நமது வரலாற்றாய்வின் அடிப்படை என்ன? – குமரி மைந்தன்
‘பெரும்பாலான வரலாறுகள் விருப்பக் கற்பனைகள் மீதி ஊகங்கள்’ என்பது கலாச்சாரத்தின் வரலாறு என்ற தலைப்பில் 14 மடலாய்வுகளை எழுதிய வில்டியூரண்டின் கூற்றாகும். ‘வரலாறு என்பது உண்மை பெயர்களைக் கொண்ட ஒரு கட்டுக்கதை, கதை என்பது கற்பனைப் பெயர்களைக் கொண்ட ஓர் உண்மை விவரணை என்பது இன்னொருவர் கூற்று – பெயர் நினைவு இல்லை. இருந்தும் மனிதனுக்கு வரலாறு என்று ஒன்று தேவைப்படுவதனால் நாம் வரலாறுகளை எழுதிக் கொண்டிருக்கிறோம்.
புறவயமான அதாவது பருப்பொருட் சான்றுகள் என்பவை தொல்பொருட்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், வரலாற்று நு¡ல்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள் வேறு எழுத்துச் சான்றுகள் முதலியவையே. தொல்பொருட்சான்றுகளையும் அகழ்வுச் சான்றுகளையும் வைத்துக் கொண்டு ஒருபொழுதும் வரலாற்றை எழுதிவிடமுடியாது. அவற்றை பட்டியலிடத்தான் முடியும். புலனறிவு சார்ந்த பட்டறிவின் (Empirical thought) எல்லை அதுதான். அவற்றிலிருந்து வரலாற்றினை உருவாக்குவது மெய்யியல் கோட்பாடுகளேயாகும். ஆய்வுக் காலத்தில் நிலவும் வரலாறு குறித்த கருத்துக்கள், வரலாறு சார்ந்த தேவைகள் தரவுகளை ஆய்ந்து முடிவுகளை முன்வைக்கும் விதத்தை உயத்தறிதல் (அனுபமானப் பிரமாணம் – Inference) என்கிறோம். அவ்வாறு ஒருவர் உய்த்தறிந்ததை அதை ஏற்காத ஒருவர் வெறும் ஊகம் என்று கூறலாம். உய்த்தறிதலுக்கும் ஊகத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு மிகவும் மெல்லியதாகும்.
புலனறிச் சான்றுகள் வரலாற்றாய்வுக்கு போதா. அப்படி போதுமானவையாக இருந்தால் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளிடப்பட்ட சிந்து சமவெளி அகழ்வாய்வுச் சான்றுகள் தந்த வரலாற்றுத் தெளிவுகளைவிட எழுந்துள்ள விடைகாணப்படாத வினாக்களே மிகுதி எனும் நிலை ஏற்பட்டிருக்குமா?
கற்காலக் கருவிகள் ஓ¡¢டத்திலே கிடைத்தால் அதைவைத்து அங்கு வாழ்ந்த மக்கள் என்ன தொழில் செய்தார்கள், என்ன உணவு உண்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே அது எப்படி? கற்கருவிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்ன? அதே கருவிகளுடன் இன்றும் சில மக்கள் வாழ்ந்தால் அவர்களைப் பார்த்து எல்லா மக்களுக்கும் அதை பொதுமைப்படுத்துவது எத்தனை து¡ரம் துல்லியமான முடிவைத் தரும்? ஆனால் அதைத்தானே நாம் செய்துகொண்டிருக்கிறோம்? எனவே புறவயச் சான்றுகள் முதல்நிலை கருப்பொருட்கள் என்பது சா¢யல்ல. அவை பல்வேறு வரலாற்றுக் கருப்பொருட்களுள் ஒன்று என்பதே உண்மைநிலை.
வரலாறு உட்பட எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. ஏதோ ஒரு பக்கம் சாராத வரலாறே கிடையாது. அறிவியலும் சார்புடையதே. இன்றைய உலக வாணிகக் குழுக்கள் வளர்ந்து நாள்தோறும் பரப்பும் போலி அறிவியல் உண்மைகளைப் பற்றிச் சொல்லவில்லை. உண்மையும் பக்கச் சார்பு உடையதே. உண்மையில் பயனடைவோருக்கு சார்பாகவும் பாதிக்கப்படுவோருக்கு எதிராகவும் அது உள்ளது. எந்த ஒரு அறிவியல், வரலாற்றுக் கருத்தையும் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதற்கு அரசியல் பின்னணி தேவைப்படுகிறது.
உதாரணமாக 150 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் சமய ஊழியம் செய்ய வந்த கால்டுவெல்லார் தமிழையும் தென்னிந்திய மொழிகளையும் ஆய்வு செய்து அவற்றுக்கு திராவிட மொழிகள் என்று ஒரு பெயரும் சூட்டி அவற்றினைப் பேசும் மக்களை ‘திராவிட இனம்’ என அடையாளம் கொடுத்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எழுதியபோது திராவிடர்கள் நண்ணிலக் கடற்கரை (மத்தியதரைக் கடற்கரை) உட்பட ஐரோப்பிய ஆசியக் கண்டங்களின் ஆறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று எழுதினார். இது வெறும் சொற்களின் ஒற்றுமையை வைத்து மேற்கொள்ளப்பட்ட தலைகீழ் முடிவாகும். பண்டைய வரலாற்றுத் தடயங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய நகர்வுகளையே காட்டுகிறன. ஆனால் கால்டுவெல்லா¡¢ன் இந்த முடிவைத்தான் ‘அங்கீகா¢க்கப்பட்ட’ ஆய்வாளர்கள் தலைமீது தாங்கி நிற்கிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி முதல் இக்கருத்து பாடநு¡ல்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் படித்த சாராசா¢த் தமிழர்களின் மூளைகளில் இக்கருத்து பதிவாகவேயில்லை. இதற்கு திராவிட இயக்க அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட மேற்கிலிருந்து வந்தவர்கள் என்பதைவிட குமா¢க்கண்டத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறுவது அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்புணர்ச்சியினைக் கொடுக்கலாம். அதுபோல்தான் 19ம் நு¡ற்றாண்டிலும் 20ஆம் நு¡ற்றாண்டின் முற்பாதியிலும் ஐரோப்பாவில் செருமானியா¢ன் ஆ¡¢ய வெறி கொண்ட அரசியலுக்கு எதிராக திராவிட நாகா£க மேன்மையும் குமா¢க்கண்ட நாகா£க வளர்ச்சியையும் கூற வேண்டிய கட்டாயம் ஐரோப்பியனுக்கு இருந்தது. இன்று அந்த அச்சம் நீங்கி உலக மேலாண்மைக்கு இந்தக் கருத்துக்களை மழுங்கடித்து ‘இந்தோ ஐரோப்பிய இன’ மேன்மையை து¡க்கிப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே அத்துறை ஆய்வாளர்கள் கைவிடப்பட்டனர். அவ்¡கள் பழிக்கப்படுகின்றனர்.
இந்தியப் பல்கலைக் கழகங்கள் தரும் பட்டங்கள், குறிப்பாக முனைவர் பட்டங்கள், அப்பட்டங்களைப் பெற்றவர் சொந்தாமாக சிந்திக்கும் திறனை தன்னிடமிருந்து முற்றிலுமாக அழிப்பதில் வென்று பெற்றுவிட்டார் என்று கூறும் சான்றிதழ்களாகும். தான் எழுதும் எந்த ஒரு கருத்துக்கும் வேறு ஒருவரை கட்டாயம் சான்று காட்டியாக வேண்டும். வேறு எதில் விட்டுக் கொடுத்தாலும் ‘ஆய்வாளா¢ன்’ சொந்தக் கூற்றாக ஒரு சொல் கூட இடம் பெற்றுவிடலாகாது என்பதில் ‘வழிகாட்டிகள்’ மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.
அண்மைக்காலம் வரை அமொ¢க்கா முதன்மையாகவும், பிற பணக்கார நாடுகளும் அங்குள்ள பல்கலைக் கழகங்களும் ‘அறக்கட்டளைகளும்’ மாநிலத்துக்கு ஒருவர் துறைக்கொருவர், பல்கலைகழகத்துக்கு ஒருவர் என்று தனித்தனியாகவும் தனித்துறைகளை ஏற்படுத்தியும் தம் நாட்டிலிருந்து தொகுப்பாளர்களை நம் நாட்டில் வைத்திருந்தார்கள். அவவரசுகளும் பல்கலைகழகங்களும் ‘அறக்கட்டளை’களும் தரும் பணத்தில் அவர்கள் விரும்பும் தலைப்புகளில் நம் பல்கலைகழகங்கள் மூலமாகவும் நேரடியாகவும் நம்மவர்களால் ‘ஆய்வுகள்’ செய்யப்பட்டன. பல்கலைகழக நு¡லகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஆய்வேடுகளிலிருந்து அதற்கென்று அமர்த்தப்பட்டவர்கள் அவற்றை திரட்டிக்கொண்டு போயினர். இவை போக மக்களிடையே வெவ்வேறு துறைகளில் செய்தி திரட்டுவோர் தொண்டு செய்வது என்ற பெயா¢ல் மக்களைப் பற்றியும் ஊர்களைப் பற்றியும் அனைத்து செய்திகளையும் திரட்டி அளித்தனர். நமது பல்கலைகழக நாட்டார் வழக்காற்றியல் துறைகள் இதற்காக உருவாக்கப்பட்டவைதான்.
இவ்வாறு திரட்டப்படும் தகவல்களில் மரபுசார் அறிவியல் முறைகள், வாழ்க்கை நுட்பங்கள், சடங்கு வடிவில் நம்மிடையே நிலவும் பலவிதமான வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாக உள்ளன. இத்தகைய செய்திகளை திரட்டுவோருக்கு இவற்றின் உண்மையான மதிப்பு தொ¢ந்திருக்கவில்லை. அமைப்பியல் போன்ற போலிக் கோட்பாடுகள் மீது அவர்களுக்கு கவர்ச்சி உள்ளது. அவற்றை அரைகுறையாக உருவேற்றிக் கொண்டு இம்மரபுசார் அறிவுகள் மீது தங்கள் அளவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள்.
இவ்வாறு வந்து குவியும் செய்திகள் மிக அதிகம். உலகமே செய்திகளாக மாறிவிடுகிறது. இச்செய்திகளை தொகுத்து ஒழுங்குசெய்து பல்வேறு விதத்தில் பயன்படுத்திக்கொள்ள மாபெரும் கணிப்பொறியாளர் படை தேவையாகிறது. எனவே நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கணினிகளால் நிரம்பி வழிகின்றன. 45 நாளில் முழுவள்¡ச்சி பெறும் கழிக்கோழிகள் போல நாம் பொறியாளர்களை உருவாக்கி ஏற்றுமதி செய்கிறோம். இங்குள்ள படித்தவர்கள் ஒவ்வொருவரும் மேலைப்பணக்கார நாடுகளுக்கு பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட மனிதக் கணினிமென் பொருட்களாகவே உள்ளனர். வரலாற்றாய்வும் இவர்களாலேயே இங்கு செய்யப்படுகின்றது.
வரலாற்று வரைவென்பது எளிய பணிஅல்ல. சென்ற நு¡ற்றாண்டின் தொடக்கத்தில் நம்நாட்டு வரலாற்றாசி¡¢யர்கள் தமிழக,இந்திய வரலாறுகளை வரைவதற்காக மேற்கொண்ட உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனர்களும் வெள்ளாளர்களும் பெரும்பான்மையாக கொண்ட அவ்வறிஞர்கள் செய்துள்ள பணிகள் அளவிட முடியாதவை. அன்று நிலவிய கோட்பாடுகளினாலும், சொந்த மனச் சார்புகளினாலும் அவற்றில் குறைபாடுகள் இருந்தாலும் அவர்களுடைய பணியை எண்ணிப் பார்க்கும்போது மனதுக்குள் வணங்கத் தோன்றுகிறது. ஆனால் இதை இயலச் செய்ய தளம் அமைத்தவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களும் வானிலிருந்து குதித்து வரவில்லை. பச்சைக் குழந்தை உலகை பார்த்து படிப்படியாக தன் பட்டறிவினாலும் முயற்சியினாலும் தன் அறிவை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வது போலவே அவர்களும் செயல்பட்டுள்ளனர். 17ஆம் நு¡ற்றாண்டின் நடுப்பகுதியில் உசர் எனும் ஐ¡¢ய(ஐ¡¢ஷ்) தலைமை பேராயர் கி.மு. 4004 ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் காலை துல்லியமாக 9 மணிக்கு உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்று எழுதியதில் இருந்து ஐரோப்பியா¢ன் தற்கால வரலாற்றுப் பணி தொடங்கியது. பின்னர் ஏரோடோட்டசின் வரலாறு, மெசப்பட்டோமியாவில் கிடைத்த அகழ்வுச்சான்றுகள், நு¡ல்கள், எகிப்து, இறுதியாக சிந்துசமவெளி அகழ்வாய்வு என்றும், மொழிகள் பண்பட்டு கூறுகள், உயிர்வகைகளை என்றும் வரலாற்றுக் கருப்பொருட்கள் குவிந்தன.
இவற்றைத் தங்களைப் பற்றிய பெருமிதம் உருவாக்கிய உள்ளுணர்வு, பலவரலாற்றுக் கருப்பொருட்களின் உண்மையான குறிதகவினைப் பு¡¢ந்து கொள்வதற்கு அவற்றொடு அவர்களுக்கு நேரடி உறவு இல்லாமை முதலிய பல இயல்புகளால் தவறாகவும் இவர்கள் பு¡¢ந்து கொண்டதுண்டு. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மனச் சான்றுக்கு மாறாக செயல்பட்டிருப்பர் என்று என்னால கூறமுடியவில்லை. இப்போதுதான் பணக்கார நாடுகள் தங்கள் மேலாண்மையை நிறுவும் பொருட்டு நேரடி வரலாற்றாய்வில் ஈடுபடுகின்றன.
ஐரோப்பியருக்கும் அவர்கள் அடிமைப்படுத்திய நாடுகளுக்கும் பழங்கால வரலாறு உண்டு. எனவே தங்களையும் பிறரையும் பு¡¢ந்துகொள்ள வேண்டிய தேவைக்காக ஐரோப்பியர் பழங்கால பியங்கள், மத அமைப்புகள், மரபுவழி கதைகள், செவிச் செய்திகள், தொன்மங்கள் ஆகியவற்றையும் வரலாற்று கருப்பொருட்களாகக் கொண்டனர். ஆனால் அமொ¢க்காவுக்கு அப்படி பழைய வரலாறு கிடையாது. அவர்களின் தொடக்க வரலாறு பெருமைப்படத்தக்கதாகவும் இல்லை. அத்துடன் தங்களால் மேலாண்மை செய்யப்படும் மக்களை வரலாற்றவர்களாக ஆக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. எனவே அதற்கேற்ற வரலாற்று வரையறைகளை அவர்கள் உருவாக்கினர். மரபுக் கதைகளையும் தொன்மங்களையும் பண்டைய இலக்கியங்களையும் எல்லாம் துணுக்குளாக உடைக்கமுடியும் என்றனர். (32 அடிப்படைத் துணுக்குகள் என்று நினைவு) அந்த துணுக்கு அடிப்படைக்குள் சிலப்பதிகாரத்தை அடைக்க முடியவில்லை. நாட்டார் கதைப் பாடல்களில் நிகழ்த்துவோனுக்குத் தேவைக்கு மிஞ்சிய சிறப்பு கொடுத்தார்கள். நிகழ்துவோனால் கதையின் போக்கை முற்றிலும் மாற்றமுடியும் என்றனர். ஆனால் நிகழ்த்துவோன் ஒரு கூட்டுக்குழு மனத்துக்கு கட்டுப்பட்டவன் என்பதே உண்மை நிலை. மொத்தத்தில் பழைய வரலாறுள்ள குழுமங்களின் வரலாற்று கருப்பொருட்களில் வரலாற்று உள்ளடக்கம் இல்லை என்று தவறாக உணர்த்துவது தான் அவர்கள் நோக்கம்.
மொழியியலில் கூட இதைக் காணமுடியும். சொற்களின் வேர்களை கண்டு விளக்க முனைவது வரலாற்று மொழியல், ஒப்பந்த மொழியியல் அதன் ஒரு கிளை – சொற்பிறப்பியல் ஆய்வு அதற்குப் பயன்படும். இது வரலாற்றாய்வுக்கு ஒரு முக்கியமான துணைக்கருவி. இதற்கு எதிராக முன் வைக்கப்படும் மொழிக் கோட்பாடு வண்ணனை மொழியயில் (Descriptive Linguistics) எனப்படும். அண்மை ஆண்டுகளில் அதற்கு ஒரு தேவை இருந்தது. சோவியத்து நாட்டினுள் அடங்கிய நாடோடி மக்களைக் கொண்ட தேசியங்களுக்கு மொழிகளும் வாய்மொழி இலக்கியங்களும் இருந்தபோதிலும் எழுத்து வா¢சைகளும் இலக்கணங்களும் கிடையாது. அதுபோல் சோவியத் மற்றும் அமொ¢க்க வல்லரசுகளின் வீச்சுக்குள் அடங்கிய ஆப்¡¢க்கநாடுகள் பலவற்றுக்கும் இதுவே நிலை. அவற்றுக்கு எழுத்துக்களை உருவாக்கவும் இலக்கணங்களை வரையறை செய்து கொள்ளவும் இந்த வண்ணனை மொழியில் பயன்பட்டது. அம்மொழிகள் உறுதிப்பட்டால் பிறகு அவை தத்தமக்கென வரலாற்று மொழியியலை வளர்த்தெடுக்க முடியும். எதிர்கால வரலாறு அதை தேவையாக்கினால் அம்மக்கள் அதை அடைவர்.
தொல்காப்பியத்தில் உள்ள ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற கருத்து வரலாற்று மொழியியல் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு. மாறாக ‘எல்லாச் சொல்லும் இரு குறியே’ என்ற நன்னுர்ல் கருத்து வண்ணனை மொழியியலின் வழிப்பட்டது. சென்ற நு¡ற்றாண்டின் பிற்பகுதியில் வலுப்பெற்ற வண்ணனை மொழியிலின் வரலாற்றுப் பின்னணியினைப் பு¡¢ந்து கொள்ளாத இந்த தலைமுறை தமிழறிஞர்கள் பலர் வரலாற்று மொழியில் அடிப்படையில் இயங்கிய தேவரேய பாவாணர் அவர்களை பகடி செய்து ஒதுக்கி வைத்தனர். அது போலத்தான் இன்று குமா¢க்கண்டம் குறித்த ஆய்வுகளும் நகைப்புக்கிடமாக கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் தாங்கள் வாழும் நிகழ்கால சூழலின் கருத்துக்களோடும் பார்வைகளோடும் இரண்டற கலந்து அவற்றுக்கு அப்பால் நோக்கும் திறனை ஆய்வாளர் இழந்து விடுவதாகும்.
புவிஇயங்கியல் (Geology) அடிப்படைகளை மாற்றமில்லாத அடிப்படைத்தரவுகளாக கொள்ளும் போக்கு இன்று காணப்படுகின்றது. புவியியங்கியல் மாற்றங்களுக்கும் மனிதனின் பதிவுகளுக்கும் இடையே பெரும் கால இடைவெளி இருப்பதை வரலாற்றாசி¡¢யர்களும் புவியலாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் ஆய்வு உத்திகளில் – குறிப்பாக காலக் கணிப்பு முறையில் – மேம்பாடுகள் ஏற்படும் தோறும் இந்த இடைவெளி சுருங்கி வருகிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக மனித இனத்தோற்றம் ஒரு இலச்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்ற பண்டைய நிலையில் இருந்து அது 17 இலச்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் புவியியல் மாற்றம் நடந்த இடங்களிலெல்லாம் மனிதப் பதிவுகளுக்கும் புவியியல் தரவுகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. மனிதப் பதிவுகளை நாம் நம்பலாம். புவியியல் தரவுகள் காலம் செல்லும் தோறும் மேம்படக் கூடியவை.
யூதர்களைப் பற்றிச் சொல்லும் வில்வடியூரன்ட் திட்டவட்டமான சான்றுகள் கிடைக்கும் வரை அவர்களுடைய மறைநு¡ல் தரும் செய்திகளின் அடிப்படையில் அவர்களது வரலாற்றினை வரைவதே முறை என்கிறார். அத்துடன் யூத மறையிலிருந்து கடவுள் குறித்த கருத்துருவின் தி¡¢வாக்கம் (படிமுறை வளர்ச்சி) குறித்த ஒரு சீ¡¢ய முடிவையும் அவர் தருகிறார். கோபம் கொண்ட யெகோவா எனும் அழிவுக்கடவுள் கருணைமிக்க பிதாவாக மாறுவதனை அவர் சுட்டிக் காட்டுகிறார். அதுபோல நமக்கும் இன்று செய்திகள் மற்றும் சொல்லாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சட்டகத்தை அமைத்துக் கொள்ளலாம். சிந்து சமவெளி தடயங்கள் முதலியவற்றை அதில் பொருத்தி காலத்துக்கு ஏற்ப அதை மேம்படுத்தியபடியே இருக்கலாம்.
வரலாற்றாய்வு என்பது காவல்துறை விடுக்கும் வழக்குடன் ஒப்பிடலாமா. ஒரு குற்றம் நடைபெற்ற இடத்தில் கிடைக்கும் தடயங்களைக் கொண்டு சில முதல்நிலை முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். மேலும் மேலும் தகவல்களை திரட்டி ஒரு தோராயமான சித்திரத்தை உருவாக்குகிறார்கள். பிறகு கிடைத்த தடயங்களில் புதிய செய்திகளைப் பொருத்தி, பழைய செய்திகளுடன் தொடர்பு செய்து அவற்றினை சான்றுகளாக மாற்றுகிறார்கள். புதிதாக கிடைக்கும் சான்றுகள் பலவேளைகளில் முதலில் உருவாக்கப்பட்ட சட்டகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இறுதி வடிவம் பெற்ற பின் வழக்கு நீதிமன்றம் போகிறது. நீதிமன்றம் இச்சான்றுகளை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். இறுதி தீர்ப்பு பல மேல்முறையீடுகளுக்குப் பிறகு சா¢யாகவும் தவறாகவும் தரப்படலாம்.
வரலாற்றைப் பொருத்தவரை இதே நிகழ்முறை ஒரு குழுவினராலன்றி ஒருவருக்கொருவர் தொடர்பு இன்றி கால இடைவெளிகளால் பி¡¢க்கப்பட்ட பலரால் வேறுவேறு தளங்களில் செய்யப்பட்டு இயல்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இறுதியில் மககள்முன் வைக்கப்படுகிறது. மக்கள் மன்றம் அதுகுறித்து தீர்ப்பு கூறுகிறது. தீர்ப்பு தவறாகவும் இருக்கலாம். ஆ¡¢ய இனக் கோட்பாடு அவ்வாறு மக்கள் மன்றத்தால் அளிக்கப்பட்ட தவறான தீர்ப்பின் விளைவு. காலம் மாறி சூழ்நிலைகள் மாறும் போது இறுதியாக கூறப்பட்ட தீர்ப்புகள் கூட மாற்றியமைக்கவும் படலாம். வரலாறு என்பது நிகழ்கால பண்பாட்டின் விளைவாக உருவாகி வருவதேயாகும்.
குமா¢ மைந்தன்
Recent Comments