Home
> Uncategorized > Cauvery Mangai Vandhaal Amma – Ilaiyaraja in Salangai Oli: Kamal, Jeyaprada: Vairamuthu
Cauvery Mangai Vandhaal Amma – Ilaiyaraja in Salangai Oli: Kamal, Jeyaprada: Vairamuthu
http://myspb.blogspot.com/2006/10/blog-post_27.html
ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்!! எனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது! இதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது. மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ "ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு" என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா? அது படத்தில் வரவில்லை. சலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் "காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி" என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் "சிதாரா"வில் இடம் பெற்றது. தனனனனனனன தனனனனனனதனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி மேனி எங்கும் மினுக்கி அட
மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
குண்டுமல்லியில் கொண்டையும் வச்சு
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments