Archive

Archive for August 8, 2012

மிரட்டல் சந்தானம்

August 8, 2012 Leave a comment

1. டேய், நாயே, நீயே ஜெயில்ல இருந்துதானே வந்திருக்கே? என்னமோ ஜெர்மன்ல இருந்து வந்தா மாதிரி ஃபிலிம் காட்றே?


2. ஹீரோ – ஐ ஆம் பப்லு

நீ என்ன பராக் ஒபாமாவா?


3. சட்டையை கழட்டு.. ..


ஏய்.. நீ பொம்பளை.. உன்னை சொல்லலை.. நல்ல வேளை..


4. என்னடா சிரிப்பு.. ?

அண்ணா, கொட்டாவி விட்டேனுங்க./.


5. சாகடிக்கறவனுக்கு சாகற தைரியம் வேணும்னு சொல்லித்தரலை?


6. நீ ஏன் ரிசைன் பண்ணாம வந்துட்டே?

இது என்ன கவர்மெண்ட் வேலையா? ரிசைன் பண்ண?


7. அந்த தாதா அவரோட தங்கச்சிக்கு ஒருத்தன் விபூதி வெச்சு விட்டான்னு அவன் விரலையே வெட்டிட்டாராம்..

அய்யயோ.. அப்போ குங்குமம் வெச்சு விட்டா குடும்பத்தோட கொளுத்திடுவாரா?


8. ஏன் எல்லாரும் அந்த கிழவன் கைல கிஸ் பண்றாங்க?

நீ வேணா அவர் லிப்ல கிஸ் பண்ணீக்கோ, யார் வேணாம்னா?


9. இவன் ஆள் அசைய முடியாது, பேச முடியாது எல்லாம் ஓக்கே, சலங்கை ஒலி கமல் மாதிரி அபினயத்துல போட்டுக்குடுத்துட்டா?


10. முன்னால எல்லாம் ஆள் செத்தா தந்தி அனுப்புவாங்க, ஆனா இப்போ..

செத்தவனே போய் தகவல் சொல்லிடறானா?


11. இந்த மிஷின் ஈசியா ஒரே டைம்ல லட்ச ரூபாயை எண்ணும்..

கள்ள நோட்டை கண்டு பிடிக்குமா?

அது என்ன சி பிசி ஐடி ஆபீசரா?


12. இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க, வடை சுட்டுப்போட்டாக்கூட காக்கா வராது.

ஏன்?

அப்டி காக்கா வந்தா அதை சுட்டு இவனுங்க சாப்டுறுவாங்களே?


13. சார், உங்களுக்கு என்ன வேணும்?

3 பொண்ணுங்க, ஒரு ஆண்ட்டி./. \


14. நம்ம கடை பேரை எதுக்கு பலூன்ல எழுதி மேலே பறக்க விட்டிருக்கே?

பின்னே? பாறாங்கல்ல எழுதியா பறக்க விட முடியும்?


15. இவன் பலூன் மேட்டரை வெச்சு பல்சர் பைக்கே வாங்கிடுவான் போல இருக்கே?


16. எனக்கு வரப்போற மனைவி கேத்ரீனா கைஃப் மாதிரி இருக்கனும்..

என்னது? கேத்ரீனா கைஃப்பா?

பின்னே? பி வி சி பைப்பா?


17. கட்டுனா கைஃப் மாதிரி பொண்ணைத்தான் கட்டனும், நமக்குன்னு ஒயிஃப் வந்து மாட்டி இருக்கு பாரு நைஃப் ( KNIFE) மாதிரி


18. நீ தாதாவோட தங்கச்சியை பார்க்கறது அவனுக்கு தெரிஞ்சுது அவன் உன் தலையை வெட்டிடுவான்

நிஜமாவா?

பின்னே பொய்யாவா? அவன் அவளோட தங்கச்சியோட உன்னைப்பார்த்தா எதை வெட்டுவான்னு சொல்லவே முடியாது


19. ஆஹா, வாட் எ பாடி?

ஏன்? இதுக்கு முன்னால பொம்பளை பாடியை ( பிரா) பார்த்ததே இல்லையா?


20. அவ ஃபிஃப்டி கே ஜி தாஜ்மகால் மாதிரியே இருக்கா.

அவ அண்ணனை நீ பார்க்கலையே? திருமலை நாயக்கர் மகால் மாதிரியே இருப்பாங்க..


21. நான் மட்டும் உன் கூட சினிமாவுக்கு வர்ற மேட்டர் தெரிஞ்சுது? அவ்ளவ் தான் ஆ,மா, இவ்லவ் சீரியஸா நான் புலம்பிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே?

பார்த்தா தெரியலை? பாப்கார்ன் சாப்பிடறேன்


22. பின்னால உக்காந்திருக்கறவன் என்னை பார்த்து கேஸ் அப்டிங்கறான்.. கேஸ்னா என்ன அர்த்தம்?

ஹி ஹி பிராஸ்டிடியூட்னு..


23. வெறும் 1500 ரூபா தான் கைல இருக்கு..

நான் வேணா என் பொண்டாட்டி கொலுசை அடமானம் வெச்சு பணம் கொண்டாரவா?

தொலைச்சுடுவேன்\

இருக்கறதே 1500 ரூபா தான், அதையும் தொலைச்சுட்டா அப்புறம் செலவுக்கு என்ன செய்வே?


24. ஆமா, நீ என்ன லவ்வர் கூடவா பேசறே? இப்படி குசுகுசுன்னு ஏன் பேசறே?


25. அட, செம ஐடியாவா இருக்கே? எல்லா இங்கலீஷ் டி விடியையும் சுட்டுட்டியா?


26. என் தங்கச்சி பத்தி உனக்குத்தெரியாது

எல்லாம் ஐ நோ. பாசமலர் 50%, தங்கைக்கோர் கீதம் 50 %


27. …………………….

கரெக்ட் சார்

நான் எதுவும் சொல்லவே இல்லையே?

நீங்க எது சொன்னாலும் கரெக்ட் தான் சார்..


28. எங்கே இங்க்லீஷ்ல பேசு பார்ப்போம்

ஹலோ./.


29.பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை பார்த்ததும் பிடிக்கும்.


30. வாப்பா, உக்காரு

பரவாயில்ல

அப்போ நான் நின்னுக்கிடவா?

அவ்வ்வ்வ்வ்


31. உங்கப்பா குடிப்பாரா?

ஆஃப் சைஸ் பாட்டில் அளவுக்கு இருந்துட்டு ஃபுல் சைஸ் அளவுக்கு குடிப்பாரு.


32. தீபி..

என் சாவுக்கு ஊதப்போறே பீ பீ


33. சும்மா சீன் போடாம ஏதாவது ஐடியா குடு

ஐடியா வராததால தான் சீன் போடறேன்


34. வில்லன் – என் கொள்கை ஒண்ணே ஒண்ணுதான்.. சாவடி! முடியலைன்னா சாவு


35. உங்களுக்கு பி பி இருக்கு..

உன் கூட சேர்ந்ததால வந்துடுச்சு


36. உன் நடு விரலை பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடு


37. உன் கிட்டேதான் ஃபோன் இருக்கே? ஏன் அதுல இருந்து பண்ணலை?

எனக்கு ஃபேமிலியும் இருக்கே? வில்லன் கண்டு பிடிச்சா என்னை மேஞ்சுடுவானே?


38. ஆமா, நீ இப்போ ஃபேஸ் வாஷ் பண்ணுனியா?

ம்ஹூம், பயத்துல வேர்த்திருக்கு


39. சாந்தி முகூர்த்தத்துக்குத்தானே பூ பழம் , ஊது பத்தி எல்லாம் கொண்டு போவாங்க.?

ஹூம் , பாடைக்கும் அதே தான்


40. உன் பேரு ஜேம்ஸ் கேமரூனா? ஏன் அந்த பேரு வெச்சாங்க?

என் மம்மி ஜுராசிக் பார்க் படம் பார்க்கறப்போ நான் பொறந்தேனாம்.

அநேகமா ஏதாவது டிஸ்கவரி சேனல் பார்க்கறப்போ பொறந்திருப்பேனு நினைக்கிறேன்


41. காட்டிக்கொடுக்கறதுலயும் , கூட்டிக்கொடுக்கறதுலயும் நான் எக்ஸ்பர்ட்..

நாட்டுக்கு ரொம்ப தேவையான ஆள் தான் நீ


42. நான் ஆல்ரெடி மேரீடு, என்ன விட்டுடு

ரெண்டாந்தடவை பண்ணி இருந்தா?

நீ வந்து மொய் வைக்கப்போறியா?


43. யார், இந்த பொண்ணு, செக் பண்ணாத சிலிண்டர் மாதிரி இருக்கு?


44. குழந்தை பொய் சொல்லாதுன்னு சொல்வாங்க, அந்தப்பொய்யே குழந்தையா பிறந்திருக்கே?


45. இதென்ன? பிளாக் மார்க்கா?

இல்லை, லக் மார்க்


46. மாப்ளை நல்லா ஜோக் அடிக்கறார் இல்லை?

ஓஹோ, சிரிச்சே ஆகனுமா?


47. அது எப்படி ஒருத்தனை கெடுக்கனும்னா கேரியர்ல சோறு கட்டிட்டு கிளம்பிடறீங்க?


48. எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க, என் தங்கச்சிக்கு வருஷம் ஒரு நாள் தானே பிறந்த நாள் வருது?

மத்தவங்களுக்கு மட்டும் மாசாமாசம் வருதா?


49. அவன் ஒரு துரு பிடிச்ச பொடி டப்பா போல..

ஓஹோ போற வர்றப்ப எல்லாம் தும்மிட்டே போவானா?


50. வாங்க வாங்க.. எ;ல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தானே?

உங்களுக்கு எப்டி தெரியும்? நீங்களும் அதே குட்டைல ஊறிட்டு இருந்தீங்களா?


51. என்ன மோந்து பார்க்கறே? ராவா குடிக்கலாமா?ன்னு பிளானிங்கா?
.

நோ நோ ஒரிஜினல் சரக்கா?ன்னு செக்கிங்க்


52. டம்மி பீஸ் இவன், 2 ரவுண்ட் தாண்ட மாட்டான்னு சொன்னாங்க. இப்படி அடிக்கறானே?

என் கண்ட்ரோல்க்கு இண்ட்டர்வல் விட்டிருக்கேன்


53. உஷ்!! சத்தம் போடாம குடிங்க…

டேய், நான் என்ன ஃபர்ஸ்ட் நைட்லயா குடிக்கறேன்? –


54. யார்றா இவன்? கருணைக்கிழங்குக்கு தாடி வெச்சவனாட்டம்?


55. அவனை காமெடி பண்ண சொன்னீங்களா?

ம்ஹூம்

டான்ஸ் ஆடச்சொன்னீங்களா?

ம்ஹூம், சகிக்காது


56. அண்ணனுக்கு ஆப்பு ரெடியா? சாரி, சூப்பு ரெடியா?


57. இந்த கரித்துண்டை அமெரிக்கா எடுத்துட்டு போ.. அங்கே போனதும், தமிழ் நாட்ல எல்லா பொண்ணுங்களுக்கும் மாப்ளை இருக்காங்க , சோ நோ படி கம் டூ இந்தியான்னு எழுதி வைக்கறே.

கர்நாடகா: சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி: ஆச்சார்ய தரிசனம்

August 8, 2012 Leave a comment

தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி – சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.

தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்…?

ஒன்றா, இரண்டா… அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ – அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்.”

தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?

தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே – சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.

அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.

இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?

சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு – செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்.”

நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே…?

நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.

பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.

மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன… படாடோபமான அரண்மனை என்ன… சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!

எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்.”

பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?

பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்… நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்.”

மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?

அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.

தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை… உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது… பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை… அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது.”

புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை – சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க… வெளியே வந்தால் – பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.

சென்னையில் சாதுர்மாஸ்யம்

சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் – சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.

அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.

அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.

தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் – புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

நன்றி – கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி