Home
> Uncategorized > Enakkul Oruvan – Ther kondu Senravan Yaar Enru: Sripriya – Hamsadhvani – Ilaiyaraja
Enakkul Oruvan – Ther kondu Senravan Yaar Enru: Sripriya – Hamsadhvani – Ilaiyaraja
எனக்குள் ஒருவன் – இளையராஜா – அம்சத்வனி – ஸ்ரீப்ரியா – தேர் கொண்டு
http://isaiarasi.blogspot.com/2007/12/3_19.html இசைஞானி இளையராஜா இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இப்பாடல் "எனக்குள் ஒருவன்" திரையில் இடம்பெற்றதாகும். இத்திரைப்படம் 1984 இல் கவிதாலயா தயாரிப்பில் கமல்,ஸ்ரீபிரியா நடிப்பில் வந்த மறுபிறவிக்கதை. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார். இதே பாடலின் மெட்டை மலையாளத்தில் அதே ஆண்டு வெளிவந்த "ஒன்னானு நம்மள்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாசை வைத்துப் பாட வைத்திருக்கின்றார் இசைஞானி. அதைப்பற்றி இங்கே வீடியோஸ்பதி பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
இன்றைய கதாநாயகி வரிசையில் ஸ்ரீபிரியாவிற்காக அமையும் இப்பாடல் அவருக்கான கன கச்சிதமான தேர்வென்றே நினைக்கின்றேன். அவர் பரத நாட்டியாமாடும் இப்ப படத்தில் அவர் நடித்திருக்கின்றார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னணியில் இருந்த காலத்தில் பல பாடகிகள் குரல் கொடுத்திருந்தாலும் பி.சுசீலாவின் குரல் இவரின் குரல் அமைப்புக்கும் ஏற்றதென்றே நினைக்கின்றேன். ================================================================================
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்
பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான் என்ன ஒரு வேதனை பத்து விரல் சோதனை
தேனாற்றில் பாலோட நான் என்ன வாதாட
கண் விழித்த காலை வேளை காணவில்லையே தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
உள்ளம் தொட்ட மன்மதா என்னை விட்டு செல்வதா
உன் சேதி வாராதா உள் நெஞ்சம் ஆறாதா
இந்த ஒலி நிலவை பார்த்து கைகள் நீட்டுதா ஆஅ தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ ================================================================================
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments