை எடுத்துக் காட்டினார்கள். இரு தரப்பும் கையெழுத்திட்ட

பத்திரத்தின் அச்சடிக்காத டச்சுப்பிரதி அது.

அதில் மட்டும் இன்னொரு பாயிண்ட் கூடுதலாக எழுதப்பட்டிருந்தது. கடலோரக்

கோட்டைகளை டச்சுப்படைகள் கைப்பற்றுமானால், அதை உரிமையாக்கிக்கொண்டு,

அங்கிருந்து செயல்படலாம்.

மீண்டும் சிரித்தனர் டச்சு தளபதிகள். ஒப்பந்தத்தில் தகிடுதத்தம் செய்து, மொழி

தெரியாத மன்னர்பிரானிடம் கையெழுத்தும் வாங்கி வைத்துவிட்ட பிறகு யார் என்ன

செய்ய முடியும்?

ஏமாந்து போனோம் என்று அப்போதுதான் புரிந்தது மன்னருக்கு.

டச்சுக்காரர்கள் தாமதிக்கவில்லை. அடுத்தடுத்து போர்த்துக்கீசியக் கோட்டைகளை

அவர்கள் உக்கிரமாகத் தாக்கினார்கள். விழும் கோட்டைகள் ஒவ்வொன்றிலும் தமது

படைகளை நிறுத்தி, தமதாக்கிக்கொண்டார்கள். கண்டி மன்னர் பார்த்துக்கொண்டே

இருந்தார். வேறொன்றும் செய்வதற்கில்லை.

போர்த்துக்கீசியர்கள் சோர்ந்துபோய்க் கிளம்பியபோது இலங்கைத் தீவு டச்சுக்காரர்களின்

வசமாகியிருந்தது.

அப்போதும் கண்டி மட்டும் மிச்சமிருந்தது.

7

14.12.08 தொடர்கள்

காகத்தின் வடையை நரி கவர்ந்து கொண்ட பிறகு காகத்தால் ஒன்றும் செய்ய

இயலாதுதான். ஆனாலும் கோபம் இல்லாதிருக்குமா? ஒரு வாய்ப்புக் கிடைத்தால்

கொத்திக் குதறியெடுக்கும் ஆங்காரம் இல்லாமல் இருக்குமா? கண்டி மன்னர்

ராஜசிங்கே காகமல்ல. உறுமீன் வருவதற்குக் காத்திருந்த கொக்கு.

தான் ஏமாற்றப்பட்டுவிட்ட கோபமும் இயலாமையும் அவரை மிகவும்

வாட்டிக்கொண்டிருந்தன. கூடவே ஓர் அச்சமும் இருந்தது. கையெழுத்துப்

போட்டுக்கொடுத்த ஒப்பந்தத்தில் டச்சுக்காரர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்று

அந்நாளில் எந்த சர்வதேச நீதிமன்றத்தில் போய் வழக்குத் தொடர முடியும்? அப்படியே

மத்தியஸ்தத்துக்கு யாரை அழைத்தாலும் இந்தப் பக்கமும் கேள்விகள் வரும். நீ ரொம்ப

ஒழுங்கா? யோக்கியமா? சொன்னபடி டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு நீ கட்டவேண்டிய

கப்பங்களைக் கட்டினாயா?

உண்மையில் அன்றைக்குக் கண்டி கஜானாவில் பணமில்லை. பணம் என்றால் தங்கம்.

அதைக்கொண்டுதான் பிசினஸ். ஏடாகூடமான இருபது அம்ச நிபந்தனைகளுக்குக்

கட்டுப்பட்டு, யுத்த காலமெல்லாம் படியளந்துகொண்டே இருந்ததில், பணம் வற்றிப்

போனது. யுத்தச் சாக்கில் இலங்கைக்கு வந்த டச்சுக்காரர்கள் சகட்டுமேனிக்கு அங்கு

விளையும் அத்தனை பயிர்களையும் அள்ளியெடுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.

கேட்டால் நல்லுறவு. நட்பின் சின்னம். மேலும் கேட்டால், ஒப்பந்தத்தைப் பார்.

தடையற்ற வர்த்தகத்துக்கும் சேர்த்துத்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறாய். பாயிண்ட்

நம்பர் ஒன்பது, பன்னிரண்டு, பதின்மூன்று.

உண்மையில், நடந்தது வர்த்தகமல்ல. கொள்ளை. மேற்கொண்டு இதனை

விவரித்துக்கொண்டிருப்பது வீண்.

டச்சு கிழக்கிந்தியப் படைகளின் உதவி கமாண்டர் வில்லியம் ஜேக்கப் கோஸ்டர்

(William Jacobsz Coster) என்பவர்தான் இந்தக் கோட்டை பிடிப்பு வைபவங்களை

முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஒருநாள் சாவகாசமாகப் புறப்பட்டு

கண்டிக்குப் போனார்.

மன்னரைப் பார்த்து குத்தகை பாக்கி, சம்பள பாக்கி விவகாரங்களைப் பேசித் தீர்க்கலாம்

என்று எண்ணம். கண்டி மன்னருக்கோ கோஸ்டரைப் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது.

என்ன பேசுவது? எத்தனை பேசினாலும் கையில் பணமில்லை என் றால்

இல்லைதான். கொள்ளையடிக்கவா முடியும்? அதைத்தான் டச்சுக்காரர்கள்

செய்துகொண்டிருக்கிறார்களே?

மன்னர் பெருமானே, நீங்கள் இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படலாகாது. ஒப்பந்தப்படி

நீங்கள் எங்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். நாங்கள் என்ன வேலை வெட்டி

இல்லாமலா இலங்கைக்கு வந்து யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறோம்? எங்களுக்குச்

சேரவேண்டியதை நீங்கள் கொடுத்துவிட்டால் நாங்கள் ஏன் உங்கள் ஊரில்

உட்கார்ந்துகொண்டிருக்கப் போகிறோம்? வந்தோமா, வியாபாரத்தைப் பார்த்தோமா,

புறப்பட்டுப் போனோமா என்று இருந்துவிட்டுப் போகிறோம். ஏதாவது ஒன்று

சொல்லுங்கள். எப்போது பணம் வரும்? மொத்தமாகவா, தவணைகளிலா? என்றால்,

எத்தனை தவணை? நீங்கள் கொடுப்பதைப் பொறுத்துத்தான் மேற்கொண்டு யுத்தத்தைத்

தொடர இயலும். ஆ, மறந்துவிடப் போகிறேன். நேற்றைக்குத் திருகோணமலை எங்கள்

படையின்வசம் வந்துவிட்டது. அந்தக் கோட்டையை நான் நல்லெண்ண அடிப்படையில்

உங்களுக்கே விட்டுக்கொடுத்துவிடுகிறேன். எங்கள் படை அங்கே இருக்காது. நீங்களும்

சொன்ன வாக்கு மாறாமல்….

அந்தக் கணம் கண்டி மன்னர் ராஜசிங்கே ஒரு முடிவெடுத்தார். மிகவும் அபத்தமான,

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட, பிரச்னைக்குரிய முடிவு. கோஸ்டரைக்

கொன்று விடலாம்.

கண்டிக்கு வந்தபோது கோஸ்டர் ஏழெட்டு வீரர்களுடன்தான் வந்திருந்தார். அதைச்

சாதகமாகப் பயன்படுத்தி, தீர்த்துக் கட்டிவிட்டால் என்ன? ராஜசிங்கே மிகத் தீவிரமாக

யோசித்தார்.

பேச்சுவார்த்தை ஒன்றும் முற்றுப்பெறாத நிலையில், மன்னர் அவரிடம் திரும்பத்

திரும்ப ஒரே விஷயத்தைத்தான் சொன்னார். கொஞ்சம் பொறுங்கள். பணம்

தந்துவிடுகிறேன்.

அவநம்பிக்கையுடன் புறப்பட்டுப் போன கோஸ்டரை வழியில் மடக்கினார்கள் மன்னர்

அனுப்பிய ஆட்கள். அது இருக்கும் ஒரு நானூறு ஐந்நூறு பேர். ஒரு படையாக

வந்தார்கள். படை முதலியார் (என்றுதான் அன்று அழைப்பார்கள். தளபதி என்று

பொருள்.) நட்புடன் புன்னகை செய்தபடி முன்னால் வந்து கோஸ்டருடன்

கைகுலுக்கினார். உங்கள் பாதுகாப்புக்காக மன்னர் எங்களை அனுப்பிவைத்தார்.

புறப்படலாமா?

அப்பாவி அல்லது அசட்டு கோஸ்டர் அவர்களை நம்பிப் புறப்பட்டதுதான். பிறகு அவரது

உடல் மட்டக்களப்பு டச்சுக்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறான இருதரப்பு நட்பு, ஓங்கி உலகளந்து உத்தமன் பேர் பாடி உயிர்த்திருந்த

காலத்தில், இலங்கையில் போர்த்துக்கீசியர்களின் காலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு

முடிவுக்கு வரத் தொடங்கியது.

போர்த்துக்கீசியர்கள் காலத்தில் அதிகமும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்

கடற்கரையோர மக்கள்தான். குறிப்பாக மீனவர்கள் மிகுதி. அவர்கள் மத்தியப்

பகுதிகளில் அதிகம் கைவைக்கவில்லை. சிங்களர்கள் பவுத்தர்களாகவும், தமிழர்கள்

ஹிந்துக்களாகவுமே இருந்தார்கள். இதனை இன்னும் சற்று விரித்துச்

சொல்வதென்றால், படித்தவர்கள் மத்தியில் மதமாற்றம் என்பது அவர்களுக்கு

சாத்தியமாக இல்லை. எழுதப் படிக்கக்கூடத் தெரியாதவர்கள்தான்

போர்த்துக்கீசியர்களின் இலக்காக இருந்தது.

அது ஒருபுறமிருக்க, டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்குமான ஆதிப் பகையே

அந்த யுத்தத்தின் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலிருந்தது. ஐரோப்பிய

அரசியல் சூழலில் ஏற்படத் தொடங்கியிருந்த சில மாறுதல்கள், ஸ்பெயினிடமிருந்து

போர்ச்சுக்கலுக்குக் கிட்டிய விடுதலை ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நெதர்லாந்து

என்கிற அன்றைய ஹாலந்து தேசம், போர்ச்சுக்கலுடன் அமைதி ஒப்பந்தம்

செய்துகொள்ளத் தயார் என்று அறிவித்தது.

இலங்கையில் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றிய கோட்டைகள்,

கண்டி மன்னரை வெறுப்பேற்றுவதற்காக ஆங்காங்கே பிடித்து வைத்த கிராமங்கள்,

நகரங்கள், வயல்வெளிகள் என்று எல்லாவற்றையும் கற்பைப் போல் இரு கட்சிக்கும்

பொதுவில் வைத்து, எரிந்த கட்சி, எரியாத கட்சி பேசி அமைதியாகப் பிரித்துக்

கொண்டார்கள்.
போர்த்துக்கீசியர்களுக்கு மேற்கொண்டு இலங்கையில் காலனி வளர்க்க

விருப்பமில்லாமல் போய்விட்டது. நூற்று முப்பது வருடங்கள் என்பது கொஞ்சமல்ல.

அவர்களுக்கும் வெறுத்து விட்டது. `சரி, நீ ஆண்டு அனுபவி இனிமேல்’ என்று

ஊரைப்பார்க்க நடையைக் கட்டினார்கள். ஒரு சாஸ்திரத்துக்குச் சில போர்த்துக்கீசியக்

குடியிருப்புகளை விட்டுவைத்தார்கள். சிங்களப் பெண்களை மணந்து வம்சம் வளர்த்த

சில போர்த்துக்கீசியர்கள் மட்டும் அங்கேயே தங்கிக்கொண்டார்கள்.(பிறகு அவர்களது

சந்ததியும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல தேசங்களுக்கு மெல்ல மெல்ல

இடம்பெயர்ந்தார்கள்.)

ஹாலந்து தனது காலனியாதிக்கத்தை இலங்கையில் ஆரம்பித்தது 1685_ம் ஆண்டு.

அடுத்த நூற்றுப் பதின்மூன்று வருடங்களுக்கு அவர்கள் அங்கே கோலோச்சினார்கள்.

ஒப்பீட்டளவில் போர்த்துக்கீசியர்கள் அளவுக்கு டச்சுக்காரர்கள் மதத் திணிப்பு, மொழித்

திணிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தவில்லை. இயல்பிலேயே படு

சுதந்திரமான அரசியல், சமூக சூழலை விரும்பக்கூடியவர்கள் அவர்கள்.

ஐரோப்பாவிலேயே அதி உன்னத ஜனநாயகம், பரிபூரண சுதந்திரம் தழைக்குமிடம்

நெதர்லாந்தாகத்தான் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்துகாட்டியவர்கள்.

இந்தப் பின்னணியில், என்னதான் ஒப்பந்தக் குளறுபடி செய்து அவர்கள் கண்டி

மன்னரை ஏமாற்றி இலங்கைக்குள் கால் பதித்தாலும், மக்களின் மதம், மொழி போன்ற

விஷயங்களில் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது அவர்களது பெரிய பலமாக

இருந்தது. சிறு முணுமுணுப்புகளுக்குப் பிறகு, இலங்கை மக்கள் அவர்களையும்

அங்கீகரித்துவிட்டார்கள்.

ஆனால் ஒரேயடியாக உத்தமோத்தமர்களாகவும் அவர்கள் இருந்துவிடவில்லை. சில

சேட்டைகள் செய்தார்கள். குறிப்பாக, இலங்கை மண்ணில் மக்களைப் பிரித்தாளும்

தந்திரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் டச்சுக்காரர்கள்தாம். இன

ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், தமிழர் பகுதிகளில் சாதிய ரீதியிலும்

மக்களிடையே இருந்த வேறுபாடுகளைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம்

சுட்டிக்காட்டி, நீ வேறு, நான் வேறு, அவன் வேறு, இவன் வேறு என்று திரும்பத்

திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது டச்சுக்காரர்களின் திருச்செயல்களில் ஒன்று.

அரசுத் துறை சார் வேலைவாய்ப்புகளில் இந்த வித்தியாசங்களுக்குக் கணிசமான

முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இரு பெரும் சமூகத்து மக்களிடையே

அவநம்பிக்கையையும் சந்தேக உணர்வையும் அவ்வப்போது தூண்டிவிட்டு, அதன் மூலம்

தனது இருப்பை பத்திரப்படுத்திக்கொள்வது. அடித்துக்கொண்டாலும் வெட்டி மடிந்தாலும்

அவர்கள் பாடு. எனக்கென்ன? நான் பூரண சுதந்திரம் அளித்திருக்கிறேன். நூறு சதவிகித

ஜனநாயகம் தழைக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்தில் இதையெல்லாம் கனவில் கூடப்

பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா? நல்லது. நன்றாக வாழுங்கள்.

கண்டி ராஜ்ஜியம் அப்போதும் இருந்தது. அதே வெறுப்பு. அதே கோபம். அதே

பகையுணர்ச்சி. என் தெற்குக் கோட்டைகள் போய்விட்டனவே என்கிற பரிதவிப்பு.

எப்படியாவது உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார் என்று அதே வெஞ்சினம்.

ஆனால், நடைமுறையில் அப்போதும் அவர்களால் சுயமாக ஏதும் செய்ய

இயலவில்லை. மலைப்பகுதி என்பதால் பாதுகாப்பு இருந்தது. ஒரு பெரும்

படையெடுப்பு நிகழ்ந்தால், முறியடிக்க முடியாது போனாலும் சமாளித்துவிட முடியும்.

அதைத்தாண்டி, பேரரசை விஸ்தரிப்பதெல்லாம் நடக்காத காரியம். தீவின் எல்லைகள்

முழுதையும் முதலில் கைப்பற்றி படிப்படியாக நான்கு திசைகளிலும் முன்னேறி

ஆக்கிரமித்திருக்கிறார்கள் டச்சுக்காரர்கள். பெரிய படை. துல்லியமான நிர்வாகக்

கட்டமைப்பு. நன்றாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். எத்தனை நவீன ஆயுதங்கள்

வைத்திருக்கிறார்கள்! வாய்ப்பே இல்லை. ஒன்றும் செய்ய முடியாது. கண்டி ராஜ்ஜியம்

என்பது ஒரு மாபெரும் காட்டெருமைப் பண்ணைக்குள் தனியே சிக்கிய கோழிக்குஞ்சு.

நசுக்கி எறிவது ஒரு வேலையே இல்லை. இருந்தாலும் விட்டு வைத்திருக்கிறார்கள்

என்றுதான் கொள்ள வேண்டும்.
எனவே, மீண்டும் அவர்கள் இன்னோர் அன்னிய ஒத்துழைப்பைக்

கோரஆயத்தமானார்கள். போர்த்துக் கீசியப் பேயை விரட்ட டச்சு பூதம். டச்சு பூதத்தை

விரட்ட பிரான்ஸ் பிசாசு.

1638-ல் யுத்தம் தொடங்கி, 1656-ல் கொழும்புவைக் கைப்பற்றியது வரைதான்

டச்சுக்காரர்களுக்குச் சிரமம். கொழும்பு விழுந்த நான்கே வருடங்களில் கண்டி நீங்கலான

முழு இலங்கைத் தீவையும் அவர்கள் வளைத்துவிட்டிருந்தார்கள். இலங்கையில் இருந்த

கத்தோலிக்கர்களைப் படுத்தி எடுத்தார்களே தவிர, பவுத்தர்களையும் ஹிந்துக்களையும்

அவர்கள் சீண்டவில்லை. நிறைய வரி, நிம்மதியான வாழ்க்கை என்பது இன்றளவும்

நெதர்லாந்தில் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கை முறை. அன்றைக்கு இலங்கையிலும்

அதையேதான் அவர்கள் செய்தார்கள். மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம்,

தங்களுடைய நூற்றாண்டு கால ஆட்சியில் எப்போதும் அவர்கள் சிங்களர், தமிழர்

அடிப்படை வித்தியாசங்களையும், இருதரப்பு கலாசார மாறுபாடுகளையும், இரு

இனங்களின் முற்றிலும் வேறுபட்ட தன்மையையும் புரிந்துகொண்டு, மதித்தார்கள்

என்பது. இரு இனத்தவர்களையும் சமமாகவே நடத்தினார்கள் என்பது. அவ்வப்போதைய

சில்லறைச் சீண்டல்களைக் கூட இருதரப்பு மக்களுக்கும் சமமாகவே வழங்கினார்கள்

என்பதை கவனமாக நினைவில் கொள்ள வேண்டும்.

என்னவோ, பிடிக்காமல் போய்விட்டது. டச்சுக்காரர்களை வழியனுப்பி வைத்துவிடலாம்

என்று கண்டிச் சக்கரவர்த்தி முடிவெடுத்துவிட்டார். இம்முறை பிரான்ஸைக்

கூப்பிடலாமா?

அவர்கள் ஆயத்தங்களில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. கண்டி மன்னர் கைது

செய்து சிறையில் வைத்திருந்த ஒரு தனி மனிதர் தப்பித்துச் சென்று எழுதிய ஒரு

புத்தகத்தினால் விளைந்த சம்பவம்.

விளைவாக, பிரான்ஸ் அங்கே வரவில்லை. பிரிட்டன் வருவதற்கு அதுவே

காரணமானது.

8

18.12.08 தொடர்கள்

அவர் பெயர் ராபர்ட் நாக்ஸ் (Robert Knox).அவருடைய தந்தை பெயரும் ராபர்ட்

நாக்ஸ். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ்காரர்களான இந்த இரண்டு

பேரும் அப்போது சென்னையில் வசித்துக்கொண்டிருந்தார்கள். சீனியர் நாக்ஸுக்கு

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை. கப்பல் கேப்டன். செயிண்ட் ஜார்ஜ்

கோட்டையில் அலுவலகம். புனித நதி கூவத்தின் கரையில் குடியிருப்பு.

மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த தந்தையும் மகனும் ஒருநாள் பணி ஒப்பந்தம்

முடிந்து, சொந்த ஊருக்குப் புறப்பட்டார்கள். அந்நாளில் யாராவது சரித்திரத்தில் இடம்

பிடிக்கவேண்டுமென்றால், நடுக்கடலில் ஒரு புயலில் சிக்கியாக வேண்டும் என்பது விதி.

எனவே ராபர்ட் நாக்ஸ் பயணம் செய்த கப்பலும் புயலில் மாட்டியது.

சென்னையிலிருந்து புறப்பட்டு, வட மேற்கே போய்க்கொண்டிருந்த கப்பல் திசை தப்பித்

தெற்குப் பக்கமாக வந்து, இலங்கையின் திருகோணமலைக்கு அருகே மூதூரில் கரை

ஒதுங்கியது. உயிர் பிழைத்துக் கரையேறிய சீனியர், ஜூனியர் நாக்ஸையும் அவர்களது

பதினேழு பேர் குழுவினரையும் கண்டி மன்னரின் வீரர்கள் கைது செய்து அழைத்துச்

சென்றார்கள்.

1659-ம் ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட ராபர்ட் நாக்ஸ் குழுவினருக்கு கண்டி

மன்னர் வழங்கிய தண்டனை சற்றே விசித்திரமானது. ஒரு சம்பிரதாயத்துக்குச் சில

நாட்கள் மட்டும் சிறையில் வைத்திருந்துவிட்டு அவர்களை வெளியே விடச்

சொல்லிவிட்டார். அங்கேயே வீடு பார்த்துத் தங்கலாம். உள்ளூர் பெண்களைக்

காதலித்தோ, பெற்றோர் விருப்பத்துடனோ திருமணம் முடிக்கலாம். சந்ததி

வளர்க்கலாம். தொழில் செய்யலாம். சொந்தத்துக்கு வீடு, நிலபுலன் வாங்கி சொத்து

சேர்க்கலாம். பரம சவுக்கியமாக இருக்கலாம். ஆனால் கண்டி ராஜ்ஜியத்தைத் தாண்டி

அவர்கள் வெளியே போகக்கூடாது.

எனவே, ராபர்ட் நாக்ஸ் குழுவினர் கண்டியிலேயே செட்டில் ஆனார்கள். ஆளுக்கொரு

வேலை செய்து எப்படியோ வாழ்க்கையை ஓட்டினார்கள். சொந்த தேசம்

போகமுடியவில்லை என்பது தவிர வேறு குறையொன்றுமில்லை.

காலக்கிரமத்தில் ராபர்ட் நாக்ஸ் சீனியர் மலேரியா காய்ச்சல் கண்டு இறந்து போனார்.

அவரது மகன் தொப்பி செய்து விற்றுப் பிழைக்கலானார். படிப்படியாக முன்னேறி அரிசி

வியாபாரத்தில் இறங்கினார். பிறகு அரிசி மட்டுமல்லாமல், சோளம், எண்ணெய்

வகைகள், மிளகு, சீரகம், இலவங்கம் எனப் பலவற்றை வாங்கி விற்கும் வியாபாரம்

தொடங்கி, பிராந்தியத்தில் ஒரு நல்ல வர்த்தகராகப் பெயரெடுத்தார்.

ஆனால், என்றைக்காவது இலங்கையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மட்டும் அவர் மனத்தை விட்டுப் போகவேயில்லை. உடன் வந்த பதினேழு

பிரிட்டிஷாரும் அம்மாதிரி தொடக்கத்தில் இருந்த எண்ணத்தையெல்லாம் மறந்துவிட்டு,

குடும்பம், குழந்தை குட்டி என்று மாறிவிட, ராபர்ட் நாக்ஸ் மட்டும் அப்போதும்

பிரம்மச்சாரியாகவே இருந்தார். ஒரு நல்ல தருணத்துக்காகக் காத்திருந்தார்.

அப்படியொரு தருணம் வாய்த்தபோது யாருக்கும் தெரியாமல் கடையை மூடிவிட்டு,

மூட்டை முடிச்சுகளோடு கண்டியிலிருந்து தப்பித்து வடக்கே அனுராதபுரத்துக்குப் போய்

சில நாள் அங்கே பதுங்கியிருந்துவிட்டு, அங்கிருந்து மன்னார் அரிப்பு பகுதிக்கு வந்து

சேர்ந்தார்.

இன்றைக்குக் கண்டியிலிருந்து தம்புலா, வவுனியா, புளியங்குளம், கிளிநொச்சி, பரந்தன்,

ஆனை இரவு, சாவகச்சேரி வழியே யாழ்ப்பாணம் வரை நீளமாக ஒரே சாலை. நடுவே

மெடவாச்சியாவிலிருந்து (Medawachchiya) மேற்கே திரும்பிவிட்டால் செட்டிக்குளம்,

உயிலங்குளம், மன்னார். அரசியல் மற்றும் யுத்த சூழலால் இவற்றின் பயன்பாடு

அவ்வப்போது முன்னப்பின்ன ஆனாலும் சாலை என்று ஒன்று இருக்கிறது.

ராபர்ட் நாக்ஸ் காலத்தில் அத்தகு வசதிகள் இல்லையாதலால் கஷ்டப்பட்டுத்தான்

அவர் மன்னாரை அடைய முடிந்தது. தவிரவும், மன்னரின் ஆட்கள் வழியில்

பார்த்துவிட்டால் தீர்ந்தது கதை.

மன்னார் தீவில் அப்போது டச்சுப்படைகள் இருந்தன. அந்தப் பிராந்தியம் அவர்களின்

பிடியில்தான் இருந்தது. அங்கே போய்ச் சேர்ந்த ராபர்ட் நாக்ஸ், டச்சுக்காரர்களின்

உதவியுடன் தமிழகத்துக்கு வந்தார்.

1680-ல் கிழக்கிந்திய கம்பெனியில் தன் தந்தையைப் போலவே ஒரு கப்பல்

கேப்டனாகப் பணிக்குச் சேர்ந்த நாக்ஸ், பதினான்கு வருட காலம் அங்கே வேலை

பார்த்தார். ஏதோ காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட, (தேடவே வேண்டாம்.

சொந்தமாக ஒரு கப்பல் வாங்கி, தனியாவர்த்தனம் செய்துகொண்டிருந்தார். அதைக்

காட்டிலும் பெரிய காரணம் இருந்திருக்க முடியுமா என்ன?) லண்டனுக்குப் போய்

வசதியாக வாழ்ந்து மரித்துப் போனார். இறுதிவரை திருமணம் மட்டும்

செய்துகொள்ளவே இல்லை.

இந்த ராபர்ட் நாக்ஸ், சென்னைக்குத் தப்பி வந்து வேலைக்குச் சேர்ந்த மறு ஆண்டு

ஒரு புத்தகம் எழுதினார். பத்தொன்பது ஆண்டு காலம் கண்டியில் தான் வசித்த

காலங்களில் நேர்ந்த அனுபவங்களை அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருந்தார். ‘An

Historical Relation of the Island Ceylon, in the East-Indies’ என்ற அந்தப்

புத்தகம் இலங்கையைப் பற்றிய மிக முக்கியமானதொரு சரித்திரப் பதிவு.

பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை எப்படி இருந்தது? ஆட்சி எப்படி, மன்னர் எப்படி,

மக்கள் எப்படி, என்னென்ன பயிரிட்டார்கள், வர்த்தகத்தில் எது முக்கியம், வாழ்க்கையில்

எது முக்கியம், பவுத்தம் தழைத்த விதம், கிறிஸ்துவம் பரவும் விதம், சிங்களர்கள்

ஆண்ட கதை, தமிழர்கள் வாழ்ந்த விதம், டச்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பு, நீதி, அநீதி,

குற்றவாளிகளைத் தண்டித்த விதம் (யானையின் காலடியில் படுக்கவைத்து மரண

தண்டனை அளிப்பது கண்டிப் பேரரசில் அப்போது ரொம்ப ஃபேமஸ்!), மக்களின்

உணவு, உடை, கலை, கலாசாரம் என்று எதையும் விடவில்லை நாக்ஸ்.

சிங்களர்கள் ஒரு காலத்தில் தேனீக்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள்

என்பது உங்களுக்குத் தெரியுமா? நாக்ஸின் புத்தகத்தைப் படித்தால்

தெரிந்துகொள்ளலாம். மலைக்காடுகளில் பெரிய பெரிய தேன் அடைகளில் இருந்து தேன்

எடுக்கப்போகிறவர்கள் மறக்காமல் தேனீக்களையும் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.

பாத்திரங்களில் தேன் வாங்கும் மக்கள், கூடைகளில் தேனீக்களையும் வாங்குவார்கள்.

தேனீ வறுவல் தேவாமிர்தமாக இருக்கும் போலிருக்கிறது.

கண்டி மன்னர்களைப் பற்றியும் அவர்களது தனி வாழ்க்கை குறித்தும் நாக்ஸ் இந்நூலில்

விவரித்திருக்கும் பல விவரங்கள் மிக முக்கியமானவை. தான் சிறைப்பட்டிருந்த

காலத்தில் கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் ரத்க சிங்கா (Radgasingha)வைப்

பற்றிச் சொல்லும்போது, அவர் உடம்பில் ஓடுவது ராஜ ரத்தமல்ல என்கிறார் ராபர்ட்

நாக்ஸ். ரத்க சிங்காவுக்கு முன் கண்டியை ஆண்ட மன்னரின் மனைவிக்கு ஏற்கெனவே

இரண்டு குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். டோனா காத்தரீனா என்கிற அந்த ராணி,

தன் கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு கிறிஸ்துவ பாதிரியாரைத் திருமணம்

செய்துகொண்டு பெற்ற பிள்ளைதான் ரத்க சிங்கா.

ரத்க சிங்கா பிறந்ததுமே அரியணையில் உட்கார வைத்துவிட்டு, இளவரசரின் சார்பில்

அந்தப் பாதிரியாரே நாட்டை ஆண்டிருக்கிறார். பிறகு என்ன நினைத்தார்களோ,

பங்காளிச் சண்டைகள் வந்துவிடக் கூடாதே என்று ராணியின் முந்தைய இரு

பிள்ளைகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சமாக தேசத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, ரத்க

சிங்கா மேஜரானதும் அவருக்குரிய நிலத்தை ஆளச் சொல்லியிருக்கிறார்கள்.

ரத்க சிங்காவின் மலபார் மனைவியைப் பற்றியும் நாக்ஸ் நிறையவே

சொல்லியிருக்கிறார். எல்லா கண்டி மன்னர்களையும் போல இந்தியாவிலிருந்துதான்

அவரும் பெண் எடுத்திருக்கிறார். கேரளப் பெண். ஆனால் என்ன காரணத்தாலோ

கொஞ்ச நாளிலேயே ராணியைப் பிடிக்காமல் போய்விட, தனியே குடி வைத்துவிட்டார்.

தான் கண்டியில் வாழ்ந்த இருபதாண்டு காலத்தில் ஒருமுறை கூட ராணி

அரண்மனையை விட்டு வெளியே வந்ததில்லை என்று எழுதுகிறார் நாக்ஸ். ராணிக்குப்

பிறந்த ஒரு பையன், ஒரு பெண், அவர்களது நடவடிக்கைகள், மன்னரின் ஆட்சிமுறை,

அவரது ஒற்றர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவரைப் பற்றியும்,

ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியும் மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த நூல்.

நாக்ஸின் புத்தகம் லண்டனில் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தன்

சக்திக்கு மீறி விற்பனையான இந்நூல், பிரிட்டிஷ் மக்களைக் கவர்ந்ததுபோலவே, அதன்

ஆட்சியாளர்களையும் கவர்ந்தது, யோசிக்க வைத்தது.

ஐரோப்பாவெங்கும் தறிகெட்டு யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யார், யாரை,

எதற்காக அடிக்கிறார்கள், யாருக்குள் என்ன சண்டை என்றே சொல்ல முடியாது. நாடு

பிடிக்கும் வெறி அத்தனை பேருக்கும் இருந்தது. அதே மாதிரி யாருக்கும் யாருக்கும்

கூட்டணி, எதனால் கூட்டணி, எத்தனை காலக் கூட்டணி என்றும் கண்டுபிடிப்பது

கஷ்டம். கப்பல் ஏறிப் போய் யார் யார் எந்த மண்ணைப் புதிதாகக்

கண்டடைகிறார்களோ, அந்த இடம் அவரது தேசத்தின் காலனியாகிவிடும். அப்படிக்

கொடி நாட்டும் தேசங்களின் பின்னாலேயே அவர்களுடைய பங்காளிகள்

வந்துவிடுவார்கள். இங்கே உன் காலனி, அங்கே என் காலனி என்று ஆரம்பிக்கும்.

அடித்துக்கொள்வார்கள். சக்திமிக்கவன் ஜெயிப்பான். தோற்றவன், அடுத்த

சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பான். கூட்டணி சேர்ப்பான். குட்டையைக் குழப்புவான்.

அந்தச் சரித்திரத்துக்கு உள்ளே போனால் நாம் மீள முடியாது. எனவே, இந்த

இடத்துக்குத் தேவையான ஒரு விவரத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே

போய்விடுவோம்.

படாவியன் பேரரசு (Batavian Kingdom) என்ற பெயரில் இந்தோனேஷியா பகுதியில்

அன்றைக்குக் கோலோச்சிக்கொண்டிருந்த டச்சு அரசாங்கம் மிகவும் வலுவாக இருந்தது.

பிராந்தியத்தில் அவர்களுக்கு நல்ல புகழ், செல்வாக்கு. அவர்களது உதவியுடன்தான்

சென்ற அத்தியாயத்துக் கண்டி மன்னர் இலங்கையில் இருந்த போர்த்துக்கீசியர்களை

வெளியே துரத்தினார்.

இந்த படாவியன் என்கிற நெதர்லாந்து அரசுக்கும் அன்றைய பிரான்ஸ் அரசுக்கும்

நல்லுறவு, ஒப்பந்தம், கூட்டணி, நேசம் எல்லாம் இருந்தது. ஐரோப்பாவில் பிரான்ஸ்

நெதர்லாந்துக் கூட்டணி அன்றைக்கு பிரிட்டன் படைகளுக்குத் தீராத தலைவலியாக

இருந்தது.

இந்தச் சூழலில், கண்டி மன்னர் இலங்கையில் இருந்த டச்சுக்காரர்களை வெளியேற்ற

பிரான்ஸின் உதவியை எதிர்பார்க்கிறார் என்கிற விஷயம் கசிந்தால் பிரிட்டன் என்ன

மாதிரி யோசிக்கும்?

விளக்கவேண்டாம் அல்லவா? ஏற்கெனவே பிரான்சுடனான யுத்தங்களைத்

தாற்காலிகமாகவேனும் நிறுத்தி வைக்க யோசித்துக்கொண்டிருந்த பிரிட்டன், மார்ச் 25,

1802-ம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஓர் ஒப்பந்தம் (Treaty of

Amiens)செய்துகொண்டது. நெப்போலியன் காலத்து யுத்தங்களின் தொடர்ச்சியாக,

பிரெஞ்சுப் புரட்சி யுத்தங்களின் எச்சமாக அடித்துக்கொண்டிருந்ததையெல்லாம் நிறுத்தி

வைத்துவிட்டுக் கொஞ்சம் அமைதி காப்போம். அது அழகானது. இருதரப்புக்கும் லாபம்

தரத்தக்கது.

போரில் நான் பிடித்து வைத்த உன் வீரர்களை விடுவித்துவிடுகிறேன். என் வீரர்களை நீ

திருப்பி அனுப்பு. தென்னாப்பிரிக்காவில் இருந்த உங்கள் டச்சுக் காலனியை நான்

அபகரித்தேன். மறந்துவிடு. இப்போது திருப்பியளித்துவிடுகிறேன். அங்ஙனமே

மேற்கிந்தியத் தீவில் கைப்பற்றிய இடங்களையெல்லாம் உங்கள் வசம்

ஒப்படைத்துவிடுகிறேன். எகிப்திலிருந்தும் என் படைகள் வாபஸாகும். பதிலுக்கு நீ

எனக்கு ட்ரினிடாடைக் கொடு. டொபாகோவைக் கொடு. சிலோனைக் கொடு.

இத்தாலியில் நீ பிடித்துவைத்திருக்கும் சில பகுதிகள்மீது எனக்குக் காதலுண்டு. அதைக்

கொடு. ஃப்ரெஞ்ச் கயானாவின் எல்லைகளை நாம் இணைந்து வகுப்போம். எல்லை

தாண்டி பயங்கரவாதம் செய்யமாட்டோம் என்று வீரசபதம் கொள்வோம்.

இவ்வாறாக பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே அமைதிப்பூங்கா அமைக்கப்பட்டது.

விளைவாக, இலங்கை என்கிற அந்நாளைய சிலோன் பிரிட்டிஷ் காலனியாவதற்கான

வாசல் திறக்கப்பட்டது.

9

21.12.08 தொடர்கள்
கி.பி. 1796_ல் ஆரம்பித்த முயற்சி. ஒரு நாலைந்து வருடங்கள் கூடக்

கஷ்டப்-படாவிட்டால் எப்படி? கொஞ்சம் முறைப்பு. கொஞ்சம் வெறுப்பு. மிரட்டலில்

கொஞ்சம். உருட்டலில் கொஞ்சம். அன்பாகக் கேட்கலாம். அதட்டியும் பார்க்கலாம்.

அடித்துக்கொள்ளவும் ஆட்சேபணை இல்லை. ஹாலந்துப் படைகள்

வலிமையானவைதான். ஆனால், பிரிட்டன் படை-களுடன் ஒப்பிட்-டால் சிறியவை.

நீண்ட-நாள் தாக்குப் பிடிப்பது சிரமம்.

ஆனால் ஒரு நோக்-கத்துடன் வந்துவிட்டார்-கள். சிலோன் என்கிற இலங்கைத் தீவு.

யாருக்-கும் பார்த்த மாத்திரத்தில் காதல் பற்றிக்கொள்ளச் செய்யும் தீவுதான்.

முடிந்தவரை போராட-லாம் என்பதைத் தவிர இந்தத் தருணத்தில் செய்-யக்கூடியது

வேறொன்று-மில்லை.

1802_ல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட அந்த அமைதி ஒப்பந்தம்

வரை இந்த மோதல்கள் நீடித்தன. ஒப்பந்தம் ஆன மறு-நாளே இலங்கையில் இருந்த

டச்சுப்படைகள், பிரிட்-டன் படைகளுடன் கைகுலுக்கிவிட்டன. என்னது? நாம் எதிரிகளா?

யார் சொன்னது? உன்-னோடு நான் உருண்ட ஒவ்வொரு போர்க்களமும் ஊருக்குப்

போவ-தற்குள் உனதாகும் கண்மணியே. இந்தா, எடுத்துக்-கொள். உட்கார்ந்து ஆட்சி

செய். காலம் உன்னுடையது. இனி வரும் காட்சிகள் உன்னு-டை-யவை. தீவு

உன்னுடையது. தீர்வுகள் உன்னுடையவை.

ஆனால் ஒன்று. என் பிராந்தியங்களுடன் திருப்தி-யுறுபவன் அல்ல நீ. எனக்குத்

தெரியும். தீவின் மத்தியில் இருக்கிற கண்டிப் பேரரசு உனக்கு உறுத்-தும். பங்காளிச்

சண்டைதான் போட்டுக்-கொண்டி-ருக்கிறார்கள். என்ன-வாவது செய்து அதையும்

பிடித்துவிடப் பார்ப்பாய். உனக்கு என் ஆசிகள். நாயக்க ராஜாக்கள் இலேசுப்-பட்டவர்கள்

அல்லர். யானைகளைப் பிடிக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் அருமை-யாகக் குழி

வெட்டுவார்கள். வெட்-டிய குழியில் ரத்த சொந்தங்-களை வெகு அநாயாசமாக

எரு-வாகப் போடுவார்கள். யாரைக் குறித்தும் தப்புக்கணக்குப் போடாதே. நம்

சண்டையும் சமாதானமும் ஐரோப்பிய அரசியல் சூழல் சார்ந்தது. நமது ஒப்பந்தங்கள்

மாய யதார்த்த வகையைச் சேர்ந்தவை. இங்கு அப்படியல்ல. இவர்கள் அப்படியல்ல.

போர்த்துக்கீசியர் காலத்தி-லிருந்து போராடிக்கொண்டிருப்பவர்கள். மண்ணின் மக்கள்.

அத்தனை சுலபத்தில் விட்டுக்கொடுக்கமாட்-டார்-கள். ஆனாலும் முயற்சி செய். உனக்கு

என் வாழ்த்துகள்.
திருகோணமலை கடலோரம் முதன்முதலில் வந்து இறங்கிய பிரிட்டிஷ் படைகளுக்கு,

கடலோர டச்சுக்-கோட்டைகள் முதலில் கிடைத்தன. டச்சுக்காலனிகள் அனைத்தும்

பிரிட்டன் வசமாயின. கிழக்கிலிருந்து மேற்காக, ஒரு தோசையைத் திருப்பிப்

போடுவதுபோல எல்லை முழுதையும் தமதாக்கிக்கொண்ட பிற்பாடு அவர்கள்

கண்டியைக் குறிவைத்தார்கள்.

வருடம் 1803. கண்டிப் பேரரசின் அப்போதைய மன்னர் பெயர் ஷ்ரீவிக்கிரம

ராஜசிங்கே. (ளீவீஸீரீ ஷிக்ஷீவீ க்ஷிவீளீக்ஷீணீனீணீ ஸிணீழீணீƒவீஸீலீமீ) முன்னோர்

வழியில் முக்கால்வாசி தமிழ் ரத்தம் கொண்டவர். அதனால் இல்லை என்றாலும்

மன்னர்பிரானுக்குப் பிராந்தியத்தில் நிறைய எதிரிகள் இருந்தார்கள். குறிப்பாக, அவரது

ஆட்சியில் இருந்த அதிகார வர்க்கத்தினர் பலர் ஒன்று சேர்ந்து மன்னரைக் கவிழ்க்க

சமயம் பார்த்துக்கொண்டிருந்-தார்கள்.

கடலோரத்தில் வந்து முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படைகளைத் தொடர்புகொண்டார்கள்.

பேசியது, மன்னரின் அமைச்சர் ஒருவரே!

இதோ பாருங்கள். நாங்கள் ஒரு ராணுவப் புரட்சி செய்யப்போகிறோம். விக்கிரம

ராஜசிங்கேவை வீழ்த்து-வதுதான் குறி. உங்களுக்கும் அதுதான் இலக்கு என்று தெரியும்.

அர்த்தமின்றி உங்களுடன் மோதிக்-கொண்-டிருக்க நாங்கள் தயாரில்லை.

இஷ்டமிருந்தால் எங்க-ளுடன் வருக. வழி காட்டத் தயார். நீங்கள் கட-லோரம் காலாற

நடப்பது போல் இல்லை இது. மத்திய இலங்கை-யின் மலைப்பகுதியில் உங்கள்

படைகள் ஏறி வருவதற்-குள் நாக்கு தொங்கிவிடும். இத்தனை நூற்-றாண்டு-களா-கக்

கண்டிப் பேரரசு மட்டும் பிழைத்துக் கிடக்கிறது என்றால் காரணம் எதுவாயிருக்கும்

என்று அப்புறம் யோசித்துக் கொள்ளுங்கள். இப்போது அவசரம். புறப்படலாமா?

இந்தப் பசுமைத் தாயக துரோகம் அறிந்து மன்னர்-பிரான், சம்பந்தப்பட்ட அமைச்சரின்

குடும்பத்தினரைக் கையோடு கழுவில் ஏற்றியது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் படைகள்

இரண்டு திசைகளி-லிருந்து கண்டியை நோக்கிப் புறப்பட்டன. கொழும்பு-விலிருந்து ஒரு

படை. மேஜர் ஜெனரல் ஹே மெக்டவல் (பிணீஹ் விணீநீபீஷீஷ்மீறீ) தலைமையில்

அது புறப்பட்டபோதே, திருகோணமலை-யி-லிருந்து கர்னல் பார்பட் (சிஷீறீஷீஸீமீறீ

ஙிணீக்ஷீதீ–‡) என்பவர் தலைமையில் இன்னொரு படை.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பிரிட்டிஷ் படைகளில் கண்டிப்

பேரரசின் மூன்று தனிப் படைகளும் தங்களை இணைத்துக்-கொண்-டிருந்ததுதான்.

முஸ்லிம்கள் நிறைந்த முதலாம் சிலோன் ரெஜிமெண்ட், சிங்களர்கள் மட்டுமே இருந்த

இரண்-டாம் சிலோன் ரெஜிமெண்ட், கலந்து கட்டிய மூன்றாம் சிலோன் ரெஜிமெண்ட்.

கண்டி மன்னரின் ஆட்சி எப்படி இருந்தது, ஏன் அவருக்கு அத்தனை எதிரிகள், எதனால்

ஒழிக்கப் -பார்த்-தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய கதை. கண்டியை ஆண்ட

மன்னர்களின் கதையை விரிவாக எழுதப் போனால் அது ஒரு தனிக்காவியமாகிவிடும்.

இடம் காணாது. தவிரவும் நமக்கு அநாவசியம். மன்னர்-களல்ல; நமக்குக் கண்டி

மட்டுமே முக்கியம். மத்திய இலங்கை-யின் மலைகள் முக்கியம். அந்த மண்ணின்

வளம் முக்கியம். அதைக் கைப்-பற்றப் போகிற பிரிட்டி-ஷார் அங்கே காப்பி பயிரிடலாம்

என்று முதன் முதலில் முடிவு செய்த கணம் முக்கியம். இலங்கை-யின் ஆதித்

தமி-ழர்கள், பத்-தாம் நூற்-றாண்டுக்குப் பிந்தைய முஸ்-லிம் தமிழர்-களோடு-கூட,

இன்னோர் இனமாக உருவெடுக்க இருக்கின்ற மலை-யகத் தமிழர்களின் வாழ்வோடு

தொடர்பு-டைய நிலம் அது. எனவே சுருக்கமாக இந்த சண்டைக்-காட்சியை மட்டுமாவது

பார்த்துவிடு-வோம்.

முதலாம் கண்டி யுத்தம் என்று சொல்லப்படும் இந்தப் போர் மிகக் கோரமானது.

உள்நாட்டு துரோகம், அந்நியப் படையெடுப்பு, போதிய ஆள் பலமின்மை ஆகிய

காரணங்களால் மன்னர் விக்கிரம ராஜசிங்கே தோற்றுப் பிடிபட்டது பெரிய விஷயமல்ல.

எத்தனை உயிரிழப்புகள்!

பிரிட்டிஷ் தளபதிகள் முத்துசாமி என்கிற பொம்மை மன்னர் ஒருவரை ஆட்சியில்

அமர-வைத்-தார்கள். அவரும் ராஜ குடும்பத்து வழி வந்தவர்தான். விக்கிரம

ராஜசிங்கேவுக்கு உறவுக்காரர். ஆட்சிக் கனவுடன் இந்தக் கவிழ்ப்பு நடவடிக்கை-யில்

தீவிரம் காட்டி-யவர். ஆனால் மக்கள் செல்வாக்கு கிடை-யாது. சிங்கள, – தமிழ் இன

வேறு-பாடு-கள் தலைகாட்-டாத காலத்-தில் இரு தரப்-பினராலும் வெறுக்கப்-பட்டவர்.

எனவே, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் யுத்தம் தொடர்ந்தது. இம்முறை கெரில்லா

யுத்தம். முத்து-சாமி-யையும் அவருக்கு உதவும் பிரிட்டிஷ் படைகளையும் விரட்டுவதன்

பொருட்டு எதிர்த்-தரப்புப் படையினர் ஆரம்பித்து வைத்த யுத்தம்.

பிரிட்டிஷ் படையினரால் இதனைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலைப்பகுதி. வழி

தெரியாத இடம். எப்போதும் மழை. எங்கு பார்த்தாலும் சரிவுகள். திடீர் திடீரென்று

தாக்கினார்கள் கண்டி வீரர்கள். ஆக்ரோஷமான, காட்டுமிராண்டித்-தன-மான தாக்குதல்.

கண்ணில் தென்பட்ட பிரிட்டிஷ் வீரர்கள் அத்தனை பேரையும் கண்டந்துண்டமாக

வெட்டிப்போட்டார்கள். வில், வேல், அம்பு, ஈட்டி, பாரைகள் முதல்

பிரிட்டிஷாரிடமிருந்தே பறித்த துப்பாக்கிகள் வரை கையில் கிடைத்ததெல்லாம்

அவர்-களுடைய ஆயுதமாயின.

பிப்ரவரி 1803_ல் கண்டியில் பிரிட்டிஷ் படைகள் ஆட்சி மாற்றம் செய்தன. அடுத்த

மாதமே இந்த எதிர்த்தாக்குதல்கள் தீவிரமடைந்து, பிராந்-தியத்தில் இருந்த ஒரு

பிரிட்டிஷ் வீரரை-யும் விடாமல் கொன்று குவித்தனர் கண்டி வீரர்கள். கர்னல் பார்-பட்

கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்-பட்டார்.

ஜார்ஜ் பான்ஸ்லே என்கிற ஒரே ஒரு பிரிட்டிஷ் வீரர் மட்டும்தான் அந்த யுத்தத்தில்

உயிர் பிழைத்து ஓடி வந்தது. அவர் சொன்னக் கதை-களின் மூலம்தான்

மலைக்காடுகளில் நடந்த சம்பவங்-களே பிரிட்டிஷா-ருக்குத் தெரியவந்தன. விக்கிரம

ராஜ-சிங்கே மீண்டும் மன்னராகிவிட்டாரா? ஆடிப்-போனார்கள்.

பிறகு மீண்டும் பதிலுக்கு பதிலாக அடுத்த தாக்கு-தல். மேலும் உயிரிழப்புகள்.

இழந்ததை மீட்கும் வெறி. படைகள், படைகள், மேலும் படைகள். குவித்துக்-கொண்டே

இருந்-தார்கள். 1805 வரை நீண்ட இந்த யுத்-தத்தின் இறுதியில் குறிப்-பிடும்-படியான

ஒப்பந்-தங்–களோ, முடிவோ ஏற்பட-வில்லை. இலங்கைக்-கான பிரிட்டிஷ் கிழக்கிந்திய

கம்பெனியின் கவர்னராக நியமிக்கப்பட்ட ஜெனரல் தாமஸ் மெயிட்லண்ட்

(நிமீஸீமீக்ஷீணீறீ ஜிலீஷீனீணீƒ விணீவீ‡றீணீஸீபீ) தினசரி ஆபீஸுக்குப் போய் தன்

கடமைகளை ஆற்றத் தொடங்-கி-னார். எதிர்ப்பு-கள் இருந்தாலும் முழு இலங்கைத்

தீவும் தன்னு-டையது என்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சொல்லாமல் சொன்னது.

ஏற்க விருப்ப-மில்லா-விட்-டாலும் மக்கள் அமைதியாகக் கேட்டுக்-கொண்-டார்கள்.

1815_ல் மீண்டும் கண்டி யுத்தம் ஆரம்பமானது. இரண்டாம் கண்டி யுத்தம் இது.

ஒருமுறை பட்ட அவமானத்துக்குப் பிறகு களமிறங்கிய பிரிட்டிஷ் படைகள் இம்முறை

அதிக சிரமப்பட நேரவில்லை. இம்முறையும் சிலர் மன்னரைக் காட்டிக்கொடுத்தார்-கள்.

இம்முறையும் மன்னர் படைகள் இரண்டாகப் பிரிந்தன. இம்முறையும் நிறைய

உயிர்ச்சேதம். இம்-முறையும் மன்னர் பிடிபடவே செய்தார்.

ஆனால் இன்னொரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. கைது செய்த கையோடு

பிரிட்டி-ஷார் அவரை தமிழகத்துக்குக் கொண்டுவந்து-விட்-டார்கள். வேலூர்

கோட்டையில் விக்கிரம ராஜ-சிங்கே சிறைவைக்கப்பட்டார். துணைக்கு அவருடைய

இரண்டு மனைவிகள். செலவுக்குக் கொஞ்சம் பணம். அவ்வளவுதான்.

தனது ஐம்பத்திரண்டாவது வயது வரை வாழ்ந்து, தமிழகத்தில் மரித்துப் போன

விக்கிரம ராஜசிங்கேதான் இலங்கையின் கடைசி சுதந்திர மன்னர்.
அதன்பிறகு பரபரவென்று கண்டி நகரையும் சுற்றி-யுள்ள பிராந்தியங்களையும் பிரிட்டிஷ்

படைகள் சுற்றி வளைத்து ஆக்கிரமித்துவிட்டன. எதிர்ப்புக் குரல் கொடுத்த அத்தனை

பேரையும் கைது செய்தார்கள். விக்கிரம ராஜசிங்கேவின் உறவுக்காரர்கள் அத்தனை

பேரையும் நாட்டை விட்டு வெளியேற கெடு கொடுத்-தார்கள். குறிப்பாக, ஆண் உறவுகள்

யாரும் இலங்கைக்-குள் இருக்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. மன்ன-ரின்

விசுவாசிகள், வேலைக்காரர்கள், அதிகாரிகள் அத்-தனை பேரும் நாற்பத்தெட்டு மணி

நேரத்-துக்குள் காணாமல் போனார்கள். தானாக இடம் பெயர்ந்-தவர்-களை யாரும்

ஒன்றும் செய்யவில்லை. தப்-பித்து, அங்கேயே உயிர் வாழ நினைத்த-வர்களை மட்-டும்

-தூக்கிக்கொண்டு போய்விட்-டார்கள். பிறகு சிலர் கொல்லப்பட்-டார்கள், சிலர் நாடு

கடத்தப்-பட்டார்கள்.

அப்புறமும் ஒன்றிரண்டு புரட்சிகள், மீண்டும் அடிதடி என்று கண்டி ராஜ்ஜியம் மட்டும்

ஆன மட்டும் பிரிட்டி-ஷாருக்குத் தண்ணி காட்டிக்-கொண்டுதான் இருந்தது. இன்றைய

பதுளை, மொன-ராகலை மாவட்டங்-களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்-தில்

(ஹிஸ்ணீ றிக்ஷீஷீஸ்வீஸீநீமீ) 1817_ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சி இதில்

முக்கியமானது. மூன்றா-வது கண்டி யுத்தம் என்று சொல்-லப்படும் இதில்,

புரட்சியாளர்-கள் மிகத் தீர-மாகப் போராடித் தோற்றுப்-போனார்கள்.

நானூறு வருட கண்டிப் பேரரசின் வீழ்ச்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான

ஒரு சம்பவம். இலங்கை சரித்திரத்தின் முதல் பாகம், இந்த வீழ்ச்சி-யுடன் முடி-கிறது.

மன்னராட்சிக் காலத்தின் முடிவு. போர்த்துக்-கீசியர்களும் ஒல்லாந்தர்கள் என்கிற

ஹாலந்துக்-காரர்-களும் பிரிட்டிஷாரும் இடையே வந்து-விட்டார்கள் என்றாலும்,

கண்டிப்பேரரசு தாக்குப் பிடித்து நீடித்துக்-கொண்டிருந்த விதம் வியப்புக்-குரியது.

இத்தனைக்கும் ஏராளமான உள்நாட்டுக் குழப்பங்கள், சண்டை சச்சரவுகள், அடிதடிகள்.

ராஜ குடும்பத்துக் குழப்-பங்கள் எல்லாம் இடியாப்பச் சிக்கல்கள். ஒருவரை ஒருவர்

கடித்துச் சாப்பிட எத்தனை எத்தனை முயற்சிகள் மேற்-கொண்டிருக்கிறார்கள்

என்பதற்குக் கணக்கு வழக்கே கிடையாது!

ஆனால் ஒரு விசித்திரம், அதுநாள் வரை ஆட்சிக்-காகவும் அதிகாரத்துக்காகவும்

சண்டையிட்டார்களே தவிர, பிரிட்டிஷ் ஆட்சி வந்தபிறகு அத்தனை பேரும் அடங்கிப்

போனார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த-தற்கு மறு வருடம்தான் இலங்கைக்குச்

சுதந்திரம் கிடைத்தது.

ஆனால் இங்கு நடைபெற்ற சுதந்திரப் போர் போல, இலங்கையில் ஒன்றுமே

நடைபெறவில்லை. சுமார் நூற்றைம்பது வருட கால பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை

அனுஷ்டித்த அமைதி வியப்புக்குரியது.
அது புயலுக்கு முந்தைய அமைதி என்று அப்-போது யாரும் எண்ணிப் பார்த்திருக்க

முடியாது.

10

25.12.08 தொடர்கள்
இந்தியாவில் நடைபெற்றது போலொரு சுதந்திரப் போராட்டம் ஏன் இலங்கையில்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெறவில்லை?

இந்தக் கேள்விக்கு விளக்கமாக பதில் தேடிக்கொண்டிருப்பது நேர விரயம். இன்றைக்கு

வாசிக்கக் கிடைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க

கால வரலாற்று நூல்களிலிருந்து நாம் பெறுகிற விடை மிக எளிமையானதும்

மேலோட்டமானதும் ஆகும். ஒரு வரியில் சொல்வதென்றால், முந்தைய போர்த்துக்

கீசிய, டச்சு ஆட்சியாளர்களைவிட, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மேல் என்று இலங்கை

மக்கள் நினைத்திருக்கிறார்கள்.

விஷயம் அங்கேயே முடிந்துவிடுகிறது. பண்டைய யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர்கள்

இந்த வகையில் பிரிட்டிஷ் ஆட்சியையும் `மகா காருண்ய மகிமா ஐந்தாம் ஜார்ச்சு

வேந்தரை’யும் பக்கம் பக்கமாகப் பாராட்டிக்கொண்டே போவதைப் பொறுத்துக்கொண்டு

வாசித்து அறிய நிறையப் பொறுமை வேண்டும்.

தமிழர்கள்தான் என்றில்லை. சிங்கள சரித்திர ஆசிரியர்களும் பெரும்பாலும்

அவ்வண்ணமே வருணித்திருக்கிறார்கள். மதத் திணிப்பு என்கிற ஒரு விஷயம் பிரிட்டிஷ்

ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதுதான் அனைத்திலும் முக்கியமானது. தவிரவும்

கல்வி, வேலை வாய்ப்புகளில் திறமைக்கு முன்னுரிமை கிடைத்திருக்கிறது.

டச்சுக்காலத்தைக் காட்டிலும் வரி விதிப்புகள் குறைவாக இருந்திருக்கின்றன.

குற்றங்களுக்கான தண்டனைகள் சகித்துக்கொள்ளும்படியாக இருந்திருக்கின்றன. நவீன

வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மிக முக்கியம், முதலாளிகள்

சௌக்கியமாகப் பேணப்பட்டிருக்கிறார்கள்.

இன்னபிற காரணங்களால் பிரிட்டிஷ் ஆட்சியைப் பொற்காலமாகப் போற்றிப் பாடும்

சரித்திரங்களை மட்டும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவது அபாயகரமானது.

எல்லா இடங்களைப் போலவும் இலங்கையையும் ஆங்கிலேயர்கள்

`பயன்படுத்துவதில்’தான் கவனம் செலுத்தினார்கள். பயன்படுத்துவது என்றால் பணம்

செய்வது. அனுசரித்து நடந்துகொள்ளும் உள்நாட்டு மக்களுக்கு அநாவசியமான

கஷ்டங்கள் அளிப்பதில்லை என்பது பிரிட்டிஷ் கொள்கை. எளிய சலுகைகள். கௌரவம்

சேர்க்கும் பட்டங்கள். என்னை நோக்கி உன் விரல் நீளாதவரை உன்னை நான்

மதிக்கிறேன் என்கிற உணர்வை ஆழமாக உண்டாக்குவது. மற்றபடி எனக்கு வர்த்தகம்,

உனக்கு வாழ்க்கை. என்ன செய்கிறேன் என்று கேளாதே. உன்னால் முடிந்தால் ஒரு

கைகொடு. கொடுத்த கைக்குக் கூலி நிச்சயம். மகா காருண்ய ஐந்தாம் ஜார்ச்சு

மன்னர்பிரானின் ஆசிகளும்கூட.

கண்டிப் பேரரசு உள்பட முழுத் தீவையும் பிரிட்டன் கைப்பற்றி ஆளத்தொடங்கியதும்

அவர்கள் முதலில் சிந்தித்தது மத்திய இலங்கையின் மலைப்பாங்கான நிலவளத்தை

எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றித்தான்.

1815லேயே தொடங்கிவிட்டார்கள். வளமான மண். அருமையான சூழல். அற்புதமான

காலநிலை. இத்தனை காலமாக இப்படி வீணாக்கி வந்திருக்கிறார்களே? காப்பி விதை

போடலாம். அது காசுப்பயிர் கொடுக்கும்.

இடத்தை வளைப்பது அவர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை. எளிய ஏமாற்றல்

முயற்சிகளின்மூலம் நில உடைமையாளர்களிடமிருந்து தேவைப்பட்ட பூமியை அவர்கள்

பெற்றார்கள். தமது நிலத்துக்கு என்ன விலை என்றே சரியாகத் தெரியாமல் கொடுத்த

காசுக்கு ஏமாந்தவர்கள் பலர். மட்டக்களப்பில் மாடமாளிகை, கொழும்புவில் கூடகோபுரம்

என்று ஆளுக்கொரு ஆசை காட்டி இடத்தைக் காலி செய்ய வைத்து, கையோடு

பிரிட்டனிலிருந்து முதலாளிகளை இலங்கைக்கு வரவழைத்தார்கள்.

கவனிக்கவும். தோட்டத்தொழில் செய்வது என்பது முடிவு. செய்யப்போவது யார்?

பிரிட்டிஷ்காரர்கள். இதற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள்.

அவர்களுக்கு வேண்டிய வசதி செய்துகொடுப்பது பிரிட்டிஷ் அரசாங்கம். இனி

வேண்டியது ஒன்றுதான். வேலை பார்க்கப்போகிற கூலிகள். யார் அவர்கள்?

பிரிட்டிஷார் வருவதற்கு முன்னால் இலங்கையில் மிகத் தெளிவாக இரண்டு தனித்தனி

தேசிய, கலாசார, பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழர்களும் சிங்களர்களும்

இருந்தார்கள். ஒரே தேசம், ஒரே மக்கள், ஒரே ஆட்சி, போனால் போகிறது இரண்டு

மொழிகள் என்று அதனை மாற்றியது அவர்கள்தான்.

ஆனால் இது வெளித்தோற்றம். உண்மையில் இந்த இருவேறு இன மக்களையும் மிகச்

சரியாக அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். இலங்கைத் தமிழர்களின் சமூகப்

பொருளாதாரக் கட்டமைப்பு என்பது, சிங்கள இனக் கட்டமைப்பு விதத்திலிருந்து

முற்றிலும் மாறுபட்டது. தமிழர்கள் மத்தியில் சாதீயத்தின் மிக வலுவான தாக்கம்

இருந்தது. உயர்சாதி, கீழ்ச்சாதி பேதங்கள் இருந்தன. அடக்குமுறை, ஒடுக்கல், சுரண்டல்

எல்லாம் இங்கிருப்பது போலவே அங்கும் இருந்தன. உயர் சாதியினரும் நிலம்

படைத்தோரும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர். அதிகம் விவரிக்கவே வேண்டாம்.

அந்நாளில் தமிழகத் தமிழர்கள் எப்படி இருந்தனரோ, அப்படியேதான் இலங்கையில்

வசித்த தமிழர்களும் இருந்தார்கள்.

தமிழர்களிடையே உள்ளார்ந்து இருந்த இந்த சாதீய பேதங்கள்தான் ஆங்கிலேயர்களை

வசீகரித்தன. எந்த வகையில் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள

இயலும்?

யோசிக்கத் தொடங்கினார்கள். மேல் சாதித் தமிழர்களில் பலர் அப்போது மிஷினரி

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து ஆங்கிலக் கல்வி கற்பதில் நாட்டம்

கொண்டிருந்தனர். அப்படிக் கற்றவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் உடனடியாக வேலை

கிடைத்தது. போஸ்டிங் பெரும்பாலும் மலையகத்தில். காப்பி பயிர் செய்ய வந்து

இறங்கியிருக்கும் பிரிட்டிஷ் முதலாளிகளின் அலுவலகங்களுக்கு ஆட்கள் வேண்டாமா?

எனவே, பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளெல்லாரும் தமிழர்கள். படித்த தமிழர்கள். மேல்

சாதித் தமிழர்கள். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள். மாட்சிமை பொருந்திய

மன்னர்பிரானுக்கு விசுவாசம் காட்டக்கூடிய தமிழர்கள்.

தமிழர்கள் மீது சிங்கள மக்களுக்கு வெறுப்பு உண்டாகத் தொடங்கிய ஆரம்பப்

புள்ளிகளுள் இது முதன்மையானது.

அவ்வாறான வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்தேதான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தக்

காரியத்தைச் செய்தார்கள். அதுதான் வேண்டும். அதுதான் நல்லது. அதுதான்

வசதியானதும்கூட. எக்காரணம் கொண்டும் உள்ளூர் மக்கள் ஒற்றுமையாக

இருந்துவிடுவது மாட்சிமை பொருந்திய மன்னர்பிரான் ஆட்சிக்கு உகந்ததல்ல.

இந்த அதிகாரித் தமிழர்களை சகல வசதிகளோடும் மலையகத்தில் குடியமர்த்தும்

பொருட்டு முதலில் அங்கிருந்த சிங்கள மக்களைக் காலி பண்ணச் சொல்லி வற்புறுத்தத்

தொடங்கினார்கள்.

மறுபுறம், தோட்டப் பணிகளுக்கு ஆளெடுக்கும் வேலையை இலங்கையில் அல்லாமல்

தமிழகத்தில் தொடங்கினார்கள். தமிழர்கள்தாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அல்லர்.

இலங்கையில் உள்ள சிங்களர்களும் அல்லர். தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள்.

இதையும் கவனிக்க வேண்டும். ஏன் இலங்கையிலேயே வசிக்கும் தமிழர்களை அவர்கள்

விரும்பவில்லை? என்றால், அதிகாரிகளாகத் தமிழர்களை நியமித்ததுதான் காரணம்.

யாரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஒரு யூனியன்

மனப்பான்மை வந்துவிடலாகாது. நீ வேறு. நான் வேறு. அவன் வேறு. இவன் வேறு.

அது வேறு. இது வேறு.

ராமநாதபுரத்திலிருந்து மதுரை வரை நீண்ட அந்நாளைய மதுரை மாவட்டம்,

தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையில் `கைநிறையச்

சம்பாதிப்பதற்கு’ ஆளெடுக்கும் பணி ஆரம்பமானது.

இங்கும் சாதி இந்துக்களிடையே அல்லாமல், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட

இனத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்தார்கள். பொருளாதாரத்தில் மிகவும்

பின் தங்கிய நிலைமையில் இருந்தவர்கள், ஒருவேளை சோற்றுக்கே வழியற்றுக்

கிடந்தவர்கள், பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தவர்கள் என்று பார்த்துப் பார்த்துச்

சேகரித்தார்கள்.

பக்கத்தில்தான் இருக்கிறது இலங்கை. படகு ஏறினால் ஒரு மணியில் போய்விடலாம்.

நீங்கள் கால் வைக்கும் இடத்தில் சொர்க்கம் காத்திருக்கிறது. கேட்டது கிடைக்கும்.

நினைத்தது நடக்கும். எளிய வேலை. கை நிறையச் சம்பளம். எத்தனை நாள்

கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? இலங்கைக்கு வரலாமே? அதுவும் பிரிட்டிஷ்

காலனிதான், இதுவும் பிரிட்டிஷ் காலனிதான். பக்கத்து ஊருக்குப் போய் வேலை

பார்ப்பதில்லையா? அந்த மாதிரிதான் இதுவும். அரசாங்கம் உங்களுக்கு நிறைய

வசதிகள் செய்து தரும். வேலைக்குச் சம்பளம் மட்டுமல்ல; வாழ்வுக்கு ஆதாரமான

அத்தனையும் அங்கு கிடைக்கும். பிழைக்கிற வழியைப் பாருங்களய்யா.

கூவிக்கூவி அழைத்தார்கள். நிறைய ஆசை காட்டினார்கள். கனவு வறண்டு

வாழ்ந்துகொண்டிருந்த எளிய மக்களைச் சுலபமாக ஏமாற்ற முடிந்தது. 1840_ம் ஆண்டு

தொடக்கம் தமிழகத்திலிருந்து அலையலையாக மக்கள் இலங்கைக்கு ஏற்றுமதி

செய்யப்பட்டனர்.

கண்டியிலேயே அதுநாள் வரை விவசாயக் கூலி வேலை பார்த்துக்

கொண்டிருந்தவர்களும் மலையகத்துக்கு வெளியே இருந்த சிங்கள விவசாயக்

கூலிகளும் தங்களது பழைய எஜமானர்கள் இல்லாத சூழலில், புதிய பிரிட்டிஷ்

முதலாளிகளிடம் வேலை பார்க்க விருப்பமில்லாமல் வெளியேறி விட்டிருந்த சூழலும்

அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது.

ஒரு சிலர் இந்தப் புதிய முயற்சிக்கு எதிராகக் கலகம் செய்யவும் பார்த்தார்கள்.

இலங்கை மக்களை பிரிட்டிஷார் சுரண்டுகிறார்கள் என்று குரல் கொடுக்க

ஆரம்பித்தார்கள். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. குரல் கொடுத்தவர்கள்

எல்லோரும் எளியவர்கள். ஏழைகள். அதிகார வர்க்கமாக இருந்த இலங்கைத் தமிழர்கள்

அனைவரும் ராஜ விசுவாசிகளாகவும், அதிகாரம் ஏதுமற்று மலையகத்தைத்

தொலைத்துவிட்டுத் தவித்துக்கொண்டிருந்த சிங்களர்கள் எல்லோரும் தமிழர்கள் மீதான

கோபம் மற்றும் அதிருப்தி கொண்டோராகவும் இருந்ததால், இந்த எதிர்ப்புக்குரல்கள்

அர்த்தமற்றுப் போயின.

பிரிட்டிஷாருக்கு என்ன? மிகவும் வசதி. இப்போது சிங்களர்களுக்குத் தமிழர்களைப்

பிடிக்கவில்லை. மேல் சாதித் தமிழர்கள் அதிகார வர்க்கத் தமிழர்கள், தொழிலாளத்

தமிழர்களைப் பொருட்படுத்துவதில்லை. வேலை பார்க்க வருகிற தமிழ்நாட்டுத்

தமிழர்கள் முற்றிலும் அந்நியர்கள். மொழிதான் பொதுவானது. அது பிரச்னையில்லை.

அவர்களுக்குள் மட்டும்தான் பேசிக்கொள்ளப் போகிறார்கள். அதிகாரித் தமிழர்கள்

கனவில்கூட ஆங்கிலத்தில்தான் உரையாடப் போகிறார்கள். நமக்குத் தொழில் நடந்தால்

சரி.

1840_ம் ஆண்டு அது ஆரம்பமானது. தமிழகத்தின் பல குக்கிராமங்களில் இருந்து

கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தத்தம் வீடு

துறந்து புறப்பட்டார்கள். புதிய இடம், நல்ல வேலை, கை நிறையச் சம்பளம். போய்

வருகிறேன் தமிழகமே.

ஆயிரம் ஆயிரமாக. பத்தாயிரம் பத்தாயிரமாக. லட்சம் லட்சமாகத் தமிழர்கள்

தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுத்தார்கள். அங்கே படகுகள் காத்திருந்தன.

விருப்பப்பட்டு வந்த அத்தனை பேரையும் எந்தக் கேள்வியும் கேட்காமல்

ஏற்றிக்கொண்டார்கள். மேலும் மேலும் கனவுகளைத் தின்னக்கொடுத்தபடி,

கொண்டுபோய்த் தலைமன்னாரில் இறக்கிவிட்டார்கள்.

இதுதான் இலங்கை. இதோ, இந்த வழியிலேயே நீங்கள் போகலாம். கொஞ்ச தூரம்தான்.

நடந்துகொண்டே இருந்தீர்களென்றால் கண்டி வந்துவிடும் என்று குத்துமதிப்பாகக்

கைகாட்டினார்கள்.

எப்பேர்ப்பட்ட அவல வாழ்வை நோக்கிய பயணம் அது என்று தெரியாத மக்கள் தம்

விதியை நோக்கி அப்போது நடக்க ஆரம்பித்தார்கள்.

11

28.12.08 தொடர்கள்

இலங்கைத் தீவு வசமானதுமே பிரிட்டிஷ் அரசு வேலையைத் தொடங்கிவிட்டது.

அவர்களது நோக்கம் தெளிவானது. விவசாயத்தைப் பெருக்குவது. அதன்மூலம்

வர்த்தகத்தை அதிகரிப்பது. ஒரு தேசத்தைக் கைப்பற்றுவதும் ஆள்வதுமல்ல பெருமை.

அதிகபட்சம் அங்கிருந்து என்ன சம்பாதிக்க இயலும்? அதைச் சாதிக்க வேண்டும்.

அதைத்தவிர வேறொன்றும் முக்கியமல்ல.

மேற்கிந்தியத் தீவுகளில் அதற்கு முன்னால் அவர்கள் காப்பி

பயிரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜமைக்காவில் சற்று அதிகம். லட்சக்கணக்கான

அடிமைகளைப் பயன்படுத்தி, விவசாயம் செய்து கப்பல் கப்பலாக

ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்

அந்தப் பக்கமெல்லாம் அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட, பிரிட்டிஷ் காப்பித்

தோட்டங்களில் வேலை பார்க்க ஆளில்லாமல் போனது. காப்பிப் பொருளாதாரம்

நலிவடையத் தொடங்க, என்ன செய்து சமாளிக்கலாம் என்று

யோசித்துக்கொண்டிருந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அப்போது சிக்கியதுதான் சிலோன்

என்கிற இலங்கை.

கவனமாகத் திட்டமிட்டு, தமிழகத்திலிருந்து கூலியாட்கள். இன்னும் கவனமாகத்

திட்டமிட்டு இலங்கைத் தமிழர்களிலிருந்து வேலை வாங்கும் அதிகாரிகள். மேலும்

கவனமாகத் திட்டமிட்டு சிங்களர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா.

தலைமன்னாரிலிருந்து கண்டி கூப்பிடு தூரம் என்று சொல்லப்பட்டு நடத்தி அழைத்துச்

செல்லப்பட்ட தமிழர்களில் பலர் வழியில் பசியாலும் நோயாலும் விஷக்கடிகளாலும்

இறந்தே போனார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பொற்காலத்தைக் கனவு

கண்டபடி இலங்கைக்குச் சென்றவர்கள், தப்பித்தால் போதும் என்று

நினைக்கும்படியானது.

ஆனால் தப்பிப்பது அத்தனை சுலபமல்ல. இறந்து போவது தவிர, தப்பிக்க வேறு

வழியில்லை என்னும்படிதான் இருந்தது. முரண்டு பிடித்தவர்கள், பாதி வழியில் திரும்ப

அடம்பிடித்தவர்கள், தப்பிக்கப் பார்த்தவர்கள் எல்லோரையும் கட்டி வைத்து சித்திரவதை

செய்தார்கள். அதட்டி, மிரட்டி அழைத்துச் சென்றார்கள். கண்டியை அவர்கள் நெருங்கிய

வேளையில் உண்மை தெரிந்துவிட்டது. சுகவாசிகளாக அல்ல; கொத்தடிமைகளாக

வேலை பார்க்கவே நாம் இங்கு வந்திருக்கிறோம். சேரப்போவது செல்வமல்ல; நோயும்

பசியும் வலியும் வேதனைகளும்தான். திரும்பவும் தமிழகம் செல்வது என்பது

கனவிலும் முடியாத காரியம்.

இப்படித்தான் மலையகத் தமிழர்கள் என்னும் மூன்றாவது தமிழினம் இலங்கையில்

உருவானது. 1840-50 காலகட்டங்களில் மொத்தமாகச் சுமார் பத்து லட்சத்துக்கும்

மேற்பட்ட தமிழர்கள் மலையகத்தில் கொண்டு குடிவைக்கப்பட்டார்கள். அதுவும் எப்படி?

தோட்ட வேலை பார்க்க வந்த இவர்களை, வேலையில்லாமல் எரிச்சலடைந்திருந்த

சிங்கள அடித்தட்டு மக்கள் வசித்த பகுதியிலேயே கொண்டுபோய்ச் செருகினார்கள்.

தொடக்கம் முதலே இரு தரப்புக்கும் வெறுப்பும் விரோதமும் வளர்வதற்கு இது

முக்கியக் காரணமானது.

ஏற்கெனவே பல சிங்களக் குடியிருப்புகளை காலி செய்து ஊரை விட்டே துரத்தியிருந்த

கோபம் அவர்களுக்கு பலமாக இருந்தது. இப்போது கொண்டு வந்து பயிரிடும் புதிய

இனம். தமிழர்கள். தமிழகத்திலிருந்து வந்திருக்கும் தமிழர்கள். வேலை பார்க்க

வந்திருப்பவர்கள். அங்கு அதுநாள் வரை வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங்கள

விவசாயக் கூலிகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டிருப்பவர்கள்.

புரிகிறதா? இது ஒரு சூழ்ச்சி. மிகப்பெரிய சூழ்ச்சி. தங்கள் தொழில் தடங்கலற்று

நடைபெறுவதற்காக, பார்த்துப் பார்த்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத

நடவடிக்கை. இன்று இலங்கையில் தலைவிரித்தாடும் இனவெறிக்கெல்லாம் ஆணி வேர்

இங்குதான் இருக்கிறது.

ஆங்கிலேயர்களின் காப்பிப் பயிர் முயற்சி, பூச்சித் தாக்குதலால் அற்பாயுளில் அழிந்து,

அங்கே அவர்கள் தேயிலை பயிரிட ஆரம்பித்தது, பயிர் போனாலும் உயிர் போகாத

தமிழர்கள் தொடர்ந்து அங்கே அவல வாழ்வைத் தொடர்ந்தது, வட இலங்கைத்

தமிழர்கள், தென் இலங்கைச் சிங்களர்கள், மலையகத் தமிழர்களுக்கிடையே கண்ணுக்குப்

புலப்படாத திரை ஒன்று விழுந்து ஒவ்வொருவரும் தனித்தனியே துண்டிக்கப்பட்டது

போலானது எல்லாம் ஒரு பக்கமிருக்க, சிங்களர்கள் மத்தியில் அப்போதுதான் மெல்ல

மெல்ல தங்கள் இனத்துக்கான அரசியல், சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு

சார்ந்த அச்சம் கலந்த கவனம் ஏற்படத் தொடங்கியது.

மலையகத்தில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டது உண்மை. அது பிரிட்டிஷாரின் சூழ்ச்சி என்று

பாராமல் தமிழர்களின் மேலாதிக்கம் பரவுகிறது என்று கருதியதுதான் அவர்களது

வன்மத்தின் தொடக்கப்புள்ளி. இத்தனைக்கும் தோட்டத்தொழிலுக்குப் பணியமர்த்தப்பட்ட

அத்தனை லட்சம் பேரும் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான்,

இலங்கையின் பூர்வ தமிழர்கள் அல்லர் என்பது அவர்களுக்குத் தெரியும். இலங்கையின்

ஆதிகுடிகளான தமிழர்களிலிருந்து ஒரே ஒரு தோட்டத்தொழிலாளர் கூடப்

பணியமர்த்தப்படவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். எஸ்டேட்டுகளில்

அதிகாரிகளாகச் சில தமிழர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள்.

ஒப்பீட்டளவில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையினர். ஆயினும் மொழியை

முன்வைத்து இரு தரப்பினருக்கும் வித்தியாசம் இல்லை என்று அவர்கள்

நினைத்தார்கள். அந்தச் சொற்ப அளவு வாய்ப்புக்கூட சிங்களர்களுக்கு

வழங்கப்படாததும், நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களை ஏமாற்றி

விரட்டியதும்தான் வன்மத்தின் வேர்.

இந்த வகையில் இலங்கையின் இன்றைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரண

புருஷர்களாக பிரிட்டிஷ்காரர்கள் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரிட்டன்

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிவிட்டுத் திரும்பிய வைகோவின் உரையில்

இதுவே வேறு சொற்களில் வெளிப்பட்டதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அது நிற்க. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்களர்கள் தங்களைத்

தற்காத்துக்கொள்வதன் பொருட்டு முதன் முதலாக ஒரு பெரிய ஆயுதத்தைக் கையில்

எடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பெயர் தேசியவாதம்.

அதுநாள் வரை மண், நிலம், தேசம், உரிமை, மெஜாரிட்டி, மைனாரிட்டி

என்றெல்லாம் அநாவசியத்துக்கு யோசித்துக்கொண்டிருக்காமல் கண்டியில் சிங்கள

மன்னர் ஆண்டாலும் சரி, தமிழ் மன்னர் ஆண்டாலும் சரி, கண்டி உள்பட மொத்தத்

தீவையும் போர்த்துக்கீசியர் ஆண்டாலும் சரி, டச்சுக்காரர்கள் ஆண்டாலும் சரி

எனக்கென்ன போச்சு என்று இருந்தவர்கள்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கூட ஒரு துரும்பைக் கிள்ளிப் போட யாரும்

நினைக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் மீதான வன்மம் அவர்களை தேசியவாதம்

பேசவைத்தது. பிரித்தாண்ட பிரிட்டிஷாரைக் காட்டிலும் தமிழர்கள் விரோதிகளாகிப்

போனார்கள். வட இலங்கையில் அன்றைக்கு இருந்த வளமை, கல்வியில் தமிழர்கள்

காட்டிய ஆர்வம், அவர்களுக்குச் சுலபத்தில் கிடைத்த அங்கீகாரங்கள், வர்த்தகத்தில்

அவர்களிடையே இருந்த ஆர்வம், கிடைத்த வாய்ப்புகள், வாழ்வில் திளைத்த செழிப்பு

இவையெல்லாம் அந்த வன்மத்தின் அடியே நீரோட்டமாக இருந்த காரணங்கள்.

கொழும்பில் டான் கரோலிஸ் ஹெவவிதரன (Don Carolis Hewavitharana) என்று

ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். நிலச்சுவான்தார். அவரது மனைவி மல்லிகா தர்ம

குணவர்த்தன (Mallika Dharmagoone wardena).. இவர்களுக்குப் பிறந்த ஒரு

பிள்ளை டான் டேவிட் ஹெவவிதரன (Don David Hewavitarnne).

இந்த டான் டேவிட் ஹெவவிதரன, இந்த இடத்தில் ஒரு முக்கியப் பாத்திரம். இந்த

இடத்தில் மட்டுமல்ல; சிங்கள தேசியவாதம் அல்லது சிங்களப் பேரினவாதம் என்று

சொல்லப்படும் கருத்தாக்கத்தினை வடிவமைத்தவர்களுள் மிக முக்கியமானவர் என்கிற

வகையில் இந்த சரித்திரம் முழுவதற்குமே அவர் ஒரு முக்கியப் பாத்திரம். மகாநாம

தேராவின் மகா வம்சத்துக்குப் பிறகு, போற்றிப் பாடடி பெண்ணே என்று சிங்களர்கள்

கொண்டாடுவது அவரது கருத்துகளைத்தான்.

கிறிஸ்துவப் பெற்றோருக்குப் பிறந்து, கிறிஸ்துவப் பள்ளியிலும் கிறிஸ்துவக்

கல்லூரியிலும் படித்து பட்டம் முடித்த டான் டேவிட் ஹெவவிதரன, பவுத்தத்தைத்

தழுவியதன் காரணங்கள் நமக்கு முக்கியமல்ல. (பள்ளி நாட்களிலேயே இந்த

மதமாற்றம் நிகழ்ந்துவிட்டது.) பவுத்தத்தையும் சிங்கள தேசிய இனவாதத்தையும் ஒரு

நேர்க்கோட்டில் வைத்து, மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்து, பவுத்தம்தான்

இலங்கையின் ஒரே மத அடையாளம், சிங்களம்தான் இலங்கையின் ஒரே இன

அடையாளம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி சிங்களர்களை அவர் வீறுகொண்டு எழச்

செய்தது முக்கியம்.

தேசியவாதம் ஒரு நல்ல ஆயுதம். பயன்படுத்தும் விதத்தில் அதன் பலன் இருக்கிறது.

பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தும்போது அது பல்லிளித்துவிடும். அந்த

வகையில் சிங்கள தேசியவாதத்துக்கு வித்தூன்றியவர் என்று தயங்காமல் டான் டேவிட்

ஹெவவிதரனவைச் சொல்லலாம்.

அது அவரது பூர்வாசிரமப் பெயர். பிரம்ம ஞான சபை (Theosophical Society)யைத்

தோற்றுவித்த மேடம் பிளவாட்ஸ்கியும் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டும் (Henry

Steel Olcott)1880-ல் இலங்கைக்கு வந்து பவுத்தத்தை ஏற்று, ஏராளமான பவுத்தப்

பள்ளிக்கூடங்களைத் திறந்ததும் ஆதரவற்றோருக்கும் அகதிகளுக்கும் புனர்வாழ்வு

வழிகளைக் காட்டியதும் டான் டேவிட் ஹெவவிதரனவை மிகவும் பாதித்தது. டான்

டேவிட், தர்மபாலாவானது பெரிய விஷயமல்ல. அவர் `அனகாரிக’

தர்மபாலாவானதுதான் இங்கே முக்கியம்.

அனகாரிக என்கிற சொல்லுக்கு எளிதாகத் துறவி என்று பொருள் சொல்லிவிடலாம்.

ஆனால் பிரம்மச்சரியம், கொள்கைத் தீவிரம், போராளி மனோபாவம் போன்றவற்றை

தவம், சடங்குகள், சாது ஒழுக்கங்களுக்கு மேலாக வைத்து இயங்குவோரையே இந்தச்

சொல்லில் குறிப்பது வழக்கம்.

பவுத்தத் துறவிகளைப் போல் அனகாரிக தர்மபாலா மொட்டை அடித்துக்

கொண்டதில்லை. நல்ல, படிய வாரிய கிராப்தான் வைத்திருந்தார். இதனை

விமரிசித்தவர்களுக்கு அவரளித்த பதில்: `எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. உலகம்

முழுதும் நான் சுற்றியாக வேண்டும். இப்படி இருப்பதுதான் மக்கள் கூட்டத்துடன் கலக்க

வசதி.’ புத்தம் சரணம் கச்சாமி என்று மடம் கட்டிக்கொண்டு உட்கார்ந்து மதம் பரப்பிய

துறவி இல்லை அவர். மாறாக, இலங்கையில் மதத்தையும் அரசியலையும்

ஒன்றிணைத்து, அரசியலை ஆளும் சக்தியாக மதத்தை மேலெடுத்துச் சென்றவர்.

ஆயுதம் ஏந்திய புத்த பிக்குகள், கலவரம் செய்த புத்த பிக்குகள், தற்கொலை வீரராகக்

கூடக் களமிறங்கத் தயாரான புத்த பிக்குகளை நாம் இலங்கை சரித்திரத்தில்

காண்கிறோம். அவர்களுக்கெல்லாம் முன்னோடி, தர்மபாலா.

இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம், பிற தேசங்களில் புழக்கத்திலிருக்கும்

பவுத்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று இந்தத் தொடரின் தொடக்கத்தில்

பார்த்தோமல்லவா? அந்த மாறுதலைக் கொண்டுவந்தவர் என்று தர்மபாலாவைச்

சொல்லலாம்.

இலங்கையின் பெரும்பான்மை மக்கள், சிங்களர்கள். பெரும்பான்மையினரால்

கடைப்பிடிக்கப்படுகிற மதம் பவுத்தம். ஆனால் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் யார்?

இந்தப் பெரும்பான்மையினரே அல்லவா? உங்களுக்கெல்லாம் சுரணை இல்லையா?

வெட்கமாக இல்லையா? இந்தியாவில் நமது புத்தர் நிர்வாணமடைந்த மகாபோதி

ஆலயம் சைவ பூசாரிகளால் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை காலமாக

என்ன செய்துகொண்டிருக்கிறோம் நாம்? வெற்றுக்கூச்சல் போடாதீர். செயல், செயல்

முக்கியம். என்னுடன் வர யார் தயாராக இருக்கிறீர்கள்? நான் மொட்டை

அடித்துக்கொள்ளாததைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். இங்கே நம் சமூகம்

முழுமைக்கும் மொட்டையடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள்

சிங்களர்களே.

அனகாரிக தர்மபாலா இந்தியாவுக்கு வந்ததோ, மகாபோதி ஆலயத்தை

சைவர்களிடமிருந்து மீட்க அவர் ஓர் இயக்கம் தொடங்கியதோ இங்கு முக்கியமல்ல.

ஆனால் அவர் ஆரம்பித்த இயக்கம்தான் பின்னால் சிங்களப் பேரினவாதம் பெருக ஒரு

முக்கியமான தொடக்கப்புள்ளியாயிற்று. மிகத் தீவிரமான மத வெறி, மிகத் தீவிரமான

இன வெறி என்று சிங்களர்கள் மாறிப்போனதன் காரண புருஷர் அவர்தான்.

12

01.01.09 தொடர்கள்

நவீன உலகில், பிரம்மசரிய விரதம் பூண்டு முழு நேர மதப்பணி ஆற்றிய முதல் துறவி

என்று அனகாரிக தர்மபாலாவை சிங்களர்கள் குறிப்பிடுவார்கள். தேசிய உணர்வையும்

மத உணர்வையும் சிறப்பாக காக்டெயில் செய்யலாம் என்று பின்னர் வந்த

தலைமுறைக்குக் கற்றுத் தந்தவர் அவர். History of an Ancient Civilization :

Ceylon Under British Rule என்கிற அவரது புத்தகம், பேச்சு மற்றும் எழுத்து மூலம்

அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கலாம் என்று சொல்லும்.

எங்கு தட்டினால் யாருக்கு வலிக்கும், எங்கே சீண்டினால் துள்ளி எழுவார்கள், எப்படிச்

சொன்னால் எடுபடும், யாரை உசுப்பேற்ற எவரை மட்டம் தட்டலாம். கணக்கு மாதிரி

படிப்படியாக விரிவடைந்திருக்கின்றன அவரது பேச்சும் எழுத்தும். ஒரு வகையில்

ஹிட்லரின் ஆரிய மேலாதிக்க மனோபாவத்துடன் தர்மபாலாவின் ஆரிய மேலாதிக்க

மனோபாவத்தை நம்மால் ஒப்பிட இயலும். ஹிட்லருக்கு யூதர்கள், தர்மபாலாவுக்குத்

தமிழர்கள். ஹிட்லரின் உளவியல் பிரச்னைகள் அவரைக் கொலை வரை கொண்டு

போயின. தர்மபாலாவின் புத்திசாலித்தனம், தலைமுறை தோறும் விரோதபாவத்தை

வளர்த்துவிடுவதற்கு உதவி செய்தது! இருவருக்கும் ஆரிய மேலாதிக்க

மனோபாவம்தான். ஆனால் தர்மபாலாவின் ஆரியவாதம், ஹிட்லருடையதைப் போல்

தத்துவப் பின்னணியற்ற தாதாத்தனம் கொண்டதல்ல. தன் தீர்மானத்தைத் தானே

செயல்படுத்தி முடிக்கும் வேட்கையும் அவருக்கில்லை. ஒரு தொடர் செயலாக அதனை

முன்னெடுத்துச் செல்லவே அவர் உத்தேசித்தார். தவிரவும், தனக்கென எதையும்

சேர்த்துக் கொள்ளாத துறவியாக அவர் இருந்தபடியால், சிங்கள இனத்தவர்கள் அவரை

ஒரு மீட்பராகக் கண்டார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை, அந்தச் சிறு தீவில் சிங்களர்கள் மெஜாரிட்டியினர்

என்பது அவருக்குப் பெரிய வசதியாக இருந்தது. தனி இனம், கலப்பில்லாத சுத்த

ரத்தம், கலாசார பலம், மக்களின் அறிவுத்தளத்தில் பவுத்தம் நிகழ்த்திய புரட்சி என்று

ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள்தான் அவரது பிரசங்கங்கள் சுற்றி வருகின்றன. மிகக்

கவனமாக, ஒரு கௌரவச் சின்னமாக அன்றி, தத்துவ தரிசனமாகவோ, வாழ்வியல்

நெறியாகவோ பவுத்தத்தை அவர் முன்வைப்பதைத் தவிர்த்துவிடுகிறார். பவுத்தத்தை

உணர்வதல்ல, அதனை ஏற்றிருப்பதே உயர்ந்த செயல் என்பது தர்மபாலாவின் பக்கம்.

போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் காலத்தில் இருந்தே சிங்களர்களைத் தமிழர்கள்

ஓரம் கட்டி வந்தார்கள், சமூக அரசியல் தளத்தில் அவர்களுடைய இடமும் இருப்பும்

பிரதானமாக இருந்தது என்னும் தர்மபாலாவின் தொடர் பிரசாரங்களுக்கு உரிய

ஆதாரங்கள் நமக்குப் பொதுவாகக் கிடைப்பதில்லை. அதே சமயம் தமிழர்களைப் பல

இடங்களில் அவர் காட்டுமிராண்டிகள் என்றும் வருணித்திருப்பது நெருடுகிறது.

போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் காட்டுமிராண்டிகளுக்கு அத்தனை அதிகாரம்

அளித்திருப்பார்களா? போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் காலத்தில் எழுதப்பட்ட

இலங்கைச் சரித்திரங்களில் இத்தகைய குறிப்புகள் எங்கும் கிடைப்பதில்லை

என்பதையும் கவனிக்க வேண்டும்.

அன்றைய வட இலங்கையில் வசித்த தமிழர்கள் வசதியாக இருந்திருக்கிறார்கள்.

விவசாயம், வர்த்தகம் என்கிற இரு துறைகளில் நிறைய சம்பாதித்திருக்கிறார்கள்.

கல்வி வளர்ந்திருக்கிறது.

இந்த மூன்று அம்சங்களும் தென்னிலங்கைச் சிங்களர்களின் வாழ்வில் ஒப்பீட்டளவில்

அப்போது குறைவு என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகமும்

பண்படுவதற்கு எடுத்துக்கொள்கிற கால அவகாசம் மாறுபடக்கூடியது.

தமிழர்களிலேயேகூட, தமிழ் பேசும் முஸ்லிம்கள் சாதித்த அளவுக்கு ஈழத்தின் ஆதித்

தமிழர்களால் வர்த்தகத்தில் பெரிய அளவில் சாதிக்க முடிந்திருக்கவில்லை. தமிழ்

மொழி என்கிற ஓரம்சத்தை மட்டும் வைத்து இலங்கையில் வசிக்கும் மொத்தத்

தமிழர்களையும் ஒரே வகையினராகப் பார்ப்பதில் பல சிக்கல்கள் வரும்.

அனகாரிக தர்மபாலாவின் சிங்கள தேசிய இன வாதம் மேலோங்கத் தொடங்கிய

காலத்தில் இலங்கையின் வர்த்தக முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழ் பேசும்

முஸ்லிம்கள்தாம். தர்மபாலாவின் தேசியவாதம் என்பது அரசியல் தளத்தில்

மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார தளங்களையும் உள்ளடக்கியதாக இருந்ததன்

விளைவாக, சிங்கள வர்த்தகர்கள் எழுச்சிபெறத் தொடங்கினார்கள்.

எனவே தர்மபாலாவின் தாக்குதலுக்குத் தமிழ் முஸ்லிம்களும் முக்கிய

இலக்கானார்கள். ஹிந்துவா, முஸ்லிமா என்று பார்க்காதே. தமிழனா? ஒதுக்கித் தள்ளு.

அவன் அபாயகரமானவன். வளர விடாதே. அவன் இந்தியத் தொடர்புடையவன். நம்

மண்ணுடன் சம்பந்தமில்லாதவன். போர்த்துக்கீசியர்கள் அன்னியர்களா? டச்சுக்காரர்கள்

அன்னியர்களா? தமிழனும் அன்னியன். தள்ளி வை. நீ முன்னுக்கு வா. நீ மேலே வா. நீ

வளர வேண்டும். நீ வாழவேண்டும். அவனை ஒதுக்கித் தள்ளு. இடம் கொடுக்காதே.

அறிவுத் தளத்தில் சிந்தித்து வினா எழுப்பவோ, விடை காணவோ இத்தகைய தூண்டி

விடல்களில் இடமில்லை. தர்மபாலா முற்றிலும் உணர்ச்சித் தளத்தில் செயல்பட்ட

அறிவுஜீவி!

அதுதான் பிரச்னை.

இந்த ஒருமித்த எதிர்ப்புக்குத் தமிழர்கள் தரப்பில் ஒரே குரல் அல்லது செயலிலான

பதில் நடவடிக்கை இருந்திருக்குமானால் கதை வேறு விதமாகியிருக்கக் கூடும். அந்தத்

தருணத்தில் மொழி உணர்வு, இன உணர்வைக் காட்டிலும் வர்த்தகம் முக்கியமாகப்பட்ட

தமிழ் பேசும் முஸ்லிம்கள், தன்னிச்சையான சில பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடத்

தொடங்கியது, தமிழர்களுக்குள்ளேயே இருந்த வேறுபாட்டினை முதல் முறையாக

வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியது.

இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், கொழும்பு நகரை மையமாக வைத்துச்

செயல்பட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், (கல்வி சார்ந்த துறைகளில்

தீர்மானிக்கும் சக்திகளாக அன்றைக்கு இருந்தவர்கள்) தமிழ் பேசும் முஸ்லிம்களோடு

கடுமையாக அபிப்பிராய பேதம் கொள்ளத் தொடங்கியது இதன்பிறகுதான்.

ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பது, காலை வாரிவிடச் சந்தர்ப்பம் தேடுவது என்று

தமிழர்களுக்குள்ளேயே பிரிவினை தலை தூக்கிய சமயம், தர்மபாலாவின் சிங்கள

தேசிய வாதம் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டிருந்தது.

பவுத்தம் ஒன்றைத் தவிர பிற எந்த மதத்தவரோடும் நமக்குச் சம்பந்தமில்லை என்கிற

நிலைபாட்டை சிங்களர்கள் எடுத்திருந்தார்கள். கிறிஸ்துவர்கள் ஆகாது. தமிழர்கள்

ஆகவே ஆகாது. முஸ்லிம்கள் கூடவே கூடாது. சிங்கள இனம். பவுத்த மதம். சுத்த

ரத்தத்தின் முதலும் முடிவுமான ஒரே அடையாளம். மற்ற யாரானாலும் விரோதியே

என்னும் மனோபாவம் மேலோங்கத் தொடங்கியதன் விளைவாக, இருபதாம்

நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் இரு இனங்களுக்குமான பெரும் மோதலின்

முதல் அத்தியாயங்கள் எழுதப்படத் தொடங்கின.

1915-ல் நடந்த சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம், அதன் தொடக்கம். அதனைப்

பார்ப்பதற்கு முன்னால் இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய எளிய அறிமுகத்தைச்

செய்துகொண்டுவிடுவது நல்லது.

ஆரம்பத்திலேயே பார்த்தோம் என்றாலும் மீண்டுமொரு முறை இங்கே

நினைவுபடுத்திக்கொண்டு விடுவோம். இது மிகவும் முக்கியம்.

`இலங்கைத் தமிழர்’ என்று பொதுவில் சொல்லப்பட்டாலும், இலங்கையில் இருப்பது

மூன்று விதமான தமிழர்கள்.

இலங்கையின் பூர்வகுடித் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழகத்திலிருந்து

காப்பி தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, கண்டியைச்

சுற்றிய மலைப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்.

இதில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பவர்கள் மொத்தத் தமிழர்களில் சுமார் 28-29

சதவிகிதம் வரை வரக்கூடியவர்கள். Sri Lankan Moor இலங்கைச் சோனகர் என்று

இவர்கள் பொதுவில் குறிப்பிடப்படுவார்கள். பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு அரேபிய வர்த்தகர்கள்

வந்துபோகத் தொடங்கியதிலிருந்து இஸ்லாம் அங்கே பரவத் தொடங்கியதாகச்

சரித்திரம் சொல்வது ஒருபுறமிருக்க, ஜாவா, சுமத்ரா பகுதிகளிலிருந்து வந்த டச்சுப்

படைகளில் இருந்த முஸ்லிம்கள் இலங்கையிலேயே தங்கி, சந்ததி வளர்த்ததையும்

கணக்கில் எடுத்தாக வேண்டும்.

இவர்கள் தமிழர்கள் இல்லை. ஆனாலும் தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் பழகி, தமிழ்

அறிந்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

ஒரு வித்தியாசம் என்னவென்றால், இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்

மாகாணங்களில் மட்டும் வசிப்பதில்லை. சிங்களர்கள் மத்தியிலும் அவர்கள்

குடியிருப்புகள் உண்டு. சொல்லப்போனால் தமிழர் பகுதியில் வசிக்கும் தமிழ்

முஸ்லிம்களைக் காட்டிலும் சிங்களர் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களின்

எண்ணிக்கை அதிகம். வர்த்தகம் பிரதானம் என்னும்போது இது தவிர்க்க

முடியாததாகிறது.

இந்த வகையில் தமிழர் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரம், சிங்களர்

பகுதிவாழ் முஸ்லிம்களின் பொருளாதாரத்துடன் சம்பந்தமில்லாதது!

தமிழர் மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு விவசாயமும் மீன் பிடித் தொழிலுமே

பிரதானம். கொழும்பு, கண்டி போன்ற சிங்கள நகரங்களில் வசிப்போருக்கு

ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருந்தன. அவர்களால் பல தொழிற்சாலைகளையே

உருவாக்க முடிந்தது. அரசு ஒப்பந்தங்கள் பல அவர்களுக்குக் கிடைத்தன. உள்நாட்டிலும்

கடல் கடந்தும் தமது வியாபாரத்தை விஸ்தரிக்க வழிகள் இருந்தன.

இந்த வேறுபாடு கல்வி விஷயத்திலும் உண்டு. தமிழர் மாகாண முஸ்லிம்களைக்

காட்டிலும் சிங்களப் பகுதி வாழ் முஸ்லிம்களிடையே மத்திய தர, உயர் மத்திய தர

வகுப்பினர் எண்ணிக்கை அதிகம்.

சொல்லிக்கொள்ளும்படியான ஒரே ஒற்றுமை, தமிழ்.

எனவேதான் இயல்பாகவே கொழும்பு வாழ் முஸ்லிம் தமிழர்கள் வடக்கு -கிழக்கு

மாகாண தமிழ் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி மிக்கவர்களாக ஆகிப்

போனார்கள்.

கவனிக்க வேண்டும். சிங்கள தேசியவாதம் என்பது இனத்தையும் மதத்தையும்

முன்னிறுத்திக் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, தமிழர்களில் ஒரு பிரிவினரான தமிழ்

பேசும் முஸ்லிம்களிடையே வர்த்தகத்தை முன்னிலைப்படுத்தி அடக்கியாளும் பண்பு

மேலோங்கத் தொடங்கியது.

இதன் நீட்டல் விகாரம், தமிழர் பகுதி முஸ்லிம் குடியிருப்பில் வசிப்போர் குறித்த

அக்கறையே கொழும்பு உயர்தட்டு தமிழ் முஸ்லிம்களுக்கு இல்லாது போயிற்று.

கொழும்பில் அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். ஒரு

வார்த்தை பேசினால் என்னவும் சாதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். வர்த்தகப்

புலிகள், வருமானம் கொண்டு வருபவர்கள், எதையும் செய்து முடிக்க வல்லவர்கள்.

ஆனாலும் பின்னாளில் தமிழர் மாகாணங்களில் முஸ்லிம்களின் வசிப்பிடங்கள்

நிறைந்த பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகள் நிறுவப்பட்டபோது

கண்டுகொள்ளாமலேயே போனார்கள்!

பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நிலப்பகுதிகள் இப்படியே

களவுபோயின.

13

04.01.09 தொடர்கள்

இலங்கையில், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான முதல் நேரடி மோதல் என்பது

சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குமான மோதலாகத்தான் ஆரம்பமானது.

உபயம், பிரித்தாண்ட பெருந்தகை பிரிட்டிஷார். வேறு யார்?

ஒரு விஷயம். மோதல் என்றும் கலவரம் என்றும் வருணிக்கப்பட்டாலும் இதன்

உண்மை வடிவத்தைக் காணும்போது இதனை ஓர் உள்நாட்டு யுத்தம் என்றுதான்

சொல்ல வேண்டும். அதுவே நியாயம். சிறு யுத்தம்தான். 1915-ம் ஆண்டு மே 28-ம்

தேதி தொடங்கி ஜூன் 5-ம் தேதி முடிவடைந்து விட்டாலும் இதன் தாக்கம் பெரிது.

146 பேர் கொல்லப்பட்டு, 405 பேர் குற்றுயிரும் குலை உயிருமாக எடுத்துச்

செல்லப்பட்டார்கள். பிழைத்தவர்கள் எத்தனை பேர் என்கிற விவரம் பிறகு

வெளிவரவில்லை. தவிரவும் சுமார் 6065 முஸ்லிம் பெண்கள் இந்தத் தினங்களில் மிகக்

கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கண்டி

தொடங்கி தென் இலங்கை முழுவதிலுமாக மொத்தம் நாலாயிரம் முஸ்லிம் வர்த்தக

நிறுவனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. உச்சகட்டம், 85 மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.

செய்தது சிங்களர்கள். பிரமாதமான அரசியல் காரணங்கள் ஏதும் இதற்குக் கிடையாது.

வர்த்தகக் காரணங்களே முக்கியமாக இருந்திருக்கிறது. முன்பே பார்த்தபடி அன்றைய

நிலவரப்படி, இலங்கையில் வர்த்தகத்தைப் பொறுத்த அளவில் முஸ்லிம்களின் கையே

மேலோங்கியிருந்தது. ரத்தின வியாபாரம் அது இது என்று என்னென்னவோ

செய்துகொண்டிருந்தார்கள். நல்ல பணப்புழக்கம். உலகெங்கும் தொடர்புகள். வளமான

வாழ்க்கை. வசதிமிக்க சூழல்.

போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள் காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு வர்த்தகம்

பெரும் பிரச்னையாகத்தான் இருந்தது. அவர்களுக்கு அரசியல் மற்றும் சமூகத்

தளங்களில் சிக்கல்கள் ஏதும் இல்லாதிருந்தாலும் வர்த்தகம் செய்வதில் எப்போதும்

உண்டு இடர்ப்பாடுகள்.

இந்த நிலைமை மாறத்தொடங்கியதே பிரிட்டிஷார் காலம் வந்த பிறகுதான். பிரிட்டிஷ்

ஆட்சியை ஒரு பொற்காலமாக அவர்கள் கருத ஆரம்பித்திருந்தார்கள். எந்தச் சிக்கலும்

இல்லை. ஏற்றுமதி, இறக்குமதி விஷயங்களில் லைசென்ஸ், பர்மிட்

வகையறாக்களுக்குக் காத்திருக்க அவசியமே நேரவில்லை. ஒழுங்காக வரி கட்டு.

மிச்சம் உன் பாடு என்கிற கொள்கை எத்தனை உன்னதமானது!

அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால், ஒரு பக்கம் கொழுந்துவிட்டு எரியத்

தொடங்கியிருந்த சிங்கள தேசியவாதம் அனகாரிக தர்மபாலா கோஷ்டி மற்றும்

அரசியல் தளத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த அந்நாளைய சிங்கள

தேசியத் தலைவர்களான டி.எஸ். சேனநாயகா, எஃப்.ஆர். சேனநாயகா கோஷ்டிகள்

தூண்டி விட்ட துவேஷ உணர்வு வெடிப்பதற்கு நாள் பார்த்துக்கொண்டிருந்தது.

மேற்கே முதல் உலக யுத்தம் சூடு பிடித்துக்கொண்டிருந்த சமயம் அது. விளம்பர

இடைவேளையில் வெளியே வந்து ஒரு பீடி கொளுத்திப் போடுவது போல, தனது

கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைத் தீவை அதன் உள்நாட்டுப் பிரச்னைகளோடு மட்டும்

உறவாடச் செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. என்ன கெட்டு விட்டது? ஏழெட்டு நாள்

அடித்துக்கொண்டு சில நூறு உயிர்கள் போகும். அவ்வளவுதானே? சில

வருடங்களுக்காவது சிந்தனை மாறாது.

தொடக்கத்திலிருந்தே சிங்களர்களையும் தமிழர்களையும் பிரித்துப் பிரித்து அடையாளம்

காட்டி வந்தது, தமிழர்களுக்குள்ளே சாத்தியமுள்ள அனைத்து விதங்களிலும் பிரிவினை

விதைத்தது, சிங்களர்களுக்குள்ளேயும் விஷ வித்துக்களை விதைத்தது என்று

திருச்செயல்களுக்கு எப்போதும் குறைவிருந்ததில்லை.

ஆனபோதிலும் இன்றளவு அப்போது முழுப்பிரிவினை இல்லை. குறிப்பிட்ட காரணம்

என்று ஏதுமில்லாமல், சடாரென்று உதித்து மறைந்த அந்த 1915 கலவரத்திலிருந்தே

இதற்கு உதாரணம் பெறலாம்.

கலவரம் அல்லது மோதல் அல்லது யுத்தம் நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள்

இறந்தார்கள், மரண ஓலம், மரண பய ஓலம். கண்டி தொடங்கி கொழும்பு வரை எங்கும்

அச்சம். கடையடைப்பு. கடை உடைப்பு. தீவைப்புச் சம்பவங்கள். பெண்கள் வீதிக்கு

வரவே முடியாத மாபெரும் அவலச் சூழல்.

பாதிக்கப்பட்டிருந்த அத்தனை பேரும் தமிழ் முஸ்லிம்கள். இதில் சற்றும்

சந்தேகமில்லை. காரண கர்த்தாக்கள் சிங்களர்கள். அதாவது சிங்கள அரசியல்வாதிகள்.

அவர்களால் தூண்டிவிடப்பட்ட செயல்வீரர்கள்.

அடித்து நொறுக்கும் வரை காத்திருந்துவிட்டு இறுதியில் காரண புருஷர்களான டான்

ஸ்டீபன் சேனநாயகாவையும், அவரது சகோதரர் பிரடரிக் ரிச்சர்ட் சேனநாயகாவையும்

கைது செய்தது பிரிட்டிஷ் அரசு.

பின்னாளில் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது, முதல் பிரதமராகப் பொறுப்பேற்றவர்

இந்த டி.எஸ். சேனநாயகாதான். 1915 கலவர காலத்தில் அவர் ஓர் இளம்

அரசியல்வாதி. வயதுக்குரிய வேகம், ஆரம்ப அரசியலுக்கே உரிய அடங்காத

ஆர்வங்கள். அண்ணனுக்கேற்ற தம்பி, ஜாடிக்கேற்ற மூடி.

இந்தக் கைதுச் சம்பவத்துக்கு எதிராக வாதாட முடிவு செய்து, லண்டனுக்கே சென்று

ராணியைச் சந்தித்துப் பேசி, வென்று திரும்பியவர் பொன் ராமநாதன் என்கிற தமிழர்.

அன்றைக்கு சர். பொன் ராமநாதன், தமிழர்களுக்கு மட்டும் தலைவரல்லர். இலங்கை

தேசிய அரசியலில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் லண்டன் சென்று

வாதாடித் திரும்பியபோது, வரவேற்க துறைமுகத்தில் காத்திருந்தவர்கள் எல்லோரும்

சிங்கள அரசியல்வாதிகள்.

வெற்றிக் கொடி கட்டிய கப்பலில் வந்து இறங்கிய ராமநாதனை வீட்டுக்கு அழைத்துச்

செல்ல பன்னிரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியொன்று தயாராக இருந்தது.

ஆனால், இழுத்துச் சென்றது குதிரைகள் இல்லை. ஒரு மாபெரும் உணர்ச்சிப்

பெருக்கெடுத்த காட்சி அங்கே அரங்கேறியது. சேனநாயகாவை மீட்டுத் தந்த

தமிழரல்லவா? குதிரைகளா அவரது வண்டியை இழுப்பது? அப்புறமென்ன மரியாதை?

பூட்டிய குதிரைகளை அவிழ்த்துவிட்டு, சிங்கள அரசியல்வாதிகளே ராமநாதனின்

ரதத்தை இழுத்துச் சென்றார்கள். அவரது வீடு வரை கொண்டுபோய்

இறக்கிவிட்டுவிட்டுத்தான் திரும்பினார்கள்! கொழும்பு நகரமே இந்தக் காட்சியைக்

கண்டுகளித்தது. யாரும் அதற்கு முன்னால் பார்த்திராத அற்புதக் காட்சி. இன்னொரு

முறை கிடைக்க வாய்ப்புண்டா என்று சொல்லமுடியாது. எனவே, கண்குளிரக்

கண்டார்கள். பரவசப்பட்டார்கள்.

இது சரித்திரம்.

புல்லரிக்கச் செய்யக்கூடிய சரித்திரம்தான். ஆனாலும் இதன் பின்னால் உள்ள

அரசியலையும் கவனித்தாக வேண்டும்.

கலவரம் நடந்தது யாருக்கிடையில்?

சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும். காரண புருஷர்கள் சிங்களர்கள்.

கைதானதும் சிங்களத் தலைவர்கள்தாம்.

அவர்களது கைது பொறுக்காமல் லண்டனுக்குக் கப்பலேறிச் சென்று வாதாடி மீட்டுத்

திரும்பியவர் ஒரு தமிழர் தலைவர் என்னும்போது புரிந்திருக்க வேண்டும்.

இலங்கையில், சிங்கள தேசியவாதம் என்பது மொழி மற்றும் மதம் சார்ந்து

வீறுகொள்ளத் தொடங்கிய நேரத்தில் தமிழ் தேசியத் தலைவர்கள், தமிழ் பேசும்

முஸ்லிம்களை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை.

இலங்கையில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் ஆதிக்குடித் தமிழர்களுக்குமான

இடைவெளி எங்கிருந்து உருவாகத் தொடங்கியது என்பதை இந்தப் புள்ளி சுட்டிக்காட்டும்.

ராமநாதன், அவரையொத்த வேறு சில அந்நாளைய தமிழ்த் தலைவர்களைப் பற்றி

இருவேறு அபிப்பிராயங்கள் இன்றளவும் உண்டு. தமிழர்களுக்கிடையே நிரந்தரமான

பிளவினை உருவாக்க அவர்களது அன்றைய நடவடிக்கைகள் முதன்மைக்

காரணமாயிருந்தன என்பது ஒரு வாதம்;

சிங்கள மக்கள் இனவாதம் பேசத் தொடங்கிய காலத்தில், தமிழர் தலைவர்கள் தங்களது

இனத்தை முதன்மைப்படுத்தாமல், இலங்கை தேசத்தின் குடிகளாக மட்டுமே தங்களை

வெளிப்படுத்திக்கொண்டனர் என்பது இன்னொரு வாதம். சிங்களர், தமிழர் பாகுபாடு

எங்கள் மனத்தில் இல்லை என்பதைச் சுட்டுவதாகவே அவர்களது நடவடிக்கைகள்

இருந்தன என்பது இதன் பொருள்.

ஆனால், பெரும்பான்மையானவர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இந்தக்

கப்பலேறிச் சென்று மீட்டு வந்த சம்பவத்தைக்கூட, பதவியின் பொருட்டு

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே பார்ப்பவர்களுண்டு. பன்னிரண்டு குதிரைகள்

பூட்டப்பட்டு, பிறகு அவிழ்த்துவிடப்பட்டு சிங்கள அரசியல்வாதிகளாலேயே ரதம்

இழுக்கப்பட்டு, ராமநாதன் கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச்

செல்லப்பட்டபோதும், வழியில் இருந்த பல முஸ்லிம் கடைகள் தாக்கப்பட்டன.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதி.

யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஏனென்று விசாரிக்கவில்லை. சேனநாயகா

விடுதலையாகிவிட்டார். அவரது தம்பியும் வெளியே வந்துவிட்டார். கைதான அனைத்து

சிங்களத் தலைவர்களுக்கும் விடுதலை. கைது செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு

விசாரணை காத்திருக்கிறது. சர். பொன் ராமநாதன் சாதித்திருக்கிறார். கொண்டாடாமல்

எப்படி?

கலவரமெல்லாம் நடந்து ஓய்ந்த மறு வருடம் (1916) நடைபெற்ற தேசிய சபைத்

தேர்தலில் ராமநாதனும் ஒரு வேட்பாளர். அவரை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்கள

வேட்பாளர். பெயர் ஜெயவர்த்தனே.

வெற்றி பெற்றது ராமநாதன் தான். சிங்களர்கள் அவருக்கே ஓட்டளித்திருந்தார்கள்!

ஒரு சாதாரணமான கலவரமாகக் கூட அந்தச் சம்பவம் கடந்து போயிருக்கலாம்.

கைதுச் சம்பவங்களைத் தட்டிக்கேட்ட ராமநாதன் போன்றவர்களுக்கு

இலங்கைக்குள்ளேயே விரும்பிய பதிலை அளித்திருக்கலாம். ஆனால் ஒரு மகத்தான

நாடகத்தின் உச்சகட்ட காட்சியைப் போல் வடிவமைத்து, யுத்த காலத்தில் அவர்

கப்பலேறி பிரிட்டனுக்குச் சென்று மகாராணியைச் சந்தித்து, வாதாடி, வெற்றி பெற்றுத்

திரும்புவதற்கு வாய்ப்பளித்ததன்மூலம் பிரிட்டிஷ் அரசு என்ன சாதித்தது?

சுலபம். பிரித்தாளும் நடவடிக்கையின் ஒரு முக்கிய அத்தியாயம் அது. சிங்களர் –

முஸ்லிம் கலவரமாக அந்த வினாடி வரை தோற்றமளித்த சம்பவத்தை சிங்களர் –

தமிழர் – முஸ்லிம் விரோதமாகப் பரிமாணம் கொள்ளச் செய்ததே அவர்களுடைய

வெற்றி.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இழப்புக்கு முன்னால் ராமநாதனின்

தேசியவாத நடவடிக்கை எடுபடக்கூடியதல்ல என்பது பிரிட்டிஷ் அரசுக்குத் தெரியும்.

சிங்கள இனவாதம், ராமநாதனின் நாட்டுப்பற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாது

என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

அடுத்த தேர்தலில் அவர் வென்றாரா, தோற்றாரா என்பதல்ல விஷயம். மூன்று

வேறுபட்ட கலாசாரப் பின்னணி கொண்ட மக்களை நிரந்தரமான பகையில் வைத்திருக்க

அவர்களுக்கு அதுவே போதுமானதாக அமைந்துவிட்டது!

14

08.01.09 தொடர்கள்

1948 பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை சுதந்திரம் அடைந்தது.

இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளுள் ஒன்றாக, அதுநாள் வரை

அடிமைப்பட்டுக் கிடந்த பெரும்பாலான தேசங்கள் அப்போது விடுதலை பெறத்

தொடங்கியதன் தொடர்ச்சியாகத்தான் இது நிகழ்ந்தது.

வித்தியாசம் ஒன்று. மற்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டம் என்பது பல்லாண்டு காலம்

மிகத் தீவிரமாக நடந்து, இறுதியில் ஆசுவாசப் பெருமூச்சாக அமைந்த இந்த வைபவம்,

இலங்கையைப் பொறுத்த அளவில் பெரிய போராட்டங்கள் ஏதுமில்லாமலேயே

சித்தித்தது.

ஒரேயடியாக யாருமே சுதந்திரம் கோரவில்லை என்று சொல்லிவிடுவதற்கில்லை.

கேட்டார்கள். ஆனால், 1935 க்குப் பிறகுதான் இந்த எண்ணமே அங்கு வந்திருக்கிறது.

அதுவும் ஆரம்பித்து வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். அந்த வருடம் பிறந்த லங்கா சம

சமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party – LSSP)யின் முதல் கொள்கை விளக்க

அறிக்கையில் இந்தக் கோரிக்கை இருந்தது. பூரண சுதந்திரம்.

முன்னதாக 1919 லேயே சிலோன் தேசிய காங்கிரஸ் (Cyclon National Congress –

CNC) பிறந்துவிட்டதென்றாலும் சுதந்திரம் அவர்களுடைய முக்கியக் கொள்கையாக

இல்லை. இலங்கையின் முதல் தலைமுறை தேசியவாதிகளான அவர்களுக்கு,

அனகாரிக தர்மபாலாவின் பேரலல் அரசியலை எப்படிச் சமாளிப்பது என்கிற கவலையே

பெரிதாக இருந்தது.

தர்மபாலாவைப் பின்பற்றி பவுத்தத்தை ஏற்று, மத முத்திரையுடன் அரசியலில் ஈடுபட்ட

சிங்களர்களை அவர்கள் ப்ராட்டஸ்டண்ட் பவுத்தர்கள் என்று அழைத்தார்கள்.

இந்த அடைமொழியின் பின்னால் உள்ள அரசியல், நியாயமாக ப்ராட்டஸ்டண்ட்

கிறிஸ்துவ பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கடும் கோபம் விளைவித்திருக்க வேண்டும். மாறாக,

முட்டிக்கொள்ளத்தானே எல்லாம்? ஜோராக முட்டிக்கொள்ளுங்கள் என்று வேடிக்கை

பார்ப்பதுடன் நிறுத்திக்கொண்டார்கள்.

பிரச்னை இல்லாமல் இல்லை. நிறையவே இருந்தது. தேசிய அரசியலில் தமிழர்கள்

கணிசமாகவும் காத்திரமாகவும் பங்களித்துக்கொண்டிருந்- தாலும், அவர்களை ஏற்பதில்

சிங்கள அரசியல்வாதிகளுக்கு அப்போதே தயக்கங்களும் சங்கடங்களும் இருந்தன.

சிலோன் தேசிய காங்கிரஸுக்குள்ளேயே இருந்த தமிழ்த் தலைவர்களுடன் எப்போதும்

சட்டை பிடிக்கத் தயாராகச் சிலர் இருக்கவே செய்தார்கள்.

இதனிடையே தர்மபாலாவினால் உந்தப்பட்டு அரசியலுக்குள் நுழைந்த இளைஞர்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய இளைஞர் பேரவைகளை உருவாக்கத்

தொடங்கியிருந்தார்கள். அதற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் ஓர் இளைஞர் அமைப்பு

தொடங்கப்பட்டுவிட்டிருந்தது. 1924-ல் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் என்று

அதற்குப் பெயரும் இடப்பட்டது.

இந்த இளைஞர்களின் அப்போதைய ஆதர்சமாக இலங்கையில் யாருமில்லை. மாறாக,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தமக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்

தொடங்கினார்கள். காந்தியும் நேருவும் படேலும் சுபாஷும் போட்டோக்களாகவும்

புத்தகங்களாகவும் கப்பலேறி இலங்கைக்கு வந்து சேர்ந்தது அப்போதுதான்.

இந்த இளைஞர் காங்கிரஸின் கொள்கைகள் மிக எளிமையானவை. சுதந்திரமல்ல;

சுயாட்சி அதிகாரம் வேண்டும். தேசிய ஒற்றுமை என்பது பேச்சளவில் அல்லாமல்

சிங்கள – தமிழர் ஒற்றுமை உண்மையிலேயே உறுதிப்பட வேண்டும். சாதிய ரீதியிலான

ஒடுக்குமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்தது, 1931-ல் நடைபெற்ற ஒரு மாகாண

கவுன்சில் தேர்தலைப் புறக்கணித்தது, ஒரு ஸ்பின்னிங் மில் வேலை நிறுத்தத்தை

முன்னின்று நடத்தியது, சிங்கள மொழியில் ஒரு பத்திரிகை நடத்தியது என்று கொஞ்சம்

தீவிரமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வகையில் தர்மபாலாவின் இளைஞர் கோஷ்டிகள் பெருகவும் மூலைக்கொரு

பேரவை தொடங்கவும் இந்த யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களின் அமைப்பு ஒரு

முக்கியக் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில்கூடத் தமிழர்கள்

முந்திக்கொண்டார்களே என்கிற கடுப்பு அவர்களுக்கு.

யாழ்ப்பாணத் தமிழர்களைப் பார்த்து தர்மபாலா வழிச் சிங்கள இளைஞர்கள்

பேரவைகளாக உற்பத்தி செய்துகொண்டிருந்தது, தர்மபாலாவின் எதிர்கோஷ்டி சிங்கள

அரசியல்வாதிகளின் வயிற்றில் மிளகாய் சேர்த்து புளியைக் கரைத்தது. ஏதாவது செய்து

தங்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள மிகவும் விரும்பினார்கள்.

சிங்களர் நலனுக்காகப் பாடுபடுவது தாங்கள்தாம் என்பதை நிறுவுவது ஒன்று;

ஏற்கெனவே தொடங்கிவைக்கப்பட்டிருந்த சிங்களர் – தமிழர் பிரிவினைத் திருவிழாவுக்கு

தூபம் போடவேண்டியது மற்றொன்று. என்ன செய்யலாம்?

1931-ம் ஆண்டு டி.எஸ். சேனநாயகாவின் முயற்சியால் சில மாபெரும் குடியேற்றத்

திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

காலம் காலமாகத் தமிழர்கள் வசித்து வரும் பகுதிகளில் சிறுகச் சிறுக சிங்கள

மக்களைக் குடியமர்த்துவது. அவர்களுக்கு நிலம் கொடுப்பது. வீட்டு வசதி

செய்துகொடுப்பது. அங்கே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது.

இதன்மூலம் மூன்று லாபங்கள். தமிழர்களை ஓரம்கட்டலாம். சிங்களர்களைச்

சந்தோஷப்படுத்தலாம். தர்மபாலா பிராண்ட் அரசியல் மயக்கத்திலிருந்து சிங்கள

இளைஞர்களை வெளியே கொண்டுவந்து சிலோன் தேசிய காங்கிரஸ் நீரோட்டத்தில்

இணைக்கலாம்.

சேனநாயகாவின் முயற்சியின் விளைவாக, முதன் முதலில் கல்லேய குடியேற்றத்

திட்டம், கந்தளாய் அல்லை குடியேற்றத் திட்டம் என்ற இரண்டு திட்டங்கள்

செயல்படுத்தப்பட்டன. வருஷம் 1931.

அவை தமிழர் பகுதிகள். பெரும்பாலும் மத்தியதர, கீழ் மத்தியதர, கீழ்த்தட்டு மக்கள்

அதிகமும் விவசாயிகள் வசித்து வந்த பகுதிகள். முஸ்லிம்களும் இருந்தார்கள். தமிழ்

பேசும் முஸ்லிம்கள்.

சட்டென்று ஒருநாள் காலை கட்சிக் கொடி நட்டு, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது

போன்ற செயலல்ல இது. திட்டமிட்டுச் செய்யப்பட்டது. தகுந்த பாதுகாப்பு

ஏற்பாடுகளுடன், என்ன பிரச்னை வந்தாலும் சமாளிக்கத் தயாராகத் தொடங்கப்பட்டது.

ஆனால் என்ன பெரிய பிரச்னை வந்துவிடும்?

அன்றைய காலகட்டத்தில் சிங்களர்களாவது அரசியல் தளத்தில் மட்டும் இரண்டாகப்

பிரிந்திருந்தார்கள். தர்மபாலா கோஷ்டி, சேனநாயகா கோஷ்டி. தமிழர்கள்?

அரசியலுக்கு அப்பாலே அவர்கள் மூன்றாக அல்லவா இருந்தார்கள்? ஆதிகுடித்

தமிழர்கள் ஒருபக்கம். தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு பக்கம். இந்தியாவிலிருந்து

கொண்டுபோய் நடப்பட்ட மலையகத் தமிழர்கள் ஒரு பக்கம்.

இதற்குள்ளே ஆயிரத்தெட்டு ஜாதிகள், நூற்றியெட்டு பிரிவுகள்.

தவிரவும் அதிகார வர்க்கத்துடன் நெருக்கமாகவும் அதிகாரம்

செலுத்தக்கூடியவர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் (கொழும்புவில் மையம்

கொண்டிருந்தவர்கள் இவர்கள்) முற்றிலும் வேறானவர்களாக இருந்தார்கள்.

காலனியாதிக்க தேசமாக இருந்த இலங்கைக்குள் சில குட்டிக் காலனிகள் அமைக்க

அன்றைக்கு சிங்களத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியை- அவர்கள் அளவு,

சொல்லப்போனால் அவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலான செல்வாக்குடன்

இலங்கை அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொன்னம்பலம் ராமநாதன் போன்ற

தமிழ்த் தலைவர்கள் நினைத்திருந்தால் முளையிலேயே தடுத்திருக்க இயலும்.

ஆனால் செய்யவில்லை.

இது தமிழர்களுக்கிடையே இருந்த பிரிவினையை சிங்களர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும்

மிகச் சரியாகச் சுட்டிக்காட்டிய விஷயங்களுள் முக்கியமானது.

நாற்பத்தெட்டு பிப்ரவரியில் பிரிட்டிஷ் அரசு விடைபெற்றுக்கொண்டு இலங்கைக்குப்

பூரண சுதந்திரமும் பெரும்பான்மை மக்களான சிங்களர் வசம் ஆட்சியுரிமையும்

அளித்துவிட்டுக் கப்பலேறிய பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் காரியமே தமிழர்

தலையில் கைவைத்ததுதான்.

அதற்குக் குடியுரிமைச் சட்டம் என்று பெயர். குடி அகல்வுச் சட்டம் என்று தமிழர்கள்

சொல்வார்கள். ஒருவகையில் அதுவே சரி.

இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், சிங்கள அரசு குப்பை என்று கருதுவதைப்

பெருக்கித் தள்ளுவது.

எது குப்பை? தமிழர்கள். ஆதியிலிருந்து இருக்கிறவர்கள் போதாதென்று பாதியில்

இந்தியாவிலிருந்து வேறு வந்து குவிந்திருக்கிறார்கள். மலையகம் பெரிது. விளைச்சல்

பெரிது. பிரிட்டிஷார் மூட்டை கட்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இனி அங்கே

தமிழர்கள் இருப்பது அபாயமல்லவா? இத்தனை வருடங்களாக இருந்த தமிழர்கள்,

உழைத்த நிலத்துக்கு ஆளுக்கொரு வேலி போட்டுக்கொண்டு விட்டால்?

இதனை உத்தேசித்துக் கொண்டுவரப்பட்டதே அந்தச் சட்டம்.

இதோ பார், இனி இது சுதந்திர இலங்கை. பவுத்தம் ஆளும் மதம். சிங்களம் ஆளும்

மொழி. தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். சரி ஒழியட்டும். ஆதிகாலம் தொட்டு

இருந்து வருகிறார்கள். நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாலைந்து

தலைமுறைகளாகவாவது இருப்பதற்கு சாட்சி வேண்டும். உன் அப்பா யார்? தாத்தா

என்ன செய்துகொண்டிருந்தார்? கொள்ளுத்தாத்தாவுக்கு யாழ்ப்பாணத்தில் வீடு

இருந்ததா? எள்ளுத் தாத்தா ராஜகைங்கர்யம் செய்திருக்கிறாரா? அவருக்கு முன்னால்?

என்னது? உன் அப்பா இந்தியாவில் இருக்கிறாரா? நீ பிழைக்க வந்தாயா? சரி,

பிழைத்தது போதும், நடையைக் கட்டு.

நம்புங்கள். சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் ஒரே நாளில்

தங்கள் குடியுரிமையை இழந்து நடுத்தெருவில் நின்றார்கள். இனி அவர்களுக்குக் கல்வி

கிடையாது. வேலை வாய்ப்புகள் கிடையாது. வோட்டுரிமை கிடையாது. தொழில் செய்ய

அனுமதி கிடையாது.

போய்விட வேண்டுமென்பதுதான் நோக்கம். இருந்தே தீருவேன் என்றால் இதெல்லாம்

கிடையாது. இருக்கவிடாமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில்

எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு விளம்பர இடைவேளை.

இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறை என்பது அத்தேசம் சுதந்திரம் பெற்ற

ஆண்டே தொடங்கியது. சிங்கள தேசியவாதிகளின் செயல்திட்டமே அதுவாகத்தான்

இருந்தது.

சுமார் நானூறு ஆண்டுகளாக யார் யாரோ வந்து ஆண்டு அனுபவித்துவிட்டார்கள்.

முதன் முதலாக சுதந்திரம் என்று ஒன்று அகப்பட்டிருக்கிறது. உலக யுத்தமெல்லாம்

முடிந்து அமைதி மாதிரி ஏதோ ஒன்று எல்லா இடங்களிலும் தழைக்க

ஆரம்பித்திருக்கிறது. நாமும் கொஞ்சம் அனுபவிப்போம், என்ன பிரச்னை என்றாலும்

நிதானமாகப் பார்ப்போம் என்று யாரும் நினைக்கவில்லை.

சுதந்திரம் பெற்றதே தமிழர்களை ஒழிக்கத்தான் என்பதாக அவர்கள்

எடுத்துக்கொண்டதற்கு அரசியல்ரீதியிலான பிரமாதமான காரணங்கள் ஏதுமில்லை.

இன உணர்வு என்பது வன்மமாகப் பரிமாண வளர்ச்சி பெற்றதன் விபரீத விளைவு. சில

அரசியல்வாதிகள் இதற்கு தூபமிட்டிருக்கிறார்கள்.

ஆனால் அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் மீது ஆதியிலிருந்தே

இருந்து வந்த எதிர்ப்பு மற்றும் வெறுப்புணர்வுக்குக் காரணங்கள் தேடிக்கொண்டிருப்பது

நேர விரயம்.

கல்வி, பொருளாதார, சமூகக் கட்டமைப்புத் தளங்களில் தமிழர்கள் தொடக்கத்திலிருந்தே

அங்கு மேம்பட்டிருந்ததைத்தான் இதன் காரணமாகச் சொல்லவேண்டும்.

Categories: Blogroll