Archive

Archive for June, 2012

Writer Sujatha about Islam: Reading Quran as a Non-Muslim: Dinamani Ramzan Malar 2003

June 30, 2012 Leave a comment

இஸ்லாத்தை பற்றிய எழுத்தாளர் சுஜாதாவின் அனுபவங்கள்

“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார்.

நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’

‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”

சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)

 

Obamacare Upheld: How and Why Did Justice Roberts Do It? | The Nation

June 28, 2012 Leave a comment
Categories: Uncategorized

நமது வரலாற்றாய்வின் அடிப்படை என்ன? – குமரி மைந்தன்

June 25, 2012 Leave a comment

‘பெரும்பாலான வரலாறுகள் விருப்பக் கற்பனைகள் மீதி ஊகங்கள்’ என்பது கலாச்சாரத்தின் வரலாறு என்ற தலைப்பில் 14 மடலாய்வுகளை எழுதிய வில்டியூரண்டின் கூற்றாகும். ‘வரலாறு என்பது உண்மை பெயர்களைக் கொண்ட ஒரு கட்டுக்கதை, கதை என்பது கற்பனைப் பெயர்களைக் கொண்ட ஓர் உண்மை விவரணை என்பது இன்னொருவர் கூற்று – பெயர் நினைவு இல்லை. இருந்தும் மனிதனுக்கு வரலாறு என்று ஒன்று தேவைப்படுவதனால் நாம் வரலாறுகளை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

புறவயமான அதாவது பருப்பொருட் சான்றுகள் என்பவை தொல்பொருட்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், வரலாற்று நு¡ல்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள் வேறு எழுத்துச் சான்றுகள் முதலியவையே. தொல்பொருட்சான்றுகளையும் அகழ்வுச் சான்றுகளையும் வைத்துக் கொண்டு ஒருபொழுதும் வரலாற்றை எழுதிவிடமுடியாது. அவற்றை பட்டியலிடத்தான் முடியும். புலனறிவு சார்ந்த பட்டறிவின் (Empirical thought) எல்லை அதுதான். அவற்றிலிருந்து வரலாற்றினை உருவாக்குவது மெய்யியல் கோட்பாடுகளேயாகும். ஆய்வுக் காலத்தில் நிலவும் வரலாறு குறித்த கருத்துக்கள், வரலாறு சார்ந்த தேவைகள் தரவுகளை ஆய்ந்து முடிவுகளை முன்வைக்கும் விதத்தை உயத்தறிதல் (அனுபமானப் பிரமாணம் – Inference) என்கிறோம். அவ்வாறு ஒருவர் உய்த்தறிந்ததை அதை ஏற்காத ஒருவர் வெறும் ஊகம் என்று கூறலாம். உய்த்தறிதலுக்கும் ஊகத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு மிகவும் மெல்லியதாகும்.

புலனறிச் சான்றுகள் வரலாற்றாய்வுக்கு போதா. அப்படி போதுமானவையாக இருந்தால் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளிடப்பட்ட சிந்து சமவெளி அகழ்வாய்வுச் சான்றுகள் தந்த வரலாற்றுத் தெளிவுகளைவிட எழுந்துள்ள விடைகாணப்படாத வினாக்களே மிகுதி எனும் நிலை ஏற்பட்டிருக்குமா?

கற்காலக் கருவிகள் ஓ¡¢டத்திலே கிடைத்தால் அதைவைத்து அங்கு வாழ்ந்த மக்கள் என்ன தொழில் செய்தார்கள், என்ன உணவு உண்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே அது எப்படி? கற்கருவிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்ன? அதே கருவிகளுடன் இன்றும் சில மக்கள் வாழ்ந்தால் அவர்களைப் பார்த்து எல்லா மக்களுக்கும் அதை பொதுமைப்படுத்துவது எத்தனை து¡ரம் துல்லியமான முடிவைத் தரும்? ஆனால் அதைத்தானே நாம் செய்துகொண்டிருக்கிறோம்? எனவே புறவயச் சான்றுகள் முதல்நிலை கருப்பொருட்கள் என்பது சா¢யல்ல. அவை பல்வேறு வரலாற்றுக் கருப்பொருட்களுள் ஒன்று என்பதே உண்மைநிலை.

வரலாறு உட்பட எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. ஏதோ ஒரு பக்கம் சாராத வரலாறே கிடையாது. அறிவியலும் சார்புடையதே. இன்றைய உலக வாணிகக் குழுக்கள் வளர்ந்து நாள்தோறும் பரப்பும் போலி அறிவியல் உண்மைகளைப் பற்றிச் சொல்லவில்லை. உண்மையும் பக்கச் சார்பு உடையதே. உண்மையில் பயனடைவோருக்கு சார்பாகவும் பாதிக்கப்படுவோருக்கு எதிராகவும் அது உள்ளது. எந்த ஒரு அறிவியல், வரலாற்றுக் கருத்தையும் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதற்கு அரசியல் பின்னணி தேவைப்படுகிறது.

உதாரணமாக 150 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் சமய ஊழியம் செய்ய வந்த கால்டுவெல்லார் தமிழையும் தென்னிந்திய மொழிகளையும் ஆய்வு செய்து அவற்றுக்கு திராவிட மொழிகள் என்று ஒரு பெயரும் சூட்டி அவற்றினைப் பேசும் மக்களை ‘திராவிட இனம்’ என அடையாளம் கொடுத்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதியபோது திராவிடர்கள் நண்ணிலக் கடற்கரை (மத்தியதரைக் கடற்கரை) உட்பட ஐரோப்பிய ஆசியக் கண்டங்களின் ஆறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று எழுதினார். இது வெறும் சொற்களின் ஒற்றுமையை வைத்து மேற்கொள்ளப்பட்ட தலைகீழ் முடிவாகும். பண்டைய வரலாற்றுத் தடயங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய நகர்வுகளையே காட்டுகிறன. ஆனால் கால்டுவெல்லா¡¢ன் இந்த முடிவைத்தான் ‘அங்கீகா¢க்கப்பட்ட’ ஆய்வாளர்கள் தலைமீது தாங்கி நிற்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி முதல் இக்கருத்து பாடநு¡ல்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் படித்த சாராசா¢த் தமிழர்களின் மூளைகளில் இக்கருத்து பதிவாகவேயில்லை. இதற்கு திராவிட இயக்க அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட மேற்கிலிருந்து வந்தவர்கள் என்பதைவிட குமா¢க்கண்டத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறுவது அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்புணர்ச்சியினைக் கொடுக்கலாம். அதுபோல்தான் 19ம் நு¡ற்றாண்டிலும் 20ஆம் நு¡ற்றாண்டின் முற்பாதியிலும் ஐரோப்பாவில் செருமானியா¢ன் ஆ¡¢ய வெறி கொண்ட அரசியலுக்கு எதிராக திராவிட நாகா£க மேன்மையும் குமா¢க்கண்ட நாகா£க வளர்ச்சியையும் கூற வேண்டிய கட்டாயம் ஐரோப்பியனுக்கு இருந்தது. இன்று அந்த அச்சம் நீங்கி உலக மேலாண்மைக்கு இந்தக் கருத்துக்களை மழுங்கடித்து ‘இந்தோ ஐரோப்பிய இன’ மேன்மையை து¡க்கிப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே அத்துறை ஆய்வாளர்கள் கைவிடப்பட்டனர். அவ்¡கள் பழிக்கப்படுகின்றனர்.

இந்தியப் பல்கலைக் கழகங்கள் தரும் பட்டங்கள், குறிப்பாக முனைவர் பட்டங்கள், அப்பட்டங்களைப் பெற்றவர் சொந்தாமாக சிந்திக்கும் திறனை தன்னிடமிருந்து முற்றிலுமாக அழிப்பதில் வென்று பெற்றுவிட்டார் என்று கூறும் சான்றிதழ்களாகும். தான் எழுதும் எந்த ஒரு கருத்துக்கும் வேறு ஒருவரை கட்டாயம் சான்று காட்டியாக வேண்டும். வேறு எதில் விட்டுக் கொடுத்தாலும் ‘ஆய்வாளா¢ன்’ சொந்தக் கூற்றாக ஒரு சொல் கூட இடம் பெற்றுவிடலாகாது என்பதில் ‘வழிகாட்டிகள்’ மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.

அண்மைக்காலம் வரை அமொ¢க்கா முதன்மையாகவும், பிற பணக்கார நாடுகளும் அங்குள்ள பல்கலைக் கழகங்களும் ‘அறக்கட்டளைகளும்’ மாநிலத்துக்கு ஒருவர் துறைக்கொருவர், பல்கலைகழகத்துக்கு ஒருவர் என்று தனித்தனியாகவும் தனித்துறைகளை ஏற்படுத்தியும் தம் நாட்டிலிருந்து தொகுப்பாளர்களை நம் நாட்டில் வைத்திருந்தார்கள். அவவரசுகளும் பல்கலைகழகங்களும் ‘அறக்கட்டளை’களும் தரும் பணத்தில் அவர்கள் விரும்பும் தலைப்புகளில் நம் பல்கலைகழகங்கள் மூலமாகவும் நேரடியாகவும் நம்மவர்களால் ‘ஆய்வுகள்’ செய்யப்பட்டன. பல்கலைகழக நு¡லகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஆய்வேடுகளிலிருந்து அதற்கென்று அமர்த்தப்பட்டவர்கள் அவற்றை திரட்டிக்கொண்டு போயினர். இவை போக மக்களிடையே வெவ்வேறு துறைகளில் செய்தி திரட்டுவோர் தொண்டு செய்வது என்ற பெயா¢ல் மக்களைப் பற்றியும் ஊர்களைப் பற்றியும் அனைத்து செய்திகளையும் திரட்டி அளித்தனர். நமது பல்கலைகழக நாட்டார் வழக்காற்றியல் துறைகள் இதற்காக உருவாக்கப்பட்டவைதான்.

இவ்வாறு திரட்டப்படும் தகவல்களில் மரபுசார் அறிவியல் முறைகள், வாழ்க்கை நுட்பங்கள், சடங்கு வடிவில் நம்மிடையே நிலவும் பலவிதமான வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாக உள்ளன. இத்தகைய செய்திகளை திரட்டுவோருக்கு இவற்றின் உண்மையான மதிப்பு தொ¢ந்திருக்கவில்லை. அமைப்பியல் போன்ற போலிக் கோட்பாடுகள் மீது அவர்களுக்கு கவர்ச்சி உள்ளது. அவற்றை அரைகுறையாக உருவேற்றிக் கொண்டு இம்மரபுசார் அறிவுகள் மீது தங்கள் அளவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு வந்து குவியும் செய்திகள் மிக அதிகம். உலகமே செய்திகளாக மாறிவிடுகிறது. இச்செய்திகளை தொகுத்து ஒழுங்குசெய்து பல்வேறு விதத்தில் பயன்படுத்திக்கொள்ள மாபெரும் கணிப்பொறியாளர் படை தேவையாகிறது. எனவே நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கணினிகளால் நிரம்பி வழிகின்றன. 45 நாளில் முழுவள்¡ச்சி பெறும் கழிக்கோழிகள் போல நாம் பொறியாளர்களை உருவாக்கி ஏற்றுமதி செய்கிறோம். இங்குள்ள படித்தவர்கள் ஒவ்வொருவரும் மேலைப்பணக்கார நாடுகளுக்கு பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட மனிதக் கணினிமென் பொருட்களாகவே உள்ளனர். வரலாற்றாய்வும் இவர்களாலேயே இங்கு செய்யப்படுகின்றது.

வரலாற்று வரைவென்பது எளிய பணிஅல்ல. சென்ற நு¡ற்றாண்டின் தொடக்கத்தில் நம்நாட்டு வரலாற்றாசி¡¢யர்கள் தமிழக,இந்திய வரலாறுகளை வரைவதற்காக மேற்கொண்ட உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் பெரும்பான்மையாக கொண்ட அவ்வறிஞர்கள் செய்துள்ள பணிகள் அளவிட முடியாதவை. அன்று நிலவிய கோட்பாடுகளினாலும், சொந்த மனச் சார்புகளினாலும் அவற்றில் குறைபாடுகள் இருந்தாலும் அவர்களுடைய பணியை எண்ணிப் பார்க்கும்போது மனதுக்குள் வணங்கத் தோன்றுகிறது. ஆனால் இதை இயலச் செய்ய தளம் அமைத்தவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களும் வானிலிருந்து குதித்து வரவில்லை. பச்சைக் குழந்தை உலகை பார்த்து படிப்படியாக தன் பட்டறிவினாலும் முயற்சியினாலும் தன் அறிவை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வது போலவே அவர்களும் செயல்பட்டுள்ளனர். 17ஆம் நு¡ற்றாண்டின் நடுப்பகுதியில் உசர் எனும் ஐ¡¢ய(ஐ¡¢ஷ்) தலைமை பேராயர் கி.மு. 4004 ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் காலை துல்லியமாக 9 மணிக்கு உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்று எழுதியதில் இருந்து ஐரோப்பியா¢ன் தற்கால வரலாற்றுப் பணி தொடங்கியது. பின்னர் ஏரோடோட்டசின் வரலாறு, மெசப்பட்டோமியாவில் கிடைத்த அகழ்வுச்சான்றுகள், நு¡ல்கள், எகிப்து, இறுதியாக சிந்துசமவெளி அகழ்வாய்வு என்றும், மொழிகள் பண்பட்டு கூறுகள், உயிர்வகைகளை என்றும் வரலாற்றுக் கருப்பொருட்கள் குவிந்தன.

இவற்றைத் தங்களைப் பற்றிய பெருமிதம் உருவாக்கிய உள்ளுணர்வு, பலவரலாற்றுக் கருப்பொருட்களின் உண்மையான குறிதகவினைப் பு¡¢ந்து கொள்வதற்கு அவற்றொடு அவர்களுக்கு நேரடி உறவு இல்லாமை முதலிய பல இயல்புகளால் தவறாகவும் இவர்கள் பு¡¢ந்து கொண்டதுண்டு. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மனச் சான்றுக்கு மாறாக செயல்பட்டிருப்பர் என்று என்னால கூறமுடியவில்லை. இப்போதுதான் பணக்கார நாடுகள் தங்கள் மேலாண்மையை நிறுவும் பொருட்டு நேரடி வரலாற்றாய்வில் ஈடுபடுகின்றன.

ஐரோப்பியருக்கும் அவர்கள் அடிமைப்படுத்திய நாடுகளுக்கும் பழங்கால வரலாறு உண்டு. எனவே தங்களையும் பிறரையும் பு¡¢ந்துகொள்ள வேண்டிய தேவைக்காக ஐரோப்பியர் பழங்கால பியங்கள், மத அமைப்புகள், மரபுவழி கதைகள், செவிச் செய்திகள், தொன்மங்கள் ஆகியவற்றையும் வரலாற்று கருப்பொருட்களாகக் கொண்டனர். ஆனால் அமொ¢க்காவுக்கு அப்படி பழைய வரலாறு கிடையாது. அவர்களின் தொடக்க வரலாறு பெருமைப்படத்தக்கதாகவும் இல்லை. அத்துடன் தங்களால் மேலாண்மை செய்யப்படும் மக்களை வரலாற்றவர்களாக ஆக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. எனவே அதற்கேற்ற வரலாற்று வரையறைகளை அவர்கள் உருவாக்கினர். மரபுக் கதைகளையும் தொன்மங்களையும் பண்டைய இலக்கியங்களையும் எல்லாம் துணுக்குளாக உடைக்கமுடியும் என்றனர். (32 அடிப்படைத் துணுக்குகள் என்று நினைவு) அந்த துணுக்கு அடிப்படைக்குள் சிலப்பதிகாரத்தை அடைக்க முடியவில்லை. நாட்டார் கதைப் பாடல்களில் நிகழ்த்துவோனுக்குத் தேவைக்கு மிஞ்சிய சிறப்பு கொடுத்தார்கள். நிகழ்துவோனால் கதையின் போக்கை முற்றிலும் மாற்றமுடியும் என்றனர். ஆனால் நிகழ்த்துவோன் ஒரு கூட்டுக்குழு மனத்துக்கு கட்டுப்பட்டவன் என்பதே உண்மை நிலை. மொத்தத்தில் பழைய வரலாறுள்ள குழுமங்களின் வரலாற்று கருப்பொருட்களில் வரலாற்று உள்ளடக்கம் இல்லை என்று தவறாக உணர்த்துவது தான் அவர்கள் நோக்கம்.

மொழியியலில் கூட இதைக் காணமுடியும். சொற்களின் வேர்களை கண்டு விளக்க முனைவது வரலாற்று மொழியல், ஒப்பந்த மொழியியல் அதன் ஒரு கிளை – சொற்பிறப்பியல் ஆய்வு அதற்குப் பயன்படும். இது வரலாற்றாய்வுக்கு ஒரு முக்கியமான துணைக்கருவி. இதற்கு எதிராக முன் வைக்கப்படும் மொழிக் கோட்பாடு வண்ணனை மொழியயில் (Descriptive Linguistics) எனப்படும். அண்மை ஆண்டுகளில் அதற்கு ஒரு தேவை இருந்தது. சோவியத்து நாட்டினுள் அடங்கிய நாடோடி மக்களைக் கொண்ட தேசியங்களுக்கு மொழிகளும் வாய்மொழி இலக்கியங்களும் இருந்தபோதிலும் எழுத்து வா¢சைகளும் இலக்கணங்களும் கிடையாது. அதுபோல் சோவியத் மற்றும் அமொ¢க்க வல்லரசுகளின் வீச்சுக்குள் அடங்கிய ஆப்¡¢க்கநாடுகள் பலவற்றுக்கும் இதுவே நிலை. அவற்றுக்கு எழுத்துக்களை உருவாக்கவும் இலக்கணங்களை வரையறை செய்து கொள்ளவும் இந்த வண்ணனை மொழியில் பயன்பட்டது. அம்மொழிகள் உறுதிப்பட்டால் பிறகு அவை தத்தமக்கென வரலாற்று மொழியியலை வளர்த்தெடுக்க முடியும். எதிர்கால வரலாறு அதை தேவையாக்கினால் அம்மக்கள் அதை அடைவர்.

தொல்காப்பியத்தில் உள்ள ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற கருத்து வரலாற்று மொழியியல் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு. மாறாக ‘எல்லாச் சொல்லும் இரு குறியே’ என்ற நன்னுர்ல் கருத்து வண்ணனை மொழியியலின் வழிப்பட்டது. சென்ற நு¡ற்றாண்டின் பிற்பகுதியில் வலுப்பெற்ற வண்ணனை மொழியிலின் வரலாற்றுப் பின்னணியினைப் பு¡¢ந்து கொள்ளாத இந்த தலைமுறை தமிழறிஞர்கள் பலர் வரலாற்று மொழியில் அடிப்படையில் இயங்கிய தேவரேய பாவாணர் அவர்களை பகடி செய்து ஒதுக்கி வைத்தனர். அது போலத்தான் இன்று குமா¢க்கண்டம் குறித்த ஆய்வுகளும் நகைப்புக்கிடமாக கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் தாங்கள் வாழும் நிகழ்கால சூழலின் கருத்துக்களோடும் பார்வைகளோடும் இரண்டற கலந்து அவற்றுக்கு அப்பால் நோக்கும் திறனை ஆய்வாளர் இழந்து விடுவதாகும்.

புவிஇயங்கியல் (Geology) அடிப்படைகளை மாற்றமில்லாத அடிப்படைத்தரவுகளாக கொள்ளும் போக்கு இன்று காணப்படுகின்றது. புவியியங்கியல் மாற்றங்களுக்கும் மனிதனின் பதிவுகளுக்கும் இடையே பெரும் கால இடைவெளி இருப்பதை வரலாற்றாசி¡¢யர்களும் புவியலாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் ஆய்வு உத்திகளில் – குறிப்பாக காலக் கணிப்பு முறையில் – மேம்பாடுகள் ஏற்படும் தோறும் இந்த இடைவெளி சுருங்கி வருகிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக மனித இனத்தோற்றம் ஒரு இலச்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்ற பண்டைய நிலையில் இருந்து அது 17 இலச்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் புவியியல் மாற்றம் நடந்த இடங்களிலெல்லாம் மனிதப் பதிவுகளுக்கும் புவியியல் தரவுகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. மனிதப் பதிவுகளை நாம் நம்பலாம். புவியியல் தரவுகள் காலம் செல்லும் தோறும் மேம்படக் கூடியவை.

யூதர்களைப் பற்றிச் சொல்லும் வில்வடியூரன்ட் திட்டவட்டமான சான்றுகள் கிடைக்கும் வரை அவர்களுடைய மறைநு¡ல் தரும் செய்திகளின் அடிப்படையில் அவர்களது வரலாற்றினை வரைவதே முறை என்கிறார். அத்துடன் யூத மறையிலிருந்து கடவுள் குறித்த கருத்துருவின் தி¡¢வாக்கம் (படிமுறை வளர்ச்சி) குறித்த ஒரு சீ¡¢ய முடிவையும் அவர் தருகிறார். கோபம் கொண்ட யெகோவா எனும் அழிவுக்கடவுள் கருணைமிக்க பிதாவாக மாறுவதனை அவர் சுட்டிக் காட்டுகிறார். அதுபோல நமக்கும் இன்று செய்திகள் மற்றும் சொல்லாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சட்டகத்தை அமைத்துக் கொள்ளலாம். சிந்து சமவெளி தடயங்கள் முதலியவற்றை அதில் பொருத்தி காலத்துக்கு ஏற்ப அதை மேம்படுத்தியபடியே இருக்கலாம்.

வரலாற்றாய்வு என்பது காவல்துறை விடுக்கும் வழக்குடன் ஒப்பிடலாமா. ஒரு குற்றம் நடைபெற்ற இடத்தில் கிடைக்கும் தடயங்களைக் கொண்டு சில முதல்நிலை முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். மேலும் மேலும் தகவல்களை திரட்டி ஒரு தோராயமான சித்திரத்தை உருவாக்குகிறார்கள். பிறகு கிடைத்த தடயங்களில் புதிய செய்திகளைப் பொருத்தி, பழைய செய்திகளுடன் தொடர்பு செய்து அவற்றினை சான்றுகளாக மாற்றுகிறார்கள். புதிதாக கிடைக்கும் சான்றுகள் பலவேளைகளில் முதலில் உருவாக்கப்பட்ட சட்டகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இறுதி வடிவம் பெற்ற பின் வழக்கு நீதிமன்றம் போகிறது. நீதிமன்றம் இச்சான்றுகளை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். இறுதி தீர்ப்பு பல மேல்முறையீடுகளுக்குப் பிறகு சா¢யாகவும் தவறாகவும் தரப்படலாம்.

வரலாற்றைப் பொருத்தவரை இதே நிகழ்முறை ஒரு குழுவினராலன்றி ஒருவருக்கொருவர் தொடர்பு இன்றி கால இடைவெளிகளால் பி¡¢க்கப்பட்ட பலரால் வேறுவேறு தளங்களில் செய்யப்பட்டு இயல்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இறுதியில் மககள்முன் வைக்கப்படுகிறது. மக்கள் மன்றம் அதுகுறித்து தீர்ப்பு கூறுகிறது. தீர்ப்பு தவறாகவும் இருக்கலாம். ஆ¡¢ய இனக் கோட்பாடு அவ்வாறு மக்கள் மன்றத்தால் அளிக்கப்பட்ட தவறான தீர்ப்பின் விளைவு. காலம் மாறி சூழ்நிலைகள் மாறும் போது இறுதியாக கூறப்பட்ட தீர்ப்புகள் கூட மாற்றியமைக்கவும் படலாம். வரலாறு என்பது நிகழ்கால பண்பாட்டின் விளைவாக உருவாகி வருவதேயாகும்.

குமா¢ மைந்தன்

விஞ்ஞானம் எவ்வாறு உண்மையை அறிகிறது? – தி. ஸ்ரீனிவாசன்

June 25, 2012 1 comment

இருபதாம் நு¡ற்றாண்டினை நவீன யுகம் என்கிறோம். நவீன யுகம் என்றால் என்ன என்று கேட்டால் அது விஞ்ஞான அறிவின் யுகம் என்று இயல்பாகவே பதில் கூறுவோம். வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இன்று விஞ்ஞானம் ஊடுருவியுள்ளது. விஞ்ஞானம் என்று கூறும்போது பொதுவாக நாம் தொழில் நுட்பத்தைத்தான் உத்தேசிக்கிறோம். தொலைதொடர்பு, போக்குவரத்து மற்றும் உற்பத்திமுறை ஆகியவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகிவந்துள்ள பலவிதமான இயந்திரங்களையே விஞ்ஞானத்தின் வெற்றிகளாகவும் நவீன யுகத்தின் குறியீடாகவும் கருதுகிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இந்தக் கருவிகளை விட நமது வாழ்வினை நேரடியாகப் பாதித்துள்ளவை நவீன விஞ்ஞானத்தின் அறிதல் முறையும் அடிப்படைக் கருத்துக்களும் தான்.

நமது வாழ்வின் அன்றாட தளத்தில் கூட நாம் அனைத்துக்கும் விஞ்ஞானா£தியான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். உடல் நலப்பிரச்சினைகளானாலும் சா¢, உறவுகளான பிரச்சினைகளானாலும் சா¢, இன்று நமக்கு விஞ்ஞானா£தியான காரணகா¡¢யங்கள் தேவைப்படுகின்றன. இன்னும் கூறப்போனால் காரண-கா¡¢ய உறவென்பதே விஞ்ஞான ¡£தியாகத்தான் சாத்தியமாகும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது இன்று. நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட மதங்கள்கூட விஞ்ஞான விளக்கங்கள் (அதவாது மறு விளக்கங்கள்) தர இன்று முயல்கின்றன. அதாவது அவையும் விஞ்ஞான ¡£தியான அறிதல் முறையே உண்மயானது என்று மறைமுகமகா ஏற்றுக் கொள்கின்றன.

விஞ்ஞான அணுகுமுறை என்பது உண்மையில் என்ன? அதன் சிறப்பியல்புகள் யாவை? நாம் அனைவருமே தோராயமாக இதைக் குறித்து அறிந்திருப்போம். அன்றாட வாழ்வில் புலன் சார்ந்த பட்டறிவினால் நிரூபிக்கப்படுவதே விஞ்ஞான உண்மை என்று நாம் எடுத்துக் கொள்கிறோம். இது சா¢தான். நவீன விஞ்ஞானம் பொருளையும், பொருண்மையும் புறவயமானதாகவே பார்க்கிறது. புறவயநிரூபணத்துக்கு (empiricism) அதில் பெரும் பங்கு உண்டு.

ஆனால் பெருஞ்சிக்கல் சித்தாந்தத்தையோ (Chaos theory) நு¡ல் சித்தாந்தத்தையோ (String theory) எப்படி புறவயமாக நிரூபிக்க முடியும்? ஆகவே விஞ்ஞானம் புறவய நிரூபணத்திற்கும் அப்பாற்பட்ட வி¡¢வான உண்மையறிதல் முறைகளை வகுத்துள்ளது என்பது தெளிவு. அவை யாவை? அவற்றின் வகைகள் என்னென்ன?

முறைமையியல் (Methodology)

முறைமையியல் சமீபகாலம் வரை விஞ்ஞானத்தின் அறிதல்முறைகளைக் குறித்த ஆய்வுத்துறையாக விளங்கி வந்தது. விஞ்ஞானம் தன் உண்மைகளை வந்தடையும் முறைமையையும், அவ்வுண்மைகளை அது நிறுவும் முறைமையையும் குறித்து ஆராயும் அறிவுத்துறை இது. இதன் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் புறவயமாகவும் அனைவருக்கும் பொதுவாகவும் இருக்கக் கூடியது முறைமை (method) ஒன்றே என்பதாகும். ஓர் உண்மை கண்டடையப்பட்ட முறைமையையும், முன் வைக்கப்படும் முறைமையையும் நாம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவ்வுண்மையை நாம் பா¢சீலனைக்கு எடுத்துக் கொள்ளமுடியும். ஆகவே எந்த அறிவுத்துறையும் தன்னுடைய முறைமைகளை அத்துறை சார்ந்த அனைவருக்கும் பொதுவாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு தனி உண்மையை உ¡¢ய முறைமையின் வழியாகவே பொது உண்மையாக ஆக்க முடியும். ஒரு தனிநபா¢ன் ஊகம் ஒரு தனி உண்மை. அவ்வூகத்துக்கு அவர் வி¡¢வான தகவல்கள் மூலம் ஆதாரங்களை அளித்து நிறுவும்போது அது பொது உண்மை ஆகிறது. இவ்வாறு ஓர் ஊகம் சித்தாந்தமாக மாற்றப்படும்போது அத்துறையின் முறைமை கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. அந்த முறைமை அத்துறை சார்ந்த அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அத்துறையிலும் பொதுவாக பிற அறிவுத் துறைகளிலும் அதுவரை உருவான எல்லா வளர்ச்சி நிலைகளையும் கணக்கில் கொண்டதாக அது இருக்க வேண்டும்.

ஆனால் முறைமையின் முக்கியமான இயல்பு எந்த முறையைக் கையாண்டு அது தன்னை நிறுவிக் கொள்கிறதோ அதே முறையைக் கையாண்டு அதை மறுப்பதற்கான வாய்ப்பையும் அது எதிராளிக்கு அளிக்க வேண்டும் என்பதே. அதாவது முறைமை உடைண ஒரு விஞ்ஞான ஆய்வினைப் பொறுத்தவரை அதை எப்படி பொய்ப்பிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அதன் உண்மையறியும் முறையைப் பயன்படுத்தியே அதைப் பொய்யாக்கவும் முடியும் – அது பொய் என்றால்.

பிற அறிதல் முறைகள்

விஞ்ஞான ஆய்வு இருபதாம் நு¡ற்றாண்டில் பல்வேறு துறைகளைத் தொட்டு வி¡¢ந்து பறந்தது. பிரபஞ்சவியல், மொழியியல், குறியீட்டியல், உளவியல் முதலிய அருவமான அறிவுத்துறைகளும் தனி விஞ்ஞானத் துறைகளாக மாறி விஞ்ஞானத்துறைகளாக மாறின. ஆகவே முறைமையியலின் விதிகள் போதாமலாயின. எப்படி விஞ்ஞான விதிகளை உருவாக்குவது, எங்கிருந்து விஞ்ஞான ஊகங்களின் விதைகளைக் கண்டெடுப்பது ஆகிய தளங்களுக்கும் விஞ்ஞானத்தின் அறிதல் முறை நகர வேண்டியிருந்தது. உதாரணமாக அணுக்கொள்கை மிகப் பழங்காலத்திலேயே கிரேக்க மரபிலும் இந்திய மரபிலும் இருந்தது. நவீன விஞ்ஞானத்தில் அணு என்ற கருத்தாக்கம் இந்தப் பழைய மரபிலிருந்ததுதான் வந்தது. ஓர் ஊகமாக முன்வைக்கப்பட்டு அன்றைய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டது. அணு என்பது ஒருவகை உருவகம் மட்டுமே என்று படிப்படியாக தெளிந்துவரும் இந்தக் காலத்தில் அந்த ஆதார உருவகம் எங்கிருந்து எப்படி முளைத்தது என்ற வினா முக்கியமானது. அதற்கு நாம் மெய்யியலுக்கு (Meta physics) போக வேண்டியுள்ளது.

அதே போல விஞ்ஞான விதிகள் மற்றும் நிரூபண முறைகள் மொழியிலும், விசேஷமாக உருவாக்கப்பட்ட குறியீட்டு மொழிகளிலும் உள்ளன. இவற்றின் விதிகளைப் பு¡¢ந்து கொள்ள மொழியியல் மிகவும் முக்கியமானது. நம் மனமும் அறிவும் இயங்கும் முறையே மொழியின் விதிகளை அமைக்கிறது. ஆகவே மொழியின் விதிகள் நம் அறிதலின் விதிகளும் கூட, விஞ்ஞான விதிகள் உருவாக்கப்படும் முறை, விளக்கப்படும் முறை இரண்டிலும் மெய்யியல், மொழி ஆகிய இரண்டு விஷயங்களின் பங்களிப்பு மிக அதிகம். விஞ்ஞானத்தின் அறிதல்முறைகளை இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு அமைக்க வேண்டியிருந்தது. சமீபகாலத்தில் விஞ்ஞானத்தின் அறிதல்முறை சார்ந்த சிந்தனைகளில் இவ்விஷயமே பொ¢ய மாறுதலை உருவாக்கியது. இருபெயர்கள் முக்கியமானவை. மெய்யியல் சார்ந்த தருக்கத்தை முன்வைத்தவர் கர்ல் பாப்பர். மொழியியல் அணுகுமுறையை முன்வைத்தவர் நாம் சாம்ஸ்கி.

ஊகமும் நிரூபணமும்

விஞ்ஞானத்தின் அறிதல் முறையே ஊகத்திற்கும் (Hypothesis) நிரூபணத்திற்கும் இடையேயான உறவில்தான் உள்ளது எனில் அது மிகை அல்ல. ஊகங்கள் மெய்ப்பிக்கப்படுதலில் பலவிதமான வகைகள் உள்ளன.

ஊகங்கள் முதலில் விஞ்ஞானயின் கற்பனையில் பிறவி கொள்கின்றன. இவை தகவல்¡£தியாக நியாயப்படுத்தப்படுகின்றன. அந்த ஊகத்தின் அடிப்படையில் பலவிதமான கணிப்புகள் செய்யப்பட்டு அவை சா¢பார்க்கப்படுகின்றன. இது “ஊகம் – சா¢பார்ப்புமுறை” (Hypothetico – deductive model of science) என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. அந்த முதல் ஊகங்கள் அந்தரத்தில் பிறவி கொள்வதில்லை. விஞ்ஞான ¡£தியாக தொகுக்கப்பட்ட தகவல்களில் தொடர்ந்து தேடலுடன் பயணம் செய்யும் விஞ்ஞானியின் மனத்தில்தான் அவை பிறவி கொள்கின்றன. ஆகவே தகவல்களிலிருந்து ஊகம், ஊகத்தினை அத்தகவல்களைக் கொண்டு சா¢பார்த்து சித்தாந்தமாக நிறுவுதல், அவற்றிலிருந்து மேலும் தகவல்கள் மேலும் ஊகங்கள் – இவ்வாறுதான் விஞ்ஞான ஆய்வு முன்னகர்கிறது.

ஓர் ஊகம் சில கணிப்புகளை முன்கூட்டியே கூறுகிறது. காலப்போக்கில் இவை நிரூபிக்கப் படுகையில் அந்த ஊகம் விஞ்ஞானக் கொள்கையின் அந்தஸ்து பெறலாம். இதை பொதுமையறிதல் (Inductivism) என்கின்றனர். கணிசமான கல்வியறிவு மேலான சமூக ஆரோக்கியத்திற்குக் காரணமாகிறது என்பது ஓர் ஊகம். இதை உடனடியாக நிரூபித்துவிட முடியாது. குறிப்பிட்ட கால அளவில் இது உண்மை என்று நிரூபிக்கப் படுகையில் கல்வியறிவினைப் பற்றிய அந்த ஊகம் ஓர் விஞ்ஞானக் கொள்கையாகக் கணிக்கப்படக் கூடும்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு, அல்லது நிகழ்வுகளின் தொடருக்கு ஒருவர் முன்வைக்கும் ஊகமானது ஒரு மிகச்சிறந்த விளக்கத்தை முன்வைக்கக்கூடும். இந்நிலையில் அவ்விளக்கத்தை ஒரு விஞ்ஞானக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளலாம். இதை எடுத்தாளுதல் (Abduction) என்கிறார்கள். ஓர் அர்த்தத்தில் டார்வினின் பா¢ணாமக் கொள்கை இப்படிப்பட்ட ஒரு விளக்கமேயாகும். அதைவிட மேலான ஒரு விளக்கம் வரும்வரை அது விஞ்ஞானக் கொள்கையாகவே நீடிக்கும்.

தகவல்கள் ஓர் ஊகத்திற்கு உறுதிப்பாடு எதையும் தருவதில்லை. மாறாக அந்த ஊகத்திற்கு ஆதாரங்களை மட்டுமே அளிக்கின்றன என்று கூறப்படுவதுண்டு. இம்முறை நிறுவுதல் (Confirmation) எனப்படுகிறது. உதாரணமாக பிரபஞ்சத்தின் தோற்றம் ஒரு பெரு வெடிப்பின் மூலம் நிகழ்ந்ததாக இருக்கலாம் என்ற கொள்கையானது பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் கூட்டங்கள் விலகி விலகிச் செல்லும் வேகத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்பதற்கு விண்மீன் கூட்டங்களின் விலகிச்செல்லல் உறுதிப்பாடு எதையும் தருவதில்லை. வேறு விதமாகவும் நிகழ்ந்திருக்கலாம். பெருவெடிப்புக் கொள்கைக்கு அவை சாட்சியங்கள் அவ்வளவுதான். அதே தகவல்களை வைத்து வேறு ஒரு கொள்கையையும் நிரூபிக்க முடியும்.

ஒரு ஊகத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதைத் தகவல்கள் உறுதிப்படுத்துவது சாத்திய முறைமை (Probability) என்று கூறப்படுகிறது. தகவல்கள் எந்த எல்லைவரை ஓர் ஊகத்தை நிரூபிக்கின்றனவோ அந்த எல்லைவரை அதை ஏற்பது என்று இதைக் கருதலாம்.

ஓர் ஊகமானது விஞ்ஞானக் கொள்கையாக நிறுவப்படுவதன் பல்வேறு படிநிலைகள் இவை என்று கூறலாம்.

விஞ்ஞானக் கொள்கைகள் ஏற்கப்படுவது எப்படி?

விஞ்ஞானக் கொள்கைகள் அந்தந்த துறைகளுக்குள் எப்படி நிறுவப்பட்டாலும் அதைச் சமூகம் ஏற்பதும் தன் வயப்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். விஞ்ஞானத்தின் கடந்தகால வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் உண்மையினை அறிதல், உண்மையை நிரூபித்தல் என்ற இரு அடிப்படை விஞ்ஞான செயல்பாடுகளைத் தாண்டி அவ்விஞ்ஞானச் செயல்பாடுகளைச் சமூகம் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் விஞ்ஞானிகள் கடுமையாகப் போராடியுள்ளனர் என்பதைக் காணலாம். மாபெரும் விஞ்ஞானியான கலிலியோ உயிர்துறக்க நோ¢ட்டதே இதனால் தான்.

விஞ்ஞானத்தால் ஏற்கப்பட்ட கொள்கைகள் (அல்லது கண்டுபிடிப்புகள்) பிற்பாடு படிப்படியாக வாழ்க்கையின் அன்றாடத்தளத்துக்கு வந்து சேர்கின்றன. அங்குள்ள பழைய கருத்துக்களுடன் மோதுகின்றன. படிப்படியாக தங்களை நிறுவிக் கொள்கின்றன. இப்போக்கில் அவற்றில் உள்ள பல சிறு பிழைகள் திருத்தப்படுகின்றன. பிறகு அவை சமூகத்தால் ஏற்கப்பட்ட ‘உண்மை’ களாகிவிடுகின்றன. பிறகு ‘அடிப்படை உண்மைகளாக’ மாறிவிடுகின்றன. பிறகு வரும் சித்தாந்தங்கள் இந்த அடிப்படை உண்மையினால் அளவிடப்படுகின்றன. அதாவது விஞ்ஞான உண்மையானது அதன் விஞ்ஞானத் தன்மையால் மட்டுமல்ல அதன் வரலாற்றுத் தன்மையாலும் கூடத்தான் மதிப்பிடப்படுகிறது.

ஒரு விஞ்ஞான உண்மை சமூகத்தால் ஏற்கப்படுவதில் அதன் எளிமை (பு¡¢ந்து கொள்ள முடியும் தன்மை) மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று இப்போது கூறப்படுகிறது. அதாவது ஒரு விஞ்ஞான ஊகம் நிரூபிக்கப்பட்டால் மட்டும் போதாது. எளிய முறையில் விளக்கப்படவும் வேண்டும். உதாரணமாக கிருமிகளினால் நோய் உருவாகிறது என்ற கொள்கையானது ஹோமியோபதி முதலிய பண்டைய மருத்துவ முறைகளின் விளக்கங்களை விட நேரடியானதும் எளிமையானதுமாகும். ஆகவே அது சமூகத்தால் இறுதி உண்மையாக சகஜமாக ஏற்கப்பட்டது. இன்று பல மருத்துவ முறைகள் அதை மறுக்கின்றன.

அறிவியல் சமூகம் உண்மையை ஏற்பதில் ஒரு வித அடிப்படைவாதம் அல்லது மாற்றங்களை மறுக்கும் போக்கு எப்போதும் இருப்பதாக விஞ்ஞான சித்தாந்திகள் கூறுகிறார்கள். அதாவது எந்தச் சித்தாந்தம் ஏற்கனவே உள்ள நம்பிக்கையுடன் பெருமளவு ஒத்துப் போகிறதோ, எது குறைவான அளவுக்கு மாற்றங்களை மட்டும உருவாக்குகிறதோ அதை ஏற்கும் மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். உதாரணமாக சந்திரசேகா¢ன் கருத்துகளை (Black Hole) குறித்த விஞ்ஞானக் கொள்கையானது பல பழைய சித்தாந்தங்களிலிருந்து முழுமையாக மாறுபடுகிறது என்பதனால் அது அங்கீகா¢க்கப்பட நாற்பது வருடம் ஆயிற்று.

தொழில் நுட்பா£தியாக மறு ஆக்கம் செய்யப்படத்தக்க கொள்கைகளில் மட்டுமே ஐயத்திற்கிடமில்லாத நிரூபணம் சாத்தியமாகிறது. உதாரணமாக e=m2 என்ற கொள்கை அணுகுண்டு மூலம் உலகளாவிய தளத்தில் பாமர மக்கள் கூட ஏற்கும்படி நிறுவப்பட்டது. ஆனால் சார்புக் கொள்கைக்கு அப்படி ஒரு நிரூபணம் சாத்தியமேயில்லை. இப்படிப்பட்ட கொள்கைகள் ஏற்கப்படுவதில் சமூகத்தின் கலாச்சாரமும் மெய்யியல் மரபும் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாணமாக ·பிராய்டின் இன்பநாட்டக் கொள்கை பரவலாக ஏற்கப்பட்டமைக்கு அதற்கு கிறிஸ்தவ யூத மரபுகளில் உள்ள ஆதிபாவம் குறித்த நம்பிக்கையுடன் உள்ள உறவு ஒரு முக்கியமான காரணமாகும்.

ஊகங்கள் உருவாகும் விதம்

விஞ்ஞானம் பிரபஞ்த்தைப் பற்றிய அவதானிப்புகளை முதலில் உருவாக்குகிறது. இந்த அவதானிப்புகள் எளிய நோக்கில் அன்றாட வாழ்வில் தட்டுப்படாதவையாகும். ஒரு விஞ்ஞானக் கொள்கை என்பது இத்தகைய அவதானிப்புகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தொகுக்கப்படுவதன் மூலம் உருவாவதாகும். அதாவது ஒரு விஞ்ஞானக் கொள்கைக்கு தகவல்¡£தியான ஒரு தருக்க ஒழுங்கு இருக்கும்.

விஞ்ஞானத்தத்துவ அறிஞர்கள் விஞ்ஞானத் தருக்கம் இருவகைப்பட்டது என்கிறார்கள். புறவயமாக அறிவதற்குச் சாத்தியமான தகவல்களின் அடிப்படையிலான தருக்கம் முதல் வகை. அப்படி அறிய சாத்தியமில்லாத தகவல்களினாலான தருக்கம் இரண்டாம் வகை.

தகவல்களை அடுக்கி ஒரு சித்தாந்தத்தை உருவாக்கும் ஒழுங்குமுறைக்குள் பல்வேறு வகையான போக்குகள் உண்டு. குறுக்கல் அணுகுமுறை (Reductionist) விலக்கல் அணுகுமுறை (eliminationist) பிரயோகித்தல் முறை (instrumentalist) என்று சிலவற்றைக் குறிப்பிடலாம். ஒரு சித்தாந்தத்தின் பின்பலமாக உள்ள தகவல் வா¢சையை அவதானிப்பின் சொல்லடுக்கு (observation sentence) என்றோ அவதானிப்புகளின் அடித்தளம் என்றோ கூறுவதுண்டு.

உதாரணமாக பா¢ணாம சித்தாந்தத்தை எடுத்துக் கொள்வோம். பறவைகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே எலும்பு அமைப்பில் உள்ள ஒற்றுமை ஒரு அவதானிப்பு. பல்லிகளுக்கும் மீன்களுக்கும் இடையேயான ஒற்றுமை இன்னொரு அவதானிப்பு. மீன்களுக்கும் ஒரு செல் உயி¡¢களுக்கும் இடையயோன தொடர்பு இன்னொரு அவதானிப்பு. இப்படி டார்வின் உயிர்கள் குறித்த பல்லாயிரம் அவதானிப்புகளைத் தொகுக்கிறார்.

இவற்றில் ஒரு பொதுவான சரடினை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற தகவல்களைப் பின்தள்ளி அவர் ஒரு சித்தாந்தத்தை உண்டு பண்ண முயலலாம் – குறுக்கல் முறை. தேவையற்ற தகவல்களை விலக்கி விலக்கி எஞ்சும் தகவல்களை நோக்கி செல்லலாம் – விலக்கல் முறை. எந்த தகவல் விளக்கம் தர உதவுமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் – பிரயோகித்தல் முறை இவற்றில் ஏதாவது ஒரு முறையின் படி அவர் அத்தகவல்களைச் ‘சாராம்சப்படுத்தி’யாக வேண்டும். அப்படி சாராம்சப்படுத்தும் போது பா¢ணாம சித்தாந்தம் உருவாகிவிடுகிறது. இவ்வாறாக தகவல்களையோ அவரது அறிதல் முறையையோ மறுக்க முடிந்தால் பா¢ணாம சித்தாந்தத்தை மறுத்துவிடலாம்.

புறவயமாக சா¢பார்க்க முடியாத தகவல்களினாலானதாக ஒரு சித்தாந்தத்தின் பின்புலத் தருக்கம் இருக்குமென்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? அதை ஒரு மொழி சார்ந்த கருவியாக மட்டுமே கருத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களைப் பிரயோகவாதிகள் (instrumentalist) என்கின்றனர்.

சிறந்த உதாரணம் நுண்ணலகு இயற்பியல். (குவாண்டம் மெகானிக்ஸ்) ஆற்றல் இயங்கும் விதம் குறித்த ஒரு வகை மன உருவகம்தான் அது. அதைப் புறவயமாக நிரூபிக்கும் அவதானிப்புகள் ஏதும் அதன் பின்புலமாக இல்லை. ஆகவே அதை ஒரு மொழி சார்ந்த கருவியாகவே கருதவேண்டும். அதாவது தொ¢யாத ஒன்றை ஒரு குறிப்பிட்ட விதமாக சொல்லிப் பார்த்துக் கொள்கிறோம்.

பிற்பாடு இந்த மொழிசார் உருவகத்தில் எந்தப்பகுதி எந்த அளவு புறவயமான அவதானி[பகளால் நிறுவப்படுகிறதோ அந்த அளவு அதை ஏற்கலாம். உதாரணமாக நுண்ணலகு இயற்பியல் உருவகங்களின் ஒரு பகுதி அணு ஆற்றல் மாறுதல் குறித்த ஆய்வுகளில் புறவயமான அவதானிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. நுண்ணலகு இயற்பியலில் அப்பகுதி மட்டும் புறவய விஞ்ஞானக் கொள்கையாகக் கருதப்படுகிறது. இன்னமும் பிரபஞ்ச இயக்கம் குறித்த பெளதிகக் கொள்கைகளுடன் நுண்ணலகு இயற்பியலின் பெரும்பகுதி ஒத்திசைவு கொள்ளவில்லை என்பதும் இன்றைய இயற்பியலில் மிகப்பொ¢ய சவாலாக அதுவே உள்ளது என்பதும் உண்மையே.

விஞ்ஞான சித்தாந்தங்கள் குறித்து சமீபகாலமாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஞ்ஞானக் கொள்கைகள் இயல்பாகவே புறவயமானவை. கறாரானவை என்பது நம்பப்பட்டு வந்ததை உடைத்தவர் பி¡¢ட்டிஷ் தத்துவமேதையான விட்ஜென்ஸ்டீன். விஞ்ஞானசித்தாந்தங்களின் தருக்கமும் அதன் மொழியமைப்புக்கு கட்டுப்பட்டதே என்று அவர் வாதிட்டார்.

உதாரணமாக ‘ஆற்றல் அழிவற்றது’ என்பது ஓர் இயற்பியல் சூத்திரம். இது மிகப் பொதுவான ஒரு கூற்று. முற்றிலும் புறவயமானது என நாம் எண்ணுகிறோம். ஆனால் இங்கு ‘ஆற்றல்’ ‘அழிவு’ என்று எவை உத்தேசிக்கப்படுகின்றன என்ற வினாவை எழுப்பினால் இந்தச் சூத்திரம் எந்த அளவுக்கு மொழியின் இடுகுறித் தன்மையைச் சார்ந்து உள்ளது என்று தொ¢யவரும்.

இங்கு எழும் பிரச்சினை ஆற்றல் என்ற சொல்லை எப்படி வரையறுத்துக் கொள்வது என்பதே. அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் அச்சொல் சிறுசிறு வித்தியாசங்களுடன் தான் வரையறுக்கப்படுகிறது என்பது வெளிப்படை. இவ்வாறு விஞ்ஞான சூத்திரங்களில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் கறாரான புறவய நிர்ணயங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், திட்டவட்டமான அவதானிப்பின் விளைவாக இருக்கவேண்டும் என்று கூறுபவர்கள் உண்டு. இந்த அணுகுமுறை செயல்பாட்டுமுறை (opertionalism) என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு விஞ்ஞானக் கொள்கையும் பிறிதுடன் சகஜமாக உறவாட முடியும்.

இதற்கு மாறாக ஒரு கொள்கையின் கூற்றுக்கள் அத்துறையின் ஒட்டுமொத்த இயக்கத்தின் அடிப்படையில்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுபவர்களும் உண்டு. இவர்கள் கூற்றைப் பொருள் முழுமை அணுகுமுறை (Semanticholism) என்று கூறலாம். இதில் இன்னொரு தரப்பு உண்டு. ஒரு கொள்கையில் உள்ள சொல்லாட்சிகள் அக்கொள்கை பிற கொள்கைகளுடன் ஒத்துப் போகும் விதத்தை வைத்து அர்த்தப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் இவர்கள். இதை ஒத்திசைவு முழுமை அணுகுமுறை (Confirmationa holism) என்று கூறலாம்.

அதாவது ஆற்றல் என்றால் கறாராக இன்னது என்று வகுக்கப்பட்டு தேவைப்பட்டால் அனைவருக்கும் பொதுவாக நிறுவிக் காட்டப்படத்தக்க இருக்க வேண்டும் என்பது முதல் தரப்பு. அணுஆற்றலும் சா¢, உயிர் ஆற்றலும் சா¢ அங்கு பொதுவாக வரையறை செய்யப்பட்டிருக்கும். இரண்டாம் தரப்புப்படி ஆற்றல் குறித்த கொள்கை இயற்பியலைச் சார்ந்தது என்றால் இயற்பியலுக்குள் ஒட்டுமொத்தமாக ஆற்றல் எங்ஙனம் பொருள்கொள்ளப்படுகிறதோ அப்படி பொருள் கொள்ளப்படவேண்டும். மூன்றாவது அணுகுமுறைப்படி ஆற்றல் குறித்த நியூட்டனின் கொள்கையும் மார்க்ஸ் பிளாங்கின் கொள்கையும் ரூதர்போர்டின் கொள்கையும் ஒன்றாய் இணையும்போது உருவாகும் பொது அர்த்தமே ஆற்றல் என்ற சொல்லுக்குத் தரப்படவேண்டும்.

இப்பிரச்சினையானது உண்மையில் மேலும் சிக்கலானது. பல்வேறு அறிவியல்துறைகள் உருவாக்கும் பலவிதமான கொள்கைகளையும் தேற்றங்களையும் எப்படி பொது அறிவின் தளத்தில் தொகுத்துக் கொள்வது என்ற கேள்வியே இதன் அடிப்படை புறவயமான பட்டறிவு முன் காலத்தில் எல்லா விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் பொதுவான தளமான இருந்தது. இப்போது அது போதாமலாகியுள்ளது. தருக்க பூர்வமான ஒரு பொதுத் தளத்திற்கான தேவை இன்று உருவாகியுள்ளது.

விஞ்ஞானத்தின் உண்மை எப்படிப்பட்டது?

விஞ்ஞானக் கொள்கைகள் ஒவ்வொன்றும் தொடர்ச்சியாக மறுபா¢சீலனை செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஐயப்பாட்டுக்குள் இல்லாத ‘உண்மை’ எதையும் பொதுவாக விஞ்ஞானம் முன்வைப்பது இல்லை. உதாரணமாக உலகம் முழுக்க பரவலாக ஏற்கப்பட்ட பா¢ணாமக் கொள்கை மீது கூட பலவிதமான ஐயப்பாடுகள். மறுபா¢சீலனைகள் உள்ளன. அப்படியானால் இறுதி உண்மை எதையாவது விஞ்ஞானம் முன்வைக்குமா?

மிகச் சிக்கலான வினா இது. கடந்த கால விஞ்ஞானம் பொ¢தும் புலன்சார்ந்த பட்டறிவினை ஒட்டி இயங்குகிறது. இன்று நகூன நரம்பியல் புலன்சார் பட்டறிவியலின் அடிப்படைகளையே உலுக்குகிறது. புலனறிதல்கள் பலவும் நரம்பமைப்பின் இயல்புகளின் விளைவுகளே எனும்போது புறவயம், பொருண்மைகுணம் போன்ற பல ஆதாரங்கள் சிதறுகின்றன. இவ்வாறு பார்க்கையில் அறிவியலின் பல துறைகளுக்கு இடையே தீவிரமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அறிவியல் தேற்றங்களின் பெறுமானத்தை மதிப்பிடும் கணித உருவகமான ‘ராம்சே கணிப்பு முறை’ இப்போது பரவலாகக் கையாளப்படுகிறது 1. இது விஞ்ஞானத் தேற்றங்களைச் சாராம்சப்படுத்தும் ஒரு கணிப்புமுறையாகும்.

நாம் சாம்ஸ்கி போன்ற மொழியியல் அறிஞர்கள் எல்லா விஞ்ஞான தேற்றங்களையும் ஒரே குறியீட்டு மொழியில் கூறத்தக்க செயற்கை மொழிகளை உருவாக்க முயன்றுள்ளனர்.

தன் புகழ்பெற்ற நு¡லான ‘விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் பொதுத் தருக்கம்’ (1959) மூலம் கார்ல் பாப்பர் 2 விஞ்ஞானத் தேற்றங்களுக்கு பொதுவாக ஒரு தருக்க ஒழுங்கைக் கற்பிதம் செய்ய முயல்கிறார். புறவயமான நிருபணமுறையைப் பொ¢தும் நம்பிய நேர்க்காட்சிவாதிகளுக்கு (Positivists) எதிராக பாப்பர் முறைமையை முதன்மைப்படுத்தி ஆராயும் அணுகுமுறையை மேற்கொண்டார். அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் பிற கற்பனைப் போக்குகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் ‘பொய்ப்பித்தலே’ என்றார்.

பொய்பித்தல் (falsifiability) என்ற கருதுகோள் கார்ல் பாப்பா¢ன் சிந்தனையில் மிக முக்கியமானது. அறிவியலின் வளர்ச்சி அதை ஆதா¢க்கும் தகவல்களினால் உருவாவதில்லை என்றார் அவர். பிழை சா¢செய்தல், தொடர்ந்து தன் கொள்கைகளைப் பொய்ப்பிக்க முயலுதல் அதன் இயல்பு. அறிவியல் சித்தாந்தங்கள் அனைத்திற்கும் பொதுவான பொய்ப்பித்தல் முறைமை ஒன்றை உருவாக்க பாப்பர் முயன்றார் எனலாம்.

விஞ்ஞானக் கொள்கைகள் குறித்த விவாதங்களில் விஞ்ஞான யதார்த்தவாதிகளின் தரப்பு முக்கியமானது. இவர்களைப் பொறுத்தவரை ஒரு விஞ்ஞானக் கொள்கையானது தொடர்ச்சியான நிரூபணங்கள் மூலம் அன்றாட உண்மையாக ஆகும்போது நேரடியாக வாழ்வுடன் அதற்குள்ள உறவு காரணமாகவே அது இறுதி உண்மையாக ஆகிவிடுகிறது. அதன் பிறகு அதன் மீது பொய்ப்பித்தல் முறைமைகள் தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவை இல்லை. இந்தக் கருத்தை மறுப்பவர்கள் அக யதார்த்தவாதிகள் (Internal realists) என்று கூறப்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை ஓர் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டுதான் ‘உண்மை’ நிறுவப்பட முடியும்.

எந்த ஒரு விஞ்ஞான உண்மையும் அதன் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளே. பிற விஷயங்கள் வழக்கம்போல இருக்கும்போது மட்டும் செல்லுபடியாகக் கூடியவையாகவே உள்ளது. விஞ்ஞானத்தின் இந்த இயல்பு அதன் யதார்த்தமான அணுகுமுறையில் விளைவாகும். அது தன் எல்லைகளை விட்டு விலகி செல்வது இல்லை. விஞ்ஞானம் தான் அறிந்ததை எப்போதும் திருத்திக் கொள்ளத் தயாராக உள்ளது. இந்த அம்சம் மிகவும் கவனிக்கத்தக்கது. ஆன்மிகவாத சிந்தனைகளில் உண்மை இறந்தகாலத்தில் உள்ளது. அவற்றின் தருக்கம் அங்கிருந்து தொடங்கி தகவல்களுக்கு வருகிறது. விஞ்ஞானத்தில் இறுதி உண்மை ‘நிரந்தரமாக முன்னகர்ந்து கொண்டே இருக்கும்’ எதிர்காலத்தில் உள்ளது!

தி. ஸ்ரீனிவாசன்

Raymond’s Run. by Toni Cade Bambara in Tamil by MS at Marutham.com

June 25, 2012 Leave a comment

ரேமாண்டின் ஓட்டம்: டோனி கேட் பம்பாரா

தமிழில் எம். எஸ்.

மற்றப் பெண் குழந்தைகளைப் போல எனக்கு வீட்டில் செய்யவேண்டிய வேலைகள் அதிகம் ஒன்றும் இல்லை. அம்மா அதையெல்லாம் பார்த்துக் கொள்கிறாள். எனது கைச் செலவுக்காகவும் நான் ஓடித்தி¡¢ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஜார்ஜ் மற்ற பொ¢ய பையன்களுக்காக அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்கிறான்; கிறிஸ்துமஸ் கார்டுகள் விற்கிறான். மற்றபடி நடக்கவேண்டிய கா¡¢யங்களையெல்லாம் அப்பா பார்த்துக் கொள்கிறார். வாழ்க்கையிலேயே நான் செய்ய வேண்டிய ஒரு கா¡¢யம் என் பிரதர் ரேமாண்டைக் கவனித்துக் கொள்வதுதான். அதுவே போதுமானது.

சிலசமயம் தவறிப்போய் அவனை என் தம்பி ரேமாண்ட் என்று சொல்லிவிடுகிறேன். எந்த முட்டாளும் பார்த்தவுடன் தொ¢ந்து கொள்வான், அவன் என்னைவிட மிகப் பொ¢யவன், வயது கூடியவன் என்று. ஆனால் நிறையப்பேர் அவனை என் தம்பி என்றே அழைக்கின்றனர்.ஏனென்றால் அவனைக் கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு ஆள் வேண்டியிருக்கிறது. அவன் மூளைவளர்ச்சி அப்படி. அதைப் பற்றியும் கொஞ்சம் வாய் நீளமுள்ளவர்கள் நிறையவே சொல்லத்தான் செய்கிறார்கள். அது ஜார்ஜ் அவனை கவனித்துக் கொண்டிருக்கும்போது மட்டும்தான். ஆனால் இப்போது யாராவது அவனைப் பற்றியோ அவனுடைய பொ¢ய தலையைக் குறித்தோ ஏதாவது சொல்ல வேண்டுமானால் அவர்கள் என்னிடம் தான் வரவேண்டும். அப்படி வரும்போது நான் அவர்களை சீண்டிக்கொண்டிருக்க மாட்டேன். சும்மா வளவளவென்று சுற்றி வளைத்துப் பேசிக்கொண்டிருக்கவும் மாட்டேன். ஒரே அடி. அவர்கள் மண்ணைக் கவ்வி விடும்படி செய்துவிடுவேன். அவர்கள் திரும்பித் தாக்கினாலும் பரவாயில்லை. தாங்கிக் கொள்வேன். நான் சோனிதான். மெலிந்த கைகள், கீச்சுக்குரல் (என் பட்டப்பெயர் கீச்சி) நிலைமை தலைக்குமேல் போய்விட்டால், ஒரே ஓட்டம்தான். யா¡¢டம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், ஓட்டத்தில் என்னை ஜெயிப்பதற்கு இரண்டு கால் பிராணி எதுவும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் நான் முதலாக வந்து மெடல் வாங்காமல் இருந்ததே கிடையாது. எல்.கே.ஜி படிக்கும்போதே அறுபது அடி து¡ர ஓட்டத்தில் நிறைய தடவை ஜெயித்திருக்கிறேன். இப்போது 150 அடி து¡ர ஓட்டம். பொ¢ய பையன்கள் என்னை மெர்க்கு¡¢ – வாயுவேகமாகச் செல்லும் தேவது¡தன் – என்று அழைப்பார்கள். ஏனெனில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களில் நான்தான் மிகவும் வேகமாக ஓடுபவள். எல்லோருக்கும் இது தொ¢யும் – இரண்டு பேர்களுக்கு இன்னும் சற்று அதிகமாகவே தொ¢யும் – என் அப்பாவுக்கும் எனக்கும். நான் இரண்டு தெருப் பைப்புகளுக்குள் முன்னாலிருந்து ஓடத் தொடங்கினாலும் ஆம்ஸ்டர்டாம் அவன்யூ அடைவதற்கு முன்பே அவர் என்னை முந்திவிடுவார். அதுவும் இரண்டு கைகளையும் ஜேப்பிற்குள் நுழைத்தபடி விசிலடித்துக் கொண்டு. ஆனால் இதெல்லாம் எங்கள் சொந்த விஷயம். ஒரு முப்பத்தைந்து வயதுடையவர் குட்டை நிக்கர் அணிந்து கொண்டு ஒரு சிறு பெண்ணுடன் பந்தயம் ஓடுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? எனவே மற்றவர்களைப் பொறுத்தவரை நான்தான் மிகமிக வேகமாக ஓடுபவள். கிரெச்சனை விடவும். இந்தத் தடவை ஓட்டப் பந்தயத்தில் அவள்தான் தங்கமெடல் வாங்கப் போவதாகப் பீத்திக் கொண்டிருக்கிறாள். வெறும் சவடால். உள்ளாக்குடி. இரண்டாவதாக அவளுக்கு குட்டைக் கால்கள் மூன்றாவதாக அவள் முகத்தில் நிறைய புள்ளிகள். முதலாவதாக என்னை யாரும் பீட் பண்ண முடியாது. அவ்வளவுதான்.

தெரு முனையில் நின்றுகொண்டு சுற்றுப்புறத்தை ரசித்துவிட்டு பிராட்வேயில் சற்று நடக்கலாம் என்று நினைத்தேன். மூச்சுப் பயிற்சிகளைச் செய்து பார்க்கலாம். என்னுடன் ரேமாண்ட்ட இருக்கிறான். கட்டிடங்களைத் தொட்டிருக்கும் நடைபாதையில் அவனை நடந்துவரச் சொன்னேன். ஏனெனில் சிலசமயங்களில் அவனுக்கு ஏற்படும் குஷியில் கற்பனைகள் பறக்கும். தன்னை ஒரு சர்க்கஸ்வீரன் என்று நினைத்துக் கொண்டு நடைபாதையைத் தொட்டு அமைந்திருக்கும் குட்டை சுவரை ஆகாயத்தில் கட்டியிருக்கும் கயிறு என்று கற்பனை செய்து கொள்வான். மழை பெய்த சில நாட்களில் அவன் தான் நடந்துசெல்லும் கயிற்றிலிருந்து கீழே ஓடையில் குதித்து சட்டையையும் செருப்புகளையும் நனைத்துக் கொள்வான். வீட்டுக்குப் போனால் எனக்குத்தான் அடி கிடைக்கும். சில சமயங்களில் நீங்கள் அவனைக் கவனிக்காமலிருக்கும் போது அவன் ரோட்டின் குறுக்கே பாய்ந்து இரண்டு ரோடுகளுக்கும் நடுவேயுள்ள தீவுப் பகுதிக்கு ஓடிச் சென்று அங்கிருக்கும் புறாக்களை விரட்டி அடிப்பான். அவை அங்கு அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் கிழவர்களிடையே பறந்து அவர்களின் பத்தி¡¢கைகளையும் மடியில் வைத்திருக்கும் உணவுப் பொட்டலங்களையும் சிதற அடிக்கும். நான் போய் அவர்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அதால் நான் அவனை என்னோடு அணைத்தபடியே சொல்ல வேண்டியிருக்கும். குதிரை வண்டி ஓட்டுபவன் போல் அவன் கற்பனை செய்தபடி வருவான். என்னைக் கீழே தள்ளிவிடாமலும் என் மூச்சுப் பயிற்சியில் அவன் குறுக்கிடாமலும் வருவதுவரை எனக்குக் கவலையில்லை. ஓட்டப் பந்தயத்திற்காகத்தான் அந்த மூச்சுப் பயிற்சி. யாருக்காவது அது தொ¢ந்துவிட்டாலும் கவலையில்லை.

பொதுவாக சிலபேர் எல்லாக் கா¡¢யங்களையும் முயற்சியுமில்லாமலே முடித்துவிடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். நான் அப்படியல்ல. 34வது தெருவில் ஒரு பந்தயக் குதிரை போல் கர்வத்துடன் தலைநிமிர்த்தி நடப்பேன். என் முழுங்கால்களுக்கு வலு ஏற்பட வேண்டுமே. ஆனால் இது அம்மாவுக்கு எ¡¢ச்சலாயிருக்கும். நான் வேறு யாருடைய அசட்டுக் குழந்தை போலவும், நான் அவளுடன் வரவில்லை என்பது போலவும், என்னைத் தொ¢யாதது போலவும், கடைக்கு தான் தன்னந்தனியாகச் செல்வது போலவும் விரைந்து முன்னே நடப்பாள். சிந்தியா ப்ரோக்டரைப் பாருங்கள். அவள் நேர் எதிர். நாளைக்கு பா¢ட்சை இருக்கும். அவளோ இன்று மாலை பந்து விளையாடவேண்டும், இரவில் டி.வி. பார்க்கவேண்டும் என்று சொல்வாள். பா¢ட்சையைப் பற்றி நினைக்கவேயில்லை என்று நீங்கள் நம்ப வேண்டுமாம். அதுபோலத்தான் சென்ற வாரம்ஸ்பெல்லிங் போட்டியில் அவள் வழக்கம்போல் ஜெயித்தபோது – நு¡று தடவைக்கு மேல் இருக்குமா? – என்னிடம் சொல்கிறாள், “கீச்சி, “Beceive” க்கு ஸ்பெல்லிங் உன்னிடம் கேட்டுவிட்டார்கள். நல்லவேளை நான் தப்பினேன். என்னிடம் கேட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டேன்” என்று பிளவுஸின் லேஸ் துணியைப் பிடித்தபடி அதிர்ஷ்டவசமாகத் தப்ப முடிந்ததுபோல், ஐயோ, கடவுளே! ஆனால் என் அதிகாலை ஓட்டத்தின் போது அவள் வீட்டைக் கடந்து செல்கையில் பியானோவில் அவள் திரும்பத் திரும்ப பயிற்சி செய்து கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் மியூஸிக் வகுப்பில் தான் கால் இடறி பியானோ ஸ்டூலில் விழுந்துவிட்டது போலவும், அதில் அமர்ந்திருப்பது தனக்கே வியப்பளிப்பதாகவும், தன் கைவிரல்கள் தற்செயலாக பியானோ கீகளில் பட்டுவிட்டதாகவும், எனவே கொஞ்சம் அழுத்திப் பார்க்கலாமென்று நினைத்ததாகவும் சொல்லிக் கொள்வாள். ஆனால் சோப்பினின் அற்புதமான மெட்டுக்கள் அதிலிருந்து புறப்படும்போது எல்லோரையும் விட தானே அதிக ஆச்சா¢யப்படுவதாகவும் சொல்வாள். பிறவி மேதைக்காரன். அப்படிப்பட்டவர்களை கொன்றுவிட வேண்டும் போல் தோன்றும். இரவு விழித்து கஷ்டப்பட்டு வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் உருப்போட்டுக் கொண்டு இருப்பேன். நாள் முழுதும் பயிற்சிக்காக ஓடுவேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடப்பதற்குப் பதில் ஓட்டம்தான். பாவம், ரெமாண்டுக்குத்தான் சிரமம். எனக்கு சமமாக ஓடமுடியாது. ஆனாலும் அவன் ஓடத்தான் செய்கிறான். அவன் பின்தங்கிவிட்டால் யாராவது அவன் அருகே சென்று அவனை கேலி செய்யலாம். அவனிடமிருந்து பைசாக்களை பிடுங்கிக் கொள்ளலாம், அல்லது அவ்வளவு பொ¢ய பூசணிக்காய் தலையை எங்கிருந்து வாங்கினாய் என்று கேட்கலாம். மனிதர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் சில சமயங்களில்.

பிராட்வே வழி சென்று கொண்டிருக்கிறேன். மூச்சுப் பயிற்சியில் ஏழுவரை எண்ணியப்படி மூச்சை இழுப்பதும் விடுவதுமாக இருக்கிறேன். (ஏழு எனது வக்கி நம்பர்) அப்போது பாருங்கள், கிரெட்சனும் அவள் தோழிகளும் வருகிறார்கள். மோ¢ லு¡யி முதலில் பால்டிமோ¡¢லிருந்து இங்கே கறுப்பர்கள் பகுதிக்கு வந்தபோது என்னுடைய சினேகிதியாகத்தான் இருந்தாள். எல்லோ¡¢டமும் அடி வாங்கிக் கொண்டிருந்த அவளை நான்தான் அப்புறம் கவனித்துக் கொண்டேன். அவள் அம்மாவும் என் அம்மாவும் சின்ன வயதில் சர்ச்சில் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் என்ற காரணத்தால். ஆனால் நன்றிகெட்ட ஜென்மம். இப்போது கிரெட்சனுடன் ஒட்டிக்கொண்டு என்னைப்பற்றி மட்டமாக பேசுகிறாள். அப்புறம் ரோஸி. நான் எவ்வளவு மெலிருந்திருக்கிறோனோ அவ்வளவு குண்டு அவள். ரேமாண்டை எப்போதும் சீண்டிக் கொண்டேயிருப்பாள். அவனுக்கும் தனக்கும் இடையே பொ¢ய வித்தியாசம் ஒன்றும் இல்லையே, அவனை கிண்டல் செய்கிறோமே என்பதை பு¡¢ந்து கொள்ளும் அறிவு கூட அவளுக்கு இல்லை. பிராட்வேயில் அவர்கள் மூவரும் எனக்கு எதிரே வந்து கொண்டிருக்கிறார்கள். தெருவோ அகலம் குறைவு. சினிமாவில் வருவது மாதி¡¢ பொ¢ய சண்டை நடக்குமோ என்று தோன்றியது. என்னைப் போலவே அவர்களும் கட்டிடங்களையட்டியே நடந்து வருகிறார்கள். முதலில் பக்கத்தில் உள்ள கடைக்குள் ஏறி அவர்கள் கடந்து செல்வதுவரை காமிக்ஸ்களை புரட்டிக்கொண்டிருக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அது கோழைத்தனம் அல்லவா? என்னுடைய கெளரவம் என்னவாவது? அவர்களுக்கு நேரே நடந்து தேவையானால் இடித்துக்கொண்டு அவர்களை கடந்துசென்றால் என்ன என்றும் தோன்றியது. அவர்கள் என்னை நெருங்கியதும் நின்றார்கள். நான் சண்டைக்குத் தயாராயிருந்தேன். சும்மா வாய் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலிலேயே ஒரே அடியில் உங்களை கீழே வீழ்த்திவிடுவதுதான் எனக்கு விருப்பம். நேரத்தை வீணாக்கக் கூடாது.

“மே தினப் போட்டியில் நீ சேர்ந்துவிட்டாயா?” என்று சி¡¢த்தபடியே கேட்கிறாள் மோ¢ லு¡யி. உண்மையில் அது சி¡¢ப்பு போலவே இல்லை. இந்த மாதி¡¢ அசட்டுக் கேள்விக்கு என்ன பதில் வேண்டிக்கிடக்கிறது. உண்மையில் அங்கு நிற்பது நானும் கிரெட்சனும்தான். நிழல்களிடம் எனக்கென்ன பேச்சு.

“இந்தத் தடவை நீ ஜெயிக்க போவதில்லை” என்கிறாள் ரோஸி. கிரெட்சனை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே. மற்றவர்கள் வாயிலாகவும் அவள்தான் பேசுகிறாள் என்று எனக்குத் தொ¢யும். கிரெட்சன் புன்னகை செய்கிறாள். ஆனால் அது ஒரு புன்னகையல்ல. பெண் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொள்வதில்லை. எப்படி செய்வது என்றும் அவர்களுக்குத் தொ¢யது. தொ¢ந்து கொள்ளவேண்டும் என்றும் விரும்புவதில்லை, கற்றுத் தருவதற்கும் யாரும் இல்லை. ஏனென்றால் பொ¢யவர்களுக்கும்கூட அது தொ¢யாது. அப்புறம் அவர்கள் தங்கள் பார்வையை அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த ரேமாண்டிடம் செலுத்தினார்கள். அவன் மூலம் என்ன விஷமத்தைத் தொடங்கலாம் என்ற ஆர்வம்.

“எந்த வகுப்பில் படிக்கிறாய், ரேமாண்ட்?”

“பால்டிமோர் ரேகட்டி நகா¢ல் வசிக்கும் மோ¢ லுயி வில்லியம்ஸ் அவர்களே, என் தம்பியிடம் ஏதாவது கேட்கவேண்டுமென்றால் அதை என்னிடமே நோ¢ல் கேட்கலாம்?”

“நீ யார். அவன் அம்மாவா?” என்கிறாள் ரோஸி.

“ஆமாம் குண்டச்சி. இனியும் யாராவது வாயைத் திறந்தால் நான்தான் அவளுக்கும் அம்மா” என்றேன். அவர்கள் அப்படியே நின்றார்கள். பிறகு கிரெட்சன் ஒரு காலை மாற்றி மற்ற காலில் நின்றாள். அவர்களும் அப்படியே செய்தனர். அப்புறம் கிரெட்சன் கைகளை இடுப்பில் வைத்தபடி, புள்ளிகள் நிறைந்த முகத்தோடு ஏதோ சொல்ல வந்தாள். ஆனால் சொல்லவில்லை. என்னை மேலும் கீழும் பார்த்தபடி என்னைச் சுற்றிக் கடந்து பிராட்வேயை நோக்கி நடந்தாள். அவள் தோழிகளும் அவளைப் பின்பற்றினர். நானும் ரேமாண்டும் ஒருவரையருவர் பார்த்து சி¡¢த்துக் கொண்டோம். அவன் “ஹை ஹை” என்று சொல்லி தன் குதிரையைக் கிளப்பினான். நான் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தபடி பிராட்வே பக்கமாக நடந்து, 145வது நம்பா¢ல் உள்ள ஐஸ் விற்பவனைப் பார்க்கச் சென்றேன். உலகத்தில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ராணிபோல் உணர்ந்தேன்.

மே தினத்தன்று மைதானத்துக்கு சற்று மெதுவாகத்தான் சென்றேன். ஓட்டப் பந்தயம் கடைசி ஐட்டமாக இருந்தது. மேப்போல நடனம்தான் அன்றைய முக்கிய நிகழ்ச்சி. ஒரு மாறுதலுக்காகவாது நான் அதில் பங்கேற்று ஒரு பெண்ணைப் போல் நடந்துகொள்ளவேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை. ஆனால் எனக்கு ஏனோ அதில் அக்கறையில்லை. எனக்கு வெள்ளை ஆர்கண்டி உடையும் பொ¢ய ஸாட்டின் ஷாலும், அந்த விசேஷ தினத்திற்கு மட்டுமே பெட்டியிலிருந்து எடுக்கப்படும் ஷ¥க்களும் வாங்கித் தராமல் இருப்பதற்காக அம்மா சந்தோஷப்பட வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். மேப்போல் நடனத்தில் உடம்பை வளைத்து புதிய உடையை எழுக்காக்கி வியர்வையில் நனைத்து, ஏதோ ஒரு பூ போலவோ, தேவதை போலவோ அல்லது ஏதோ ஒன்றாகவோ மாறுவததில் எனக்கு விருப்பமில்லை. நான் நானாக – ஒரு ஏழை கறுப்புப் பெண்ணாக இருந்தால் போதும். இதற்காக வாங்கும் புதிய ஷ¥வும் உடையும் வாழ்வில் ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டு அவை அளவில் சின்னதாகிவிடும்.

நான் நர்சா¢ ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது ஹான்ஸல் கிரெட்டல் ஊர்வலத்தில் ஸ்ட்ராபொ¢யாக நடனமாடினேன். கால் பெருவிரல்களை ஊன்றி கைகளை தலைக்குமேல் உயர்த்தி வட்டமாகச் சுழற்றி ஆட மட்டுமே தொ¢ந்திருந்தது. என் அம்மாவும் அப்பாவும் நல்ல உடைகளணிந்து வந்திருந்து கைதட்டி என்னை ஊக்குவித்தார்கள். அப்படிப் பாராட்டத் தேவையில்லை என்பது அவர்களுக்குப் பு¡¢ந்துதான் இருந்திருக்கும்.

நான் ஸ்ட்ராபொ¢ ஒன்றும் அல்ல. கால் பெருவிரல்களை ஊன்றி நடனமாடுபவள் அல்ல. நான் ஓடுவேன். அது ஒன்றுதான் எனக்குத் தொ¢யும். அதனால்தான் மே தின நிகழ்ச்சிக்கு எப்போதும் தாமதித்தே வருவேன். என் நம்பரை சட்டையில் குத்திய பிறகு 150 அடி ஓட்டம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிக்கும்வரை புல் தரையில் படுத்துக் கொண்டிருப்பேன்.

ரேமாண்டை ஒரு சில ஊஞ்சலில் அமர்த்தினேன். அதில் சற்று சிரமப்பட்டுதான் இருந்தான். அடுத்த ஆண்டு அதில் அவனால் உட்கார முடியாது. அப்புறம் சட்டையில் நம்பர் குத்திக் கொள்வதற்காக மிஸ்டர் பீயர்ஸன் எங்கே என்று தேடினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கிரெசட்சனைத்தான் தேடினேன். அவளைக் காணோம். பார்க்கில் ஒரே கூட்டம். தொப்பியும் மலர் செண்டுமாக பெற்றோர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெள்ளைச் சட்டையும் நீல நிக்கருமாக குழந்தைகள். பார்க் ஊழியர்க்ள் செயலர்களை வா¢சையாக அமைத்து, லெனாக்ஸிலிருந்து வந்திருந்த போக்கி¡¢ப் பையன்களை அவர்களுக்கு அங்கிருக்க உ¡¢மையில்லை என்று விரட்டிக் கொண்டிருந்தனர். பொ¢ய பையன்கள் தொப்பிகளை பின்பக்கமாகத் தள்ளிக் கொண்டு, வேலியில் சாய்ந்து நின்றபடி கையில் பாஸ்கட் பந்தை சுழற்றிக் கொண்டு, இந்தக் கிறுக்கு ஜனக்கூட்டம் பார்க்கிலிருந்து வெளியேறி தாங்கள் விளையாடுவதற்காகக் காத்திருந்தனர். என் வகுப்புப் பையன்கள் கையில் இசைக்கருவிகளை வைத்திருந்தனர்.

இதோ மாஸ்டர் பியர்ஸன் வருகிறார். கையில் பெயர்கள் குறித்த அட்டை, பென்கில்கள், ஊதல்கள், ஊக்குகள் என்று ஆயிரம் சாமான்கள். எதையெல்லாம் எங்கெங்கே கீழே அசட்டுத்தனமாக தொலைத்தாரோ தொ¢யாது. கால்களில் கட்டை கட்டியிருந்ததால் எந்தக் கூட்டத்திலும் அவரைப் பார்க்க முடியும். அவரை எ¡¢ச்சல் மூட்டுவதற்காக பொய்க்கால் குதிரை என்று அழைப்போம். என்னைப் பிடிக்க வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன். இப்போ பொ¢யவளாகிவிட்டதால் அந்த மாதி¡¢ அசட்டுத்தனங்கள் செய்வதில்லை.

“இந்தா கீச்சி” என்று சொல்லிக் கொண்டே லிஸ்டடில் என்பெயரை அடித்து விட்டு ஏழாம் நம்பரையும் இரண்டு குண்டூசிகளையும் தந்தார். அவரை பொய்க்கால் குதிரை என்று நான் அழைக்காதபோது என்னை மட்டும் கீச்சி என்று எப்படிச் சொல்லலாம்?

“ஹேஸல் எலிசபெத் டெபொரா பார்க்கர்” என்று என் பெயரை சொன்னேன். லிஸ்டில் அப்படியே எழுதவேண்டும் என்றேன்.

“நல்லது ஹேஸல் எலிசபெத் டெபொரா பார்க்கர், இந்த வருஷம் யாருக்காவது விட்டுக் கொடுக்கப் போகிறாயா?”

கண்களைச் சுருக்கி அவரைக் கடுமையாகப் பார்த்தேன். இந்தப் போட்டியில் நான் வேண்டுமென்றே தோற்று இன்னொரு பெண்ணுக்கு பா¢சு கிடைக்கச் செய்யவேண்டும் என்று நினைக்கிறாரா?

“மொத்தமே ஆறுபேர் தான் ஓடுகிறீர்கள் இந்தத் தடவை” என்று தொடர்ந்து அவர், ஏதோ நியூயார்க் முழுவதும் நிக்கர் அணிந்து வந்து கலந்துகொள்ளாதது என் தவறு என்பது போல. “அந்தப் புதிய பெண்ணும் நன்றாகத்தான் ஓடுகிறாள்” அவர் தம் கழுத்தை பொ¢ஸ்கோப் போல் நீட்டி கிரெட்ஸன் எங்காவது நிற்கிறாளா என்று சுற்றிப் பார்த்தார். “நீ மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் …… ஆ …….”

நான் பார்த்த பார்வையில் அவர் வாக்கியத்தை முடிக்கவில்லை வயதானவர்களுக்கு எவ்வளவு கொழுப்பு. ஏழாம் நம்பரை என் சட்டையில் குத்திக் கொண்டு காலை தொப் தொப் என்று அழுத்தி வைத்தபடி நடந்தேன். உள்ளே கொதித்துக் கொண்டிருந்தேன். ஓடும் பாதையருகே புல் தரையில் படுத்துக் கொண்டேன். பாண்ட் இசைப்பாளர்கள் ‘ஓ குரங்கு தன் பாலை கொடிக்கம்பத்தில் சுற்றிக் கொண்டது’ என்ற பாடலை முடித்துக் கொண்டிருந்தனர். (என் ஆசி¡¢யர் அந்தப் பாட்டின் அடி வேறு என்பார்) ஒலிப்பெருக்கியில் ஒருவன் எல்லோரையும் பந்தயம் ஆரம்பிக்கும் இடத்துக்கு வரும்படி அழைத்துக்கொண்டிருந்தான். நான் புல்தரையில் படுத்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிராமத்தில் இருப்பதாகக் கற்பனை செய்ய முயன்றேன். முடியவில்லை. நகரத்தின் புல் தரைகூட பிளாட்பாரம் போல் கடினமாக இருக்கிறது. என் தாத்தா சொல்வார், “காங்க்¡£ட் வனம்” என்று. அது சா¢யாகத்தான் இருக்கிறது.

அறுபது அடி ஓட்டம் இரண்டே நிமிஷத்தில் முடிந்துவிட்டது. பிள்ளைகளுக்கு சா¢யாக ஓடத்தொ¢யவில்லை. டிராக்கிலிருந்து விலகி ஓடினர். தவறான பாதையில் சென்றனர். வேலியில் மோதிக் கொண்டனர். சிலர் கீழே விழுந்து அழத் தொடங்கினர். ஒரு சிறுவன் மட்டும் நேராக வெள்ளை ¡¢ப்பனை நோக்கி ஓடி ஜெயித்துவிட்டான். அப்புறம் 90 அடி ஓட்டத்துக்காக அடுத்த வகுப்பு குழந்தைகள் அணிவகுத்தனர். நான் தலையைத் திருப்பிக்கூட பார்க்கவில்லை. எப்போதும்போல் ராபேல் பெரஸ்தான் ஜெயிக்கபோகிறான். ஓடுவதற்கு முன்பே மற்ற சிறுவர்களிடம் பூட்ஸ் கயிறு தட்டி விழுந்துவிடுவீர்கள் என்றும், தலைகுப்புற விழுவீர்கள் என்றும்நிககர் பாதிவழியில் அவிழ்ந்துவிடுமென்றும் சொல்லி அவர்கள் மனதை கலங்கவைத்துவிடுவான். இதற்கெல்லாம் அவசியமேயில்லை. அவன் நன்றாக ஓடக்கூடியவன், என்னைப் போல. அப்புறம் 120 அடி ஓட்டம். நான் முதல் வகுப்புப் படிக்கும்போது ஓடியிருக்கிறேன். ஊஞ்சலிலிருந்து ரேமாண்ட் கத்துகிறான். ஒலிப்பெருக்கியில் 150 அடி ஓட்டம் ஆரம்பிக்கப் போவதாக அறிவிப்பு வந்ததும் என் முறை வந்துவிட்டது என்று அவனுக்குப் பு¡¢ந்துவிட்டது. ஆனால் ஒலிப்பெருக்கியில் கூறுவது யாருக்கும் தெளிவாகப் பு¡¢யாது. நான் எழுந்திருந்து வேர்வை படிந்திருந்த பாண்டை கழற்றிவிட்டு பார்க்கையில் கிரெட்சன் ஓட்டம் துவங்கும் இடத்தில் பொ¢ய வீராங்கனையைப் போல் காலை உதைத்துக் கொண்டிருக்கிறான். நான் எனது இடத்துக்கு வந்ததும் ரேமாண்டைப் பார்த்தேன். எனக்கு நேர் வா¢சையில் வேலிக்கு அந்தப்பக்கம் குனிந்து விரல்கள் தரையைத் தொட நிற்கிறான். எதற்காக என்று அவனுக்குத் தொ¢யும். சத்தமிட்டு அவனை அழக்கவேண்டும் என்று நினைத்தேன். வேண்டாம். கத்துவதால் சக்திதான் வீணாகும்.

பந்தய ஓட்டத்தைத் தொடங்குமுன் ஒவ்வொரு தடவையும் நான் ஏதோ கனவில் இருப்பதாக உணர்வேன். நீங்கள் காய்ச்சலில் உடம்பெல்லாம் நெருப்பாய்க் கொதிக்க கனமில்லாமல் இருக்கும்போது காண்பீர்களே, அந்த மாதி¡¢க்கனவு. கடற்கரையில் காலை சூ¡¢யன் உதிக்கையில் வானில் பறப்பது போல. பறக்கும்போது மரக்கிளைகளை முத்தமிடுவது போல. அதில் அப்போது ஆப்பிளின் மணம் இருக்கும். கிராமத்தில் நான் சிறுமியாக இருந்தபோது என்னை ஒரு சிக்குபுக்கு ரயிலைப் போல் பாவித்து வயல்களைச் சுற்றி ஓடி, மலையில் ஏறி, தோட்டத்தை அடைவது போல. இப்படி கனவு காண்கையில் நான் மிகமிக லேசாக மாறி கடற்கரையில் ஒரு இறகு போல் காற்றில் அலைவதை உணர்கிறேன். ஆனால் தரையில் கைவிரல்களை அழுத்தி குனிந்திருக்கும் போது ‘ரெடி’ என்ற குரல் கேட்கையில் கனவு கலைந்து கனமாகி விடுகிறேன். என்குள்ளே சொல்லிக் கொள்வேன். “கீச்சி, நீ ஜெயிக்க வேண்டும். நீ ஜெயிக்க வேண்டும். உலகத்திலேயே நீதான் வேகமாக ஓடக்கூடியவள். நீ முயன்றால் ஆம்ஸ்டர்டாம் வரை ஓடி உன் அப்பாவையே தோற்கடிக்க முடியும்.” இப்போது என் கனமெல்லாம் கீழே நகர்ந்து முழங்கால்வழி பாதத்தில், இறங்கி பூமிக்குள் செல்லும்போது பிஸ்டலின் ஓசை என் இரத்தத்தில் வெடிக்கும். மீண்டும் கனமின்றி பாய்வேன். மற்றவர்களைப் பறந்து கடந்து செல்வேன். கைகள் மேலும் கீழும் பாயும். உலகம் முழுவதும் அமைதியாயிருக்க, ஓடும் பாதையில் கல்லில் கால் உரசும் ஒலி மட்டுமே கேட்கும். இடது பக்கம் திரும்பிப் பார்க்கிறேன். ஒருவருமில்லை. வலது பக்கம் கிரெட்சனின் மங்கல் உருவம். தாடையை முன்னால் நீட்டிக் கொண்டு, அதுவே ஜெயித்துவிடும் என்பது போல். வேலிக்கு அப்பால் ரெமாண்ட் கைவிரல்களை தனக்குப் பின்னால் இணைத்தபடி அவனுக்கே உ¡¢ய பாணியில் ஓடிக்கொண்டிருக்கிறான். முதன் முறையாக நான் அவனை இப்படி இப்போது தான் பார்க்கிறேன். ஒரு வினாடி நின்று பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால் வெள்ளை ¡¢ப்பன் என்னை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கிறது. அதைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து மேலும் ஓடி கால்கள் தாமாகவே து¡சியைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து மேலும் ஓடி கால்கள் தாமாகவே து¡சியைக் கிளப்ப, ஓட்டம் சட்டென்று நின்றது. அந்தப்பக்கம் நின்றிருந்த குழந்தைகள் என்மேல் குவிந்து, மேதின நிகழ்ச்சி நிரலால் முதுகைத் தட்டி, தலையைத் தடவினர். நான் மீண்டும் ஜெயித்து விட்டேன். 151வது தெருவில் உள்ளவர்கள் இன்றும் ஒரு வருஷம் தலையை நிமிர்த்தி நடக்கலாம்.

ஒலிப்பெருக்கியில் குரல் மணியோசைபோல் ஒலித்தது. “முதலாவதாக வந்தது…” சற்று நிறுத்திய பிறகு ஒலிப்பெருக்கியின் இரைச்சல். அப்புறம் அமைதி. கீழே குனிந்து சுவாசம் ஒழுங்கானபோது கிரெட்சன் திரும்பி வருகிறாள். அவளும் வெற்றிக் கோட்டை எட்டிவிட்டாள். கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஆடி அசைந்து மெதுவாக மூச்சு விட்டபடி ஒரு வீராங்கனை போல் வருவதைப் பார்த்ததும் முதன் முதலாக அவளை எனக்குப் பிடித்திருந்தது. “முதலாவதாக வந்தது…” இப்போது மூன்று நான்கு குரல்கள் ஒலிப்பெருக்கியில் கலந்து ஒலிக்க, நான் என் கான்வாஸ் ஷ¥வை புல்லில் எறிந்துவிட்டு கிரெட்சனைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். உண்மையில் வெற்றி பெற்றது யார் என்று இருவருக்கும் தொ¢யவில்லை. ஒலிப்பெருக்கிக்காரனிடம் பொய்க்கால் குதிரை வாக்குவாதம் செய்வதும், வேறு சிலர் தங்கள் ஸ்டாப் வாச் என்ன சொல்கிறது என்பதைக் கத்துவதும் கேட்டது. ரேமாண்ட் வேலியை அசைத்து என்னை அழைப்து கேட்கிறது. “உஷ்” என்று அவனை அடக்குகிறேன். ஆனால் அவனோ சினிமாவில் வரும் கொ¡¢ல்லாவைப் போல் வேலியை அசைத்து, ஒரு டான்சரைப் போல் ஆடி வேலியில் ஏறத் தொடங்குகிறான். ஒழுங்காக சுலபமாக, ஆனால் வேகமாக, ஏறுகிறான். அவன் லாசவகமாக ஏறுவதைக் கவனித்தபோதும், கைகளைப் பக்கவாட்டில் இணைத்து, மேல் மூச்சு வாங்க, பற்கள் தொ¢ய ஓடியதை நினைத்தபோதும் எனக்கு ரேமாண்ட் ஒரு நல்ல ஓட்டப் பந்தய வீரன் ஆவான் என்றே தோன்றியது. நான் வேகமாக நடை பயிலும்போது அவன் என்னுடன் சேர்ந்து வரவில்லையா. ஏழு எண்ணிக்கையில் எப்படி மூச்சு விடுவது என்பது அவனுக்கும் தொ¢யும். சாப்பாட்டு மேஜையில் அவன் அதைப் பழகும்போது ஜார்ஜுக்கு என்ன கோபம் வரும்! பாண்ட் இசையில் நான் புன்னகை பு¡¢கிறேன். இந்தப் போட்டியில் நான் தோற்றாலும், அல்லது நானும் கிரெட்சனும் ஒரே வினாடியில் வெற்றிக் கோட்டை எட்டியிருந்தாலும், அல்லது நான்தான் ஜெயித்தாலும் என்றாலும், நான் பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ரேமாண்டை ஒரு சாம்பியன் ஆக்க அவனுக்குப் பயிற்சி அளிக்கப்போகிறேன். இன்னும் கொஞ்சம் ஒழுங்காகப் படித்தால் ஸ்பெல்லிங் போட்டியில் சிந்தியாவை தோற்கடிக்க முடியும். அம்மாவை கொஞ்சம் தாஜா செய்தால் பியானோ பாடங்கள் கற்று ஒரு ஸ்டார் ஆகலாம். நான் ஒரு முரட்டுஆள் என்ற பெயர் இருக்கிறது. வீடு முழுவதும் மெடல்களும் ¡¢ப்பன்களும் பா¢சுகளும் இறைந்திருக்கின்றன. ஆனால் ரேமாண்டுக்கென்று என்ன இருக்கிறது?

எனது புதிய திட்டங்களோடு உரக்க சி¡¢த்தபடி அங்கே நிற்கும்போது ரேமாண்ட் வேலியிலிருந்து குதித்து, பற்கள் தொ¢ய சி¡¢த்தபடி கைகளை உடலோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடிவருகிறான். இப்படி ஓடிவருவதை வேறு யாராலும் செய்ய முடிந்தருக்கவில்லை. அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் நான் துள்ளிக் குதிக்கத் தொடங்கினேன். என் தம்பி ரேமாண்ட். ஓட்டப் பந்தயக் குடும்பத்தின் வா¡¢சு! மற்றவர்கள் என் மகிழ்ச்சிக்குக் காரணம், ஒலிப்பெருக்கியில் “முதலாவதாக வந்தது மிஸ் ஹேஸல் எலிசபெத் டெபொரா பார்க்கர்” என்கிற பாவனையில். புன்னகை பு¡¢ந்தேன். அவள் நல்ல பெண். சந்தேகமேயில்லை. ஒருவேளை ரேமாண்டுக்கு பயிற்சி அளிப்பதில் எனக்கு அவள் உதவலாம். ஓடுவது பற்றி அவள் எவ்வளவு சீ¡¢யஸாக இருக்கிறாள் என்பது எல்லோருக்கும் தொ¢யும். என்னைப் பாராட்டும் விதத்தில் தலையை ஆட்டுகிறாள். புன்னகை செய்கிறாள். நானும் புன்னகைக்கிறேன். எங்கள் இடையே மா¢யாதை கலந்த இந்த புன்னகை விகசிக்கிறது. இரண்டு கிறு பெண்கள் தங்களுக்கிடையே காட்டும் நிஜமான புன்னகை. நிஜ புன்னகையை நாம்தான் தினசா¢ பிராக்டிஸ் செய்வதில்லையே. மலர்களாகவோ தேவதைகளாகவோ ஸ்ட்ராபொ¢யாகவோ நம்மை நினைத்துக் கொள்கிறோமே தவிர, உண்மையானவராக, மதிப்பிற்கு¡¢யவராக, அதவாது, மனிதர்களாக நினைத்துக் கொள்வதில்லை.

டோனி கேட் பம்பாரா
தமிழில் எம். எஸ்.

Boston is so close

June 24, 2012 Leave a comment
Imag0333
Categories: Uncategorized

Past journey is splashy

June 24, 2012 Leave a comment
Imag0332
Categories: Uncategorized

Indian Forest Rights Act: Naali – Documentary Short Film on Wildlife Protection & Carbon Trading

June 24, 2012 1 comment

ஆவணப்படமான நாளி பல்வேறு சிரமங்களை தாண்டி வெளியிடும் நாளை நெருங்கியிருக்கிறது.

ஒருவருட ஆய்வுக்கு பின் மேற்குதொடர்ச்சிமலையின் வயநாடு தொடங்கி மானந்தவாடி சுல்தான் பத்தேரி இடைக்கல் அட்டபாடி வழியாகாக நீலகிரி, தெங்குமராடாவை அடைந்து தந்தம் மிளகு, தேயிலை, காப்பி, தேக்கு, தேவாலா தங்கம், ஹொய்சாலர், பிற்கால சோழர்கள் சமணம் சைவம் வைணவம் ஆகியவற்றை உள்ளடக்கி இப் பகுதிகளின் ஒரு முழுமையான வராலாறாக இருக்குமாறு இருக்கும் கருவிகளையும் குறைந்த பணத்தையும் வைத்துக்கொண்டு முயன்றிருக்கிறோம்.

வனச்சட்டம் 2005ஐ முடக்கும் நோக்கோடு பரபரப்பாகியிருக்கும் புலிகள் காப்பகம், காணுயிர்பாதுகாப்பு கழங்களின் நிஜப்பின்ண்னனி கார்பன் ட்ரேடிங் குறித்தும் ஆய்வு நோக்கோடு அலசியிருக்கிறோம்

Related Post: Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act

Boston Hindu Kovil: Nataraja Ratha Yatra celebrations & Sri Venkateshwara Garuda Seva at Sri Lakshmi Temple, New England

June 21, 2012 1 comment

Sri Nataraja and Sivakami Ratha Yatra
And
Sri Venkateshwara Garuda Seva

Sri Nataraja and Sivakami Ratha Yatra,

Aani Thirumanjanam,
Aani Swathi Garuda Seva Utsavam
  at Sri Lakshmi Temple

 

Aani Thirumanjaman Celebrations

Sunday June 24

 

Sri Nataraja and Sivakami Ratha Yatra  

9AM to 1PM

Ratha Prathishta Homam, Pancha Moorthi Purappadu
Upacharam Uthsavam, Ratha Arohanam.

1PM to 3PM
Natyanjali Dance Program

6:00 PM
Ratha Avarohanam
Tuesday, June 26
Aani Thirumanjanam

9:00 AM to 12:00 PM

Kalasa Sthaapanam – Poorvanga Pooja – Sri Rudra
Homam – Poornahuthi

6:00 PM to 9:00 PM
Sri Natarajar Abhishekam
Mahanyasam, Ekaadasa Rudra Japam
Sri Natarajar Sivakami Abhishekam
Alankaram – Archana – Aarati

 Aani Swathi

Garuda Uthsavam

   

Friday June 29

 

Aani Swathi 

Aani Swathi:
5:30 PM to 6:30 PM

Sri Garuda and Sri Narasimha Abhishekam

Saturday June 30, 2012   

Aani Swathi 

Aani Swathi Garuda Uthsavam

5PM to 7:30 PM:
Sri Venkateshwara Garuda Vahana Seva and Utsavam

 

Catering from the temple!

Our temple is now providing special catering service of delicious and tasty food for your private and special events!

 
Please enquire at the temple office
508 881 5775 Ext 0 or 205 for more details
.

May the blessings of SriLakshmi be always with you and your family.

Join Our Mailing List

Sri Nataraja Ratha
.

 

Aani Swathi
Sri Venkateshwara Garuda Seva
 
Aani Swathi Garuda Seva

Categories: Uncategorized

Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

June 15, 2012 1 comment

எழுதுவது ஏன்

நாள் : 10/16/2004 1:06:51 PM,

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில்.

எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார்

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்.

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.

2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு¡யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு¡ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.

3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.

இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.

4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.

5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்

6) புகழ்பெற

ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்

7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்

8) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.

9) பழக்கத்தின் காரணமாக.

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்ந்து அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது. .

லெவியை வாசித்த போது தமிழில் இந்த ஒன்பது வகைக்கும் அப்பாலும் நிறைய பிரிவுகள் இருப்பதை உணரமுடிகிறது. எனக்குத் தெரிந்த சில காரணங்கள்

1) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது.

அநேகமாக எனக்கு தெரிந்த பலரும் சொன்ன முதல்காரணம் இது தான். அதைப் பொறாமை என்று மட்டும் முடிவுசெய்து கொண்டுவிட முடியாது. நு¡ற்றுக்கும் மேற்பட்ட நுட்பமான காரணங்களிருக்கின்றன. சில புத்தகங்களை வாசித்து முடித்தவுடன் எழுதுவது என்றால் இவ்வளவுதானா? இது என்ன மாயவித்தையா என தோன்றுவதும் காரணமாகயிருக்கலாம்

2) பெண்நண்பர்கள் பெறுவதற்கு

இருபது வயதில் அதிகமாக எழுதும் ஆசை வருவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் இந்த வகை எழுத்தாளர்களை பெண்கள் ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம்

3)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற

தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரிகள் பாராட்டு பெறுவதற்கும், தான் அறிவுஜீவி என்று தனித்து காட்டுவதற்கும் எழுதும் கூட்டம் நிறைய இருக்கிறது. அவர்கள் யாராவது ஒய்வு பெறும் நாளில் கவிதை எழுதி அதை பரிசாக தந்து அனுப்பிவிடக்கூடியவர்கள்.

4) பதவி உயர்விற்காக எழுதுவது.

பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் துறைவல்லுனர்கள் தங்களது பதவி உயர்விற்காக எழுதுகிறார்கள். நு¡லகத்தில் பாதி இந்த வகை எழுத்துகள் தான்.கையில் பேனாவும் சிந்தனையுமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களின் தனித்துவம்.

5) சினிமாவிற்குள் நுழைவதற்கு

சினிமாவிற்குள் நுழைவதற்கு விசிட்டிங் கார்டு போல பயன்படுவதற்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல் அல்லது சிறுகதைகள் எழுதுதல் அதிகம்.. சென்னையில், கர்சீப் வைத்திருப்பது போல பாக்கெட்டில் கவிதை நோட்டுவைத்திருப்பவர்களை கோடம்பாக்கத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம்

6) சென்னைக்கு ஒடிவந்தபிறகு வாழ்வதற்கு என்ன செய்ய என்று எழுதுவது.

ஏதோவொரு காரணத்தால் சென்னைக்கு ஒடிவந்த பிறகு பிழைப்பிற்காக பத்திரிக்கைகளிலோ, பதிப்பகங்களுக்கோ எதையாவது எழுதி தருவது. முப்பது நாட்களில் நீச்சல் கற்றுத்தருவது, சைனீஸ் சமையற்கலை, ஆவியுலகம் ஒரு நேரடி அனுபவம் என ஏதாவது ஒரு தலைப்பில் 250 பக்க புத்தகம் எழுதி தருவதற்கு 175 ரூபாய் தருகிறார் தாராளமனதுடைய தமிழ்பதிப்பகத்தார்.

7) ஒய்வு பெற்ற பிறகு ஏதாவது செய்யவேண்டுமென என்று

ஒய்வு பெற்றபிறகு தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த ஆர்வம் உருவாகி அவர்களுக்கு சேவை செய்வதற்காக திருக்குறள், சங்கஇலக்கியம் துவங்கி எதையாவது பற்றி எழுதுவது. அதை தானே தனது பேத்தி பேரன் பெயரில் பதிப்பகம் துவங்கி வெளியிட்டு தன்வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு தவறாமல் தருவது. சுதந்திர தினத்தன்று காலனியில் சொற்பொழிவு ஆற்றுவது இந்த ரகம்

8) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது

தான் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் அந்த பிரபலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு தனது அரிய சிந்தனைகளை, அறிவுதுளிகளை, கற்பனையை பகிர்ந்து கொள்வது. இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு அதிகம். அது போலவே பிரபலமான வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பிரபல்யத்தை புத்தகம் எழுதிதான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் எழுதிய திருக்குறள் உரை அங்கு வாங்கும் அல்வா மைசூர்பாகு மிக்சர் எது கால்கிலோ வாங்கினாலும் இலவசமாகத் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் நீங்கள் பிரபலமாகி விட்டால் புத்தகம் எழுதி அண்ணாநகரில் பிளாட்பிளாட்டாக வாங்கிப் போட்டுவிடலாம் என்று பஞ்சபட்சி ஜோதிடம் சொல்கிறது.

9) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்

பெரும்பான்மை குடும்பதலைவிகள் எழுத்தாளராவது இந்த காரணத்தால் தான். கூடை பின்னுவது தோட்டம் போடுவது, அலங்கார பொருட்கள் செய்வது போலவே கவிதை செய்வது கதைகள் செய்வது என்று தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள்.

10) எதற்கு என்றே தெரியாமலிருப்பது

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

இது போல இன்னமும் பல 100 காரணங்களிருக்க கூடும். விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்களேன்.