Archive
Thursday – Chennai Events: Tamil Books, Journals & Magazine Collections – Puthagam Pesuthu: தமிழ் நூல் தொகுப்பு வரலாறு : ஆய்வரங்கம்
தமிழ் நூல் தொகுப்பு வரலாறு*
சங்க காலம் முதல் சமகாலம் வரை
ஆய்வரங்கம்
17.02.2011, வியாழக்கிழமை, மாலை 6 மணி.
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்,
அண்ணாசாலை, சென்னை -2 முன்னிலை:
ந.வே. அருள், கி. அன்பரசன்
த-முஎகச
தலைமை :
ச. தமிழ்ச்செல்வன்
வரவேற்பு :
இரா. நடராசன்
சிறப்புரை:
ஈரோடு தமிழன்பன்
வீ. அரசு
கமலாலயன்
நன்றி:
முத்தையா வெள்ளையன்
பாரதி புத்தகாலயத்தார் ஆற்றிவரும் தமிழ்ப் பணியை எப்படிப் பாராட்டினாலும் தகும். இவர்களது "புதிய புத்தகம் பேசுது' எப்போது வெளிவரும், என்னென்ன புத்தகங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் இலக்கியப் பிரியர்களில் நானும் ஒருவன். சங்ககாலம் முதல் சமகாலம் வரை பல தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. சொல்லப்போனால், சங்க இலக்கியங்களே கூட ஒரு தொகுப்பு நூல்தான். சங்க இலக்கியம் எனும் பெயர் பரவலாக அறியப்படுவதற்கு முன்னர், "பாட்டும் தொகையும்' என்றும், "பதினெண் மேற்கணக்கு நூல்கள்' என்றும்தான் வழங்கப்பட்டன. தொகுப்பு மரபு ஒரு காலகட்டத்தின் பதிவுகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையானதோ, அதே அளவுக்கு அந்தக் காலகட்டத்தின் அனைத்துப் பதிவுகளையும் கடத்துவதில்லை என்பதும் உண்மை. "தெரிவு' நிகழும்போதே அதன் உடன் விளைவாக விலக்கலும் தோன்றும். இதற்கு இலக்கிய நயமும் உணர்வும் மட்டும் காரணமல்ல. தொகுப்போரும் தொகுப்பிப்போரும் எவ்விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனரோ அதற்கு மாற்றான பதிவுகள் வேண்டுமென்றே விலக்கப்பட்டுவிடுகின்றன. இதனை மனதில்கொண்டு, சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தொகுப்பு மரபுகள் குறித்த முழுமையான தரவுகளையும் விவாதங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆவணப் பதிவுதான் பாரதி புத்தகாலயத்தாரின் "தமிழ் நூல் தொகுப்பு வரலாறு'. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில், "சங்க இலக்கியத் தொகுப்பு வரலாறு' எனும் தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்திவரும் சு.சுஜாவின் "சங்க இலக்கியப் புரிதல்-தொகுப்புக் குறிப்புகள்' என்ற கட்டுரையுடன் தொடங்குகிறது இந்தத் தொகுப்பு. மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள். ஒவ்வொன்றும் அதனதன் நோக்கில் வித்தியாசமான அற்புதமான, ஆய்வுப் பதிவுகள். த.செந்தில்குமாரின் "சித்தர் பாடல்கள் – தொகுப்பு வரலாறு', ம.மணிமாறனின் "தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுதிகள்', பழ.அதியமானின் "இதழ்த் தொகுப்பு: தூக்க நினைத்த கோவர்த்தன கிரி', சி.இளங்கோவின் "பழமொழிகள் – விடுகதைகள் தொகுப்பு வரலாறு' ஆகியவை புதிய பல செய்திகளைத் தாங்கி பிரமிப்பை ஊட்டும் ஆய்வுகள். அ.அண்ணாமலையின் "காந்தி நூல் தொகுப்பு – உயரிய வாழ்க்கையின் எளிய அறிமுகம்' மூன்று நான்கு முறை மீண்டும் மீண்டும் என்னைப் படிக்கத் தூண்டியது. தங்களது பதிப்புரையில் "புத்தகம் பேசுது' ஆசிரியர் குழுவினர் குறிப்பிட்டிருப்பதைப்போல, ""தமிழ் இலக்கிய மரபு குறித்து தொடர்ச்சியான விவாதங்களையும் முழுமையான ஆவணத்தையும் உருவாக்கும் முயற்சியில் இந்தத் தொகுப்பு ஓர் ஆரம்பப் புள்ளி''. ******
K. Nagarajan
*Bharathi Puthakalayam*
421, Anna Salai, Teynampet
Chennai – 600 018
# 044-24332424
Recent Comments