ஸ்ரீ மந் நாராயணீயம்
உரை ஆசிரியர்: ஆர் பொன்னம்மாள்.
கிடைகுமிடம்: திருவரசு புத்தக நிலையம்
23, தீன தயாளு தெரு,
தியாக ராய நகர், சென்னை 6000017.
ஸ்ரீ நாராயாணபட்டத்ரி என்ற கிருஷ்ணபக்தர் பாடிய நூல் இக்காவியம். குரு அச்சுதப்பிஷாரோடியின் வாதநோயைத் தனக்கு வரும்படி பிரார்த்தித்து, ஏற்று தன் வியாதி குணமடையப் பாடிய காவியம் இது. ஒவ்வொரு பாடலையும் குருவாயூரப்பன் சன்னதியிலிருந்து பாடி, குருவாயூரப்பன் ”ஆம்” என்று ஒப்புக் கொண்ட பிற்கே அடுத்த கவிதைக்கு செல்வார். அவரது வரலாறும் இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளது.
மொத்தம் 1034 ஸ்லோகங்களுக்கும் நீண்ட காலமாக ஆன்மீகப் பணி புரியும் ஆர் பொன்னம்மாள் அற்புதமாக விளக்கம் தந்திருக்கிறார். முகப்பு அட்டையும் பிரமாதமாக உள்ளது. இந்நூலின் ஸ்லோகங்கள் வாயில் நுழையாதவர் அர்த்தங்களைப் படிதாலும் அதே பலன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஐஸ்வர்யம், கொடிய ரோகமும் நிவர்த்தியடைதல், சிறையிலிருந்து விடுதலை, சொத்து வாங்குதல், வழக்குத் தீருதல், பகையிலிருந்து மீளுதல், விபத்துக்கள், தீ இவற்றிலிருந்து தப்புதல், கிரக பீடை நீங்குதல், உத்யோக உயர்வு, கீர்த்தி, சந்தான பாக்கியம்,ஆயுள் விருத்தி, பயிர் செழிக்க, படிப்பில் சாதனை படைக்க,தொழிலில் லாபம்காண, ஏவல், பில்லி, சுனியம் அகல, பாக்கிகள் வசூலாக, பயம் தொலைய இப்படி எத்தனையோ பலன்களை தினமும் முடிந்த அளவு பாராயணம் செய்வதால் அடையலாம்.
காலசர்ப்ப தோஷமும் ஒன்றும் செய்யாது என்கிறது பலஸ்ருதி. அக்னி,வெள்ள அபாயங்கள் தொடாது.
பாகவதம் சுருக்கமாக, ஆனால் சுவாரஸ்யம்மாக சொல்லப்பட்டிருக்கிறது. ராஸக்ரீடை, கண்ணன் திருமணத்தைப் படிததால் ஆண்-பெண் இருபாலருக்கும் விவாகம் கூடிவரும்.
எந்தெந்த தசகம் என்னென்ன பலன் என்றும் விபரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேன் இனிகும் என்பதை ருசித்தவரே உணரமுடியும்.
இந்நூல் ஒரு பொக்கிஷம். ருசியில் தேன். நோயில் அல்லாடு பவர்களுக்கு ஒளடதம்.
Recent Comments