Archive

Archive for the ‘அறிவியல்’ Category

Bugs are worth $57 billion – Sowmya

April 12, 2006 Leave a comment

நீங்க 'ஈ' ஓட்டுபவரா? கொசு அடிப்பவரா? முதலாவதற்கு ஆம் என்று சொன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் உங்களை வாழ்த்தும்.

A film on Ramanujan

April 8, 2006 Leave a comment

கணித மேதை ராமாநுஜனை வைத்து ஒரு திரைப்படம் உருவாகிறது. வெங்கட் எழுதுகிறார். ராமாநுஜன் பாத்திரத்துக்கு பொருத்தமான இந்திய நடிகர் யார்?

இதே செய்தி குறித்து, திலோத்தமா, சில வாரங்களுக்கு முன்பு எழுதிய பதிவுகள்.

The Man who Knew Infinity
Race to make Ramanujan movie

வருகிறது நானோடெக்னாலஜி – அப்புடீன்னா?

April 6, 2006 Leave a comment

இன்று அதிகாலை பிரகாஷிடமிருந்து இந்தச் சுட்டி வந்தது.

வெளிகண்ட நாதர் நானோடெக்னாலஜியால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று பிரமிப்பூட்டுகிறார்.  ரத்தக்குழாயடைப்பைச் சுரண்டுவது,  கச்சாவிலிருந்து பெட்ரோலைப் பிரிப்பது முதல் சிம்ரனையும் ஜோதிகாவையும் இன்னும் பளிச் சென்று திரையில் பார்ப்பதுவரை இதில் சாத்தியம் என்று சோதிடம் சொல்கிறார்.

ஒரு சின்ன வேண்டுகோள்;  இப்படி வெற்றாக ஆரூடங்களை அடுக்கிக்கொண்டு போவதும் கூகிளில் இருந்து படம் சுட்டுப்போடுவதும் அறிவியலும் நுட்பமும் இல்லை.   இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கிறது (அல்லது அதற்கான துவக்கங்கள் எப்படி நடக்கின்றன) என்பதைப் பற்றியும் கொஞ்சம் எழுதவேண்டும்.  போகிற போக்கில் name-dropping சொல்லி படிப்பவர்களை மிரட்டுவது அந்தக் காலத்து ஆசாமிகள் பாணி் – sooo outdated.  அப்படி மிரண்டவர்கள் ஒருக்காலத்திலும் நானோடெக்கை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.     இந்தமாதிரி ஜக்கம்மா குறிசொல்பவற்களையும் பசித்த புலிகள் தின்னத் தொடங்கியிருக்கின்றன.   இன்றைக்குத் தேவை புரியவைப்பது அல்லது ஆர்வமூட்டுவது.  ரத்தக்குழாயில் அடைப்பு நீங்கப்போகிறது என்று சொல்லும்பொழுது கொஞ்சம் கொழுப்பு, அதைக் கரைக்கும் விதங்கள் போன்ற சமாச்சாரங்களையும் விரிவாகச் சொன்னால்தான் புண்ணியமாக இருக்கும்.

பாலக்கரை பாலகனின் ஆர்வத்திற்குப் பாராட்டு, ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.

அதெல்லாம் கிடக்கட்டும்; அறிவியல் சமாச்சாரத்தை எழுதும்பொழுது கிளுகிளுப்பு வேண்டுமென்றால் அதற்கு இப்பொழுது சிம்ரனையும் ஜோதிகாவையும் நம்பிப் பிரயோசனமில்லை;   இது அஸின் காலம்.

History of Pi – Dilip D'Souza

February 23, 2006 2 comments

“…….Archimedes was a great champion of method, and that’s the truly interesting thing about the history of pi. Typical of the man, he found a method to calculate pi to any desired degree of accuracy. Later mathematicians used his method to find closer approximations to pi than Archimedes ever did, but get this: it was 19 centuries before a completely new approach to the problem was found…….”

சுவாரசியமான பதிவு

Singapore siththALu – Venkat

February 18, 2006 2 comments

“…….வாதம் முற்றிப் போக என் ஆசிரியர் என் ஆய்வக ஏடைத் தூக்கி என் மூஞ்சியில் வீசியடித்தார். என்னை வகுப்பை விட்டு வெளியே துரத்திவிட்டார். அதிலிருந்து எனக்கு அவருக்கும் நிரந்தரப் பகை. அடுத்த ஐந்து வருடங்கள் நாங்கள் இருவரும் அக்னிநட்சத்திரம் கணக்காக மோதாத குறைதான். அவருக்கு நான் அளித்த ‘சிங்கப்பூர் சித்தாள்’ என்ற பட்டம் மாணவர்களிடையே நிரந்தப்பட்டுப் போனது…..”

மேலே வாசிக்க

Science & Tech. 2005 – Arulselvan

February 3, 2006 Leave a comment

2005இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் காணப்பட்ட சில முக்கியப் போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மாறுதல்களை சுருக்கமாக வழங்குகிறார் அருள்.

பகுதி ஒன்று & இரண்டு.